மயிலாடுதுறை ஆசிரியை ஜெயசீதா
வாசிங்டன். ஏப்ரல் 2008
ஆசிரியர் தொழில் ஓரு புனிதமான தொழில். நாம் கடந்த வந்த பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் சில ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளை நிச்சயம் நம்மால் என்றும் மறக்க முடியாது. அப்படி ஓரு மறக்க முடியாத மற்றோரு ஆசிரியர் ஜெயசீதா கணக்குப் பாடம் சொல்லி கொடுக்கும் தன்னலமற்ற ஓரு ஆசிரியர் இவர்.
மயிலாடுதுறையில் உள்ள தி.ப.ர.அர. தேசிய மேல்நிலைப் பள்ளியில் வேலைப் பார்க்கும் ஆசிரியர் இவர். பள்ளி காலங்களில் நான் இவரிடம் நான் படிக்கவில்லை. பள்ளி வாழ்க்கை முடித்து அவஅகல்லூரியில் இளங்கலை கணிதம் படிக்கும் பொழுது என் நண்பர்கள் சிலர் அந்த ஆசிரியையிடம் மாலை வேளைகளில் சிறப்புப் பாடம் டீயுசன் படிந்தார்கள், பிறகு நானும் சேர்ந்தேன். மிகப் பொறுமையாக, அன்பாக நடந்தும் ஆசிரியை. அதுமட்டும் அல்ல, கோபமே பட மாட்டார்கள்.
இவர்கள் ஏனோ திருமணம் செய்து கொள்ளவில்லை. ஏன் என்றும் தெரியவில்லை. இப்படிபட்ட சில ஜீவன்கள் திருமணம் செய்துக் கொள்ளமால் இருப்பது கூட நம் சமுதாயத்திற்கு நல்லதோ என்று கூட எனக்கு அடிக்கடி தோணும். இவரைப் பற்றி நான் எழுத இரண்டு காரணங்கள் உண்டு. இன்று தற்செயலாக ஓர் புதிய வலைத் தளத்தைப் பார்த்தேன். http://eenippadikal.blogspot.com/ இந்த வலைப் பூவை எழுதி உள்ளர்கள் நான் படித்த அதே பள்ளியில் படித்த மாணவர்கள். அதில் அவர்களை வாழ்த்தி பின்னூட்டம் தரமுடியவில்லை. உடன் நான் படித்த பள்ளி நினைவிற்கு வருகையில் அந்த ஆசிரியரின் நினைவு வந்தது.
இரண்டாவது ஓர் முக்கிய காரணம், நாங்கள் இளங்கலை கணிதம் படித்தப் பொழுது அவரிடம்ஓர் மூன்று அல்லது நான்கு மாதங்கள் படித்து விட்டு, தேர்வுகளில் நல்ல மதிப் பெண்கள் எடுக்கவில்லை.அதற்கு முழு காரணம் நாங்களே மற்றும் தேர்வும் மிக கடுமையாக இருந்தது. நாங்கள் நல்ல மதிப் பெண் எடுக்காத காரணத்தால் ஜெயசீதா ஆசிரியை எங்களிடம் பணம் பெற்றுக் கொள்ளவில்லை.நாங்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர்கள் எங்களிடம் பணம் பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டார்கள்! கணிதம் படித்த ஆண்டு 1988, அன்று ரூபாய் 200 மிகப் பெரியப் பணம், அதுவும்கிட்டதட்ட 5 நபர்களிடம். எவ்வளவுப் பெரிய மனம் வேண்டும் அவர்களுக்கு! சுயநலமில்லா, பொருளின் மீது பற்று இல்லா ஓர் ஜீவன்!
தமிழகம் செல்லும் பொழுது எல்லாம் பள்ளிக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படும் பொழுது அந்த ஆசிரியை பார்ப்பது வழக்கம், இன்றும் அதே அன்புடன், அதே புன்னகையுடன், சற்று வயதான தோற்றத்துடன் ஜெயசீதா....வாழ்க பல்லாண்டு!
பயன்தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின்
நன்மை கடலின் பெரிது.
நன்றி
மயிலாடுதுறை சிவா...
8 Comments:
/நான் இவரிடம் நான் படிக்கவில்லை. பள்ளி வாழ்க்கை முடித்து//
நானும்தான் - பள்ளி வாழ்க்கை முடிந்துவிட்டது :(
எப்போதும் பார்த்தாலே தெரிந்துவிடும் அவர்களின் பொறுமை குணம்! ஒரு சின்ன சைக்கிளில் பள்ளி வந்து செல்லும் டீச்சர் பற்றி அவரிடம் கணக்கு பாடம் டீயூசன் பயின்ற நண்பர்கள் சொல்ல கேட்டதுண்டு!
நன்றி அண்ணா!
நன்றி தம்பி ஆயில்யன்
நலமா? வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி
மயிலாடுதுறை சிவா...
>>> பணம் பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டார்கள் <<<
ஆசிரியர் தொழில் என்பது பணத்தை இலாபமாக ஈட்டும் தொழில் இல்லை என்பதை எத்தனை ஆசிரியர்கள் இப்பொழுது கடைபிடிக்கின்றனர் ? அதிலும் இப்பொழுதைய தனியார்மயமாக்கல் கல்வியிலும் புகுந்து விட்டது மிகவும் வருந்தத்தக்கது ..
இத்தகைய ஆசிரியர்களை காண்பது மிகவும் அரிது ..
நிஜமாகவே உயர்ந்து நிற்கிறார்.
நன்றி யாத்திரீகன் மற்றும் வடுவூர் குமார்...
சிவா...
This comment has been removed by the author.
வாவ்... அருமையா எழுதியிருக்கீங்க...
i am also studied at DBTR NHS school. but i was done 10th std-in the year 1987-1988.so there was no chance to study such kind of teacher.Shanmugavel (Suresh)Dubai.
Post a Comment
<< Home