எஸ் வி சேகரின் நாட்டு பற்று!
நன்றி : குமுதம் எஸ் வி சேகரின் பேட்டியில் இருந்து :-
கட்சி எதிர்பார்த்ததைச் செய்தீர்களா? செய்யத் தவறினீர்களா?'
``கட்சி என்னிடம் எதிர்பார்த்ததை நான் செய்யத் தவறியதாகக் கூறினால் பதிலுக்கு கட்சியும் நான் எதிர்பார்த்ததைச் செய்யத் தவறிவிட்டது என்றுதான் சொல்வேன். நான் அ.தி.மு.க.வில் சேரும்போது அம்மாவிடம், `என் மகள் திருமணத்தை நீங்கள் தலைமையேற்று நடத்திவைக்க வேண்டும், மகனின் படபூஜை தொடக்க விழாவில் கலந்து கொள்ள வேண்டும், எப்போதும் என்னை அரவணைத்துச் செல்ல வேண்டும்' என்று மூன்று கோரிக்கைகளை வைத்தேன். அந்த மூன்று கோரிக்கைகளும் நிறைவேறாமல் போய்விட்டதே.''
மைலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் வி சேகரின் இந்த பேட்டி சென்ற வார குமுதத்தில் வந்தது!
இதில் ஒருவரி கூட மைலாப்பூர் தொகுதிக்கு ஏதுவும் செய்வேன் என்றோ அல்லது அதிமுக கட்சிக்கு விசுவாசமாக இருப்பேன் என்றோ எங்குமே சொல்லவில்லை! மாறாக என் பெண், என் மகன் என்று சொல்லி சீட் வாங்கி இருக்கிறார், இதற்கு ஜெவும் காஞ்சி மடம் சொல்ல சீட் கொடுத்து சாதிப் பற்று இல்லாத மைலாப்பூர் மக்களும் இவரை ஜெயிக்க வைத்து விட்டார்கள்!
இன்ன கொடுமைப்பா இது! இனிமே எஸ் வி சேகர் வெறும் நாடகம் மட்டும் போட வேண்டியதுதான்! அதுவும் இப்பபெல்லாம் கூட்டம் வருகிறதா?!
மயிலாடுதுறை சிவா...
5 Comments:
//சாதிப் பற்று இல்லாத மைலாப்பூர் மக்களும் இவரை ஜெயிக்க வைத்து விட்டார்கள்!//
nethi adi
நல்ல கேள்வி
நன்றி புலிக்கேசி மற்றும் முரளிகண்ணன்
சிவா...
என்ன ஒரு ச.ம.உ.வின் நாட்டு பற்று
அடடே. இவராவது வெளிப்படையாக சொல்லிவிட்டார்.கருணநிதி, ராமதாஸ் எல்லாம் மகன், பேரன் எல்லாரையும் சலுகை தராமல் மக்களுக்காகவே உழைத்து வருகிறார்கள். அதனால் தான் கருணநிதி வசனம் எழுதும் திரைப்படங்களுக்கு மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
Post a Comment
<< Home