மார்டின் லூதர் கனவு - ஓபாமா வெற்றி
வாசிங்டன் நவம்பர் 05 2008
'வெள்ளை' மாளிகைக்கு ஒரு கறுப்பினத் தலைவரை தேர்ந்தெடுத்து, நேற்று இரவு அமெரிக்க மக்கள் தமது வாக்குகள் மூலம் புதிய சரித்திரத்தை படைத்துவிட்டனர்.
உலகம் இன்று அமெரிக்காவை பெருமையுடன் பார்க்க ஆரம்பித்துவிட்டது! புதிய சரித்திரம் தொடரட்டும்! கறுப்பர் என்றும், முஸ்லிம் என்றும், தீவிரவாத தொடர்பு என்றும் பலவிதங்களில் தொடர்ந்து தாக்கப்பட்டாலும், அனைத்தையும் தன்னுடைய கடுமையான பிரசாரத்தின் மூலமும், தன்னம்பிக்கையின் மூலமும், தன்னுடைய வெற்றியை அமெரிக்க மக்களுக்கு காணிக்கையாக்கினார் ஓபாமா!
ஒபாமாவின் குழந்தைகளும், ஜோ பைடனின் பேரக் குழந்தைகளும் நேற்றிரவு சிகாகோவில் மேடை ஏறிய போது, மார்டின் லூதர் கிங் கண்ட கனவு நிறைவேறியது! கறுப்பின குழந்தைகளும், வெள்ளை குழந்தைகளும் வெள்ளை மாளிகையின் தோட்டதில் புதிய ஆண்டில் விளையாடட்டும்!
இந்த சரித்தர வெற்றிக்கு கோடானு கோடி அமெரிக்க மக்களில் எனக்கும் பங்குள்ளது என்று நினைக்கும் பொழுது மனம் எல்லையில்லா மகிழ்ச்சி அடைகிறது! என் முதல் அமெரிக்க ஓட்டு, வெற்றி ஓட்டு! வரலாற்றை திரும்பி பார்க்க வைத்த ஓட்டு! அவருக்காக இரண்டு நாள் பிரச்சாரம் செய்தது என்வாழ்வில் மறக்க முடியாத நாட்கள்!
அமெரிக்காவில் பெரும்பான்மை மக்கள் சிறுபான்மை மக்களுக்கு ஓர் அங்கீகாரத்தை தேடி தந்தன் மூலம் நிற பாகுப்பாடு இல்லை என்பதை என்னால் ஓரளவு நம்ப முடிகிறது!
அமெரிக்காவில் எதுவும் சாத்தியம் என்று உலகுக்கு உரக்கச் சொல்லியவர் ஓபாமா! அமெரிக்கா ஓர் புதிய விடியலை முன்னோக்கி செல்கிறது!
வாழ்க ஓபாமா! வளர்க்க அவரின் புகழ்!
மயிலாடுதுறை சிவா...
7 Comments:
வாழ்த்துக்கள்... இந்த வெற்றியில் உங்கள் பங்களிப்பும் உள்ளது என்பதில் மகிழ்ச்சியே...
//
அமெரிக்காவில் பெரும்பான்மை மக்கள் சிறுபான்மை மக்களுக்கு ஓர் அங்கீகாரத்தை தேடி தந்தன் மூலம் நிற பாகுப்பாடு இல்லை என்பதை என்னால் ஓரளவு நம்ப முடிகிறது!
//
ஓரளவா?? ஓரளவு மட்டும் தானா? இவ்வளவு நடந்த பின்னும் ஓரளவு தானா? பெரும்பாலான வெள்ளையர்கள் ஒபாமாவிற்கு வாக்களித்த பின்னும் ஓரளவு தானா? பெரும்பாலான வெள்ளையர்கள் நேற்று சிக்காகோவில் அவரது வெற்றியை உற்சாகமாக கொண்டாடிய பின்னும் ஓரளவு தானா?
:-(
இனி மாற வேண்டியது நிச்சயமாக அமெரிக்க மக்கள் இல்லை.
வாழ்த்துக்கள் உங்களுக்கும் ஒபாமாவுக்கும்
உங்களுடைய மகிழ்ச்சியுடன் நானும் பங்கேற்கிறென்... உலகிற்கு நல்ல செய்தியாக மலரட்டும்!
நன்றி மொக்கை சாமி, நசரேயன், தமிழ்ப் ப்ரியன்.
சத்ய ப்ரியன் என்னதான் ஓபாமா வெற்றி பெற்றலாலும் மனம் முழுக்க ஏற்க மறுக்கிறது வெள்ளைகாரர்கள் மாறிவிட்டார்கள் என்று!!!
உங்கள் கிண்டல்படி நானும் மாற முயற்சிக்கிறேன் ;-((
மயிலாடுதுறை சிவா...
//
சத்ய ப்ரியன் என்னதான் ஓபாமா வெற்றி பெற்றலாலும் மனம் முழுக்க ஏற்க மறுக்கிறது வெள்ளைகாரர்கள் மாறிவிட்டார்கள் என்று!!!
//
ஏன் சிவா? இன்னும் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று கருதுகிறீர்கள்?
//
உங்கள் கிண்டல்படி நானும் மாற முயற்சிக்கிறேன் ;-((
//
சிவா உங்களை நான் கிண்டல் செய்ய முயலவில்லை.
அடிமட்டத்திலிருந்து வந்த ஒபாமா இவ்வளவு உயரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதில் அவருக்கு எவ்வளவு பாராட்டுக்கள் உரிதாகிறதோ அவ்வளவு பாராட்டுக்கள் அவரை தேர்ந்தெடுத்த அமெரிக்கர்களுக்கும் உரிதாகிறது. இவ்வளவு நடந்து நீங்கள் அதனை ஏற்க மறுப்பது மனதிற்கு சிறிது வருத்தம் அளிக்கிறது.
உங்கள் மனம் புண்பட்டிருப்பின் எனது வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
சத்ய ப்ரியன்
ஏற்று கொள்கிறேன் மனப் பூர்வமாக!
நீங்கள் என் மனதை புண்படுத்தவில்லை! நான் ஓபாமாவின் அன்பு தம்பி, யாரும் என்னை புண் படுத்த முடியாது!!!
சிவா...
Post a Comment
<< Home