Tuesday, April 15, 2008

வாழ்த்துக்கள் திருநங்கை வித்யா!

உதவி இயக்குனரானார் அரவாணி

வழக்கமாக சினிமாக்களில் அரவாணிகளை ஒரு கேலிப் பொருளாக சித்தரிப்பது தான் வழக்கம். ஆனால், அந்த சினிமாவிலேயே ஒரு அரவாணியை உதவி இயக்குனராக சேர்த்துக்கொண்டிருக்கிறார் இயக்குனர் டி.சி.சிவக்குமார்.

வித்யா என்ற இந்த திருநங்கை ஒரு எழுத்தாளரும்கூட. இணையதளத்தில் 'பருத்தி வீரன்', 'பச்சைக்கிளி முத்துச்சரம்' போன்ற படங்கள் பற்றிய இவரது விமர்சனம் இணையதள எழுத்தாளர்கள் இடையே ரொம்பவும் பிரபலம்.
சிவக்குமார் இயக்கும் 'பால்' என்ற படம் திருநங்கைகள் பற்றியது. இந்த படத்தில் ரொம்பவே ஆர்வத்துடன் பணிபுரிந்து கொண்டிருக்கிறார் வித்யா.


நன்றி : (மூலம் - வெப்துனியா) : யாஹு தமிழ்!

வாழ்த்துக்கள் வித்யா! உங்களது முயற்சி வெற்றி அடையுட்டும். இந்த திரைப் படம் சமுதாயத்தில் ஓர் தாக்கத்தை உண்டாக்கட்டும்! விருதுகள் பல வெல்லட்டும்! நன்றிகள் பல இயக்குனர் டி.சி.சிவக்குமார்!!!

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.

நன்றி

மயிலாடுதுறை சிவா...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

6 Comments:

Blogger பிச்சைப்பாத்திரம் said...

all the very best to Vidya.

Tuesday, April 15, 2008 11:06:00 PM  
Blogger அபி அப்பா said...

வாழ்க வித்யா, நான் கடந்த மார்ச் 30 வலைப்பதிவர் சந்திப்பின் போது சென்னையில் பார்க்க நினைத்து ஏமாந்தேன்!

சிவா, நம் பள்ளி பசங்க ஏணிப்படிகள் வலைப்பூவில் ஏதாவது எழுத கேட்டுள்ளனர். எழுதி அனுப்புங்களேன்!!

Monday, April 21, 2008 11:54:00 AM  
Blogger cheena (சீனா) said...

திரைப்பட இயக்குனராகும் திருநங்கை வித்யா - நல் வாழ்த்துகள்

Monday, April 21, 2008 8:47:00 PM  
Blogger siva gnanamji(#18100882083107547329) said...

வாழ்த்துகள் வித்யா!

Tuesday, April 22, 2008 8:51:00 AM  
Blogger லேகா said...

நான் வித்யா நாவல் நான் படித்த எல்லா நாவல்களை காட்டிலும் மிகுந்த பாதிப்பை உண்டு பணிய ஒன்று..லிவிங் ஸ்மைல் வித்யாவின் அந்நூல் ஒரு விழிப்புணர்வு நாவல்..திருனங்கையறை சமூகம் நடத்தும் முறை அருவருக்கத்தக்கது...நாடகத்துறையில் விருப்பமும்,அனுபவமும் கொண்டுள்ள வித்யா திரைத்துறையில் சிறக்க வாழ்த்துக்கள்..

பிரியமுடன்
லேகா
http://yalisai.blogspot.com/

Wednesday, July 02, 2008 5:17:00 AM  
Blogger கயல்விழி said...

வித்யாவுக்கு வாழ்த்துக்கள். :)

Tuesday, July 22, 2008 2:29:00 PM  

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது