ஏன் ஆண்கள் மோசடி (Cheating) செய்கிறார்கள்?
மூன்று வாரங்களுக்கு முன்பு Operah Winfray நிகழ்ச்சியில் The Truth about Cheating by Gary Neuman என்ற புத்தகத்தை பற்றியும் அதன் ஆசிரியரிடம் நேரடி பேட்டி நடந்துக் கொண்டிருந்தது. அதனைப் பார்க்கையில் பல சுவையான தகவல்கள் கிடைத்தன. அதன் விளைவே இந்த பதிவு.
திருமண வாழ்க்கையில், ஆண்கள் ஏன் பெண்களை ஏமாற்றுகிறார்கள் என்பது பற்றி அந்த நிகழ்ச்சி முழுக்கஇருந்தது. அதில் கண்ட புள்ளிவிவரங்கள் உங்களுக்கு ஆச்சர்யத்தை தரலாம்.
பொதுவாக ஆண்கள் பெண்களை (மனைவிகளை) ஏமாற்ற காரணம் என்னென்ன?
- கிட்டதட்ட 92% ஆண்கள் ஏமாற்ற செக்ஸ் மட்டுமே காரணம் அல்ல என்பது ஓர் முக்கிய விசயம்
- மனைவிகள் கணவர்களை மனம் உவந்து பாராட்டுவது இல்லை
- திருமண வாழ்க்கையில் ஓர் வெற்றிடம் இருப்பது!
- ஆண்கள் நிறைய வெற்றி அடைந்தாலும் அதனை பெண்கள் பாராட்டுவது இல்லை
- இருவருக்கும் ஓர் பொதுவான கருத்து இல்லாமை
- இருவருக்கும் இடையில் ஓர் நெருக்கம் இல்லாமை
- ஆண்கள் ரொம்ப பலமாக காணப்பட்டாலும் பெண்களின் அரவணைப்பு மற்றும் அனுதாபத்தை எதிர்பார்க்கிறார்கள்
- ஆண்களின் மதிப்புகளை பெண்கள் உணர வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்
- கிட்டதட்ட 88% ஆண்கள் ஏமாற்ற முயற்ச்சிக்கிறார்கள்
- கிட்டதட்ட 55% ஆண்கள் ஏமாற்றுவதை வெளியில் சொல்வது இல்லை
- கிட்டதட்ட 7% ஆண்கள் ஏமாற்றிய விவரத்தை மனைவியிடம் சொல்லிவிடுகிறார்கள்
ஆண்கள் ஏமாற்றுகிறார்கள் என்பதை எப்படி அறிந்து கொள்வது?
- வேலை முடிந்தவுடன் வீட்டிற்கு நேரத்திற்கு வாரமல் இருத்தல்
- வீட்டிற்கு வெளியே ரொம்ப நேரம் செலவிடுதல்
- உடல் உறவில் நாட்டம் இல்லாமை
- மனைவிகளை ஏதாவது குற்றம் சொல்லிக் கொண்டே இருப்பது
- மனைவி கூப்பிடும் பொழுது செல்பேசியை எடுக்காமல் இருப்பது
- தொடர்பில் இல்லாமல் இருப்பது
- அடிக்கடி வெளியே சாப்பிடுதல்
பெண்கள் (மனைவி) எப்படி அதனை ஆண்கள் (கணவர்களிடம்) கேட்டு தெரிந்து கொள்கிறார்கள்?
- தன் கணவர்களிடம் பழகும் அந்த பெண்ணின் அழுகு எப்படி இருக்கும்?
- எந்த நேரத்தில் உடல் உறவு கொண்டார்கள்?
- அவள் எந்த மாதிரி உள் ஆடைகள் அணிந்து இருந்தாள்?
- அவளின் செருப்பின் உயரம் என்ன?
- அவளிடம் என்னைவிட சுகம் நிறைய கிடைத்ததா?
இப்படி ஆண்கள் ஏமாற்றுவதில் இருந்து எப்படி பெண்கள் அதனை சரி செய்ய முடியும்?
- யார் அந்த பெண்?
- எங்கு இருக்கிறாள்?
- என்ன காரணம்?
- உங்களுக்குள் எப்படி அந்த தொடர்பு ஏற்பட்டது?
- உண்மையில் நீங்கள் அந்த பெண்ணை நேசிக்கிறீர்களா?
என்று கேட்டு அறிந்து மனம்விட்டு பேசி பிரச்சினைகளை பேசி சரி செய்ய முயல வேண்டும்!
இது போல் ஆண்கள் தடுமாறமால் இருக்க பெண்கள் என்னென்ன நடவடிக்கை எடுக்கலாம்?
- அடிக்கடி உடல் உறவில் நாட்டத்தை ஏற்படுத்தலாம்
- ஆண்களை (கணவர்களை) மனதார பாராட்டலாம்
- ஆண்களின் வெற்றிகளை கொண்டாடலாம்
- நல்ல அழகான உடைகளை அணியலாம்
- சிரித்த முகத்துடன், இன்முகத்துடன் பேசுவது
- தினமும் இரவு மனம் விட்டு பேசலாம்
திருமண வாழ்க்கையில் ஆண்கள் மட்டும் தம் மனைவிகளை ஏமாற்றவில்லை. சில பெண்களும்(மனைவி) தனது கணவர்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை அந்த ஆசிரியர் சொன்னார்.
மேலே கூறிய காரணங்களில் நல்ல சில / பல குடும்பங்கள் கூட பாதை தடுமாறி இருக்கிறது என்பது ஆய்வு தகவல்.
நன்றி
மயிலாடுதுறை சிவா...
4 Comments:
வணக்கம் மணிக்கூண்டு
நீங்கள் குறிப்பிடும்
\\
- அடிக்கடி உடல் உறவில் நாட்டத்தை ஏற்படுத்தலாம்
- ஆண்களை (கணவர்களை) மனதார பாராட்டலாம்
- ஆண்களின் வெற்றிகளை கொண்டாடலாம்
- நல்ல அழகான உடைகளை அணியலாம்
- சிரித்த முகத்துடன், இன்முகத்துடன் பேசுவது
- தினமும் இரவு மனம் விட்டு பேசலாம்
\\
எண்ணப்போக்கு நிச்சயம் இந்திய குடும்பங்களில் நடக்க வாய்ப்பில்லை
ஏனெனில் இங்கு திருமணமான பெண்கள் தங்களுக்கென்று சொந்த கருத்துக்கள் வைத்துக்கொள்வது தவறாக பார்க்கப்படுகிறது -- நடுத்தர குடும்பங்களில்
நன்றி
ஆமாம், ஆண்கள் ஏமாற்றுகிறார்கள் என்றாலே அங்கே ஒரு பெண்ணும் ஏமாற்றுகிறாள் என்று தானே அர்த்தம். இதில் எப்படி ஆண்களை விட பெண்கள் குறைவாக ஏமாற்றுகிறார்கள் என்று சொல்கிறீர்கள்!!?
உருப்பட்ட மாதிரித் தான்.
இராஜா
உங்கள் கருத்தில் ஓரளவு உண்மை இருந்தாலும், காலங்கள் மாறி வருகிறது! சென்னையில் உள்ள மணவிலக்கு கேஸ்கள் அதிகம் மற்ற நகரங்களை பார்க்கும் பொழுது!
தமிழ்நாட்டில் மாற்றங்கள் வர சற்று தமாதம் ஆகலாம்!
மும்பை, கொல்கத்தா, டெல்லி அப்படி அல்ல என்று கேள்விப் பட்டுருக்கிறேன்.
உங்கள் வருகைக்கு நன்றி
ஹரிஜனா மற்றும் ஆட்காட்டிக்கும் நன்றி
சிவா...
சிவா...
Post a Comment
<< Home