Monday, May 21, 2007

அமெரிக்காவின் நம்பிக்கை நட்சத்திரம் ஒபாமா...

நாம் வாழுகின்ற சமுதாயத்தில் அரசியல் தவிர்க்க முடியாத ஒன்று. அதிலும் குறிப்பாக அமெரிக்க அரசியல் உலகம் முழுவதும் உற்று நோக்கபடும் விசயம். காலம் எப்பொழுதும் புதுப் புது மனிதர்களை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கும்.

2004 ம் ஆண்டு சூலை மாதம், Boston மாநகரில் Massachussets மாநிலத்தில், ஜனநாயக கட்சி மாநாட்டில்அப்பொழுது அமெரிக்க தேர்தலில் போட்டியிட்ட John Kerryக்கு ஆதரவாக முழங்கிய ஓர் இளம் புயல்தான் Barack Obama. அவரின் சீரிய பேச்சு, தெளிவான நடை, வாதங்களை எடுத்துவைத்த விதம், மடைதிறந்த ஆற்றல் பேச்சு இவை அனைத்தும் அவர் யார் என்று அரசியல் பார்வையாளர்கள் மற்றும்சாதரண மக்களை உற்று நோக்க வைத்தது. அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கை Washington Post " A RisingStar from the Democratic Party" என்று முதல் பக்கத்திலே போட்டு அவரை அரசியல் உலகுக்கு அறிமுகப் படுத்தியது.

Obama யார்? கறுப்பு இனத்தை சார்ந்த Kenya நாட்டில் இருந்த வந்த Barack என்பவருக்கும், Kansas ஐ சேர்ந்த வெள்ளை நிறப் பெண் Ann என்பவருக்கும் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி, 1961 ஆம் ஆண்டு பிறந்தார்Obama. உலக நாடுகளில் பிரபலமாக பேசப் படும் Harvard பல்கலைகழகத்தில் சட்டம் பயின்றார். Chicago வில் உள்ள ஓர் சிறிய நகரத்தில் உள்ள மக்களுக்கு சேவை செய்த பொழுது, சிறிய அளவில் மக்களுக்கு உதவுவதைப் போல, பரந்தப் பட்ட மக்களுக்கு உதவ முடிவு எடுத்து சட்டம் பயின்றார். அது மட்டும் அல்ல சட்டதிட்டங்களை அங்குள்ள கல்லூரிகளில் பாடமும் நடத்தினார்.

Harvard பல்கலைகழகத்தில் உள்ள Review என்ற மாத இதழின் ஆசிரியராகவும் இருந்து இருக்கிறார். இது அமெரிக்காவில் மிகவும் பெரிய விசயம். அந்த Review இதழுக்கு ஆசிரியராக இருந்த முதல் கருப்பர் இனத்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். Harvard Board Review Editor in Cheif என்பது எல்லோரும் பிரமித்து பார்க்க கூடிய ஓர் செயல். இப்படிப் பட்ட Obama சிகாகோ செனட்டராகவும் மக்களால் தேர்ந்தடுக்கப் பட்டார். America வின் ஐந்தாவது கருப்பர் இன செனட்டர் ஒபாமா ஆவார். அமெரிக்க அரசியலில் ஓர் கறுப்பர் செனட்டர் ஆக வருவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.


Free Image Hosting at <a href=www.ImageShack.us" />

இப்படிப் பட்ட ஒபாமா, 2008 அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிட தயாராகி கொண்டு வருகிறார். அமெரிக்கா முழுவதும் அவர் செல்லுகின்ற இடங்கள் எல்லாம் மக்கள் கூட்டம். அவரின் மிக சாதுர்யமான பேச்சுக்கும், வாதத்திற்கும், மனதில் உள்ளதை அப்படியே பேசுவதற்கும் மக்கள் அலை மோதுகிறார்கள் என்றால் அது மிகை அல்ல.

உலக நாடுகளில் முதலாவதாக விளங்கும் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் ஆண்டு (2008) அதி முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனில் அமெரிக்க வரலாற்றில் முதன் முறையாக ஓர் கறுப்பு இனத்தை சேர்ந்தவர் அதிபர் தேர்தலில் போட்டி இடுகிறார். அடுத்த ஆண்டில் இவருக்கு வயது 47 ஆகப் போகிறது. சமுதாய மாற்றத்தை முன் எடுத்து செல்ல விரும்புவர். கறுப்பு இன மக்களின் கனவு நாயகன். மிகச் சிறந்த மேடைப் பேச்சாளர். கல்லூரி இளைஞர்கள் மத்தியில் இவரின் பேச்சுக்கு ஏக மரியாதை.

ஒபாமா பற்றி அமெரிக்க மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

ஒபாமாவிற்கு இன்னமும் முழு அனுபவம் போதாது. இன்னும் சில ஆண்டுகள் செனட்டராக இன்னமும் போதிய அரசாங்க அனுபவத்தை சேகரிக்க வேண்டும் என்று சிலர் நினைக்கிறார்கள். இவர் என்னதான் கறுப்பர் இனத்தவராக இருந்தாலும் முழுக்க முழுக்க கறுப்பு இன மக்களை ஆதரிப்பார் என்று நம்பிக்கை பரவலாக காணப்படவில்லை. வெள்ளைக் கார மக்களை திருப்தி படுத்த ஆட்சிக்கு வந்தவுடன் வெள்ளைக்கார மக்களுக்கு ஆதரவாக இருந்துவிடுவார் என்ற பேச்சும் உள்ளது. International Affiars and Policies என்பதில் இவருக்கு ஓர் தெளிவான நீண்ட அனுபவம் இல்லை என்பது கூட சிலரின் கூற்று.

ஆனால் அமெரிக்க தேர்தலில் கறுப்பர் இனத்தை சேர்ந்த ஓர் தலைவர் வருவது மிக அபூர்வம், அந்த வாய்ப்பு இப்பொழுது வந்துள்ளது. அதனை விட்டு விட கூடாது என்கிறார்கள் பலர். வெள்ளைகார மற்றும் கறுப்பர் இன மக்களிடம் பரவலாக செல்வாக்கு அதிகரித்து வருகிறது. அடிப்படையில் Obama ஓர் கடின உழைப்பாளி, மிகச் சிறந்த பேச்சாளர், புதிய மாற்றத்தை விரும்புபவர், எதிரியை கூட மயக்கும் அளவிற்கு பேசக் கூடியவர், பிறரின் கருத்தை பொறுமையாக கேட்டு கொள்பவர், கறுப்பின மக்களின் நம்பிக்கை நட்சத்திரம், மிகப் பெரிய மாற்றத்தை, புதிய எண்ண அலைகளை ஏற்படுத்த கூடியவர் என்ற பரவலான கருத்து உள்ளது அமெரிக்க மக்களிடம்.

அமெரிக்கா நிற வெறிக் கொண்ட நாடு அல்ல. அடிமைகள் வாழும் பிரதேசம் அல்ல. கறுப்பு இன மக்களுக்கு சம வாய்ப்பும், சுதந்திரமும் கொண்ட ஓர் நாடு என்றாலும், கறுப்பு இனத்தை சேர்ந்த ஓர் அரசியல் தலைவன் அமெரிக்க அதிபராக வர முடியுமா? என்பது சதாரண மக்களின் அடிப்படை கேள்வி... Hollywood நடிகர் Denzil Washington னின் தந்தையாக வரும் ஓர் நடிகர் சொல்லும் ஓர் கூற்று,

This country is legally united....but Emotionaly segregated.....
என்று சொல்வார், அது எந்த அளவிற்கு உண்மை என்பது கூடிய சீக்கரம் தெரிந்து விடும்...

நன்றி
மயிலாடுதுறை சிவா...


Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

7 Comments:

Blogger வடுவூர் குமார் said...

அவ்வப்போது இவர் பெயர் காதில் விழுந்தது மற்றும் பத்திரிக்கையில் படித்திருந்தாலும்,தமிழில் சொல்லும் போது அதன் வீரியம் புரிகிறது.
நிறைய எழுதுங்கள்.
நல்ல நடை.
வாழ்த்துக்கள்

Monday, May 21, 2007 10:06:00 PM  
Blogger பத்மா அர்விந்த் said...

சிவா://அமெரிக்கா நிற வெறிக் கொண்ட நாடு அல்ல. அடிமைகள் வாழும் பிரதேசம் அல்ல//உண்மையாகவா?

Tuesday, May 22, 2007 2:54:00 AM  
Blogger குசும்பன் said...

நல்ல தகவல், யார் வந்தாலும் புஷ் போல ஒரு "கோமாளி" ஆட்சிக்கு வராமல் இருந்தால் அமெரிக்கவுக்கு மட்டும் அல்ல அனைவருக்கும்
நலம்.

Tuesday, May 22, 2007 10:46:00 AM  
Blogger மு. சுந்தரமூர்த்தி said...

//ஏனில் அமெரிக்க வரலாற்றில் முதன் முறையாக ஓர் கறுப்பு இனத்தை சேர்ந்தவர் அதிபர் தேர்தலில் போட்டி இடுகிறார். //

சிவா,
இரண்டாவது முறை நட்சத்திரமானதற்கு வாழ்த்துக்கள்.

நீங்கள் கூறியுள்ளது உண்மையல்ல. முதலில் பராக் ஒபாமா தற்போதைக்கு ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் போட்டியில் தான் இருக்கிறார். இங்கு தேறினால் மட்டுமே அதிபர் தேர்தலில் போட்டியிட முடியும். இரண்டாவது, 1984, 88 இல் Rev. ஜெஸ்ஸி ஜாக்சனும், 2004 இல் Rev. அல் ஷார்ப்டனும் இதே போல ஜனநாயகக் கட்சி வேட்பாளர் தேர்தலில் போட்டியிட்ட கறுப்பர்கள். ஒபாமா அளவுக்கு நம்பிக்கை அளித்த Gen. காலின் பவெல் 2000 ஆம் ஆண்டு குடியரசுக் கட்சியின் வேட்பாளருக்கு போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மிகவும் தயங்கிவிட்டார். புஷ்ஷின் புண்ணியத்தில் இனி அவர் தலையெடுக்க முடியாது.

Tuesday, May 22, 2007 8:02:00 PM  
Blogger Vassan said...

"ஒபாமா"

முதல் தடவையாக செனட் க்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

அண்மையில் நடந்த ஜனநாயக கட்சி வேட்பாளர்களிடையேயான பேச்சு மன்றத்தில் வெளிநாட்டு கொள்கை பற்றி பேச வேண்டியிருந்த போது, கட்ரீனா துயர நிகழ்வு பற்றி பொருத்தமில்லாமல் பேசினார் ஒபாமா.

உலகின் பெரும் பொறுப்புடன் கூடிய தலைமை பதவிக்கான அரசியல் அறிவு ஒபாமாவுக்கு வெகு குறைச்சல்.

இன்றைய தேதிக்கு எனது வாக்கு, குடியரசு கட்சியில் சரியான வேட்பாளர் இல்லை என்ற நிலையில், ஜனநாயக கட்சிக்கு போடவேண்டும் என்றால், ஹிலரிக்கு என் ஓட்டு என்றும் இல்லை என்றாகிவிட்ட நிலையில் - ஜோ பைடனுக்குதான் ஏனோ தானோ என்று விழும் !!

Tuesday, May 22, 2007 8:33:00 PM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

வடுவூர் குமார்

ஓபமாவிற்கு நல்ல எதிர்காலம் உள்ளது என்றுதான் நான் நினைக்கிறேன்.

பத்மா

நிறவெறியோ அல்லது அடிமைகளோ கண்கூட பார்க்க முடிவதில்லை என்பதை தான் அப்படி குறிப்பிட்டு உள்ளேன்.

குசும்பன்

நீங்கள் சொல்வது மிகச் சரி.

அனைவருக்கும் நன்றி.

மயிலாடுதுறை சிவா...

Tuesday, May 22, 2007 8:37:00 PM  
Blogger தருமி said...

//சிவா://அமெரிக்கா நிற வெறிக் கொண்ட நாடு அல்ல. அடிமைகள் வாழும் பிரதேசம் அல்ல//

உண்மையாகவா?//

உண்மையாகவா என்று கேட்டிருப்பது பத்மா !? பதில் தெரிகிறது.

Thursday, May 24, 2007 2:12:00 AM  

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது