Tuesday, July 22, 2008

இயக்குனர் சேரனா இப்படி?

வாசிங்டன் சூலை 22, 2008

தமிழ் சினிமாவில் ஓரளவு தரமான திரை காவியங்களை கொடுத்த சேரன், மாய கண்ணாடி தோல்விக்குபிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு "பொக்கிஷம்" என்ற திரைப் படத்தை எடுத்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே!

இந்த திரைப் படத்திற்கு அவரின் மிக அருமையான படமான ஆட்டோகிராப் நாயகிகள் சினேகா, கோபிகா, மல்லிகா இவர்களிடம் இந்த புதுப் படத்திற்கு அணுகி அவர்கள் மறுத்துவிட்டதாக கோலிவுட் வட்டாரம் தெரிவித்தாலும், அவருடைய மற்றோரு நல்ல திரைப் படத்தில் தவமாய் தவமிருந்து நாயகி பத்மப்ரியாவை அவர் தன்னுடைய பொக்கிஷத்தில் நடிக்க வைத்து வருகிறார்.

இந்த திரைப் படத்திற்கு அவர் முதலில் ப்ரியாமணியை அணுகியதாகவும், அவர் மறுப்புத் தெரிவித்து விட்டாதாகவும் சேரனே சொல்லுகிறார். மேலும் அவர் ப்ரியாமணியை சிறிதும் நாகரீகம் இல்லாமல் தரக் குறைவாக திட்டுகிறார். வயதுக்கு மீறிய புகழ் வந்துவிட்டது என்கிறார். புகழுக்கும் வயதிற்கும் என்ன சம்மந்தம்? சேரன் ப்ரியாமணியை முதன் முதலில் நடிக்க கூப்பிட்டதான் காரணம் என்ன? ஓரளவு இவர் நடிப்பார் என்பதும் தம் படத்திற்கு இவரை நடிக்க வைத்தால் மார்கெட் நன்கு இருக்கும் என்று நினைத்து காரணத்தால் சேரன் அணுகி இருக்கிறார். ப்ரியாமணி மறுத்து இருக்கிறார். உடனே சேரனுக்கு கோபம் தலைக்கேறிவிட்டது!

இவருடைய படத்தில் நடிக்க வரவில்லை என்பதாலயே ப்ரியமணியை இப்படி பேசுவதில் என்ன நியாயம் இருக்க முடியும்?! இதுவே இவர் படத்தில் நடிக்க சம்மதித்து இருந்தால் இவர் இப்படி பேசி இருப்பாரா? அல்லது என் படத்தில் சிறிய வயதிலேயே தேசிய விருது வாங்கிய நடிகையை நடிக்க வைத்து இருக்கிறேன் என்று பெருமையாக பேசி இருப்பாரோ?!

ப்ரியாமணிக்கு யார் படத்தில் நடிக்க வேண்டும், யார் படத்தில் கூடாது என்ற முடிவை எடுக்க முழு உரிமை மற்றும் சுதந்திரம் உண்டு! அதில் தலையிட இயக்குனர் சேரனுக்கு என்ன உரிமை இருக்கிறது?!

Free Image Hosting at <a href=

இந்த சிறிய வயதில் வாங்கிய தேசிய விருது அவரின் "பருத்தி வீரன்" நடித்ததிற்கு அதற்கான உழைப்பிற்கு கிடைத்த பலன். இதனை சேரன் கொச்சைப் படுத்தி பேசியது கண்டிக்க தக்கது!

நல்ல தரமான படங்களை கொடுத்த சேரன், மாயகண்ணாடி மூலம் தோல்வியை தழுவினார். ஆனால் அவரால் மீண்டும் ஓர் நல்ல திரைப் படத்தைதரமுடியும் என்று நிச்சயம் நம்புகிறேன். போக்கிஷம் வெற்றி மூலம் ப்ரியாமணியை நீங்கள் வருத்தப் பட வைக்க முடியும். ஆஹா இப்படிப்பட்ட அருமையான திரைப் படத்தில் நாம் நடிக்காமல் போய்விட்டமே என்று?!

அதேப் போல் பொக்கிஷம் வெற்றிப் பெற வேண்டும், அதுவரை அவர் அமைதியாக இருப்பது அவருக்குநலம்!

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

(ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும். இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்குக் காரணமாகி விடும்)


இன்சொல் இனிதீன்றல் காண்பான்
எவன்கொலோவன்சொல் வழங்குவது.

(இனிய சொற்கள் இன்பத்தை வழங்கும் என்பதை உணர்ந்தவர் அதற்கு மாறாக எதற்காகக் கடுஞ் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்?)

நன்றி!

மயிலாடுதுறை சிவா...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

7 Comments:

Blogger rapp said...

மிக மிகச் சரியான கருத்துக்கள், இவருக்கும், தங்கர்பச்சானுக்கும் இப்படிப் பேசுவதே வழக்கம்.

Tuesday, July 22, 2008 10:02:00 PM  
Blogger Bleachingpowder said...

இந்த ரெண்டு பேரையுமே சம அளவில் வெறுப்பவன் நான். சேரனை வெறும் இயக்குனராக ரொம்ப பிடிந்திருந்தது ஆனால் எப்போது நடிக்க வந்தாரோ அதிலிருந்து அவரை பார்த்தால பத்திகிட்டு வருது.

சுட்டு போட்டாலும் அவர் முகத்தில் எந்த உண்ர்ச்சியும் வராது. அதுல ரொமேன்ஸ் வேற பண்ண ட்ரை பண்ணுவாரு அதுவும் ஒரே டயலாக்தான் "என்னடா செல்லம்". அப்புறம் மூஞ்சிய மூடிட்டு அழறது, எம்.ஜி.ஆர் க்கு பிறகு முஞ்சிய பொத்திட்டு அழறது இவர் ஒருத்தர் தான்.

கேட்டா என் கதைக்கு எந்த நடிகர்களும் கால்ஷிட் தர மாட்டேங்கறாங்க ஒரு நொண்டி சாக்கை சொல்றது. அப்படி ஒரு கலை தாகம் இருந்தா புதுமுகங்களை போட்டு படம் எடுக்க வேண்டியதுதனே.

அப்புறம் இந்த பொண்ணு ப்ரியாமணி. பருத்திவீரண் படம் வெளி வந்ததுக்கப்பறம் இந்த பொண்ணு பன்ற அலப்பற தாங்க முடியல. அரையும் குறையுமா ட்ரஸ் பண்ணிட்டு இருக்கிற எல்ல இளம் நடிகர் பின்னாடியும் ஜால்ரா போட்டுகிட்டு அலைவதை பார்த்தால் கண்றாவியாக இருக்கிறது.

She dosent want to keep her Paruthiveeran image, which would not bring her any money. So she started telling the usual dialogue to the media that, if story demands, i will act in a Glamour role. As she said, she started acted in all masala movies with cheap costumes to get a chance to act with young stars like vijay and ajith.

இதில் என்ன தவறு இருக்கிறது, அது அவர் விருப்பம் என்று சொல்பவர்களுக்கு.

எப்படி வேண்டுமானாலும் ஆடை குறைப்பு செய்யட்டும், ஆனால் பேட்டினு வரும் போது மட்டும், நான் கலையை வளர்க்க வந்த நடிகைனு சொல்லும் போதுதான் கடுப்பாகுது

முத்தழகு உருவம் நம் மனதில் இருந்து மறைவதற்குள் அரை நிர்வாணமாக ஆட்டம் போட ஆரம்பித்துவிட்டார்.

Wednesday, July 23, 2008 4:04:00 AM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

Rapp and Bleachingpowder தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

மயிலாடுதுறை சிவா...

Wednesday, July 23, 2008 6:45:00 AM  
Blogger அமர பாரதி said...

//வயதுக்கு மீறிய புகழ் வந்துவிட்டது என்கிறார். புகழுக்கும் வயதிற்கும் என்ன சம்மந்தம்?// அவர் சொன்னது அநாகரீகம்தான். ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அவர் வயதுக்கு மீறிய புகழ் என்று சொல்லவில்லை. தகுதிக்கு மீறிய பெருமை என்று தான் சொன்னார்.

Wednesday, July 23, 2008 7:13:00 AM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

அமர பாரதி

அப்படியே வைத்து கொண்டாலும் அது தவறு அல்லவா?

சக கலைஞனாக ப்ரியாமணியின் தேசிய விருதை பாராட்டுவதை விட்டுவிட்டு இப்படி அநாகரீகமாக பேசுவது தவறு அல்லவா?

மயிலாடுதுறை சிவா...

Wednesday, July 23, 2008 8:07:00 AM  
Blogger கோவை விஜய் said...

சேரனா இப்படியா?

மிகச் சரியான பதிவு.

தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com

Wednesday, July 23, 2008 8:55:00 AM  
Blogger manjoorraja said...

சேரன் முதலில் நடிப்பதை நிறுத்தவேண்டும். கொஞ்சம் கூட முகபாவங்கள் காட்ட அவரால் முடியவில்லை என்பது கசப்பான உண்மை.

பிரியாமணி சமீபத்தில் தனக்கு புகழ் ஈட்டி கொடுத்த அமீரின் படத்தில் நடிப்பதற்கே மறுத்துள்ளார்.

அது போல தான் சேரனுக்கும் என சொல்லலாம். ஆனால் அமீர் அதை பெருந்தன்மையுடன் எடுத்துக்கொண்டுள்ளார்.

அதே போல பிரியாமணியும் தனக்கு விருது கிடைத்ததற்கு முழுமுதல் காரணமும் அமீர் தான் அந்த விருதும் அவருக்கு தான் சேரவேண்டும் என பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். இது மிகவும் பெருந்தன்மையான ஒரு விசயம். கவர்ச்சி நீண்டகாலம் நிலைக்காது என்பது அவருக்கு ஏனோ புரியவில்லை என்பது வருத்தம் அளிக்கும் செய்தி.

சேரனுக்கும் பிரியாமணிக்கும் இடையில் என்ன நடந்தது என தெரியவில்லை. ஆனால் சேரன் இதை மிகவும் மிகை படுத்தவேண்டிய அவசியமும் இல்லை. தன் திறமையை வேறு ஒரு நடிகையை வைத்து வெளிக்காட்டியிருக்கலாம்.

அவருடைய படம் பேசவேண்டும். அவரல்ல.

சேரன் ஒரு முறை ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. கொஞ்சம் அதிக பிரசங்கித்தனமாக நடந்து கொண்டார். பலருக்கும் அவரது பேச்சு பிடிக்கவில்லை. புகழ் வருகையில் அடக்கமாக இருந்தவர்கள் தான் வெற்றியடைந்திருக்கிறார்கள். இதை சேரனும் புரிந்துக்கொள்ளவேண்டும்.

Friday, July 25, 2008 11:00:00 AM  

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது