இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்திற்கு வாழ்த்துக்கள்!
வாசிங்டன் சனவரி 2009
அரசியலுக்கு அப்பாற்பட்டு ஈழ தமிழர்களின் உரிமைக்கும், அவர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு ஏற்படதமிழ்நாட்டில் சமூக போராளி அய்யா நெடுமாறன் ஒருங்கிணைப்பாளராக செயல் பட போகும் இந்தஅமைப்பிற்கு மனதார வாழ்த்துகள் தெரிவிக்க வேண்டியது ஒவ்வோரு தமிழனின் கடமை.
இதற்கு உலக தமிழர்களும், பல உலக தமிழ் அமைப்புகளும் மனதார ஆதரவு தெரிவிக்க வேண்டியது அனைவரின் கடமையும் கூட.
இந்த முதல் கூட்டத்திற்கு வருகை தந்த வைகோவிற்கும் மனதார பாராட்டுகள் பல.
புகைப்பட உதவி : தின தந்திக்கு நன்றிகள் பல.
நன்றி
மயிலாடுதுறை சிவா....
1 Comments:
தமிழக உறவுகளே !!
எங்கள் அழிவில் நீங்கள் கற்றுக்கொள்ளும் பாடம் என்ன என்பதைச் சிந்திக்கும் காலம் உங்களுக்கும் வந்துவிட்டது.
ஏழு கோடி தமிழா! ஒரு கோடி சிங்களவனால் சாதிக்க முடிந்ததை உன்னால் முடியாமல் தடுமாறுகின்றாயே!
அவனுக்கு ஒரு நாடும் கொடியும் உண்டாம். சர்வதேச சமூகம் அதைத்தான் சொல்கின்றது.
யாராவது கட்டளையிட்டால் சரியாக செய்கின்றாய்!
நீ ஆட்சியில் இருந்து கட்டளையிட விரும்புகின்றாய் இல்லையே.
ஏன்?
சோழனுக்கு பின் தமிழன் ஆளவில்லை.
உன் குருதியில் அடிமை உணர்வு மாத்திரம்தான் ஓடுகின்றதா?
உன் தலைவிதியை எழுதும் எழுத்தாணியை நீயே வைத்திரு.
அய்யா நெடுமாறனின் கரங்களைப் பலப்படுத்துங்கள்.
அல்லது, நீயும் ஈழத் தமிழனைப் போல ஒரு நாள் நாதியற்று தெருவில் இறப்பாய்.
ஒரு ஈழத் தமிழன்
Post a Comment
<< Home