Monday, March 19, 2007

அசத்திய விஜய தி ராஜேந்தர்


சனி இரவு சூர்ய தொலை காட்சியில் அசத்த போவது யாரு? என்ற நிகழ்ச்சியில் விஜய தி ராஜேந்தர் கலந்துக் கொண்டு அசத்தி கலக்கோ கலக்கு என்று கலக்கினார் என்றால் அது மிகையாகது. ஆயிரம் ஆனாலும் மாயுரம் ஆகுமா? என்பதற்கு ஏற்ப ராஜேந்தர் மயிலாடுதுறை
சேர்ந்தவர் என்பதாலும், அவருடைய தன்னம்பிக்கை காரணத்தாலும் அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் மேல்நிலை பள்ளியில் படித்த காலத்தில் "தி மு க" சார்பாக மேடையில் கலக்கலாக பேசியதை பார்த்து ரசித்து இருக்கிறேன். காலப் போக்கில் அவரின் சில அரசியல் அணுகு முறைகள் பலவற்றில் உடன் படவிட்டாலும் ராஜேந்தர் நான் படித்த கல்லூரியில் படித்தவர், எங்கள் ஊர் காரர் என்பதால் அவர் மீது தனிப் பட்ட முறையில் எந்த வெறுப்பும் இல்லை ஆனால் அவர் மீது ஓர் பாசம். இந்த தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததும் மன மகிழ்ச்சியே.

சனி அன்று நடந்த நிகழ்ச்சியில் ராஜேந்தரே பலக் குரலில் பேசி காண்பித்ததும், பாடி காண்பித்ததும் மிக அருமை. அசத்தப் போவது யார்? என்ற நிகழ்ச்சியில் வரும் இளைஞர்கள் பலர் பல்வேறு விதத்தில் அசத்துவதும், அவர்கள் அனைவரும் சிறிய நகர மற்றும் கிராமத்தில் இருந்து வந்து இருப்பதும் பாராட்டுக்கு உரியது. இதே குழு விஜய் தொலைக் காட்சியில் "கலக்க போவது யாரு?" செய்ததும், தற்பொழுது சூர்ய தொலைக் காட்சிக்கு செய்வதும் அனைவரும் அறிந்ததே.

இதன் தலைவர் திரு ராஜ்குமார் என்பவரின் அணியில் மிகச் சிறந்த கலைஞர்கள் பலர் பல்வேறு கலைகளில் சிறந்து விளங்குகிறார்கள். ஒவ்வொரு வாரமும் நடனம், பலக் குரல், தனி நடிப்பு, மாறு பட்ட சிந்தனையில் அசத்துகிறார்கள். இந்த நான்கு வாரத்தில் வடிவேலு, சத்யராஜ், சரண் இவர்களுக்கு அடுத்து வந்த தி ராஜேந்தர் கலக்கிவிட்டார். இவரும் அசத்தப் போவது யாரில் வந்த ஓர் நபரும் மாறி மாறி பலக்குரலில் நம்பியார் போல, எம் ஜி ஆர் போல பேசி அசத்தினார்கள். மொத்ததில் விஜய தி ராஜேந்தர் தன்னம்பிக்கையோடு என்னிடம் ஓரளவு சரக்கு இருக்கிறது என்று காண்பித்து கொண்டார். பாராட்டுகள். மதன்பாபும், சிட்டிபாபுவிற்கு பிறகு வேறு யாரைவது போட்டு இருக்கலாம், ரொம்ப அலட்டுகிறார்கள்.
சந்தியா பெண் மிக அழகாக இருக்குகிறார், குரலும் அருமை, ஆனால் தலையை ஆட்டி ஆட்டி கீச் கீச் என்று கத்துவது சற்று போராக உள்ளது.

சாதி வெறி மற்றும் மத வெறிக் கொண்ட, தான் என்ற அகங்காரம் கொண்ட விசுவிற்கு பிறகு அரட்டை அரங்கத்தை "சலாமன் பாப்பையா" மேலும் சொதப்பினார். அவரை விட ஆயிரம் மடங்கு விஜய தி ராஜேந்தர்
நன்றாக செய்கிறார். அரட்டை அரங்கதில் இவர் அதிகம் பேசமால் ஓரளவு நன்றாகதான் இவர் செய்து வருகிறார். திமுகவிற்கு ஆதரவாக இவர் பிரச்சாரம் செய்த காரணத்தாலும், முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினரும்
ராஜேந்தரை சூர்ய தொலைக் காட்சியில் தூக்கிவிடுவதும் பாராட்டுக்கு உரியது.



மயிலாடுதுறை சிவா...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

2 Comments:

Blogger கார்த்திக் பிரபு said...

neenga endha ooru endha colge?

Wednesday, March 21, 2007 11:47:00 PM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

நன்றி கார்த்திக்

ஊர் : மயிலாடுதுறை

கல்லூரி : அ வ கல்லூரி.

Thursday, March 22, 2007 7:53:00 AM  

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது