உண்மையில் சத்யராஜ் பகுத்தறிவாளாரா? அல்லது சாதரண நடிகரா?!
நன்றி விகடன்
விழாவில் நடிகர் விஜய்யை ஏகத்துக்கும் உசுப்பேத்தி விட்டது நடிகர் சத்யராஜ்தான்.
''புரட்சித்தலைவர் தன் தொண்டர்களைப் பார்த்து ரத்தத்தின் ரத்தமே என்பார். அதுமாதிரி உங்களை, 'விஜய் யோட வியர்வையின் வியர்வைகளே...' என சொல்லலாம். விஜய் ரொம்ப அமைதியானவர். அந்த அமைதிக்குப் பின்னாடி இவ்வளவு பெரிய படை திரண்டிப்பதைப் பார்க்கும்போது, உண்மையான 'அமைதிப்படை' இவர்தான் என்பது தெரிகிறது.
டி.வி-யில் புரட்சித்தலைவர் பாட்டுப் போட்டால் எங்கிருந்தாலும் ஓடிவந்து பார்ப்பேன். அவருக்குப் பிறகு சேனலை மாற்றாமல் பார்ப்பது விஜய் நடித்த படத்தின் பாடலை மட்டும்தான். எம்.ஜி.ஆர். பாட்டுக்குப் பிறகு விஜய் பாட்டுத்தான் சந்தோஷமாக இருக்கிறது. சொல்லப்போனால் என் தலையில் மறுபடி முடியே முளைச்சிடும் போலிருக்கு. 'போக்கிரி' படத்தில் 'தீப்பந்தம் எடுத்து தீண்டாமை கொளுத்து... இதுதான் என் கருத்து! சேரியில்லா ஊருக்குள்ளே, பிறக்கவேண்டும் பேரப்பிள்ளே!' என்று பாடுகிறார். இதைத் தான் பெரியார், அம்பேத்கர், கார்ல் மார்க்ஸ் போன்றவர்கள் சொன்னார்கள். இந்த மாதிரி புரட்சிகரமான கருத்துக்களை விஜய் தொடர்ந்து சொல்லணும். புரட்சித் தலைவருக்குப் பிறகு அவர் சொன்னால்தான் மக்கள் கேட்பார்கள்'' என்று அடுக்கிக்கொண்டே போனார். அடுத்து அவர் சொன்னதுதான் புகழ்ச்சியா அல்லது வேறெதுவுமா என்று புரியவில்லை!
''விஜய்யின் 'போக்கிரி' படத்தில் பாத்தீங்கன்னா, திடீரென ஒரு காட்சியில் அசினோட முகம் மாறும். அசினோட பின்புறத்துல கைய வச்சிக்கிட்டு விஜய் நிப்பாரு. அதுக்குத்தான் அசின் கோபப்பட்டு பார்ப்பாங்க. பதிலுக்கு விஜய்யோட எக்ஸ்பிரஷன் வரும் பாருங்க... மவனே! அதான்டா நடிப்பு. அந்தவொரு சின்ன எக்ஸ்பிரஷனிலிருந்து சமுதாய சிந்தனைகளை பாடல் வரியில் சேர்க்கிற வரைக்கும் அவர் உண்மையிலேயே ஒரு 'அழகிய தமிழ் மகன்'தான். அந்தத் தமிழ் மகனை வாழ்த்துறதுக்கும்'மாபெரும் சபைதனில் நீ நடந்தால், உனக்கு மாலைகள் விழவேண்டும்' என்ற வாத்தியார் பாட்டுத்தான் நினைப்புக்கு வருது'' என்று சத்யராஜ் பேசியபோது, 'இவரு கேரக்டரையே புரிஞ்சுக்க முடிய லியே...' - விஜய் ரசிகர்கள் சற்று குழம்பிப் போய் விட்டார்கள்.
----------------------------------------------------------------------------------------
ஒரு காலத்தில் நடிகர் சத்யராஜ் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருந்தது. தந்தை பெரியார் படத்தில் நடித்தது, உண்மையில் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருப்பது, ஒளிவு மறைவு இல்லாமல் பேசுவது மற்றும் யாதர்த்த நடிகராக....
ஆனால் இவர் ஓக்கேனக்கல் உண்ணாவிரத்தில் நடிகர் ரஜினியை மேடையில் வைத்துக் கொண்டே மிக அநாகரீகமாக பேசியது....இந்த மேடையில் அவர் ஈழமக்களைப் பற்றி பேசியும், கர்நாடக மக்களைப் பற்றி பேசியும் தன்னை முன்னிலை படுத்துக் கொண்டாரே ஒழிய, இவர் ஒன்றும் ஓர் உண்மையான வருத்ததில் பேசியதாக தெரியவில்லை. ரஜினியை வேறு மறைமுகமாக தாக்கி தன்னை ஓர் " உண்மையான தமிழ் உணர்வாளன்" போல காட்டிக் கொண்டார்! உண்மையான தமிழ் உணர்வாளன் பிறர் மனதை அநாகரீகமாக துன்பபடும் படி பேச மாட்டார்கள். அதுமட்டும் அல்ல, இவரால்தான் உண்மையான தமிழ் உணர்வாளர்களுக்கும் கூட கேட்ட பெயரும் கூட....
நடிகர் விஜய் விழாவில் முன்பு ஒருமுறை, தம்பி விஜய் இன்னும் 10 / 20 ஆண்டுகள் கழித்து என்னவாக வர வேண்டும் என்பதை இப்பொழுதே திட்டமிட வேண்டும் என்றது.....அதாவது விஜய்க்கும் முதல் அமைச்சர் பதவி ஆசையை தூண்டுவது...
நேற்று விஜய் விழாவில் பேசியது, இவற்றை எல்லாம் பார்க்கும் பொழுது உண்மையில் இவர் ஓர் பகுத்தறிவாளாரா? அல்லது மிக சாதரண நடிகர்தானா?
நன்றி
மயிலாடுதுறை சிவா...
12 Comments:
சத்ய ராஜ் அவர்களின் தமிழ் உணர்வும், பகுத்தறிவும் கண்டிப்பாக
சந்தேகப்படக்கூடியது இல்லை.
ஆனால் அவ்வப்போது இப்படி காமெடி செய்வார்.
இன முரசை மன்னிப்போம்.
//உண்மையில் சத்யராஜ் பகுத்தறிவாளாரா? அல்லது சாதரண நடிகரா?! //
மயிலாடுதுறை சிவா அய்யா,
இரண்டும் தான்.கேவலமாகவும்,பொறிக்கித்தனத்தோடும் பேசுவதில் இவர் வல்லவர்,அதனால் சிறந்த பகுத்தறிவாளரா இவரை பார்க்க முடிகிறது.எம் ஜீ ஆர் நடிப்பு பிடிக்கும் என்று ஒரு நடிகன் சொன்னால் அவன் ஒரு சாதாரண(average)நடிகராகத் தான் இருக்க வேண்டும்.ஆகையால் சத்யராஜ் அய்யா இரண்டு வேடமும் போடக்கூடியவர் என்று தீர்ப்பு சொல்லலாம்.
பாலா
//உண்மையில் இவர் ஓர் பகுத்தறிவாளாரா? அல்லது மிக சாதரண நடிகர்தானா?//
இவர் இரண்டுமே இல்லைங்க.
சத்யராஜ் பேசியதற்கும் அவரின் பகுத்தறிவிற்கும் என்ன சம்பந்தம்....?
புதசெவி..!!
//
ஆனால் இவர் ஓக்கேனக்கல் உண்ணாவிரத்தில் நடிகர் ரஜினியை மேடையில் வைத்துக் கொண்டே மிக அநாகரீகமாக பேசியது....இந்த மேடையில் அவர் ஈழமக்களைப் பற்றி பேசியும், கர்நாடக மக்களைப் பற்றி பேசியும் தன்னை முன்னிலை படுத்துக் கொண்டாரே ஒழிய, இவர் ஒன்றும் ஓர் உண்மையான வருத்ததில் பேசியதாக தெரியவில்லை. ரஜினியை வேறு மறைமுகமாக தாக்கி தன்னை ஓர் " உண்மையான தமிழ் உணர்வாளன்" போல காட்டிக் கொண்டார்!
//
ஒகேனக்கல் போராட்டம் நடந்த அன்று நடந்த கூத்திற்கு சத்தியராஜ் பேசியது பாராட்டப்பட வேண்டிய பேச்சு. அதை எப்படி "உண்மையான வருத்ததில் பேசியதாக தெரியவில்லை" என்று சொல்கிறீர்கள். உண்மையான மானமுள்ள தமிழ் ரத்தம் ஓடும் எவனும் அப்படித்தான் பேசுவான். ஈழ மக்களைப் பற்றி அவர் ஒருவராவது பேசினாரே என்று தான் எல்லோரும் மகிழ்ச்சி அடைந்தார்களே ஒழிய அவர் தன்னை முன்னிலைப்படுத்தியத்கக யாரும் எண்ணவில்லை. அவ்வாறு பேசியதால் உண்மையான தமிழர்களால் முன்னிலைப்படுத்தப்பட்டார். நல்லது தானே!!!
மேலும் பகுத்தறிவு என்றால் என்ன?. விஜய் பாராட்டுவிழாவில் நீங்கள் குறிப்பிடும் பேச்சில் எங்கே அதற்கு முரணாக பேசியுள்ளார். இந்த பேச்சில் பகுத்தறிவு சம்பந்தமாக ஏதும் பேசாததை சொல்ல வருகிறீர்களா? அப்படியும் தெரியவில்லை. ஒகேனக்கல் போராட்டத்தில் பகுத்தறிவோடு பேசியதையும் குறை தானே சொல்கிறீர்கள்.
ஒருவேளை ரஜினிக்கு சொம்பு தூக்குவது தான் பகுத்தறிவோ.!!!!!!!!
எனக்கு சத்திராஜ் மீது நல்ல மதிப்பு இருந்தது. ஆனால் காவிரி பிரச்சனியின் போது அவர் நடந்து கொண்ட விதம் மிகக் கேவலமானது. சில நடிகர்கள் பேசியதை அவர்கள் முன்னிலையிலேயே கொச்சை படுத்தினார். அது கூட பரவாயில்லை. ஆனால் அவர் தான் உண்மையான தமிழன் என்பது போலவும் தமிழர்கள் மீது அவருக்கு மட்டுமே பற்று உள்ளது போலவும் படு பயங்கறமாக உணார்ச்சிவசப் பட்டு பீற்றிக் கொண்டார்.
ஆனால் அதற்கு பிறகு அதே ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை தமிழக அரசு ஒத்திவைத்ததை எதிர்த்து இந்த மறத் தமிழன் எதை கழட்டினார் என்று தெரியவில்லை... அந்த மேடையில் அநாகரீக வார்த்தையில் பேசி வைரமுத்து போன்றவர்களின் வாயால் பெரியாருக்கு இணையாக புகழப் பட்டவர் , அதற்கு பிறகு தன் தொழிலை தான் பார்த்துக் கொண்டிருக்கிறாரே தவிர தமிழனுக்கக எதையும் அவர் கிழைக்கவில்லை... ஆகவே அவர் ஒரு சாதாரன நடிகர் மட்டும் தான்..
//சத்யராஜ் பேசியதற்கும் அவரின் பகுத்தறிவிற்கும் என்ன சம்பந்தம்....?
புதசெவி..!!//
யாரும் பேசுவதற்கும் அவர்களின் பகுத்தறிவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை டிபிசிடி அண்ணாச்சி..
சாமி கும்பிடாதவர்கள் எல்லாரும் பகுத்தறிவாளன் என்று தன்னை தானே அழைத்துக் கொள்கிறார்கள். :))) அப்படி பார்த்தால் நானும் கூட.. ஆனா உண்மையில் சாமி கும்பிடாத அனைவரும் பகுத்தறிவாளர்கள் என்று சொல்ல முடியாது..அடியேன் உட்பட :P
எனக்கு இந்த ஆள கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும் ரொம்ப பிடிச்சுருந்தது,
எப்போ உண்ணாவிரதத்தில அவ்ளோ கேவலமா பேசினானோ அதிலிருந்து இந்த ஆளா டிவில பாத்தா கூட சேனல மாத்திடுவேன்.
பொறாமையின் மொத்த உருவம் என்றால் அது இந்த ஆள்தான். சக நடிகன் வாங்கும் கைதட்டை ஜீரணிக்கமுடியாத இவனது வயித்தெரிச்சல் மட்டுமே உண்ணாவிரத மேடையில் தெரிந்தது.
அதுவும் மேடையில், "என் பொண்டாடியோட நான் படுத்தா உனக்கென்ன னு" கேட்டான் பாரு ஒரு கேள்வி.
வீட்டுல இந்தாள் பொண்டாடி பேட்டிய பார்த்து ரொம்ப மகிழ்ந்துருப்பார்.
என்னடா மரியாதையில்லாமல் குறிப்பிடுகிறேன என்று யோசிக்காதீர்கள். இந்த ஆள் யாருக்கு மரியாதை குடுத்திருக்கிறான் நாம குடுக்க.
உம்மா..உம்மானு டான்ஸ் ஆடற இந்தாளுக்கு இன முரசுனு ஒரு பட்டம் வேற..கேவலம் பட்டம் வாங்கியவனக்கும் கொடுத்தவருக்கும்
அடுத்த விஜய் படத்தில் கண்டிப்பாக சத்யராஜ் உண்டு
ஷெபின், பாலா, கிரி, டிபிசிடி, கிரேட், சன்ஞ்ய், பிபி அனைவருக்கும் மனதார நன்றிகள்.....
விஜய் விழாவில் பேசியது எனக்கு செம கடுப்பாகிவிட்டது! அதாவது விஜய்க்கு தேவைஇல்லாமல் அரசியல் ஆசையை உண்டு பண்ணுவது?! ஓவரா ஜல்ரா போடுவது....என்னை பொறுத்தவரை சத்யராஜ் உளறினார் என்பதுதான் நிஜம்...
மயிலாடுதுறை சிவா...
//உம்மா..உம்மானு டான்ஸ் ஆடற இந்தாளுக்கு இன முரசுனு ஒரு பட்டம் வேற..கேவலம் பட்டம் வாங்கியவனக்கும் கொடுத்தவருக்கும்//
எனக்கு இன்று வரை புரியாதது....இவர் தன்னோட படங்களில் ரஜினி விஜயகாந்த் நு பல பேரை கிண்டல் செய்கிறார்..தன்னுடைய மகா நடிகனில் ரஜினியை போட்டு வாரு வாருன்னு வாரி இருப்பார் (அவர் பொய் எதுவும் கூறியதாக தெரியவில்லை அது வேறு விஷயம்) , இப்படி மற்றவர்களை கிண்டல் செய்யும் இவர் ..தான் முதல் ஒழுங்கா ..இவர் மட்டும் என்னவோ சத்யா பிரியா கூடவும், காந்தி மதி கூடவும் ஜோடி போட்டுட்டு நடித்து கொண்டு இருப்பதை போல சொல்கிறார்..
நமீதா கூட ..புது புது நடிகை கூடன்னு இவர் ஆடாதா ஆட்டமா..இன்னும் அதை தொடர்ந்துட்டு தான் இருக்காரு.
நான் கேட்பது ஒருவர் தவறு செய்தால் சுட்டி காட்டுவது நல்லது தான், அந்த தவறை தான் செய்யாமல் இருந்தால் மட்டும் அடுத்தவருக்கு அறிவுரை கூற யோக்யதை உண்டு.
கீழே உள்ள வரிகளை விஜய் ரசிகர்களே ஒத்துக்கொள்வார்களா என்பது சந்தேகம்.
"சேரியில்லா ஊருக்குள்ளே, பிறக்கவேண்டும் பேரப்பிள்ளே!' என்று பாடுகிறார். இதைத் தான் பெரியார், அம்பேத்கர், கார்ல் மார்க்ஸ் போன்றவர்கள் சொன்னார்கள். இந்த மாதிரி புரட்சிகரமான கருத்துக்களை விஜய் தொடர்ந்து சொல்லணும். புரட்சித் தலைவருக்குப் பிறகு அவர் சொன்னால்தான் மக்கள் கேட்பார்கள்'' "
"''விஜய்யின் 'போக்கிரி' படத்தில் பாத்தீங்கன்னா, திடீரென ஒரு காட்சியில் அசினோட முகம் மாறும். அசினோட பின்புறத்துல கைய வச்சிக்கிட்டு விஜய் நிப்பாரு. அதுக்குத்தான் அசின் கோபப்பட்டு பார்ப்பாங்க. பதிலுக்கு விஜய்யோட எக்ஸ்பிரஷன் வரும் பாருங்க... மவனே! அதான்டா நடிப்பு. அந்தவொரு சின்ன எக்ஸ்பிரஷனிலிருந்து சமுதாய சிந்தனைகளை பாடல் வரியில் சேர்க்கிற வரைக்கும் அவர் உண்மையிலேயே ஒரு 'அழகிய தமிழ் மகன்'தான். அந்தத் தமிழ் மகனை வாழ்த்துறதுக்கும்'மாபெரும் சபைதனில் நீ நடந்தால், உனக்கு மாலைகள் விழவேண்டும்' என்ற வாத்தியார் பாட்டுத்தான் நினைப்புக்கு வருது'' "
இவருக்கு ரஜினி பிடிக்காது என்பதால் விஜய் க்கு இப்படி பேசி கொண்டு இருக்கிறார்.. விஜய் அவருக்கு பிடித்து இருக்கலாம் ..அது அவர் தனிப்பட்ட விஷயம்..அதற்காக எம் ஜீ ஆர் உடன் எல்லாம் ஒப்பிட்டு பேசுவது, அவரோட பாடல் கருத்தில் பகுத்தறிவு இருக்கு என்று சொல்வது........என்னமோ போங்க ஒன்னும் சொல்வதற்கு இல்லை.
தமிழ் உணர்வுனு வாய் கிழிய பேசும் இந்தாள் நடிக்கறது எல்லாமே வட இந்திய மற்றும் கேரளா நடிகைகள் உடன் தான். ஏண்டானு கேட்ட டைரக்டரோட சுதந்திரத்தில நான் தலையிட முடியாதுனு டயலாக். சரிடா நீ டைரக்ட் பன்னுன வில்லாதி வில்லன்ல நக்மாவ ஏண்டா ஊம கோட்டான் மாதிரி இருபாப்ல...
சரி அட்லீஸ்ட் நீ தயாரிச்ச லீ படத்திலாவது ஒரு தமிழ் பொன்னுக்கு வாய்ப்பு கொடுத்தியானா அதுவும் இல்ல நிலானு டெல்லி பொன்ன நடிக்க வெச்சாரு இந்த இன முரசு.
தமிழ் தமிழ் பீத்துற இந்தாள் இது வரைக்கும் தமிழுக்காக ஒரு துரும்பையாவது கிள்ளி போட்டிருப்பாரா??
எனக்கு தெரிந்து இது வரைக்கும் ஒரு பத்து பைசா கூட யாருக்கும் கொடுத்து உதவினது இல்ல இந்த இன முரசு.
இதுல கொடுமை என்னனா இவருக்கு வக்காலத்து வாங்கறதுக்கு கூட நாலு பேரு இருக்காங்க.
சத்யராஜ் கண்டிப்பாக பகுத்தறிவாளர் தான் அதில் ஒரு சந்தேகமில்லை. ஒரு நடிகர் அருகில் இருக்கும் போதே அவர் மனம் புண்படும்படி பேசி இருக்கக்கூடாதேன்பதும் உண்மை.
Post a Comment
<< Home