Sunday, August 17, 2008

அண்ணன் தொல் திருமா பிறந்தத் தின (47வது) வாழ்த்துகள் - ஆக் 17


வாசிங்டன் ஆக். 17.2008

தொல் திருமா அண்ணனுக்கு

வணக்கம். அன்பு தம்பி வாசிங்டன் சிவா எழுதும் அன்பு மடல்.

முதலில் மனதார பிறந்தத் தின வாழ்த்துகளை சொல்லி விடுகிறேன்!

நீங்கள் தாழ்த்தப் பட்ட, ஒடுக்கப் பட்ட, உரிமைகள் மறுக்கப் படுகின்ற, கடை நிலை மக்களின் உரிமைகளுக்கு போராடுகின்ற தலைவனாக உங்களைப் பார்க்கும் பொழுது மனம் மிகுந்த
பிரமிப்பை தருகிறது!

தொடர்ந்து தமிழ் நாட்டில் பட்டி தொட்டி எங்கும் ஈழமக்களின் விடுதலைக்கு குரல் கொடுக்கும் உனது தன்னமலமற்ற செயல் மிகுந்த பாராட்டுக்குரியது!

உனது பேச்சில் ஒருமுறை சாதி ஒழிப்பும், தமிழ் தேசியமும் எனது இரு கண்கள்! என்று சொன்னது இன்னும் என் மனதில் பசுமையாக இருக்கிறது!

நீங்கள் பொதுவாழ்க்கைக்கு வந்து கிட்டதட்ட 25 ஆண்டுகள் ஆகிவிட்ட இந்தப் பிறந்த நாளில் நீங்கள் மேலும் மேலும் வெற்றி அடைய வாழ்த்துகள் பல!

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழினத்தின் ஒப்பற்ற தலைவன் கலைஞரின் ஆசியோடு, ஒத்துழைப்போடும், இந்த கூட்டணியில் பங்கு பெற்று நாடாளுமன்றம் செல்ல வேண்டும் நீங்கள்!

சிதம்பர நாடாளுமன்ற தொகுதியிலே காங்கிரஸ், திமுக, அதிமுக, பாசக, கூட்டணி இல்லாமல் கிட்டதட்ட 3 லட்சம் வாக்குகள் வாங்கியது தமிழக வரலாற்றில் ஓர் அதிசயம்!

அடுத்த ஆண்டு வரும் நாடாளுமன்ற தேர்தலில் உனது வெற்று உறுதி! மீண்டும் காங்கிரஸ் ஆட்சி பொறுப்பை ஏற்குமானால் கலைஞரிடம் சொல்லி உங்களுக்கு மத்திய அமைச்சர் பதவி வாங்குவோம்!

தொடர்ந்து ஒலிக்கட்டும் உனது குரல்...

தொடரட்டும் உனது போராட்டம்...
மீட்டு எடுப்போம் தலித் மக்கள் சமவாழ்வுரிமையை...

பிறந்த தின வாழ்த்துகள்! வெற்றி நிச்சயம் அண்ணன்!

மயிலாடுதுறை சிவா...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

6 Comments:

Blogger அபி அப்பா said...

சிவா! அந்த தேர்தலில் அவர் ஒரு ஜீப்பில் நின்று சிதம்பரம் தெற்கு வீதியில் ஆற்றிய உரை என் நினைவில் இப்போதும் இருக்கின்றது. அப்போது என் மனைவிக்கு சிதம்பரத்தில் வாக்கு இருந்த போதும் அவர் பொன்னுசாமிக்கு பா.ம.க வுக்கு வாக்களித்தது கட்சி கட்டுப்பாட்டின் காரனமேயன்றி வேறு காரணம் இல்லை!! இப்பவும் அந்த வருத்தம் இருக்கின்றது மனதில்!!!

அவருக்கு என் வாழ்த்துக்களையும் சொல்லிவிடுங்கள்!!!

Sunday, August 17, 2008 12:15:00 PM  
Blogger Aravinthan said...

தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் திருமாவளவன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

Sunday, August 17, 2008 9:30:00 PM  
Blogger ஜோசப் பால்ராஜ் said...

திருமா ஒரு தன்னிரகற்ற தலைவர் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

ஆனால் இன்று அவரது கட்சியினர் கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு ஊரில் சாப்பிட்டுவிட்டு பணம் தராமல் கலாட்ட செய்து, சாலையில் இருந்த வாகனங்களை அடித்து நொறுக்கி அராஜகம் செய்ததும், கிராமத்து மக்கள் சேர்ந்து அவர்களை அடித்து விரட்டினார்கள் என்ற செய்தியை படித்தவுடன் மனம் வருந்தினேன். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து தான் ஒரு சிறந்த தலைவன் என்பதை திருமா நிருபிக்க வேண்டும்.

Monday, August 18, 2008 2:26:00 AM  
Blogger மயிலாடுதுறை சிவா said...

நன்றி அபி அப்பா, அரவிந்தன்.

ஜோசப்

அண்ணன் திருமா நடவடிக்கை எடுப்பார் என்றுதான் நான் நினைக்கிறேன். அப்படிதான் படித்தாக இன்று பார்த்தேன்...

மயிலாடுதுறை சிவா...

Tuesday, August 19, 2008 7:40:00 AM  
Blogger Agathiyan John Benedict said...

உபயோகமான தகவலுக்கு நன்றி, சிவா.
விரைவில் வீடியோவைப் பார்க்கிறேன்.

Thursday, August 28, 2008 7:24:00 AM  
Blogger குடுகுடுப்பை said...

திருமாவளவன் முதல்வராக வாழ்த்துக்கள்.

Thursday, October 09, 2008 11:34:00 AM  

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது