Monday, October 06, 2008

ஓபாமாவிற்காக ஓர் நாள்!


ஓபாமாவிற்காக ஓர் நாள்!

வாசிங்டன், அக் 05 2008


அமெரிக்க குடியுரிமை வாங்கி கிட்டதட்ட ஓரு ஆண்டு ஆகிவிட்டது. சென்ற வாரம் சென்று எனதுபெயரை விர்ஜினியா மாநிலத்தில் பதிவு செய்துவிட்டு வந்தேன். நமது பெயரை பதியும் பொழுதே நீங்கள் ஜனநாயக கட்சி ஆதரவாளரா? அல்லது குடியரசு கட்சி அல்லது தனிக்கட்சியா என்று பதியவைத்து கொள்ளலாம். அதன் தொடர்ச்சியாக வார இறுதியில் ஜனநாயக கட்சி ஓபாமா தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துக் கொண்டேன்.

சனி மற்றும் ஞாயிறு நாட்களில் கிட்டதட்ட 4 மணி நேரம் முதல் 8 மணி நேரம்வரை தன்னார்வமாகஎந்த தேர்தல் பிரச்சாரத்திலும் கலந்துக் கொள்ளலாம். நான் ஞாயிறு மாலை எனது வீட்டருகே உள்ள இடத்திற்கு சென்றேன். கொஞ்ச கொஞ்சமாக கிட்டதட்ட 20 பேர் வந்து இருந்தார்கள். வீடு வீடாக சென்று எப்படி அணுகி ஓட்டை சேகரிக்க வேண்டும் என்று ஓர் 10 நிமிடம் சொல்லி கொடுத்தார்கள். எங்கள் பகுதியில் வாழும் வாக்காளர்கள் விவரத்தை கொடுத்துவிட்டார்கள். அந்த குழுவில் ஏற்கனவே அனுபவம் உள்ள ஓர் நபருடன் நான் சேர்ந்து கொண்டேன்.

இங்குதான் இந்த அமெரிக்கா வாழ்க்கையில் புதிய அனுபவத்தை சேகரித்தேன். அதனை தமிழ்மண வாசகர்களிடம் பகிர்ந்துக் கொள்ள ரொம்ப ஆர்வமாக இதனை இங்கு பதிய வைக்கிறேன்.

என்னுடன் பிரச்சாரத்திற்கு வந்த பெண்மணி வெள்ளைக் காரர். அவருக்கு வயது கிட்டதட்ட 55. ஆனால் 45 வயதுஎன்றுதான் சொல்ல முடியும். அவர் கடந்த ஓரு மாதமாக ஒபாமாவிற்காக வாக்குகள் சேகரித்து வருகிறார். அவரோடு சேர்ந்து கொண்டேன் நானும்.

கிட்டதட்ட 60 வீடுகள் வரை ஒவ்வோரு வீடாக சென்றோம். நான் வசிக்கும் இடத்தில் பெரும்பாலான வீடுகள் வெள்ளைக் காரர்கள் வாழும் பகுதி! எனது பகுதியில் நிறைய இந்தியர்கள் இருக்கிறார்கள் என்று எனக்கு தெரிந்தாலும், நான் சந்தித்த அனைவரும் அமெரிக்கர்களே!

முதல் வீட்டு அனுபவமே புதிதாக இருந்தது. வாசலில் உள்ள தோட்டத்தில் அந்த வெள்ளைகாரர் வேலைச் செய்துக் கொண்டு இருந்தார், அவருடன் அவரது அப்பாவும். எனது அணி நண்பர் அவர்களிடம் மிக மிகஅன்பாக அறிமுக படுத்திக் கொண்டு தாங்கள் வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஓபாமாவிற்கு ஓட்டு அளிக்க இயலூமா? என்று வினவினார். அதற்கு அவர்கள் நாங்கள் ஜான் மெக்கெய்னுக்கு என்றார்கள், நாங்கள் நன்றி சொல்லி விட்டு அடுத்த வீடு சென்றடைந்தோம்!

அடுத்த வீட்டில் யாரும் இல்லை, சில சமயம் உள்ளே இருந்துக் கொண்டு கதவை திறக்க மாட்டார்கள்! இந்த அனுபங்களை தொகுத்து கொடுத்துவிடுகிறேன்!

* கிட்டதட்ட 60 வீடுகள் வரை சென்றோம். அதாவது 5 அல்லது 6 தெருக்கள்.

* 90% சதவீத இல்லங்களில் நாய்கள் வைத்து உள்ளார்கள். சில வீடுகளில் பூனைகள் இருந்தன.

* ஓபாமாவிற்கு ஆதரவு திரட்ட வந்த இடத்தில் நாய்கள் கடித்துவிடுமோ என்ற பயம் சிறிது இருந்தது!

* மனம் வருத்தமான விசயம் கிட்டதட்ட 95% மக்கள் ஜான் மெக்கெய்னுக்குதான் வாக்கு அளிப்போம் என்றார்கள்.

* நான் சந்தித்த வெள்ளைக் காரர்கள் பலர் (கிட்டதட்ட 50% சதவீதம்) ரொம்ப திமிராக நடந்துக் கொண்டார்கள்

* இத்தனைக்கும் என் உடன் வந்த நபர் ஓர் வெள்ளைக் கார பெண்மணிதான்!

* சில வீடுகளில் நாங்கள் ஓபாமா ஆதராளவர்கள், அதன் ஓட்டை சேகரிக்க வருவதாக சொன்னதும் கதவை மிக வேகமாக சாத்திக் கொண்டார்கள்! துளிக் கூட நாகரீகம் இல்லாமல்!

* நாங்கள் வியாபாரம் (சேல்ஸ்) விசயமாக வரவில்லை என்று சில சமயம் சொல்ல வேண்டி இருந்தது!

* திரைப் படத்தில் காண்பிப்பதைப் போல ஓர் பெரிய சுருட்டு ஒருவர் பிடித்துக் கொண்டு இருந்தார்! அவரும் தீவரமான ஜான் மெக்கெய்ன் ஆதரவாளர் என்றார்!

* ஒரு இந்திய குடும்பம், எங்களிடம் பேச விருப்பம் இல்லை என்றார் அவர்கள் மகள் எங்களிடம் "ஓபாமா ஆதரவாளர்கள்" என்றார்.

ஓரே ஒரு வீட்டில் ஓர் வெள்ளைக் கார பெண்மணியும் பக்கத்து வீட்டில் ஓர் வெள்ளைக் கார நபரும் எங்களிடம்மிக ஆர்வமாக எங்கள் ஓட்டு ஓபாமாவிற்குதான் என்றார்கள். அவர்களுக்கு ஈராக் போர் பிடிக்கவில்லை என்றும்இந்த அமெரிக்க பொருளதாரம் மாற வேண்டும் என்று ஆசைப் படுவதாக சொன்னார்கள். அவர்கள் வீட்டு வாசலில்ஓபாமா ஆதரவு சின்னம் வைக்க எங்களிடம் 'விளம்பர பலகை' கேட்டார்கள்! மனம் சற்று ஆறுதல் அடைந்தது!


* என் உடன் வந்த பெண்மணி மிகத் தீவரமான ஓபாமா ஆதரவாளர்!

* அவர் கடந்த ஒருமாதமாக வாக்குகள் சேகரித்து வந்தாலும் அவர் சந்தித்த 30% மக்கள் ஓபாமாவிற்கு என்று சொன்னார்களாம்!* நிறைய கறுப்பு இன மக்கள் ஓபாமாவை ஆதரிக்கிறார்கள், ஆனால் வெளிப் படையாக சொல்ல மறுக்கிறார்கள்.

* சில வீடுகளில் நாங்கள் கேள்வி கேட்ட பொழுது This is Personal Question! I refuse to answer! என்றார்கள்! அவர்கள் அனைவரும் கிட்டதட்ட ஜான் மெக்கெய்ன் ஆதர்வாளர்கள் என்று தெரிந்தது!

நான் என்னவோ நம்ம ஊர் போல, என்னை தாயார் படுத்திக் கொண்டு,

உங்கள் பொன்னான மணியான வாக்குகளை அண்ணன் ஓபாமாவிற்கு போடுங்கள் என்றும்,

கறுப்பின மக்களின் அடையாளம் அண்ணன் ஒபாமாவை மறுந்து விடாதீர்கள் என்றும்,

உலக சரித்தரத்தின் ஓர் புதிய அத்தியாயம் காத்து கிடக்கிறது என்றும்,

அமெரிக்கா பொருளாதரத்தின் விடி வெள்ளி அண்ணன் ஓபாமா என்றும்,

ஜனநாயக கட்சியின் போர் வாள், கறுப்பு வைரம்,

என்று பலவாறு என்னை தயார் படுத்திக் கொண்டு போனால் நொந்து நூலாகிப் போனேன் என்பதுதான் உண்மை! இந்த ஒருநாள் அனுபவத்தில் அமெரிக்காவில் இன்னமும் நிறவெறி இருக்கிறது என்ற ஓரளவு உணர முடிகிறது! இதனை சில நண்பர்களும், சில உறவினர்களும் ஏற்க மறுக்கிறார்கள். நான் அனுபவ பூர்வமாக உணர்ந்தேன்! நான் வேறு சற்று கருப்பாக இருப்பேன் (என்னை எனது அப்பா மாநிறம் என்பார்கள்!) என்னை சில வெள்ளைக்கார்கள் ஏதோ என்னை ஒர் வித்தியாசமாக பார்த்தார்கள்! அதுதான் உண்மை! நல்லவேளை, நான் ஓர்வெள்ளைக் கார பெண்மணியோடு ஓட்டு சேகரிக்க போனேன்! இல்லாவிட்டால் இன்னமும் நிலமை மோசமாகஇருந்து இருக்கும்!

ஓர் ஆங்கில்ப் படத்தில் Denzil Washington தந்தையாக நடிப்பவர் சொல்வார்
"This country is legally united, but emotionally segregated!" என்பார் அது உண்மையோ என்று தோணுகிறது!

அமெரிக்க பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்த பிறகும்,
பெட்ரோல் விலை $4 விற்ற பிறகும்,
வீடுகள் மளமளவென்று விலைகள் இறங்கிய பிறகும்,
ஈராக் போரில் கோடி கோடியாக டாலர்கள் செலவு செய்த பொழுதும்,
ஜார்ஜ் புஷ் கடந்த 8 ஆண்டுகள் சொதப்பிய பொழுதும்,

இந்த அமெரிக்க மக்கள் குடியரசு கட்சி ஜான் மெக்கயனை ஆதரிகிறார்கள் என்றால் எப்படி இந்த மக்களை கணிப்பது?!

God Bless America!

நன்றி
மயிலாடுதுறை சிவா...



Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

21 Comments:

Blogger rapp said...

:(:(:(

Monday, October 06, 2008 10:12:00 AM  
Blogger rapp said...

// இந்த ஒருநாள் அனுபவத்தில் அமெரிக்காவில் இன்னமும் நிறவெறி இருக்கிறது என்ற ஓரளவு உணர முடிகிறது//

இது ஐரோப்பாவிலும் நன்றாகவே உள்ளது எனக் கூறலாம். இன்னும் இங்கு நீங்கள் சிலத் துறைகளில் வேலைவாய்ப்பு விஷயத்தில் கூட பார்க்கலாம். முப்பத்தைந்து வயதிற்கு மேற்பட்டவர்கள் முக்காவாசிப்பேர் இப்படித்தான், ஆனால் வெளிப்படையாக ஏற்க மறுப்பார்கள்:):):)

Monday, October 06, 2008 10:15:00 AM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

நன்றி ராப்

சிவா...

Monday, October 06, 2008 10:46:00 AM  
Blogger Thamiz Priyan said...

நல்ல அனுபவம்... தைரியமாக பிரச்சாரத்திற்கு சென்றதற்கு பாராட்டுக்கள்!

Monday, October 06, 2008 10:52:00 AM  
Blogger seik mohamed said...

///ஜார்ஜ் புஷ் கடந்த 8 ஆண்டுகள் சொதப்பிய பொழுதும்///
வெள்ளைய‌ன் ஓட்டு வெள்ளைய‌னுக்கே! உல‌கில் எங்குமே சாதி பாகுபாடு குறைய‌வே குறையாது

Monday, October 06, 2008 10:55:00 AM  
Blogger மொக்கைச்சாமி said...

நீங்கள் சொல்லுவது முற்றிலும் உண்மை. நடுத்தர வயதை தாண்டிய அமெரிக்கர்கள் ஒபமாவிக்கு ஒட்டு போடுவது கடினமே... இதைத்தான் ப்ராட்லீ எப்பஃக்ட் என்பார்கள். http://en.wikipedia.org/wiki/Bradley_effect

Monday, October 06, 2008 10:55:00 AM  
Blogger சிறில் அலெக்ஸ் said...

அருமையான அனுபவம், பதிவு.

Monday, October 06, 2008 11:24:00 AM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

நன்றி அலெக்ஸ், மொக்க சாமி, தமிழ்ப் பிரியன் மற்றும் குமரன்!

மயிலாடுதுறை சிவா...

Monday, October 06, 2008 11:40:00 AM  
Blogger மோகன் காந்தி said...

நல்ல அனுபவம், பதிவு
அமெரிக்க குடி உரிமை பெற்றதிர்க்கு வாழ்த்துக்கள் சிவா

Monday, October 06, 2008 12:07:00 PM  
Blogger seik mohamed said...

குமரன் இல்லை. பார்சா குமாரன்

Monday, October 06, 2008 12:08:00 PM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

நன்றி "பார்சா குமாரன்"
மற்றும்
மோகன் காந்தி!

மயிலாடுதுறை சிவா...

Monday, October 06, 2008 1:07:00 PM  
Blogger மெளனம் said...

//”his country is legally united, but emotionally segregated!"

கடைசியாக எழும்பும் இராச்சியம் இரும்பும் களிமண்ணும் எப்படி ஒன்று சேராதோ அப்படி அவர்களும் ஒன்று சேரமாட்டார்கள். ஆனால் அவர்கள் ஒரு இராச்சியமாக இருக்க முயற்சி செய்வார்கள்
_.bibile prophecy

Monday, October 06, 2008 5:00:00 PM  
Blogger Ravichandran Somu said...

சிவா,

நல்ல அனுபவம். ஒபாமாவிற்காக வாக்குகள் சேகரித்தற்கு நன்றி. நானும் ஒபாமாதான் வெல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் ஆனால் நண்பர்கள் எல்லாம் நீங்கள் கூறுவது போல வெள்ளையர்கள் மெக்கய்னுக்குதான் ஒட்டு போடுவார்கள் என்கிறார்கள்!!

Monday, October 06, 2008 9:07:00 PM  
Blogger VSK said...

சண்டையை விடுத்து பொருளாதாரத்தை வைத்துப் பார்க்கையில், ஒரு அனுபவமில்லாத ஒருவரை[ஒபாமாவை] அங்கு வைக்க அமெரிக்க மக்கள் நியாயமாகத் தயங்குகிறார்கள் என்பதே உண்மை!

இதில் நிறவெறியை நுழைப்பது அநாகரீகம்.

ஹில்லரி இருந்திருந்தால் நிலைமை வேறு.

இந்த பொருளாதார நெருக்கடி கூட ஒரு போலியோ என எண்ண தோன்றுகிறது!

அப்படியானால் மகிழ்ச்சியே!

கோ மெக்கைய்ன்!!!!!!!

Monday, October 06, 2008 9:07:00 PM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

மிக்க நன்றி மெளனம் தங்களின் வருகைக்கு!

ரவி உங்கள் எண்ணத்திற்கு பாராட்டுகள்!

VSK - உங்கள் கருத்தில் நான் உடன்படவில்லை!

சிவா...

Tuesday, October 07, 2008 7:01:00 AM  
Blogger உண்மைத்தமிழன் said...

நல்ல பதிவு சிவா..

இந்தத் தேர்தலின் முடிவில் அமெரிக்காவில் நிறவெறி இருக்கிறதா இல்லையா என்பதற்கான விடை கண்டிப்பாக கிடைத்துவிடும்..

ஜான் மெக்கெய்ன் இன்னொரு ஜார்ஜ் புஷ்தான் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை..

Tuesday, October 07, 2008 9:22:00 AM  
Blogger பாக்யா... said...

வாழ்த்துக்கள் அமெரிக்கர் 'மயிலாடுதுறை' சிவா அண்ணா... எங்கெங்கெல்லாம் அதிக்க சக்திகள் தலைவிரிதாடுகிறதோ அதை எதிர்த்து அக்களத்தில் பெரியார் பேரன் நிற்பான் என்ற கூற்றை மெய்யாக்கியதற்கு நன்றி...

Tuesday, October 07, 2008 9:30:00 AM  
Blogger Agathiyan John Benedict said...

அனுபவத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி, சிவா.
அமெரிக்கத் தாயின் பிள்ளையாகிவிட்டமைக்கும் வாழ்த்துகள். ஒபாமவிற்கு கூடுதலாக இரு ஓட்டு (உங்க மனைவி உங்க பக்கமாக இருந்தால் -:)

// வெள்ளைக் காரர்கள் பலர் (கிட்டதட்ட 50% சதவீதம்) ரொம்ப திமிராக நடந்துக் கொண்டார்கள் //
ஆச்சரியமாக இருகிறது. நீங்கள் ஒருவித "உறுத்துதலோடு" போயிருப்பீர்கள் என்று எண்ணுகிறேன் -:) அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்தானே???

Tuesday, October 07, 2008 10:36:00 AM  
Blogger SathyaPriyan said...

//
அமெரிக்க பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்த பிறகும்,
பெட்ரோல் விலை $4 விற்ற பிறகும்,
வீடுகள் மளமளவென்று விலைகள் இறங்கிய பிறகும்,
ஈராக் போரில் கோடி கோடியாக டாலர்கள் செலவு செய்த பொழுதும்,
ஜார்ஜ் புஷ் கடந்த 8 ஆண்டுகள் சொதப்பிய பொழுதும்,

இந்த அமெரிக்க மக்கள் குடியரசு கட்சி ஜான் மெக்கயனை ஆதரிகிறார்கள் என்றால் எப்படி இந்த மக்களை கணிப்பது?!
//
சிவா கொஞ்சம் அவசரப் பட்டு விட்டீர்கள் என்றே நான் நினைக்கிறேன். இதில் இன வெறி ஒன்றும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

கொஞ்சம் முன்னோக்கி பார்த்தால் 1998 ஆம் ஆண்டிலிருந்தே FannieMae மற்றும் FreddieMac இரு நிறுவனங்களுக்கும் அப்போதைய அதிபர் கிளிண்டனிடமிருந்து பல நெருக்கடிகள் வந்தன. குறிப்பாக sub-prime lending கிற்கு வித்திட்டவர் அவர் தான்.

அவரது தொடர் நெருக்கடிகளால் தான் sub-prime lending என்பது ஏதோ கடனுக்கு மளிகை சாமான் வாங்குவது போல பரந்து விட்டது.

எல்லாவற்றுக்கும் புஷ்ஷை குறை சொல்லுவது ஒரு fashion ஆக மாறியுள்ளது. புஷ் தன்னால் இயன்றதை நன்றாகவே செய்கிறார். Federal Reserve Rate பல முறை குறைத்தது, Bailout கொண்டு வந்தது, Stimulous Package கொடுத்தது என்று.

மேலும் இரு போர்களையும், பொருளாதார நெருக்கடியையும் சமாளித்து உள் நாட்டு கட்டமைப்பு குலையாமல் வரிகளையும் கூட்டாமல் அவரை விட திறமையாக வேறு ஒன்றும் ஒருவராலும் செய்து விட முடியாது.

மேலும் இத்தகைய நெருக்கடியில் சுமார் நான்கு ஆண்டுகள் மட்டுமே அனுபவமுள்ளவர் அதிபரானால் அதன் பின் விளைவு எப்படி இருக்கும் என்பதில் அமெரிக்கர்கள் கவலை படுவது இயல்பே. மேலும் கடந்த மூன்றாண்டுகளில் பல முக்கிய ஓட்டெடுப்புகள் நடந்த போது ஒபாமா வாக்களிக்கவே இல்லை என்றும் கூறுகிறார்கள் (எனக்கு சரியாக தெரியவில்லை.)

மெக்கையினை பொருத்தவரை அவர் அனுபவசாலி. மேலும் பொருளாதாரம் எப்படி இருந்தாலும் உள் நாட்டு பாதுகாப்பு என்று வந்து விட்டால் அமெரிக்கர்கள் நம்புவது ரிபப்ளிகன் கட்சியையே.

ஒரு தமிழனாக கர்நாடகத்தில் நான்காண்டுகள் இருந்த எனது சொந்த அனுபவத்தை வைத்து சொல்லுகிறேன். நம்மவர்களுக்கு இருக்கும் இனவெறியில் 10 சதவிகிதம் இவர்களுக்கு இருக்குமானால் உங்களால் குடியுறிமை வாங்கியே இருக்க முடியாது.

அமெரிக்கர்கள் நிச்சயமாக இனவெறி பிடித்தவர்கள் கிடையாது. ஆனால் சுய நல வாதிகள். ஆனால் தற்காலத்தில் யார் தான் பொது நல வாதி?

Tuesday, October 07, 2008 1:03:00 PM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

நன்றி உண்மை தமிழன், பாக்யா, ஜான் மற்றும் சத்ய பிரியன்...

இது சம்மந்தமாக மற்றோரு பதிவை போடலாம் என்று உள்ளேன்...

மயிலாடுதுறை சிவா...

Wednesday, October 08, 2008 6:54:00 AM  
Blogger அது சரி said...

டிஸ்கி: நான் அமெரிக்கன் அல்ல. ஆனாலும், அமெரிக்காவில் நடக்கும் பல விஷய்ங்கள் இங்கு பிரிட்டனில் எங்களின் (முக்கியமாக எனது) டவுசரை கிளித்து விடுவதால், அமெரிக்க அரசியலை கவனிக்க வேண்டியது நிர்ப்பந்தமாக இருக்கிறது..

//
மனம் வருத்தமான விசயம் கிட்டதட்ட 95% மக்கள் ஜான் மெக்கெய்னுக்குதான் வாக்கு அளிப்போம் என்றார்கள்.
//

இது உண்மையில் வருத்தமான விஷயம் தான். ஓபாமாவிற்கு மீடியா செல்லப்பிள்ளை ரேஞ்சுக்கு கவரேஜ் கொடுத்த பின்னும், இத்தனை மக்களை கவர முடியாதது வருத்தமான விஷயமே!

//
நான் சந்தித்த வெள்ளைக் காரர்கள் பலர் (கிட்டதட்ட 50% சதவீதம்) ரொம்ப திமிராக நடந்துக் கொண்டார்கள்

* இத்தனைக்கும் என் உடன் வந்த நபர் ஓர் வெள்ளைக் கார பெண்மணிதான்!
//

திமிர் காட்ட நீங்கள் இந்தியராகவோ, கருப்பாக இருப்பதோ காரணம் என்று தோன்றவில்லை. வெள்ளைக்காரர்கள் சென்றாலும் அவர்கள் இப்படி தான் செய்திருப்பார்கள்.. வீட்டுக்கு வந்து கதைவை தட்டி பிரச்சாரம் செய்வது எனக்கும் பிடிப்பதில்லை. காரணம் திமிரில்லை... அது ஒரு வேண்டாத வேலை என்பது என் எண்ணம். அவர்களும் அப்படியே நினைத்திருக்கலாம்..

//
சில வீடுகளில் நாங்கள் ஓபாமா ஆதராளவர்கள், அதன் ஓட்டை சேகரிக்க வருவதாக சொன்னதும் கதவை மிக வேகமாக சாத்திக் கொண்டார்கள்! துளிக் கூட நாகரீகம் இல்லாமல்!
//

இது கொஞ்சங்கூட அடிப்படை நாகரீகம் இல்லாத விஷயமே..எனக்கு ஓட்டு சேகரிப்பதில் ஒப்புதல் இல்லாவிட்டாலும், நான் பெரும்பாலும் சாரி, நான் வேற கட்சிக்கு ஓட்டுப்போடுறவன் என்று நயமாக சொல்லி அனுப்புவது தான் வழக்கம்..

//
அமெரிக்க பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்த பிறகும்,
பெட்ரோல் விலை $4 விற்ற பிறகும்,
வீடுகள் மளமளவென்று விலைகள் இறங்கிய பிறகும்,
ஈராக் போரில் கோடி கோடியாக டாலர்கள் செலவு செய்த பொழுதும்,
ஜார்ஜ் புஷ் கடந்த 8 ஆண்டுகள் சொதப்பிய பொழுதும்,

இந்த அமெரிக்க மக்கள் குடியரசு கட்சி ஜான் மெக்கயனை ஆதரிகிறார்கள் என்றால் எப்படி இந்த மக்களை கணிப்பது?!
//

உங்கள் கேள்வியிலேயே பதிலும் இருக்கிறது நண்பரே. இத்தனை பிரச்சினைகளுக்கு பின், உண்மையில் ஓபாமா ஒரு சிறப்பான வெற்றியை எதிர் நோக்கி இருக்க வேண்டும். ஆனால், ரேஸ் வெகு டைட்டாக இருப்பதாக தெரிகிறது. (இல்லாமலும் இருக்கலாம்..ஆனால், நான் ஊடகங்களில் படித்தவரை..).

இதற்கு காரணம் என்ன? என‌க்கு தெரிந்த‌ வ‌ரை,

1. "Change", "Hope" என்று சொல்கிறாரே த‌விர‌ அதை எப்ப‌டி செய‌ல்ப‌டுத்துவ‌து என்று அவ‌ர் எதுவும் சொன்ன‌தாக‌ தெரிய‌வில்லை. சென‌ட்ட‌ராக‌ இருந்த‌ கால‌த்தில் அவ‌ர் எதையும் மாற்றிய‌தாக‌வோ, இல்லை மாற்ற‌ முய‌ன்ற‌தாக‌வோ தெரிய‌வில்லை. ஒன்றுமில்லாம‌ல் ஒருவ‌ர் திடீர் என்று வ‌ந்து எல்லாத்தையும் மாத்த‌ப்போறேன், ந‌ம்புங்க‌ய்யா அப்பிடின்னு சொன்னால் எப்ப‌டி ந‌ம்புவ‌து?

2. அவ‌ர் த‌ன‌து வார்த்தைக‌ளில் நிலையாக‌ இருப்ப‌தாக‌ தெரிய‌வில்லை. அவ்வ‌ப்பொழுது வ‌ச‌திக்கு ஏற்ற‌ மாதிரி மாற்றிக்கொள்வ‌தாக‌ தெரிகிற‌து.

3. வாஷிங்க்ட‌னை மாத்த‌ப்போறேன் என்று சொல்லி விட்டு, அதில் ப‌ல‌ வ‌ருட‌ம் கொட்டை போட்ட‌ "John Biden" ஐ V.P. ஆக‌ செல‌க்ட் செய்த‌தின் மூல‌ம் அவ‌ர‌து முக்கிய‌ வாக்குறுதி கொஞ்ச‌ம் அடிப்ப‌ட்டு போன‌து உண்மை.

4. நீங்க‌ள் சொல்வ‌து போல‌, ரேஸிச‌மும் ஒரு கார‌ண‌ம். ப‌ல‌ வெள்ளைய‌ர்க‌ளுக்கு அவ‌ர் க‌றுப்பின‌ம் என்ப‌தே ஒரு கார‌ண‌ம். ஆனால், அவ‌ர் க‌றுப்பின‌ம் என்ப‌தே, ப‌ல‌ க‌றுப்பின‌ ம‌க்க‌ள் அவ‌ரை ஆத‌ரிக்க‌ கார‌ண‌ம் என்ப‌தையும் ம‌றுக்க‌ முடியாது..

பின் குறிப்பு: நான் அமெரிக்காவில் இல்லாவிட்டாலும் ஜான் மெக்கைனை ஆத‌ரிக்கிறேன்..அமெரிக்காவில் இருந்தால் அவ‌ருக்கு ஓட்டு போட்டிருப்பேன்.. இப்பொழுது என்னால் முடிந்த‌து, அவ‌ருக்கு ஓட்டுப்போட‌ சொல்லி ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் சொல்லிக்கொண்டிருக்கிறென்..இ.மெயில் தான். க‌த‌வு த‌ட்டிய‌ல்ல‌.

Wednesday, October 08, 2008 3:09:00 PM  

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது