தமிழன் என்று சொல்லாடா - விஜய் தொலைக் காட்சி
சுதந்திர தின நிகழ்ச்சியில் விஜய் தொலைக் காட்சியில் "தமிழன் என்று சொல்லாடா"என்ற அருமையான ஓர் ஆவணப் படம் போல ஓர் நிகழ்ச்சி காண்பிக்கப் பட்டது!
தமிழ்நாட்டு சிலப் பிரபலங்களை அவர்கள் செய்த சாதனையோடு, அவர்களைப் பற்றிஒரு சில நிமிடத்திற்கும் குறைவாக ஆனால் நிறைவாக காண்பிக்கப் பட்டது.
இது ஓர் தரமான நிகழ்ச்சி! மற்ற தொலைக் காட்சிகளுக்கு எடுத்துக் காட்டாக வரக்கூடிய நிகழ்ச்சி என்றால் அது மிகைஅல்ல!
அவர்களுள் பலர் மிகப் பெரிய சாதனைகளை படைத்தவர்கள், தொடர்ந்தும் செய்து வருபவர்கள். இதோ சமுத்திரத்தின் சில துளிகள்!
இந்தியாவின் முதல் குடிமகன் அப்துல் கலாம் பற்றி
புகையிலை ஒழிப்பு புகழ் மத்திய அமைச்சர் அன்புமணி பற்றி
புற்று நோய் ஒழிப்பு அடையார் புற்று நோய் கழக சந்தாம்மா பற்றி
தமிழ் எழுத்துலகில் தனி முத்திரை படைத்த ஜெயகாந்தன் பற்றி
இயற்கை விஞ்ஞானி அய்யா நம்மாழ்வார் பற்றி
ஏழை எளிய மக்களுக்கு போராடி வரும், நில மீட்பு போராளி கிருஷ்ணம்மாள் பற்றி
முதுகலை காடுகளில் தொடர்ந்து ஒளிப்பதிவு செய்து வரும் அல்போன்ஸ்ராய் பற்றி
மக்களுக்கு தொடர்ந்து உதவி செய்து வரும் ஆட்சியர் உதயசந்திரன் IAS பற்றி
கார் பந்தயத்தில் பல வெற்றி பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த நரேன் கார்த்திகேயன் பற்றி
ஏழை எளிய மற்றும் தலித் பெண்களின் மேம்பாட்டிற்கு போராடும் ரூத் மனோரோமா பற்றி
தன்னிறிவு பெற்ற ஓடந்துறை பஞ்சாய்த்து தலைவர் சண்முகம் பற்றி
இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்த கேரம் புகழ் இளவழகி பற்றி
ஹிந்தி திரை உலகில் கொடி கட்டி பறக்கும் ஒளிபதிவாளர்கள் ரவி கே சந்திரன், மணிகண்டன் பற்றி
எல்லாவற்றிக்கும் மேலாக அனாதை மற்றும் மனநிலை பாதிக்கப் பட்ட நபர்களுக்கு தினமும் உணவு அளித்துவரும் அக்ஷாயா கிருஷ்ணனை பற்றி
இவர்களின் சாதனைகளை காண்பித்த விஜய் தொலைக்காட்சி இயக்குனர் அமீரையும், நடிகை ப்ரியா மணியையும் வாழ்த்தியது!
தமிழ் திரை உலகில் தரமான திரைப் படம் வருவதும், சமுதாய சிந்தனைகளை பிரதிபலிப்பதும்வரவேற்க கூடிய ஓர் ஆரோக்கியமான விடயம். ஆனால் இவர்களை விஜய் தொலைக் காட்சி பாராட்டியது மனதிற்கு நிறைவாக இல்லை!
இந்த சாதனைப் பட்டியலில் அமீரும், ப்ரியாமணியும் காண்பித்தது சற்று நெருடலாகவே இருந்தது!இவர்கள் சாதிக்க வேண்டியதும், போக வேண்டிய பாதையும் வெகு தூரம் உள்ளது என்றுதான் நான் நினைக்கிறேன்!
தமிழனின் தன்னமலமற்ற சேவையை, தியாக உள்ளங்களை அடையாள படுத்திய விஜய் தொலைக்காட்சிக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் பல!
மயிலாடுதுறை சிவா...
7 Comments:
நல்லதொரு இடுகை!
இது tubetamil போன்ற தளங்களில் இருந்தால் தெரிவிக்க இயலுமா சிவா?
அன்புடன்
வெங்கட்ரமணன்
venkatramanan[at]gmail
வருகைக்கு நன்றி ரமணன்!
எனக்கு தெரியவில்லையே tubetamil ல் உள்ளதா என்று!
மயிலாடுதுறை சிவா...
தங்களின் பதிவின் மூலமே இப்படி ஒரு அருமையான நிகழ்ச்சி சுதந்திர நன்னாளில் விஜய் டி.வியில் நடந்தேறியுள்ளது என்பதை அறிந்தேன்!
நன்றி அண்ணா!
//இந்த சாதனைப் பட்டியலில் அமீரும், ப்ரியாமணியும் காண்பித்தது சற்று நெருடலாகவே இருந்தது!//
மற்ற நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தாது,இதை மட்டுமே அன்று விஜய் டிவியில் பார்த்துவிட்டு சென்ற மக்கள் எத்தனையோ பேர் இருக்கலாமல்லவா!
விளம்பரதாரர்களையும் விஜய் டிவி இழந்துவிட்டால்,இனி இது போன்ற நிகழ்ச்சிகளை பரிசோதனை அடிப்படையில் கூட செய்து பார்க்க யாரும் இல்லையே!
75% சிறப்பாக செய்திருக்கிறார்கள் என்பதை உண்ர முடிந்த நிலையில் விஜய் டிவிக்கு வாழ்த்துக்கள்!
அன்பு தம்பி ஆயில்னுக்கு
வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி!
மயிலாடுதுறை சிவா...
புல்லரிக்க வைத்த நிகழ்ச்சி... இது போல் பல சாதனையாளர்கள் வெளிச்சத்திற்கு வர வேண்டும்.
இந்த நிகழ்ச்சியைப் பார்க்காதவர்கள் இந்தத் தொடுப்பில் பார்க்கலாம்.
http://thamizhkadal.blogspot.com/
Check the videos at Tubetamil.com
http://www.tubetamil.com/view_video.php?viewkey=1ea4299c0df3e1d29034
Krithika,
Houston - TX.
Post a Comment
<< Home