அமெரிக்காவின் நிறப்பற்று!!!
வாசிங்டன் அக் 08 2008
போனவாரம் நான் வருகின்ற அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு ஓபாமா வெற்றி பெற எனது அருகில் உள்ளஇல்லங்களுக்கு சென்று வாக்கு சேகரித்த விதத்தை எழுதியிருந்தேன். அதில் சில நண்பர்கள் மற்றும் வலைப்பூ மக்கள் நான் அவசரப் பட்டுவிட்டதாகவும், நான் நிற வெறி என்று எழுதியது தவறு என்று சுட்டி காட்டினார்கள். மகிழ்ச்சி!
நான் என்னுடைய அனுபவத்தைதான் அதில் பதிய வைத்தேன். வெள்ளைக் காரர்கள் மனோபாவம் எப்படி இருந்தது என்று நான் கண்ணால் நேரில் கண்டதை அதில் சொன்னேன், மற்றப்படி இதுதான் சரி என்று சொல்லவில்லை!
அமெரிக்காவில் நிறவெறி என்று சொன்னது 50% தவறு என்று வைத்துக் கொண்டாலும், இங்குள்ள மக்களிடம்எப்படி நிறப்பற்று உள்ளது என்று சிலவற்றை கோடிட்டு காட்ட விரும்புகிறேன்.
* நான் வாக்குகள் சேகரிக்க சென்ற பொழுது என் சட்டையில் ஓபாமா பேட்ஜை பார்த்த பொழுது ஓரு சில வெள்ளைகாரர்கள் கதவை சாத்திக் கொண்டார்கள். இதில் துளிக்கூட பொய் இல்லை!
* என்னைக் கண்டு கதவை சாத்திக் கொண்டார்கள் என்று சொல்லவில்லை! அதாவது நான் ஓபாமா ஆதரவாளன் என்று தெரிந்த காரணத்தாலும், நான் வைத்து இருந்த ஓபாமா சுவர் விளம்பரங்களை பார்த்தவுடன் அதனை நாகரீகமாக மறுக்காமல் அவர்களுடைய அணுகுமுறையில் அவர்கள் ஓபாமாவை ஏற்க மறுக்கிறார்கள் என்பதை உணர முடிந்தது!
* கடந்த ஒரு ஆண்டுகளில் எனக்கு தெரிந்து அல்லது அலுவலகத்தில் அல்லது வேறு இடங்களில் வெள்ளைக் காரர் வெளிப் படையாக ஓபாமாவை ஆதரித்துப் பார்க்கவில்லை!
* இப்படி அமெரிக்க பொருளாதரம் ஏராளமான சரிவை சந்தித்த பொழுதும் வெள்ளைகாரர்கள் கண்மூடிதனமாக ஜான் மெக்கயனை ஆதரிக்க என்ன காரணம்? குறிப்பாக வயதான வெள்ளைக் காரர்கள் ஏன் ஓபாமாவை ஆதரிக்க மறுக்கிறார்கள்?
* ஓபாமாவை வரவிடாமல் தடுக்க அவர் கறுப்பர் என்றாலும் பரவாயில்லை, அவரை இஸ்லாம் என்றும் தீவிரவாத தொடர்புகள் கொண்டர் என்றும் சித்தரிக்க முயற்சிப்பதன் பின்புலம் என்ன?
* அமெரிக்க தேவாலயங்களில் வெள்ளைக்கார பாதிரியார்கள், ஜான் மெக்கயனுக்கும் ஓட்டளியுங்கள் என்று சொல்லாமல் சொல்வதன் காரணம் என்ன?
* கடந்த 10 ஆண்டுகளில் நிறைய கறுப்பு இளைஞர்கள் வெள்ளைக்கார பெண்களுடன் சுற்றுவதை அல்லது காதலிப்பதை நான் பார்த்து இருக்கிறேன், ஆனால் ஒரு வெள்ளைக் கார இளைஞன் கறுப்பு பெண்ணுடன் சுற்றுவதை அல்லது காதலிப்பதை நான் பார்த்தது மிக மிக குறைவு!
* நான் வேலைப் பார்க்கின்ற நிறுவனத்தில் முடிவுகள் எடுகின்ற அதிகாரத்தில் கறுப்பர்கள் இல்லை!
* கடந்த 10 ஆண்டுகளில் நான் பார்த்த தினக் கூலி வேலைகளில் நிறைய கறுப்பர்கள் இருக்கிறார்கள். எடுத்து காட்டாக பேருந்து ஓட்டுனர், புகை வண்டி ஓட்டுனர், தபால் அலுவலகத்தில், நிறைய ஷாப்பிங் மால்களில் துப்பரவு தொழிலாளியாக இப்படி பல. சிறிய வேலைகளில் கறுப்பர்கள்! மிகப் பெரிய அதிகார பதவிகளில் வெள்ளைக்கார மக்கள்!
* எல்லாவற்றிக்கும் மேலாக நடந்து முடிந்த இரண்டு கலந்துரையாடலில் (Debate) ஜான் மெக்கயன் ஓபாமாவை நேரிடையாக பார்த்து பேசவேயில்லை! கண்களை பார்க்கவே இல்லை! வெள்ளைக் காரன் என்ற திமிரா? ஓபாமா என்ன தீண்ட தகாதவாரா?
முடிவாக அமெரிக்காவில் நிறவெறி இல்லாமல் இருக்கலாம், ஆனால் நிறையவே நிறப்பற்று உள்ளது என்பது என் பார்வை அதில் உண்மை இருப்பதாகவே நம்புகிறேன்....
ஓபாமா வெல்லட்டும்!
உலகச் சரித்தரத்தில் ஓர் புதிய அத்தியாயம் எழதப் பட வேண்டும்!
மார்டின் லூதர் கிங்கின் கனவு நிறைவேறட்டும்....!!!
நன்றி
மயிலாடுதுறை சிவா...
12 Comments:
Who said that there is no racism in America?
அமெரிக்காவில் நிறவெறி இல்லை என்று யார் சொன்னது? நிறவெறியை "நிறப்பற்று" என்று சமாளிப்பதன் நோக்கம் என்ன? இரண்டுக்குமிடையில் என்ன வித்தியாசம்? நிறப்பற்றாளர்கள் நிறவெறியர்கள் இல்லையா? நிறத்துவேஷம் கொண்டவர்கள் நாசி ஜெர்மானியர்கள் மட்டுமல்ல, அமெரிக்க மக்கள் மத்தியிலும் உள்ளனர்.
Very good points Siva.
Keep it up!
நானும் எனது அமரிக்க பயணங்களில் பொது கவனித்தேன், அமெரிக்கர்களின் நிறம் மற்றும் ஜாதி பற்றை.(jews non jews discrimaitaion)
என் கணிப்பு, இறுதி சுற்றில் மெக்கைன் மற்றும் புஷ் பயன் படுத்த இருக்கும் ஆயுதம் இந்த கறுப்பர், வெள்ளை இனப் பாகுபாடு தான்.
கடந்த முறை புஷ் இறுதி சுற்றில் ஒபாமா ஈராக் சொல்லி வெற்றி பெற்றார்.
அமெரிக்கர்கள் கொண்டுள்ள நிற பற்று ஜாதி பற்று (jews கத்தோலிக்கர்கள் என்னும் ஜாதி பாகுபாடும்) பற்றி நம் ஊர் திராவிட தலைவர்கள் வாய் திறக்காது ஏனோ.
எல்லாம் பணம் செய்யும் வேலை.
அந்த வகையில் நான் வைகோ வய் தலை வanaங்கி பாராட்டுவேன். ஒரு கறுப்பின மனிதர் அமெரிக்கா அதிபர் ஆகா வேண்டும் என்ற ஆவல் கொண்டு எழுதி வருகிறார்.
குப்பன்_யாஹூ
அமெரிக்காவில் நிறவெறியே இல்லாவே இல்லையா? என்ன கொடுமை ?
வேண்டுமானால் ஐரோப்பா அளவிற்கு இல்லை எனலாம். இங்கு சட்டம் உள்ளதால் நம்மிடம் வெளிப்படையாக காட்டிக் கொள்ளமாட்டார்கள்.நம்மை மிகவும் மதிப்பது போல் நடிப்பார்கள். பார்டிகளில் பார்த்தாலே தெரியும். தனித்தனி இனமாகத்தான் பெரும்பாலும் குருப் சேருவார்கள்.
இது போக நம்மாளுக கிட்ட இருக்கற வேறுவித வெறி கூட உண்டாம். ஒரு பார்ட்டியில் பார்த்த கணணி துறை இந்தியர் சொன்னார். H1B விசா வைத்திருப்போரை கீரின்கார்டுகாரன் மதிக்க மாட்டான்.இவனை சிட்டிஷன்சிப் வைத்திருப்பவன் மதிக்கமாட்டான். இதுல வெள்ளைகாரன எங்கு குறை சொல்லுவது?
கலை அரசன் உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு! நிறவெறி என்பது சற்று கூடதலான சொல் என்பதால் நிறப்பற்று என்று எழுதினேன்.
கார்திக், குப்பன், தெனாலி உங்கள் வருகைக்கும் ஒத்த கருத்திற்கும் நன்றிகள் பல
மயிலாடுதுறை சிவா...
அமரிக்கர்களை விட இந்தியர்கள் நிறவெறியர்கள் என்று நினைக்கிறேன்.
மெக்கெயின் நிற வெறியரோ இல்லையோ என்று தெரியாது, ஆனால் வெள்ளைக்காரர்களின் ஓட்டுக்காக அப்படி ஒரு முகமூடி அணியலாம். ஓபாமா என்ன சொல்கிறார் என்று கேட்காமலே வெறும் நிறத்துக்காக அவரை நிராகரிக்கும் வெள்ளைக்காரர்கள் இருக்கிறார்கள் என்பது உண்மை.
வெள்ளையர்களை விமர்சிக்கும் முன் நம் முகத்தை கண்ணாடியில் பார்த்துக்கொள்வோம். வெள்ளையர் கருப்பர் கலப்பு திருமணம் ஆங்காங்கே நடக்கிறது. ஆனால் நாம்.....
ரொம்ப ரொம்ப அருமையானக் கருத்துக்கள். எழுபதுகளின் இறுதியிலும் எண்பதுகளிலும் குறைந்திருந்த மற்றும் அநாகரீகமாகக் கருதப்பட்ட நிறவெறி, ஜாதிவெறி போன்றவைகள் இப்பொழுது நாகரீகமாகக் கருதும் விபரீத போக்கு அதிகரித்துள்ளது :(:(:(
//அமெரிக்காவில் நிறவெறியே இல்லாவே இல்லையா? என்ன கொடுமை ?
வேண்டுமானால் ஐரோப்பா அளவிற்கு இல்லை எனலாம். இங்கு சட்டம் உள்ளதால் நம்மிடம் வெளிப்படையாக காட்டிக் கொள்ளமாட்டார்கள்.நம்மை மிகவும் மதிப்பது போல் நடிப்பார்கள். பார்டிகளில் பார்த்தாலே தெரியும். தனித்தனி இனமாகத்தான் பெரும்பாலும் குருப் சேருவார்கள்
இது போக நம்மாளுக கிட்ட இருக்கற வேறுவித வெறி கூட உண்டாம். ஒரு பார்ட்டியில் பார்த்த கணணி துறை இந்தியர் சொன்னார். H1B விசா வைத்திருப்போரை கீரின்கார்டுகாரன் மதிக்க மாட்டான்.இவனை சிட்டிஷன்சிப் வைத்திருப்பவன் மதிக்கமாட்டான். இதுல வெள்ளைகாரன எங்கு குறை சொல்லுவது?//
வழிமொழிகிறேன்
இந்த விசியத்தில் அமெரிக்கா எவ்வளவோ பரவாயில்லை. நம்மில் எத்தனை பேர் துப்புரவு தொழிளாளர்களையோ அல்லது அது போன்ற தொழில் செய்பவர்களுடன், வீட்டில் வேண்டாம் அட குறைந்த பட்சம் உணவருந்தும் இடத்திலாவது ஒரே மேஜையில் அமர்ந்து பார்த்திருக்கிறீர்களா ( டாஸ்மாக் தவிர்த்து :))) )
பின்னூட்டம் இட்ட வலைப்பூ நண்பர்கள்
ராப், கயல்விழி, குடுகுடுப்பை, Bleacing Powder அனைவருக்கும் நன்றிகள் பல...
சிவா...
//
கடந்த ஒரு ஆண்டுகளில் எனக்கு தெரிந்து அல்லது அலுவலகத்தில் அல்லது வேறு இடங்களில் வெள்ளைக் காரர் வெளிப் படையாக ஓபாமாவை ஆதரித்துப் பார்க்கவில்லை!
//
அப்படியானால், அவர் பிரைமரிகளில் எப்படி தான் ஜெயித்தார்? டெமாக்ரடிக் பார்டி முழுவதும் கறுப்பின மக்கள் தான் இருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்களா??
//
இப்படி அமெரிக்க பொருளாதரம் ஏராளமான சரிவை சந்தித்த பொழுதும் வெள்ளைகாரர்கள் கண்மூடிதனமாக ஜான் மெக்கயனை ஆதரிக்க என்ன காரணம்? குறிப்பாக வயதான வெள்ளைக் காரர்கள் ஏன் ஓபாமாவை ஆதரிக்க மறுக்கிறார்கள்?
//
முதலில் பொருளாதார சரிவுக்கும், ஜான் மெக்கைனுக்கும் என்ன சம்பந்தம்? இந்த நிர்வாகத்தில் அவர் எந்த குறிப்பிட தகுந்த பதவியிலும் இல்லை. பொருளாதாரத்தை கண்காணிக்க வேண்டியது Fed Reserve, SEச் மற்றும் நிதித்துறையின் வேலை.
இவர்கள் கண்காணித்து தெரிவிக்கப்பட்டாலே மெக்கைனும், புஷ்சும் ஏதேனும் முடிவெடுக்க முடியும்.
சரி, சரிவை ஒத்துக்கொள்வோம், ஆனால் ஓபாமா அதை எப்படி சரி செய்ய போகிறார்? Lets Hope என்றால் எதுவும் நடக்காது..
அதெல்லாம் விடுங்கள். நீங்கள் ஏன் மெக்கைனை ஆதரிக்க மறுக்கிறீர்கள்? அவர் வெள்ளைக்காரர் என்பதலா? இல்லை தானே? உங்களுக்கு காரணம் இருப்பது போல ஓபாமாவை மறுப்பதற்கும் காரணங்கள் அதிகம் உள்ளன.
//
அமெரிக்க தேவாலயங்களில் வெள்ளைக்கார பாதிரியார்கள், ஜான் மெக்கயனுக்கும் ஓட்டளியுங்கள் என்று சொல்லாமல் சொல்வதன் காரணம் என்ன?
//
ஒபாமாவின் பாதிரியார் என்ன காரணத்தினால் பல விஷயங்களை பேசினாரோ அதே காரணமாக இருக்கலாம்.
//
ஓபாமாவை வரவிடாமல் தடுக்க அவர் கறுப்பர் என்றாலும் பரவாயில்லை, அவரை இஸ்லாம் என்றும் தீவிரவாத தொடர்புகள் கொண்டர் என்றும் சித்தரிக்க முயற்சிப்பதன் பின்புலம் என்ன?
//
இதற்கு முக்கிய காரணம் ஊடகங்களே. கிளிண்டனை கடைசி வரை இவர்களால் ஆட்டவோ அசைக்கவோ முடியாததால் ஹிலாரிக்கு எதிராக ஓபாமாவுக்கு அதீத விளம்பரம் தரப்பட்டது. ஆகையால், அவரது கடந்த காலத்தை இப்பொழுது யார் பேசினாலும் தவறாக தெரிகிறது.
//
* கடந்த 10 ஆண்டுகளில் நிறைய கறுப்பு இளைஞர்கள் வெள்ளைக்கார பெண்களுடன் சுற்றுவதை அல்லது காதலிப்பதை நான் பார்த்து இருக்கிறேன், ஆனால் ஒரு வெள்ளைக் கார இளைஞன் கறுப்பு பெண்ணுடன் சுற்றுவதை அல்லது காதலிப்பதை நான் பார்த்தது மிக மிக குறைவு!
//
இதே கேள்வியை திருப்பி கேட்கலாம். கறுப்பின பெண்கள் ஏன் வெள்ளைக்கார ஆண்களை காதலிப்பது இல்லை? :0)
//
நான் வேலைப் பார்க்கின்ற நிறுவனத்தில் முடிவுகள் எடுகின்ற அதிகாரத்தில் கறுப்பர்கள் இல்லை!
* கடந்த 10 ஆண்டுகளில் நான் பார்த்த தினக் கூலி வேலைகளில் நிறைய கறுப்பர்கள் இருக்கிறார்கள். எடுத்து காட்டாக பேருந்து ஓட்டுனர், புகை வண்டி ஓட்டுனர், தபால் அலுவலகத்தில், நிறைய ஷாப்பிங் மால்களில் துப்பரவு தொழிலாளியாக இப்படி பல. சிறிய வேலைகளில் கறுப்பர்கள்! மிகப் பெரிய அதிகார பதவிகளில் வெள்ளைக்கார மக்கள்!
//
உங்கள் முதல் கருத்துக்கு, அடுத்ததிலேயே பதில் உள்ளது. அறிவாற்றலிலோ, திறமையிலோ கறுப்பின மக்கள் (எந்த இன மக்களுமே) யாருக்கும் குறைந்தவர்களில்லை. ஆனால், அவர்களது குடும்ப, சமூதாய சூழல் அவர்களுக்கு பல வாய்ப்புகளை வழங்குவதில்லை. யுனிவர்சிடி செல்லும் வாய்ப்புகளும் இதில் ஒன்று.
ஆனால், ஓபாமாவின் வெற்றி இதை எந்த விதத்தில் மாற்றும் என்று தெரியவில்லை. ஓபாமா பிரசிடென்ட் ஆனாலும், கார் ஓட்டுபவர் கார் ஓட்டித்தான் வாழ்க்கை நடத்த வேண்டி இருக்கும்..
//
முடிவாக அமெரிக்காவில் நிறவெறி இல்லாமல் இருக்கலாம், ஆனால் நிறையவே நிறப்பற்று உள்ளது என்பது என் பார்வை அதில் உண்மை இருப்பதாகவே நம்புகிறேன்....
//
இது உண்மையே. எல்லாருக்கும் இல்லாவிட்டாலும், சிலருக்கு இருக்கக்கூடும். எனக்கு தெரிந்த வரை, அவர்களுக்கு நிறப்பற்றை விட சுய நலம் அதிகம். ஆனால், முன்பே ஒருவர் சொன்னது போல், அதில் என்ன தவறு? எல்லாருக்கும் தான் இருக்கிறது.
மற்றபடி, நான் பார்த்த வரையில், இன வெறி, மொழி வெறி எல்லாம் இந்தியாவில் தான் அதிகம். ஆண்ட்ரு சைமன்ட்ஸை மங்க்கி என்று சொன்னது பிரிட்டனிலோ அமெரிக்காவிலோ இல்லை. இந்தியாவில் தான்..இங்கு பிரிட்டனில் கூட இந்தியர்களின் இன வெறியும், மானில வெறியும், குழு மனப்பான்மையும் மூச்சு திணற வைக்கிறது..
நமக்கு ஹிந்தி தெரியாது என்று தெரிந்து கொண்டே நம்மிடம் இந்தியில் பேசுவது... இந்தியனாயிருந்தால் இந்தி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்று லெக்சர் அடிப்பது.. இதை டெல்லியில் சொன்னால் பரவாயில்லை, லண்டனில் இருந்து கொண்டு சொல்வது தான் எரிச்சலாக இருக்கிறது..
இதையெல்லாம் கம்பேர் செய்தால், அமெரிக்கர்கள் எவ்வளவோ பரவாயில்லை. ஓபாமாவை பிடிக்காத பலருக்கும் முக்கிய காரணம் அவரை பற்றி யாருக்கும் அதிகம் தெரியாததே.. அவர் இது வரையிலும் எதுவும் சாதித்ததாக தெரியவில்லை. இனி என்ன சாதிப்பார், எப்படி சாதிப்பார் என்பதும் தெரியவில்லை..
Post a Comment
<< Home