Wednesday, April 01, 2009

வைகோவிற்கு இது தேவையா?


வாசிங்டன் ஏப்ரல் 2009

திமுகவில் வைகோ இருந்த பொழுது கழகத்தின் போர் வாள், கழகத்தின் போர் படை தளபதி என்றுஅன்பாக கலைஞரால் வளர்க்க பெற்று, தென் மாவட்டங்களில் மிகுந்த செல்வாக்குடன் திமுகவில் வளர்ந்து வந்த தலைவராக வைகோ அடையாளம் காட்டப் பட்டு வந்த பொழுதும் -

தனது நிகரற்ற பேச்சாற்றாலால் திமுக தொண்டர்களிடம் கலைஞருக்கு பிறகு ஒரு தலைவனாக உருவெடுத்த வந்த பொழுதும் -

கலைஞரை போல இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டு தமிழ் இலக்கியத்தை மேடைகளில் பேசியபொழுதும் -

உலக வரலாற்றில் சற்று கவனம் செலுத்தி, "எந்த நாடு எல்லாம் அடிமை பட்டு கிடக்கிறதோ அந்த நாடு எல்லாம் எனக்கு தாய் நாடு" என்று சொல்லிய சேகுவாரா பற்றியும், மனிதகுல விடுதலைக்கு போராடிய தலைவர்களை இளைஞர்களுக்கு மேடைகளில் அடையாளம் காட்டிய பொழுதும் -

எல்லாவற்றிக்கும் மேலாக தொப்புள் கொடி உறவுள்ள நம் ஈழ தமிழர்களுக்கு தொடர்ந்து சலைக்காமால் குமரி முதல் டெல்லிவரை பேசிக் கொண்டும் வந்த தலைவர் வைகோவை பார்த்தும் கேட்டும் ரசித்த ஒரு சராசரி தமிழ் ஆர்வலன் நான்!

ஈழ தமிழர் பிரச்சினையை கடுமையாக ஆதரிக்க, நேற்றும் இன்றும் நாளையும் ஆதரிப்பேன் என்று பேசியதற்காக தமிழன துரோகி ஜெயலலிதா உங்களை போடாவில் இட்ட பொழுது மனம் வெதும்பி வருத்தப்பட்ட கோடான கோடி ஜீவன்களில் நானும் ஒருவன்!

முன்னாள் மத்திய அமைச்சர் திரு கண்ணப்பன் மூலம் உங்களுக்கு "உலக வரலாற்றை மாற்றிய பேச்சுகள்" அடங்கிய புத்தகத்தை வாசிங்டன் வாழ் தமிழர்களிடம் கையெழுத்து வாங்கி அந்த புத்தகத்தை உங்களுக்கு சிறை சாலைக்கு அனுப்பி வைத்தோம், அதனை நீங்கள் போடோவில் இருந்து வெளியே வந்தவுடன் சிகோகா மாநகரில் உங்களை வரவேற்று பேசிய பொழுது அந்த புத்தகதை பற்றி மறக்காமல் குறிப்பீட்டீர்களே! அதனை நன்றியோடு நினைத்து பார்த்து உங்களை பிரமிப்பாக பார்த்த நான் -

சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக, சில அரசியல் சூழ்நிலை காரணமாக என்னைப் போல சராசரி ரசிகன் எதிர்பாராத வகையில் தமிழ் இனத்திற்கு தொடர்ந்து துரோகம் செய்து வரும் ஜெயலலிதாவிடம் நீங்கள் கூட்டு வைத்த பொழுது மனம் அடைந்த வேதனைக்கு அளவேயில்லை!

தமிழகம் முழுக்க மேடைகள் தோறும் கலைஞரைப் பற்றியும், அவரது குடும்பத்தை பற்றியும் விமர்சித்து கடந்த 5 ஆண்டுகளாக ஜெயலலிதாவை ஆதரித்து பேசியதான் விளைவு இன்று உங்களுக்கு 3 அல்லது 4 பாராளுமன்ற தொகுதிகள்!? இதை விட கேவலம் என்ன வேண்டும் உங்களுக்கு?! உங்களுடைய நீண்ட அரசியல் அனுபவத்திற்கு கிடைத்த வெகுமதி இதுதானா?!

5 ஆண்டு கால பாரளுமன்ற முடியும் வரை தன் மகனை அமைச்சர் பதவியை அனுபவிக்க வைத்துவிட்டு கடைசி நிமிடத்தில் வெளியே வந்து, கடந்த 25 ஆண்டுகளாக சாதி அரசியல் செய்யும் இராமதாஸ¤க்கு 8 இடங்கள், ஆனால் உங்களுக்கு?! 3 அல்லது 4!!!

உங்களுக்கு வயது கிட்டதட்ட 62 வயது ஆகிவிட்டது! உங்களால் இனிமேல் தமிழகத்தில் வலுவான எதிர் கட்சி என்று நிரூபிக்க முடியாது! உங்களுக்கு 2010 சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா மொத்தம் 15 சீட்டுகள் ஒதுக்கினால் அதிகம்! ஆனால் இராமதாஸ¤க்கு 30 தொகுதிகள் ஒதுக்கும்! அந்த அவமானத்தையும் நீங்கள் தாங்கி கொள்ள தயாராக இருப்பீர்களா? அதற்குள் அனைத்து மதிமுக தலைவர்கள் கலைஞரிடம் சென்று விடுவதை உங்களால் தடுக்க முடியுமா?

போதும் நீங்கள் பட்ட அவமானங்கள், கடினங்கள், போராட்டங்கள், தோல்விகள்! தயவு கூர்ந்து ஜெயலலிதாவிடம் இருந்து வெளியே வந்து விடுங்கள்! இதைவிட நல்ல தருணம் எதுவும் கிடையாது!

கலைஞரிடம் வருத்தமோ அல்லது மன்னிப்போ கேட்டுவிட்டு தாய் கழகத்தில் நீங்கள் மீண்டும் இணைத்து கொள்ளலாம்! அல்லது வாழ்நாள் வரை ஈழ மக்களின் விடுதலைக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வரலாம்!

இல்லை நீங்கள் ஜெயலலிதாவிடம் இருந்து மேலும் மேலும் அவமானங்களை சேர்க்க தயாராக இருந்தால் நாங்கள் என்ன செய்ய முடியும்?!

மிகுந்த மனம் வருத்ததுடன்

மயிலாடுதுறை சிவா...


Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

8 Comments:

Blogger ஜோ/Joe said...

//வைகோவிற்கு இது தேவையா? //

தேவை தான்!

வருத்தத்துடன் ... ஜோ

Wednesday, April 01, 2009 9:29:00 AM  
Blogger Dominic RajaSeelan said...

சிவா. உங்களின் பதிப்புகள் அனைத்தும் நான் படிப்பேன். ஏனெறால் நீங்கள் தலைவர் பற்றி எழுதுகின்ற அனைத்து பதிப்புகளும் பிடிக்கும். வைகோ சொல்லித்தான் எங்களுக்கு எல்லாம் தலைவர் கலைஞரை பற்றி அதிகமாக தெரியும். ஆனால் அவர் சீர் கெட்டு செயலலிதாவிடம் சேரும் போதே அவை மீது இருந்த மதிப்பு
போய் விட்டது. சில பேருக்கு பட்டாலும் புரிவதில்லை அது போல வைகோ ஆகிவிட்டார். அருமையான பதிப்பு. இந்த நேரத்தில் அவசியமான பதிப்பு. நன்றி

Wednesday, April 01, 2009 9:42:00 AM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

ஜோ ;-((

நன்றி ராஜா சீலன்!

Wednesday, April 01, 2009 9:58:00 AM  
Blogger குடுகுடுப்பை said...

பாவம் வைகோ.பிழைக்கத்தெரியாத மனுசன்

Wednesday, April 01, 2009 10:05:00 AM  
Blogger ஆயில்யன் said...

//ஈழ மக்களின் விடுதலைக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வரலாம்!
//

வழிமொழிகிறேன்!

தமிழக மக்களால்,ஈழமக்களுக்கு முடிந்த உதவிகளை செய்ய,அதனை வழிமுறைப்படுத்திட ஒரு தலைவனாய்...!

Wednesday, April 01, 2009 10:12:00 AM  
Blogger ராம கிருஷ்ணன் said...

உங்களைபோன்ற ஆட்கள் இப்படி பேசிபேசியே வைகோவை ஒண்ணுமில்லா நிலைக்கு ஆளாக்கி விட்டீர்கள்.

பாவம் வைகோ.

ராமதாசோடு ஒப்பிட்டு ஒப்பிட்டு பேசி பேசியே வீணாய் போய்விட்டார்.

தமிழகம் முழுக்க அமைப்பு மற்றும் ஐந்து பத்து பதினையாயிரம் ஓட்டுக்கள் மட்டும் இருந்தால் போதுமா? பத்து மாவட்டங்களில் இருந்தாலும் எட்டு சதமான ஓட்டு பலமும் பதினைந்து முதல் இருபது தொகுதிகளில் வெற்றி தோல்விகளை தீர்மானிப்பவராக ராமதாஸ் இருப்பதால்தான் மருத்துவருக்கு இவ்வளவு மவுசு.

தேர்தலுக்கு பின் ஆட்சியாளர்களிடம் பணிந்து போகாமல் மக்கள் பிரச்சனைகளுக்காக ஆட்சியின் அலங்கோலங்களை எதிர்த்து போராடுவதுதான் அவரின் பிளஸ் பாயிண்ட். தமிழ் ஓசை, மக்கள் தொலைக்காட்சிக்கு அரசு விளம்பரங்கள் இத்யாதி இத்யாதி என்று கூட்டணி தலைவர்களிடம் விலை போயிருந்தால்.. ராமதாஸ் கட்சி என்றைக்கோ கரைந்து போயுருக்கும். வடமாவட்ட அரசியல் தென் மாவட்ட ராமதாஸ் எதிர்பாளர்களுக்கு புரியாது. புரியாதது போலவே எழுதுவார்கள். என்ன செய்வது? பாமாகாவை சார்ந்த சமூகம் மட்டும் எப்போதும் சகிப்புத்தன்மையுடன் இருந்து மற்றவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆதிக்க மனப்பான்மையின் வெளிப்பாடுதான் இப்படிப்பட்ட கட்டுரைகளின் சுயரூபம்.

வைகோ வெற்றி பெற்ற ஆறு எம்எல்ஏக்களை ஒழுங்காக வைத்திருக்க தவறிவிட்டார். சரி. தற்போது ஆறு தொகுதி கொடுத்து ஆறிலும் வெற்றியும் பெறுவதாகவே வைத்து கொண்டாலும் நாளை கருணாநிதியின் எச்சில் எலும்பு துண்டுக்களுக்காக ஓடிவிடலாம் என்று கூட ஜெயலலிதா நினைக்கலாமே!

வைக்கோ மீது அனுதாபம் இருப்பது போல கட்டுரை எழுதி கொண்டு திமுக்காவுக்கு ஆள் பிடிக்க யார் மீதும் புழுதி வாரி தூற்றாதீர்.

Thursday, April 09, 2009 9:10:00 PM  
Blogger ராம கிருஷ்ணன் said...

மணிக்கூண்டு சிவா அவர்களுக்கு, ராமகிருஷ்ணன் எழுதுவது. 'வைகோவிற்கு இது தேவையா' கட்டுரைக்கு நான் இட்ட பின்னூட்டத்தில் என்ன குறை கண்டீர்கள்? அதை ஏன் வெளியிடவில்லை? அப்படியெனில் ராமதாஸ் அவர்களை பற்றிய அவதூறுகள் இணையத்தில் பரப்பப்படுகின்றன என்பது உண்மைதானே? உங்களை போன்ற படித்த ஜனநாயகவாதிகள் விமர்சனங்களை மாற்று கருத்துக்களை ஏற்று கொள்ளாவிடில் கருணாநிதியிடமும் ஜெயலலிதாவிடமும் அதை எதிர்பார்ப்பது நியாயமா? ஆபாசமான வார்த்தைகளை எழுதி இருந்தால் மறுப்பதில் நியாயம் உண்டு. எனது பின்னூட்டத்தில் என்ன தவறு? மீண்டும் எனது பின்னூட்டம் மறுக்கப்படுமானால் நாட்டில் எதையும் விமர்சிக்க தகுதி அற்றவராகி விடுகிறீர். ஒரு சாதாரணமான விமர்சனம் கூட உமது விருப்பத்துக்கு எதிராக இருந்தால், அதை வெளியிட மறுத்தால் ஒரு நடுநிலையாளனாகும் பத்திரிக்கையாளனாக இருக்கும் தார்மீக உரிமையை இழந்தவராகிறீர். ஆயிரம் கருத்துக்களில் வேறுபாடுகள் இருப்பினும் இட்லி வடையிடமும் தினமலரிடமும் கருத்து சுதந்திரத்தை கற்றுக்கொள்ளுங்கள்.

Thursday, April 09, 2009 9:33:00 PM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

பின்னூட்டம் இட்ட நண்பர்களுக்கு நன்றி!

ராம கிருஷ்ணன் அவர்களுக்கு,
எனக்கு ஒன்று இரண்டு ஆங்கிலத்தில் (junk) பின்னூட்டங்கள் வந்தது. அதனை நீக்கிய பொழுது உங்களதும் போய்விட்டது. மன்னிக்கவும்.

இப்பொழுது உங்கள் பின்னூட்டத்தை போட்டு விட்டேன்!

சிவா

Friday, April 10, 2009 12:34:00 PM  

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது