Tuesday, September 23, 2008

உங்களில் யார் அந்த பிரபு தேவா?!

வாசிங்டன்
செப் 23 2008

விஜய் டிவி எப்பொழுதும் புதுமையாக செய்ய பொதுமக்களிடம் இருந்து தேர்வு செய்து நல்ல கலைஞர்களை நாட்டு மக்களுக்கு தெரியப் படுத்துவது பாராட்ட தக்கது!

தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு, சூப்பர் சிங்கர் அடுத்தாக உங்களில் யார் அந்த பிரபு தேவா என்ற நிகழ்ச்சியை நடத்துகிறது!

பல இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் கலக்கலாக நடனம் ஆடுகிறார்கள். Classical, Western and Folk என்று 3 வகையில் தேர்வு நடைபெறுகிறது.

நடுவர்கள் ஸ்ரீதர், கெளதம் (மேஜர் சுந்தராஜன் மகன்), மற்றும் நடிகை சாயாசிங்.

ஸ்ரீதர் மாஸ்டர், கொஞ்சம் கூட நாகரீகம் இல்லாமல் எல்லோரையும் சகட்டு மேனிக்கு வா போ என்கிறார். You are Rejected என்று முகத்தில் அடித்தார் போல் சொல்லுவது நாகரீகமாக இல்லை! இவரிடம் ஓர் பண்பும், மரியாதையும் அடக்கமும் இல்லை! இதில் ஓர் நபர் நன்றாக நடனம் ஆடவில்லை, அவரிடம் இவர், rejected rejected rejected என்று சொல்லி அவரை வெளியே அனுப்பிவிட்டார்!

கெளதம் - இவர் ஒரு குடிகாரர் போல்தான் எப்பொழுதும் பேசுவார். இவர் மனதிற்குள் இவர் பெரிய நடன கலைஞன் என்ற நினைப்பு! இவரும் எல்லோரையும் ரொம்ப கேவலமாக பேசுவார்! யாராவது நல்லா Classical ஆடினால் உடனே Western தெரியுமா? என்பார் அல்லது Folk தெரியுமா? என்பார்! இந்த நிகழ்ச்சியில் சந்தோஷ் என்று ஒர் நபர் நன்கு ஆடவில்லை! அவரை Rejected என்று சொல்லிவிட்டு, சந்தோஷமாக வெளியே போய்விடுங்கள் என்கிறார்!

மொத்ததில் இந்த இருவரிடமும் ஒர் அடக்கம், மரியாதை, பண்பு இல்லை!

விஜய் டிவி இதனை இன்னும் கொஞ்சம் தரமானதாக தயாரித்து இருக்கலாம்.

Classical நடனத்தை இந்த நிகழ்ச்சியில் சேர்க்காமல் இருந்து இருக்கலாம்.


இந்த நிகழ்சிக்கு சில வழிமுறைகளை சொல்லி இருக்கலாம்!

நடுவர்களை வேறு யாரையாவது தேர்ந்து எடுத்து இருக்காலம், அல்லது இந்த தெண்ட நடுவர்களுக்கு முறையான ஆலோசனைகள் கூறி இருக்கலாம்!

எல்லாவற்றிக்கும் மேலாக அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ரம்யா தொல்லைதாங்க முடியவில்லை! நிகழ்ச்சியை கொல்லுது அந்த பொண்ணு!

எத்தனையோ நடுவர்களை நான் பார்த்தாலும் என் மனம் கவர்ந்த நடுவர் மால்குடி சுபா! இவர் சூப்பர் சிங்கரில் சூப்பரான நடுவர்! ரொம்ப அன்பாக, பண்பாக பழகுகிறார். மறந்தும் கூட யாரையும் மனம் நோகும் படி பேச மாட்டார். நன்றாக பாடவில்லை என்றால் நல்ல தரமான ஆலோசனைகள் கூறி விட்டு, I think you will not be in the journey now, I am sure we will count on you for next year! என்று கலக்கலாக சொல்லுகிறார்!

இந்த தெண்ட ஸ்ரீதரும், குடிகாரர் போல் பேசும் கெளதமும் மால்குடி சுபாவின் அணுகுமுறையை பார்த்து தங்களை திருத்தி கொண்டால் நலம்!

விஜய் டிவியின் Creative Head இவற்றையெல்லாம் சீர்

அமைத்தால் நிகழ்ச்சிகள் இன்னும் சிறப்பாக இருக்கும்!

நன்றி
மயிலாடுதுறை சிவா...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

9 Comments:

Blogger ராஜாதி ராஜ் said...

"ungalil yar 'ADUTHA' prabhudeva"?
-Raj

Tuesday, September 23, 2008 2:41:00 PM  
Blogger rapp said...

எங்கேங்க மாத்திக்கப் போறாங்க. இவங்க பண்றதெல்லாம் வெளிநாடுகள்ள வர்ற மாதிரி நிகழ்ச்சிகளும், அதில் வர்ற நாடகத்தனமான கான்ட்றவெர்சியும் பார்த்து காப்பி அடிக்குற வேலை. ஸ்ரீதர், கௌதம் இவங்கெல்லாம் மட்டும்தான் இப்படிப்பட்டக் கேவலக் கூத்துக்கு ஒத்துக்கிட்டு இருப்பாங்க. வேணும்னே பண்றவங்களை ஒன்னும் பண்ண முடியாதுதானேங்க

Tuesday, September 23, 2008 3:42:00 PM  
Blogger கிரி said...

//மொத்ததில் இந்த இருவரிடமும் ஒர் அடக்கம், மரியாதை, பண்பு இல்லை!//

நீங்க இது மாதிரி அடக்கம் மரியாதை னு குறிப்பிடுவது கூட அவர்களுக்கு தகுதி இல்லை. இவர்கள் அதையும் தாண்டி புனிதமானவர்கள்.

சாய சிங் பரவாயில்லை, நாகரீகமாகவே பேசுவதாக தோன்றுகிறது. நான் ஒரு எபிசொட் தான் பார்த்தேன்

Tuesday, September 23, 2008 8:33:00 PM  
Blogger ஜோ/Joe said...

முற்றிலும் உண்மை.

Tuesday, September 23, 2008 8:57:00 PM  
Blogger DHANS said...

இந்த ஸ்ரீதர் சன் டீவீயில் தில்லானா தில்லானா நிகழ்ச்சியில் ஆடி இறுதி பூதியில் வென்று சினிமா துறையில் நுழைந்தவர். சிலரை ரேஜெச்டேது என்று சொல்வது முகத்திலடித்தது போல் உள்ளது என்று நினைத்தால் அதை அவர் திருதிக்கொல்வார் என்று நினைக்கிறேன். அவர்க்கு தெரியும் இத்தகைய பதில் போடியாளர்களுக்கு எப்படி இருக்கும் என்று, அவரும் அந்த மேடையில் இருந்து வந்தவர் தானே

Tuesday, September 23, 2008 10:36:00 PM  
Blogger யூர்கன் க்ருகியர் said...

ஸ்ரீதர்-இன் பேச்சு பல நேரம் கடுப்பினை கிளப்புவது உண்மைதான்.
அந்த கிறுக்கன் கிட்ட பொய் சில "கண்டடஸ்டன்ட்ஸ்" இன்னொரு சான்ஸ் கொடுங்கன்னு கெஞ்சறது நல்ல இல்லை. ஒரு தடவை "ரிஜெக்ட்டு" சொன்னா அதற்கான காரணம் என்னன்னு கேட்டுகிட்டு "போடாங்க" ன்னு போய்ட்டே இருக்கணும்.

Wednesday, September 24, 2008 2:10:00 AM  
Blogger Naadi said...

Well said boss, particularly the comment about Maalgadi Shubha. I will definitely let my cousin know about this as Shubha is my cousin

Wednesday, September 24, 2008 2:13:00 AM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

மிக்க நன்றி வலைப் பூ நண்பர்களே உங்களின் மறுமொழிக்கு!

சிவா...

Wednesday, September 24, 2008 9:21:00 AM  
Blogger மோகன் காந்தி said...

நல்ல தெளிவான கருத்து சிவா

Tuesday, September 30, 2008 12:37:00 PM  

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது