Wednesday, August 01, 2007

திமுகவின் அடுத்த தலைவர் ஸ்டாலினுக்கு முழு தகுதி!

வாசிங்டன்...

திமுகவின் தலைவராக தயாநிதிக்கு தகுதி உண்டு என்றும், கலைஞர் குடும்பத்தை விமர்சித்தும்,முரசொலி மாறனின் குடும்பத்தை பாராட்டியும் வலைப் பூ நண்பர் "சூரியன் - தி பாஸ்" ஓர் பதிவு போட்டு இருந்தார், அதில் பின்னூட்டம் இட ஆசை, அதற்கு பதிலாக ஓர் தனி பதிவேபோட்டு விடலாம் என்ற காரணத்தால் இந்த பதிவு.

நம் இணையத்தில் ஓர் பழக்கம் இருக்கிறது, அதாவது கலைஞரையும் அவர் குடும்பத்தையும் எப்போழுதும் ஏதாவது சொல்லி கொண்டும், விமர்சித்தும் கொண்டும் இருப்பது, ஆனால் ஜெ ஆட்சிவந்தாலோ அல்லது தற்பொழுது ஜெயின் நடவடிக்கையை விமர்சிப்பது இல்லை. அதற்கு காரணம் ஒன்று பயம் காரணமாக இருக்கலாம், அல்லது அவர்கள் அந்த சாதியாக இருக்கலாம் அல்லது தேவர் இன ஆதரவாளராக இருக்கலாம் அல்லது கலைஞர் மீது வெறுப்பின் காரணமாக ஜெ எது செய்தாலும் அதனை ஆதரிப்பது. இவர்களிடம் நாம் பேசி என்ன பலன்?

கலைஞரிடம் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், குறைகள் காணப் படலாம், அவரும் விமர்சனத்திற்கு உட்பட்டவர்தான், ஆனால் எல்லாவற்றிக்கும் மேல் அவரின் வெற்றிக்கு காரணம் என்ன? அவருடைய போராடும் குணம், அயராத உழைப்பு, தமிழ் மொழி மீது தீராத பற்று. இந்த மூன்று காரணங்களேஎன்னை பொறுத்தவரை அவரை இந்த நிலைக்கு உயர்த்தி இருக்கிறது. எத்தனை எத்தனை போராட்டங்கள், துயரங்கள், பிரச்சினைகள், அத்தனையும் ஓயாத உழைப்பின் மூலம் தன்னை ஓர் நிலையான இடத்தில் தக்க வைத்து கொண்டவர் என்றால் அது மிகை அல்ல. இந்திய மற்றும் தமிழக வரலாற்றில் கலைஞர் ஓர் வாழும் சகாப்தம்!

Free Image Hosting at <a href=www.ImageShack.us" />

முரசொலி மாறனை கட்சிக்கு கொண்டு வந்தது கலைஞர். அவரை நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்கியது கலைஞர். அவரை மத்திய அமைச்சர் ஆக்கியது கலைஞர். அதன் நன்றி கடனாக முரசொலி மாறன்எப்பொழுதும் கலைஞரிடம் மிகுந்த அன்பும், பாசமும், அளவு கடந்த மரியாதையும் வைத்து இருந்தார் என்பதை அனைவரும் அறிவர். முரசொலி மாறன் ஒருநாளும், ஒருபொழுதும் தமிழ்நாடு முதல் அமைச்சர்ஆக வேண்டும் எனவும், கலைஞரை விட நான் சிறந்த அறிவாளி என்றும் நடந்த கொள்ளவில்லை என்பதுதான் உண்மை. அவரை பொறுத்தவரை முழு கவனமும் டெல்லி மட்டுமே.

ஆனால் தயாநிதி மாறனும் (மறைமுகமாக கலாநிதி மாறனும்) செய்தது என்ன? கழக இயக்கத்தின் அடுத்த வாரிசு, தளபதி ஸ்டாலினை சற்று மட்டம் தட்டுவதுப் போல் நடந்து கொள்வதும், சூரியதொலைகாட்சியில் ஸ்டாலினை புறக்கணிப்பதும், எல்லாவற்றிக்கும் மேலாக மதுரையில் இருக்கும் அழகிரியை ரெளடி என்று சித்தரித்தும் நடந்த கொண்டதன் விளைவு இன்று தமிழகம் அறியும். அழகிரியின் சில செயல்கள் தவறாகவும், கண்டிக்க வேண்டியும் இருக்கலாம், ஆனால் கலைஞரின் இளமை கால வேகம், ஆற்றல், எந்த காரியத்தையும் முடிக்கும் செயல் அழகிரிக்கு இல்லை என்பதை மறுக்க முடியுமா? (எடுத்துகாட்டு தற்பொழுது மதுரை இடை தேர்தல்). அரசியலில் இப்படிப் பட்ட களத் தொண்டன், போராளி அழகிரிப் போல் தேவை என்ற காரணத்தாலே கலைஞரும் அமைதியாக இருக்கிறார். திமுக தொண்டனும் அழகிரியை ஏற்றுக் கொள்கிறான். அதிமுக கட்சிக்கு எந்த சம்மந்தமும் இல்லாமல் இருக்கும் சசிகலா அவரது கணவன் என்று சொல்லப் படுகிற நடராசனை அதிமுக தொண்டன் ஏற்று கொள்ளும் பொழுது, திமுக தொண்டன் அழகிரியை ஏற்று கொள்வதில் என்ன தவறு இருக்க முடியும்?!

சன் டிவி இல்லாமல் திமுகவால் வளர முடியாது என்றும், என் நண்பர்கள் கூட பலப்பேர் சொன்னார்கள்.திமுக என்ற மாபெரும் இயக்கம், ஓர் பொழுது போக்கு தொலைகாட்சி நிறுவனத்தை நம்பியா கட்சி நடத்தும்? திமுக மொழிப் போரில் வளர்ந்த இயக்கம். திமுக தந்தை பெரியாரின் கருத்துகளை கொண்ட இயக்கம். திமுக அறிஞர் அண்ணாவின் கொள்கைகளை கொண்ட இயக்கம். தமிழ் மொழிக்கு சிறப்பு சேர்க்கும் இந்த திமுக எப்படி சன் டிவி தயவு இல்லாமல் தோயந்து போகும்?

Free Image Hosting at <a href=www.ImageShack.us" />

அடிப்படை திமுகவின் பலம் தெரியாமல் கலைஞர் குடும்பத்துடன் விளையாடிதன் விளைவு இன்று மாறன் குடும்பம் கலைஞர் பேச மாட்டாரா? என்று தினமும் கலைஞர் வீட்டு முன் காத்து கிடக்கிறார்கள். வளர்த்த கடா மார்பில் பாய்ந்தாலும், இதனால் திமுக என்ற பேரியக்கம் மேலும் வலுவடைந்ததை சாரசரி திமுக தொண்டன் அறிவான். அதற்கு மாறன் சகோதரர்களுக்கு நன்றி.

அடுத்தது ஸ்டாலின். வரலாற்றை புரட்டி பார்த்தாலோ அல்லது மிக சிறந்த அரசியல் வாதிகளின் பிள்ளைகள் அவர்களை போலவே இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கலைஞரிடம் உள்ள எல்லாகுணங்களும் ஏன் அப்படியே ஸ்டாலினிடம் எதிர் பார்க்க வேண்டும். ஸ்டாலினுக்கு என்ன குறைச்சல்?நீண்ட காலங்களாக சட்டமன்ற உறுப்பினராக இருந்து இருக்கிறார். மாநகர தந்தையை மிகச் சிறப்பாக சேவை ஆற்றி இருக்கிறார். தற்பொழுது உள்ளாட்சித் துறை அமைச்சராக சிறப்பாக பணிச் செய்து வருகிறார். அரசியலில் நீண்ட அனுபவமும், நிதானமும் இருக்கிறது. எடுத்து காட்டுகாக நடந்த முடிந்த மாறன் சகோதரர் பிரச்சினையில் அவசரப் பட்டு எந்த பேட்டியோ, எந்த அறிக்கையோ விடவில்லை.அமைதி காத்தார். நிதானம் தவறாமல் இருந்தார். திமுக என்ற பேரியக்கம் தயாநிதி மாறனை தூக்கி எறிந்தது. தளபதி ஸ்டாலினுக்கு ஓர் வாய்ப்பு எப்படி தராமல் இருக்க முடியும்? அவர் ஒரு முறை முதல் அமைச்சர் ஆகட்டும், பிறகு விமர்சிக்கலாம். அவர் முதல் அமைச்சர் ஆவதற்கு முன்னாலே ஏன் இந்த எதிர்மறை சிந்தனை?! மக்கள் தலைவன் எம்ஜிஆருக்கு பிறகு ஜெவிற்கு என்ன தகுதி இருந்தது தமிழக முதல் அமைச்சர் ஆக, அதுவும் இரண்டு முறை!!! ஆக திமுக இயக்கத்தின் அடுத்த தலைவராக, அதை தொடர்ந்து ஸ்டாலின் முதல் அமைச்சர் ஆக முழு தகுதியும் அனுபவமும் உள்ளவர் என்றால் அது மிகைஅல்ல!

Free Image Hosting at www.ImageShack.us

ஓர் சாதாரண தினகரன் விசயத்தில் சாதூர்யமாக நடந்த கொள்ளத் தெரியாமல், மத்திய அமைச்சர் பதவி இழந்து காணப்படும் தயாநிதியால் எப்படி தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஆக முடியும்? திமுக தயவு இல்லாமல் அவரால் தமிழ் நாட்டில் தன்னுடைய சன் டிவி பலத்தாலும், பண பலத்தாலும்சட்ட மன்ற அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் ஆக முடியுமா?

தமிழினத்தின் ஒப்பற்ற தலைவர் கலைஞர் பெருமைகளையும், ஸ்டாலின் கரத்தை வலுபடுத்துவதும்ஓர் சாரசரி தமிழனாக திமுக ஆதரவளானாக எழுதுவது என் கடமை!!!

நன்றி
மயிலாடுதுறை சிவா...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

9 Comments:

Blogger சிவபாலன் said...

ஸ்டாலின் சென்னை மேயராக சிறப்பாக பணிபுரிந்தார் என்பதை யாரும் மறுக்க முடியாது. தற்போது கூட நன்றாகத்தான் பணி புரிகிறார். அமைச்சரவைக் கூட்டத்தில் அவ்ருக்கு பாராட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அவர் சில விசயங்களில் இன்னும் கவனம் செலுத்த வேண்டியதுள்ளது.
1. பத்திரிக்கை நிருபர்களை சந்திக்கும் திறன் (கலைஞர் இதில் டாக்டர் பட்டம் பெற தகுதியானவர்)

2. தமிழ் இலக்கியங்களில் புலமை.( நான் இதுவரை அவர் இலக்கிய உரை கேட்டதில்லை. நிச்சயம் வைகோ இதில் சிறந்தவர்)

3. கட்சியில் இன்னும் அனைத்து பிரிவுகளும் ஏற்றுக் கொள்ளக் கூடிய பொதுத் தலைவர் என்ற அந்தஸ்து. (கலைஞரைப் போல்)

மற்றபடி யார் யாரோ முதல் அமைச்சர் நாற்காலியை அலங்கரித்திருக்கிறார்கள். ஸ்டாலினும் நல்ல நிர்வாகத்தை தர முடியும் என்ற முறையில் நிச்சயம் அவருக்கும் ஒரு வாய்ப்பு தரலாம்.

Wednesday, August 01, 2007 1:12:00 PM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

நன்றி சிவபாலன்

மயிலாடுதுறை சிவா...

Wednesday, August 01, 2007 7:55:00 PM  
Blogger Unknown said...

Stalin is more than qualified to be the CM but the question here is are the people willing to accept him as the leader of the state.
He could take over the party in the future but he can never win the public mandate, Vijaykanth has far more reach than your Beloved Leader Stalin. The poor fellow could not even read a handwritten Note, he is not a thinker nor a Leader.

Wednesday, August 01, 2007 8:15:00 PM  
Blogger Thamizhan said...

தலைமையைத் தேர்ந்தெடுக்க வேண்டியவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தினர்.நாம் வெறும் கருத்துதான் சொல்லலாம்.வெறுங் கருத்தா வெட்டிக் கருத்தா என்பது பார்வையாளர் கைகளிலே.
தலைமை வணக்கம் இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கும் உள்ளதுதான்.இந்தியாவில் அதிகமிருப்பதனால் தான் நேரு குடும்ப ஆட்சி.இல்லாவிடில் ரஜீவ் காந்திக்கு என்ன தகுதி.

ஒரு நடி்கரின் காதலி என்றதகுதியே போதுமென்கின்ற தமிழக மக்கள்.

இள வய்து முதலே அரசியல்.மாணவப் பருவ் அரசியல்.அவரை முழுதும் நம்பும் தொண்டர்கள்.தலைவர்களை நெருக்கத்தில் பார்த்த அனுபவங்கள்.
அரசியல் அடி தடி. ஜெயில் வாழ்க்கை.
எப்படி இருக்க வேண்டும் என்ற தலைவர்கள்,எப்படி இருக்கக் கூடாது என்பதைப் பாடமாகப் புகற்றி வரும் வெறிபிடித்தவர்கள்,தந்த பாடங்கள்.
பதவி வந்ததும் வந்துள்ள அடக்கம்,அடுத்தவர்கட்குக் கொடுக்கும் மரியாதை இவை போதும் ஸ்டாலின் தலைவராக.

Wednesday, August 01, 2007 8:51:00 PM  
Blogger bala said...

மயிலாடுதுறை சிவா அய்யா,

கழகக்குஞ்சுகள் எல்லாமே ஏன் ஸ்டாலினுக்கு இப்படி ஜல்லி அடிக்கறீங்க?உங்களுக்கு மு க அழகிரி அய்யா மனுஷனா தெரியலயா?உண்மையான கழக குண்டர்களோடு(தொண்டர்களோடு)சேர்ந்து அயராது உழைக்கும் அழகிரி உங்களுக்கு ஏன் திராவிடத் தலைவனா காட்சியளிக்கவில்லை?அப்படி இந்த இருவரும் வேண்டாம் என்றால்,
ராசாத்தி அம்மாளை கலைஞரின் அரசியல் வாரிசா அறிவிக்கலாம்;பெண்ணியம் போற்றும் திராவிடம் என்கிற பேரும் கிடைக்கும்;மேலும் திராவிட சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டு வாடும் வைப்பாட்டிகளில் ஒருவருக்கு அதிகாரம் கொடுக்கபட்ட புண்ணியமும் கழகத்துக்கு கிடைக்கும்.என்ன சொல்றீங்க?

பாலா

Wednesday, August 01, 2007 9:13:00 PM  
Blogger purushothaman.p said...

நீங்கள் சுட்டிய அந்த பதிவை படிக்கவில்லை, ஆனாள் இந்த பதிவை படித்தவுடன் ஒரு திமுக உடன்பிறப்பு எழுதிய கட்டுரை போன்ற உணர்வை வந்ததென்னமோ உண்மை அதுவும் குறிப்பாக அழகிரி ஸ்டாலின் பற்றி படித்த போது மீண்டும் ஒரு முறை "சிவா" பதிவா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டியிருந்தது...

நன்றி

Wednesday, August 01, 2007 11:39:00 PM  
Blogger லக்கிலுக் said...

தயாநிதிமாறனுக்கு திமுக தலைவராகவோ முதல்வராகவோ தகுதி இருக்கிறதா? இல்லையா? என்பது வேறு பிரச்சினை.

திமுகவினர் மனதளவில் தளபதியை அடுத்த முதல்வராகவும், திமுக தலைவராகவும் நினைக்க ஆரம்பித்து விட்டோம்.

பலரும் நினைப்பதைப் போல, ஆசைப்படுவதைப் போல கலைஞருக்குப் பிறகு திமுக உடையாது. தளபதியின் தலைமையில் வீறுநடை போடும்.

Thursday, August 02, 2007 3:02:00 AM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

பாலா

உங்கள் கருத்தோடு நான் முரண் படுகிறேன்.

அடுத்தமுறை வேறு யாருக்காவது பின்னூட்டம் கொடுத்தால் சற்று நாகரீகமாக கொடுக்கவும்.

கருத்து ரீதியாக எப்போழுது வேண்டுமானாலும் வாதிடலாம்.

நன்றி
மயிலாடுதுறை சிவா...

Sunday, August 05, 2007 7:43:00 PM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

நன்றி தமிழன் மற்றும் லக்கிலுக்

மயிலாடுதுறை சிவா

Sunday, August 05, 2007 7:43:00 PM  

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது