இப்படிக்கு ரோஸ் - விஜய் தொலைக் காட்சி! - சூப்பர்!!!
வாசிங்டன், மே, 2008. கடந்த 4 வருடங்களாக தொடர்ந்து சூரிய (சன்) தொலைக் காட்சி பார்த்து பார்த்து அலுத்துவிட்டது. என்னதான் சூர்ய தொலைகாட்சி நன்றாக இல்லை, சில அல்லது பல சமயம் செம அறுவை என்று சொன்னாலும் அதனை நிறுத்த மனம் வரவில்லை. கடந்த இரு மாதங்களாக விஜய் தொலைக் காட்சி வாங்கி பார்க்க ஆரம்பித்து விட்டேன். பலப் புதிய நிகழ்ச்சிகள் சூப்பராக உள்ளது. "தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு", "விஜய் ஜோடி நம்பர் 1" "நீயா நானா" "இசைக் குடும்பம்", இப்படி சில....
கடந்த ஒரு வாரமாக புதிய நிகழ்ச்சியாக "இப்படிக்கு ரோஸ்" என்ற ஓர் புதிய நிகழ்ச்சி வர ஆரம்பித்துள்ளது. இதனைப் பற்றி பத்திரிக்கை வாயிலாக படித்து இருந்தாலும், மேலும் இந்த நிகழ்ச்சியைதொலைக் காட்சி வரலாற்றில் முதன் முறையாக "பால்திரிபு" கொண்ட இளைஞி நடத்துவதும் ஓர் புதிய முயற்சியை ஆதரிக்க வேண்டும் என்று ஆவலாக இருந்தேன்.
சென்ற வாரம் இந்த நிகழ்சியை பார்த்த பொழுது மிக மிக ரசித்து பார்த்தேன். காரணம் இந்த நிகழ்ச்சியை நடத்தும் ரோஸ், நன்கு விசயம் உள்ளவர் போல் தோணுகிறது. நல்ல முதிர்ச்சியான கேள்விகளை கேட்டார் மாடல் பெண்களிடம். அதிலும் குறிப்பாக பெண்களிடம் தோண்டி தோண்டி இந்த மாடல் உலகில் இச்சமுதாயம் பெண்களை எந்த மாதிரி நடத்துகிறது என்றும், இதில் உள்ள சிக்கல்கள் என்னென்ன என்றும், மிஸ் இந்தியாவாக வர என்னென்ன தகுதி வேண்டும் என்றும் சொல்லும் பொழுது, மிஸ் தென்னெந்திய பெண் லீலா வந்து இருந்தார். அவர்கள் மாடல் பெண்ணிற்குசில ஆலோசனைகள் வழங்கும் பொழுது இந்தியா அழகி போட்டியில் கலந்து கொள்ள குறைந்தபட்சம் 5.7" உயரம் முக்கியம் என்றார். அடுத்து அவர் சொன்ன பொழுது மிக மிக ஆச்சர்யப் பட்ட விசயம் அவர் பெண்களுக்கு மார்பு_இடை_கீழ் அளவுகள் பற்றி சொன்னார். அதாவது 36_24_36 பெண்ணிற்கு முக்கியம் என்றார். அதனை உடனே ரோஸ் மீண்டும் 36_24_36? என்று அதனை உறுதிப் படுத்துக்கொண்டார். அந்த நிகழ்சியில் கலந்துக் கொண்ட மற்ற மாடல் பெண்கள் அதனை ஒரு சிலர் ஏக்கத்தோடும், ஓரு சிலர் வருத்தோடும் பார்த்துக் கொண்டு இருந்தனர்.
ரோஸ் கலந்துரையாடிய மாடல் பெண்கள் மொத்தம் 6 பேர்களில் ஓரிருவர் மட்டுமே மாடல் போல் இருந்தனர், மற்றவர் சாரசரி பெண்களை போலவே இருந்தனர். அந்த நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட மிஸ் தென்னிந்தியா லீலா ஸ்டைலாக, உயரமாக, எடுப்பாக, பளிச்சென்று இருந்தார், அவர் மாடல் என்று சொல்லாமலே தெரிந்தது.
இந்த நிகழ்ச்சியில் என்ன ஓர் குறுப்பிட்டு சொல்ல வேண்டிய விசயம் என்றால் "ரோஸ்" நல்ல தமிழ் பேசுகிறார், உச்சரிக்கிறார். அவரிடம் அசட்டுதனமான கேள்விகள் இல்லை. எந்த விசயத்தை பெண்கள் பொது சபையில் பேச கூச்சப்படுகிறார்களோ அதனை தெளிவாக கேட்கிறார் அதற்கான பதிலை வாங்க முயற்சிக்கிறார். ரோஸ் அமெரிக்காவில் முதுகலைப் பட்டம் பெற்றவர் என்று படித்தாக ஞாபகம்.
இந்த நிகழ்ச்சி விஜய் தொலைக் காட்சிக்கு மேலும் ஓர் மைல்கல்லாக அமையும் என்று நினைக்கிறேன். இந்த வாரம் "திருமணம் செய்து கொள்ளமால் சேர்ந்து வாழ்வதுப் பற்றி" மொத்ததில் விஜய் தொலைக் காட்சி வாங்கியதில் வார இறுதிகள் நன்றாக பொழுது போகிறது. சமுதாய தாக்கம் உள்ள நிகழ்ச்சிகளை பார்ப்பதில் மனம் மகிழ்ச்சி அடைகிறது....
வாழ்க விஜய் தொலைக் காட்சி!
நன்றி
மயிலாடுதுறை சிவா...
4 Comments:
நிகழ்ச்சிகள் நன்று தான். ஆனால், மற்ற எல்லா தொலைக்காட்சிகளையும் விட அநியாயத்துக்கு ஆங்கிலம் கலந்து பேசுகிறார்கள். எடுத்துக்காட்டுக்கு, coffee with anu, madan's திரைப்பார்வை. இதைச் சரி செய்தால் பரவாயில்லை.
//மொத்ததில் விஜய் தொலைக் காட்சி வாங்கியதில் வார இறுதிகள் நன்றாக பொழுது போகிறது.
//
என்னது விஜய் டிவியை நீங்க வாங்கிட்டிங்களா?
சும்மா தமாசு :-)
ரவி சங்கர்
நீங்கள் சொல்வது சரி. நீயா நானா கோபி கூட ஆங்கிலத்தில் சற்று அலுட்டுகிறார் என்று எனக்கு படுகிறது.
காபி வித் அனு, அப்படிதான்...
மதன் பார்வை சுமாராகதான் உள்ளது. மதன் அடிக்கடி எனக்கு பிடிக்கவில்லை, எனக்கு அந்த காட்சி நன்றாகப் பட்டது, எனக்கு அதில் உடன்பாடு இல்லை என்று அடிக்கடி சொல்லுகிறார்!
தங்கள் வருகைக்கு நன்றி!
சிவா...
குழலி!
...என்னது விஜய் டிவியை நீங்க வாங்கிட்டிங்களா?.." :-((
இன்னும் அந்தளவிற்கு பெரிய ஆகவில்லை குழிலி!
வருகைக்கு நன்றி!
சிவா...
Post a Comment
<< Home