Monday, August 25, 2008

நீயா நானா கோபி - ரஜினி ஜால்ரா ஏன்?!

வாசிங்டன். ஆக் 25 2008

விஜய் தொலைக் காட்சியில் நான் மிகவும் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சி நீயா நானா!இது தமிழகத்தில் மிகவும் பிரபலமான எல்லோராலும் பாராட்ட படுகின்ற நிகழ்ச்சி என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது! பல தரமான தலைப்புகளின் கீழ் தொடர்ந்து விவாதம் நடைப் பெற்று வருகிறது! தரமான வாதங்கள் தொடரட்டும்!

கடந்த வாரம் தமிழகத்தில் தோல்வியை சந்தித்த திரைப் படமான "குசேலனை" ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தள்ளி கோபி நானா நீயாவில் பேசினார் என்பதை அனைவரும் பார்த்து இருப்பீர்கள்! இயக்குனர் பி வாசுவை இந்தியாவின் மிகப் பெரிய இயக்குனர் போலவும், ஆங்கிலத்தில் "The Boss is Back" என்று பேசி தொடர்ந்து பல பிரபலங்களைபேட்டி எடுத்தும் அந்த நிகழ்ச்சி இருந்தது! ஒளிப்பதிவாளர் அரவிந்த கிருஷ்ணாவிடம் ஏதோ ஓர் சாதிக்க முடியாத விசயத்தை சாதித்தைப் போல, ரஜினியை நீங்கள் ViewFinder பார்த்ததில் எப்படி இருந்தது?! அவர் உடனே ரஜினியிடம் ஓர் சொல்ல முடியாத ஒளி இருந்தது என்றும் மிகப் பெரிய கதை விட்டார்! கோபி உங்களுக்கு என்னாயிற்று?

இப்படிதான் ஒருமுறை நீங்கள் முன்பு ஒருமுறை "யுகிசேதுவை" ஏதோ மிகப் பெரிய அறிவாளி போல மிக மிகப் பாராட்டி பேசினீர்கள்! கோபி நீங்கள் சற்று மாற்றிக் கொள்ளவேண்டும் உங்களை! இது உங்களின் நிகழ்ச்சி மட்டுமல்ல! மக்களின் நிகழ்ச்சி என்பதை மறந்து விடாதீர்கள்! மேலும் நீங்கள் லயோலா வணிகத்துறை பேராசரியரிடம் "சமூக சேவகர் மேதா பட்கர் வேண்டுமா, திரு நாராயண மூர்த்தி" வேண்டுமா? என்று கேட்டீர்கள்! அடிப்படையில் கேள்வியே தவறு என்று உங்களுக்கு தோணவில்லையா?

சமுதாயத்தில் எண்ணற்ற புதிய நபர்களை, பிரபலங்களை நீங்கள் அருகில் இருந்து பேட்டி எடுத்தவர், உங்களை வாழ்க்கையில் அந்த புதிய நபர்களின் அனுபவங்கள், சமுதாய சேவை செய்த நபர்களின் பேட்டிகள் உங்களுக்கு நிறைந்த அனுபவத்தை தந்து இருக்கும் அல்லவா?அடிப்படையில் நீங்கள் ரஜினி ரசிகராக இருந்தாலும் அது தவறு இல்லை! அது உங்கள் தனிப்பட்ட விருப்பம், ஆனால் நீங்கள் அதனை தொலைக்காட்சியில் காண்பித்தவிதம் நன்றாக இல்லை என்பதுதான் கசப்பான உண்மை!

ஓர் யாதர்த்தமான வெற்றி படத்தைப் பற்றி இப்படி அலசி இருப்பீர்களா? தமிழகத்தில் அனைத்து பத்திரிக்கைகளும் பாராட்டும் "சுப்ரமணியபுரத்தின்" யாதார்த்ததை பாராட்டி பேசுவீர்களா? சேரனின் "தவமாய் தவமிருந்தை" வசந்தபாலனின் "வெயிலை" தங்கர் பச்சானின் பள்ளி கூடத்தை" இப்படி
தனியாக ஓர் நிகழ்ச்சியாக செய்யாத விஜய் தொலைகாட்சி ஏன் "குசேலனை" மட்டும் இப்படி பாராட்டுகிறது?!

மற்ற தொலைக்காட்சியில் இருந்து பலவிதத்தில் வேறுப் பட்டு இருக்கும் இந்த தொலைக்காட்சி குசேலனைப் பாராட்டி பேசுவதன் பின்புலன் என்னவாக இருக்க முடியும்?! மேலும் மேலும் நிறைய பார்வையாளர்களை கவரவா? அல்லது அந்த தெண்ட படத்தை மேலும் நன்கு ஓடவைக்கும் "மார்கெட்டிங்" யுத்தியா?! சாய்மீரா நிறுவனர் உங்களது பேட்டியில் "குசேலன்"வெளியிட்டது "ஓர் திருவிழா" என்கிறார்! இன்று விகடனில் கிட்டதட்ட 50 கோடிகள் நட்டம் என்கிறார்! பாலசந்தர்க்கே வெளிச்சம்!

நன்றி
மயிலாடுதுறை சிவா...


Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

6 Comments:

Blogger ஜோ/Joe said...

சிவா,
உண்மையிலேயே நான் நினைத்ததை அப்படியே எழுதியிருக்கிறீர்கள் .கோபிநாத் மேல் வத்திருந்த நன்மதிப்பு சற்று கீழிறங்கியது என்பதில் சந்தேகம் இல்லை .ஆனால் நடந்த விவாதத்தை வைத்து பார்க்கும் போது அஹு படம் வெளிவருமுன்பே பதிவு செய்யப்பட்டது போல தெரிகிறது ..அதனால் கொஞ்சம் மன்னிக்கலாம் .ஆனாலும் பி.வாசு போன்றவர்களை பெரிய மேதாவி ரேஞ்சுக்கு பேசுவதும் ,ரஜினியை ஏதோ புனிதர் ரேஞ்சுக்கு பேசுவதும் அதிகம் தான் .

Monday, August 25, 2008 9:10:00 AM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

மிக்க நன்றி ஜோ

சிவா...

Monday, August 25, 2008 9:17:00 AM  
Blogger sansri said...

Siva, Your comments are simply great. I too Watch Neeya/Naana. Episode about Kuselan was really Bad and unwanted.

Ravi from Marlyland USA

Monday, August 25, 2008 9:59:00 AM  
Blogger Balamurugan said...

ஜால்ரா சத்தம் காதை கிழிக்குதப்பா

Monday, August 25, 2008 10:20:00 AM  
Blogger ISR Selvakumar said...

எல்லோரும் பாடம் கற்றுக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

கோபிநாத் இன்று ஒரு பிரபலம். ஆனால் முற்றும் தெரிந்தவர் அல்ல.

அவர் பேசுவதில் எப்போதும் பொது கருத்துக்கள் இருக்க முடியாது. அனுபவம் அதிமாகும்போது, சொந்தக் கருத்துக்கள் தாமாக வெளிவரும்.

அவை நன்றாக இருந்தால் பாராட்டப்படும், இல்லையென்றால் நிராகரிக்கப்படும்.

ரஜனி மோகம், கோபிநாத்துக்கும் இருந்ததில் வியப்பில்லை. அதை அனைவரும் ஏற்றுக்கொண்டால்தான் வியப்பு.

Monday, August 25, 2008 8:39:00 PM  
Blogger Indian said...

Problem arise because you see Gopi as an opinion maker; i.e he puts forth opinions with reasons similar to Gnani or Cho. In reality, he is a very effective compere, mere compere, period!. Observing closely, Neeya Naana doesn't provide any opinions/conclusions. They just facilitate exchange of thoughts from either sides. The viewer is encouraged to make their own conclusions.

If this is understood, Vijay TV's Kuselan spot can be seen as a mere sponsored one and Gopi is a just a show piece there. I hate that program bcoz of the poojari( Pee.Vasu) doing abisheka-alangara-araathanai for the presiding deity (Rajini).

Tuesday, August 26, 2008 6:27:00 AM  

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது