Chandini Bar - நெஞ்சை உருக்கும் நடிகை தபுவின் ஹிந்தி திரைப் படம் - 1
சிலப் படங்களை பார்த்தவுடன், நிறைய எண்ண அலைகள் ஏற்படும் - அந்தத் திரைப் படம்குறித்தும் அதில் உள்ள கதாபாத்திரங்கள் குறித்தும், அது உங்களை பாதித்த படமாக இருப்பின்.(இதில் பில்லா, அழகிய தமிழ் மகன், மலைக் கோட்டை, பீமா, காளை இவற்றை எல்லாம் எடுத்து கொள்ளதீர்கள் ப்ளீஸ்!)
கடந்த ஒரு வருட காலமாக ஹிந்தித் திரைப் படங்களை நிறைய பார்க்க ஆரம்பித்து ரசிக்க ஆரம்பித்த விட்டேன், அதிலும் குறிப்பாக இங்கு அமெரிக்காவில் இந்திய மளிகைக்கடைகளில் Art Movie பகுதியில் ஹிந்தியில் மிகச் சிறப்பாக பேசப் பட்ட படங்கள்பார்க்க ஆரம்பித்து வார இறுதிகள் நல்ல பொழுதாக போக ஆரம்பித்து விட்டன. நேரம்கிடைக்கும் பொழுது நிறையப் படங்களைப் பற்றி நான் எழுதுகிறேன்.
அப்படி என்னை மிகவும் பாதித்த படங்களில் ஒன்றுதான் "Chandini Bar". இந்தத் திரைப் படத்தை இயக்கியவர் Madhur Bhandarkar. இவர் ஹிந்தியில் மிக பிரபலமான இயக்குனர்.இவரின் Page 3, Corporate, Traffic Signal என்ற படங்கள் பேசப் பட்ட படங்கள். 'சாந்தினி பார்' திரைப்படத்தைப் பார்த்து முடித்தவுடன், ஓரு சோகமான நாவலைப் படித்தது போல உணர்ந்தேன். இந்த கதையில் என் உணர்வில், என் சிந்தனையில் எண்ண அலைகளை ஏற்படுத்தியது கதாநாயகி தபுவின் நடிப்பு!. இந்த திரைப் படம் தபுவிற்கு ஓர் மைல் கல் என்றால் அது மிகை அல்ல. கதை ஆரம்பம் முதல் இறுதிவரை மும்தாஜ் என்கிற கதாபாத்திரத்தில் தபு வாழ்ந்து இருகிறார். பாரில்(Bar) நடனமாடிக்கொண்டு, விபச்சாரத்திலும் சூழ்நிலை காரணமாக தள்ளப்படும் பெண்களைப் பற்றிய ஒரு திரைப்படத்தில் தபு நாயகியாக நடிக்க ஒப்புக் கொண்டதை நினைக்கும் பொழுது பிரமிப்பாக உள்ளது. தபு தான் ஓரு சிறந்த நடிகை என்பதை காட்சிக்கு காட்சிநிரூபித்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.
உத்திரபிரதேச மாநிலத்தில் மதக் கலவரம் காரணமாக கதையின் நாயகி மும்தாஜ் தன்னுடையஅப்பா, அம்மா, வீடு எல்லாவற்றையும் இழக்கிறாள். பிழைப்புத் தேடி மாமாவோடு பம்பாய் நகரம்செல்லுகிறாள். தூரத்து உறவினரின் உதவியால், அங்கு அவளுக்கு Chandini Bar என்று சொல்லப்படும் பொழுதுப் போக்கு விடுதியில் நடனப் பெண்ணாக வேலைக் கிடைக்கிறது. விருப்பமே இல்லாமல் அங்கு நடனப்பெண்ணாக வேலைச் சேர்கிறாள் மும்தாஜ். அங்குள்ள மற்ற நடனப் பெண்கள் தங்களை பிழைப்பிற்காக உடம்பை விற்றாலும், அவர்களுக்கும் ஓர் நல்ல மனது உள்ளது என்று இயக்குனர் காண்பித்துஇருப்பது மிக அருமை! மும்தாஜிற்கு அங்குள்ள நடனப் பெண்களே ஒரே ஆறுதல், நட்பு மற்றும்மகிழ்ச்சி எல்லாம்!
மும்தாஜ் ஒருநாள் தன் மாமாவினால் வண்புணரப்படுகிறாள். அடுத்தநாள் தன் சக நடன தோழிகளிடம் அதனைச் சொல்லி அழும் பொழுது, அந்த தோழிகள் ஓவ்வோருக்கும் பின்னாடியும் இதுப் போல் ஓர் கசப்பான அனுபவம் இருப்பது தெரிய வருகிறது. இப்படியே காலங்கள் சென்று கொண்டு இருக்க, அந்த நடன விடுதிக்கு கதையின் நாயகன் Atul Kulkarni வருகிறான், தபுவை பிடித்துப் போய்விடுகிறது. அவன் ஒரு தாதாவுக்கு பணிபுரியும் பேட்டை ரவுடி. மும்தாஜை வலுகட்டாயமாய் தன் ஆசைக்கு இணங்கச் சொல்லுகிறான். மும்தாஜும் எந்த உணர்ச்சியும் இல்லாமல் மரகட்டைப் போல அவனிடம் படுக்க, அவன் கடுப்பாகி, இதற்குமுன்யாருடனும் படுத்தது இல்லையா எனவும், இந்த அனுபவம் உனக்கு இருக்கா என்றும் கோபமாககேட்கும் பொழுது தனது மாமா தன்னை பலாத்காரம் செய்த விசயத்தை சொல்லி தபு அழ, Atul அந்த மாமாவை கத்தியால் குத்தி கொலை செய்கிறான். அதனை மும்தாஜ் அதிர்ச்சியுடன்பார்த்து கொண்டிருக்க, உன்னை போய் உன் சொந்த ஊரில் விட்டுவிடவா அல்லது என்னை திருமணம் செய்து கொள்கிறாயா? என்று கேட்கிறான். அவளும் அவனை திருமணம் செய்துகொள்கிறாள். பாரில் நடனம்பெண் வேலையை விட்டு விட்டு மகிழ்ச்சியாக, கெளரவமாக குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகிறாள். காலங்கள் உருண்டொடுகிறது. Atul தன்னுடைய கடந்த காலத்தில் செய்த தவறுகளுக்கு, போலிஸ் அவனை என்கவுண்டரில் போட்டுதள்ளுகிறது. இங்குதான் மும்தாஜின் வாழ்க்கை சீர் குலைந்து போக ஆரம்பிக்கிறது....
தொடரும்....
நன்றி
மயிலாடுதுறை சிவா...
10 Comments:
நானும் இந்த திரைப்படத்தை பார்த்தேன், மிகவும் அழகாக சொல்லப்பட்ட கதை, அதிலும் கதையின் இரண்டாம் பகுதியில் தபுவின் மகன் தவறுதலாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க பட்ட பின், அங்கு உள்ள மூத்த சிறுவர்களால் பாலியல் வன்முறைக்கு ஆட்படும் காட்சிகள் மிகவும் கொடுமையானது. இதை போல் உண்மையாக தற்போது நடந்து கொண்டு இருக்கிறது என்பது கசப்பான உண்மை. அந்த சாந்தினி பாரில் காட்டப்படும் காட்சிகள் அனைத்தும் 100% மிகை படுத்தப்படாத உண்மை.
மிக்க நன்றி கிரி
சிவா...
corporate & trafic signal arent that good ones.. but Page3 was a good one.. i'l try to watch this one.. thnx
யாத்திரீகன்
Corporate மிக நல்ல படம். இந்த படத்தை பாருங்கள்.
வருகைக்கு நன்றி
சிவா
hi this is kalyankumar from chennai. journalist film script writer. i like to help about blogs. pls mail me kalyangii@gmail.com
வணக்கம் சிவா. நான் கல்யாண்குமார், சென்னனயிலிருந்து… பத்திரிக்கையாளன், எழுத்தாளன் – திரைத்துறையில் பணிபுரிகிறேன். தங்களது வலைப்பூ பார்த்தேன். நன்கு அமைத்திருக்கிறீர்கள். வலைப்பூ பற்றிய எனது சந்தேகங்களுக்கு தாங்கள் உதவுவீர்கள் என்று நம்புகிறேன். எனது மெயில்: kalyangii@gmail.com and kalyanje.blogspot.com
Siva,
Keep writing. My view about the same director's film of Page 3.
http://www.maraththadi.com/article.asp?id=2718
கல்யாண்ஜி
உங்களை மின் அஞ்சல் மூலம் தொடர்பு கொள்கிறேன்.
சிவா...
சுரேஷ் கண்ணன்
வணக்கம். நேரம் கிடைக்கும் பொழுது Page3 பற்றி எழுதலாம் என்று நினைத்து இருந்தேன். உங்களது மரத்தடி
கட்டுரை படித்தேன். மிக நன்றாக எழுதியுள்ளீர்கள் வழக்கம் போல.
சென்னையில் டிவிடிக்கள் எவ்வளவு விலை? ஒரிஜினலா?
மயிலாடுதுறை சிவா...
//சென்னையில் டிவிடிக்கள் எவ்வளவு விலை? ஒரிஜினலா?
//
சிவா,
ஒரிஜினல் டிவிடிக்கள் music world, land mark போன்ற ஷோரூம்களில் கிடைக்கும். ஆனால் விலை அதிகம். ரூ.200 - 300 ஆகும். ஆனால் pirated version பர்மா பஜார் போன்ற இடங்களில் கிடைக்கும். விலை ரூ.50-75தான் ஆகும். பார்த்து வாங்க வேண்டும்.
Post a Comment
<< Home