Friday, December 08, 2006

கப்பல் பயணம் - Cruise Trip I


ஓவ்வோரு பயணத்திலும் ஓவ்வோர் அனுபவம். தரை வழி, ஆகாய வழி, நீர் வழி இப்படி பல பல. நீண்ட தூர சாலை வழி பயணம் சில சமயம் அலுப்பு தட்டி விடலாம். நீண்ட தூர ரயில் வழிபயணம் சிலருக்கு ரொம்ப பிடித்து போகலாம். ஆகாய வழி பயணம் மனதை தொடுமா என்றுதெரியவில்லை. ஆனால் கப்பல் வழி பயணம் நிச்சயம் உங்கள் மனதை தொடும். ஓர் புது அனுபவத்தை தரும். மனது உற்சாகம் அடையும். நம்மை சுற்றி நான்கு பக்கம் மட்டும் அல்ல எந்த பக்கம் திரும்பினாலும் நீல நிற வண்ணத்தில் கடலில் நாம் கப்பலில் சென்று கொண்டு இருக்கும் பொழுது மனது லேசாக காணப் படும்.

இந்த அமெரிக்க அனுபவத்தில் இந்த கப்பல் பயணம் ஓர் மறக்க முடியாத அனுபவம். கிடைத்த மொத்த அனுபவத்தையும் வார்த்தைகளால் சொல்வது அவ்வளவு எளிது அல்ல. நேரம் கிடைக்கும் பொழுது ஓய்வு கிடைக்கும் பொழுது அவசியம் கப்பல் பயணம் சென்று வாருங்கள். நிச்சயம் மிக அதிகமாக செலவுஆகாது. முடிந்தால் மனம் ஓத்த நண்பர்களோடு சென்று வாருங்கள். நிச்சயம் ஓர் புதிய மாற்றத்தோடு ஓர் புது அனுபவம் கிடைக்கும்.

இந்த கப்பல் வழி பயணத்தில் பல வகை உண்டு, பல மார்க்கங்கள் உண்டு. 3 நாள், 5 நாள், 7 நாள் ஏன் ஒரு மாத பயணம் கூட இருக்கிறது. இதற்கு முன் கப்பலில் சென்று அனுபவம் இல்லாத காரணத்தால்முதலில் 3 நாள் கப்பல் பயணத்தை தேர்வு செய்தோம்.


Image Hosted by ImageShack.usமுதல் நாள்

வாசிங்டனில் இருந்து புளோரிடாவிற்கு விமானத்தில் கிட்டதட்ட 25 தமிழ் குடும்ப நண்பர்களோடு பேர்களுடன் பயணம் ஆனோம். ஆரம்பம் முதல் இறுதி வரை ஓரே அரட்டை அரட்டைதான். அதுவும் அமெரிக்க மண்ணில் தமிழில் அரட்டை, அதுவும் ஒரளவு மனம் ஒத்த நண்பர்களோடு கேட்கவா வேண்டும் பேச்சிற்கு?

வாசிங்டன்னில் நல்ல குளிர், புளோரிடாவிலோ மிதமான நமது சென்னை தட்ப வெட்பம். இந்த தட்ப வெட்பத்தால் மனம் உடனே உற்சாக உணர்வு தொற்றி கொண்டது. நாங்கள் இறங்கிய இடம் Fort Lauderdale. அங்கு இருந்து Miami க்கு ஓர் மினி வேனில் பயணம். இரண்டு பக்கமும் Palm Tree. புளோரிடா மாநிலத்திற்குஇந்த மரங்கள் ஓர் தனி அழகை கொடுக்கிறது.

மதியம் 12 மணிக்கே Miami கப்பல்கள் புறப்படும் இடத்திற்கு சென்று விட்டோம். எல்லோரும் எங்கு சாப்பிடுவது என்று ஆள் ஆளாக்கு பேசிக் கொண்டு இருக்க, எங்களது குழு தலைவி கப்பலியே மதிய சாப்பாடு கிடைக்கும் என்றார். Miamiயில் மேலும் ஓர் 4 தமிழ் குடும்ப நண்பர்கள் கலந்து கொண்டார்கள். எல்லோரும் அவர் அவர்கள் தங்களுடைய Luggage, Bag எல்லாவற்றையும் Check In செய்தோம். விமான பயணம் போலவே இதுவும், ஆனால் இதில் எல்லாம் ரொம்ப சுலபமாக இருந்தது. அதாவது எங்களுக்கு முன்னரே கொடுக்கப் பட்டபயண சீட்டில் நாங்கள் எந்த தளத்தில், எந்த அறையில் தங்க போகிறோம் என்று முன்னரே அச்சு அடித்துகொடுத்து இருந்தால் அதில் உள்ள எண்களை நம் Luggage stciker ஒட்டி விட்டால், மாலை 4 மணிக்குள் நமது பொருள்கள் நமது அறைக்கே வந்து விடும்.

மதியம் 1 மணி வாக்கில் எல்லோரும் Check In செய்து விட்டு, வரிசையாக கப்பல் உள்ளே செல்வதற்கு முன்பு நமது பயணசீட்டை சரி பார்த்தல், Visa Status, எல்லாவற்றையும் வரிசையாக உள்ள Counterல் சரிப் பார்த்து நமது Passportல் Entry போடுகிறார்கள். நாங்கள் சென்ற கப்பலின் பெயர் Royal Caribean. இந்த Royal Caribbeanக்கு கிட்டதட்ட 13 கப்பல்கள் உள்ளன. எங்களது கப்பல் பெயர் Majesty of the Seas. Royal Caribbean பெயரில் Sea Pass (Credit Card போலவே) ஓர் அடையாள அட்டை கொடுத்து விடுகிறார்கள். அதாவது இந்த அடையாள அட்டைதான் நமக்கு மொத்த ஜாதகம். நமது பெயர், நமது தளம், அறை எண் மற்றும் நாம் சாப்பிட போகும் இடம் எல்லாம் குறிக்கப் பட்டு இருக்கும். இந்த அடையாள அட்டை Credit Card போல அதனை உபயோக படுத்தி கொள்ளலாம். அந்த கப்பலில் என்ன பொருள்கள் வாங்கினாலும் அல்லது எந்த செலவு செய்தாலும் அந்த அடையாள மூலம் நமது Credit Cardல் இருந்து பிடித்து கொள்வார்கள்.


Image Hosted by ImageShack.us

அப்படி இப்படி என்று எல்லோரும் கப்பலில் உள்ளே சென்று விட்டோம். முதன் முதலில் கப்பல் பின்னால்வரப் போகும் ஆச்சர்யத்தையும் பிரமிப்பையும் ஆரம்பத்தில் தரவில்லை. காரணம் கப்பல் தளத்திலேயே இருந்த காரணம். மதிய சாப்பாடு ஏதோ பரவாயில்லை. கப்பலில் சாப்பாட்டைப் பற்றி பிறகு சற்று விரிவாக சொல்லுகிறேன்.

மிகச் சரியாக கப்பல் மாலை 5 மணிக்கு புறப்பட ஆரம்பித்தது. இது ஓர் சூப்பரான அனுபவம். எல்ல்லோரும் மேல்தளத்தில் இருந்து கப்பல் செல்வதை பார்த்து ரசிக்க முடியும். காரணம் Florida, Miamiல் இருந்து புறப்படுவதால் அருகில் உள்ள கட்டிடம், சாலைகள், விமானங்கள் மிக அருகிலேயே தெரியும். கப்பல் கொஞ்சம் கொஞ்சமாக கரையை விட்டு அகன்று கடலுக்கு செல்ல செல்ல மகிழ்ச்சி அதிகரித்துக் கொண்டே செல்லும். போக போக இரவு நடுநசியில் கப்பல நல்ல வேகத்தில் தண்ணீரில் கிழித்துக் கொண்டு போவது ஓர் பயம் கலந்த ஆச்சர்யத்தை தருகிறது. இது ஓர் அருமையான அனுபவம்.


சுமார் 6 மணிக்கு அவர் அவர்கள் தங்கள் அறைக்கு சென்றோம். மிக அழகான மிக சிறிய அதே சமயத்தில் மிகபோதுமான அறை. நிச்சயம் இருவர் படுக்க அழகான மெத்தை, அருகிலேயே சின்ன தொலைக் காட்சி பெட்டி, அதன் அருகில் ஓர் சிறிய குளியல் அறை. இந்த வசதி நிச்சயம் 3 நாட்களுக்கு தராளமாக போதும். அந்த சிறிய அறைக்குள் நாம் இரவு மற்றும் மதியம் தூங்க மட்டுமே போக போகிறோம். கப்பலில் உள்ள பல வகையான நிகழ்ச்சிகளை பார்த்துவிட்டு கலைப்போடு நம் அறைக்கு வந்து தூங்க போகும் பொழுது, தொட்டிலில் குழந்தையை தாலாட்டி படுக்க வைப்பது போல கப்பல் நல்ல மிதமாக அப்படியே ஆடி கொண்டே, தளம்பி கொண்டே கப்பல் செல்லும் பொழுது தூக்கம் வருமே அதை எப்படி சொல்ல என்னவென்று சொல்ல? உங்களை மறந்து நிச்சயம் நீங்கள் தூங்கி விடுவீர்கள் என்றால் அது மிகை அல்ல.

Image Hosted by ImageShack.us


தினமும் இரவு சாப்பிட செல்வது இங்கே ஓர் முக்கிய சம்பவம். முதல் நாளில் எல்லோரும் ஓன்றாக சாப்பிட எங்களுக்கு ஒதுக்கப் பட்ட தளத்திற்கு சென்றோம். நாங்கள் சென்றது 6வது தளம். அது மிக பிரமாண்டமான ஓர் அறை. கிட்டதட்ட 500 முதல் 750 பேர் வரை அனைவரும் உட்கார்ந்து சாப்பிட கூடிய அனைத்து வசதிகளும் உடைய அறை. ஒவ்வோரு குடும்பத்திற்கும் தனி தனி டேபிள். ஓவ்வொரு டேபிளுக்கும் தனியாக சாப்பாடு பறுமாற ஓர் தனி ஆள். டேபிளும், சேர்களும், அதில் வைக்க பட்டுள்ள அழகான தட்டுகளும், கரண்டிகளும், குடிக்க வைக்கப் பட்டுள்ள டம்பளர்களும் மிக அருமையாக இருந்தாலும், சாப்பாடு ஓகே ரகம் தான். அதாவது இந்திய உணவை சாப்பிட்டு பழக்கப் பட்ட எனக்கு வயிறு நிறைய சாப்பாடு கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. நாங்கள் சாப்பிட்ட அன்று மெக்ஸிகன் உணவு வகை. சோடாக்கள் தனியாக விலை கொடுத்து வாங்க வேண்டும். அதாவது அந்த அறையின் அழகும், ஓரே சமயத்தில் எல்லோரும் உட்கார்ந்து சாப்பிடுவதும், அந்த பிரமாண்டமும் அனைவரையும் ஒருங்கே வரவழைத்து சாப்பிட வைத்ததும் ஓரே பிரமிப்பாக இருந்தது. நம் தமிழ்நாட்டில் ஓர்கல்யாண விருந்திற்கு சென்றால் ஒரே கும்பலாக எங்கும் சத்தத்திற்கு நடுவே சாப்பிட்டது நினைவிற்கு வந்தது.

இரவு நிகழ்ச்சிகள்....

கப்பல் பயணம் தொடரும்...

நன்றி
மயிலாடுதுறை சிவா...


Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

1 Comments:

Blogger Kummar Tholkappiam said...

Dear Shiva,
Good morning. Still i am not reading. This is just attendence only.( I am also from Mayiladuthurai)

Saturday, December 09, 2006 7:41:00 PM  

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது