மலரும் ஈழம் ஒருநாள்!!!
வாசிங்டன் மே 21 2009
மலரும் ஈழம் ஒருநாள்!!!
கடந்த இருதினங்களாக தமிழ் இனத்தின் போராளி தமிழ் தேசிய தலைவர் திரு பிரபாகரன்இறந்துவிட்டார் எனவும் இல்லை இல்லை அவர் நலமாக இருக்கிறார் என்றும் மாறுப்பட்டகருத்துகள் வந்து கொண்டு இருக்கின்றன. எது எப்படி இருப்பினும் தம்பி என்று எல்லோராலும்பாசமாக அழைக்கப்படும் பிரபாகரன் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் இருக்கிறார் என்று மட்டும் ஓரளவு உணர முடிகிறது!
கிட்டதட்ட 30 ஆண்டுகால தமிழர்களின் ஒரு மிகப் பெரிய போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டதுஎன்று தமிழ் இன விடுதலைக்கு எதிராக உள்ளவர்கள் சொன்னாலும், இது உண்மையில் இத்தோடுமுடிந்து விடுகிறதா?
கடந்த ஒருவார காலமாக அமெரிக்காவின் தலைநகர் வாசிங்டன்னில் வெள்ளை மாளிகை முன்புஈழ தமிழர்களும் மற்றும் உலக தமிழர்களும் "ஓபாமாவிடம்" போர்களத்திலும் மற்றும் சிங்களபகுதியில் வாழும் தமிழர்களை காப்பாற்றுங்கள்! என்று கெஞ்சிக் கொண்டு இருக்கிறார்கள்.
ஈழ தமிழர்களுக்கு நீங்களே ஓரே நம்பிக்கை என்று தினமும் அவர் இல்லத்தின் முன்பு போராடிகொண்டு இருக்கிறார்கள்! அங்கு நான் சிறுவர் சிறுமியர் மற்றும் பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும்மாணவ மாணவியர்களை பார்த்தேன்! அவர்கள் தொடர்ந்து என் தாய் நாட்டில் வாழும் தமிழர்களை காப்பாற்றுங்கள் என்று கெஞ்சியதை பார்க்கும் எல்லோர் மனமும் பதறிதான் போகும்!
அந்த சிறுவர் சிறுமியர்களிடம் போய் பிரபாகரன் இறந்துவிட்டார், இனிமேல் ஈழம் கிடைக்காதுஎன்று நான் சொல்ல முடியுமா அல்லது அதை தான் அவர்கள் புரிந்து கொள்ள போகிறார்களா? இப்படிப்பட்ட பல்லாயிரகணக்கான பிஞ்சு உள்ளங்களில் "ஈழம்" என்ற கனவை ஏற்றி வைத்தாகிவிட்டது!அந்த தீயை எப்படி ஒரே நாளில் அணைக்க முடியும்?!
கடந்த 30 ஆண்டுகளில் நடந்த யுத்த களத்தில் போராட்ட களத்தில் இழந்தவை ஏராளம் ஏராளம்ஆனால் கடைசி சொட்டு இரத்தம் உள்ளம் வரை, கடைசி தமிழன் வாழும் வரை ஈழ மண்ணுக்கு அவர்கள் போரடினார்களே?! இது வல்லவோ போராட்டம்! இது அல்லவோ தியாகம்!
ஏராளமான கருத்து வேறு பாடுகளுக்கு அப்பாற்பட்டு "தமிழ் ஈழம்" என்ற மந்திர சொல் உலகில் வாழும் தமிழர்களை ஒருங்கிணைத்ததே! உலகு எங்கும் தமிழர்கள் வியாபித்து இருந்தாலும் தமக்கென்று ஒருநாடு ஒருவாகும் என்று கனவு கண்ட எப்படி வீணாகும்?! உலக வரலாற்றில் தமிழ் இன விடுதலைக்கு எண்ணற்ற உயிர் பலிகளும், எண்ணற்ற தியாகங்களும் கொடுத்தாயிற்று! அதற்கான பலன் களத்தில் இன்று இல்லாமல் இருக்கலாம், ஆனால் நாளை?!
இன்னோரு 25 ஆண்டுகள் கழித்து ஏன் 50 ஆண்டுகள் கழித்து கூட தமிழர்களின் வாழ்வுரிமைக்காக, தனி நாட்டிற்காக வேறு வேறு வழிகளில் ஒரு புதுமையான அறப் போராட்டத்தில் ஈடுபட்டு இந்த இலட்சிய கனவை நிறைவேற்றி விட களத்தில் புத்தம் புது கருத்துகளுடன், இந்த உலகை திரும்பி பார்க்க வைக்கும் திட்டங்களுடன் நம் இளைஞர்கள் இந்த வாழ்நாள் போராட்டத்தை முன் எடுத்து செல்ல ஒரு புதிய படை வரும் புதிய சிந்தனைகளோடு மற்றும் புதிய உத்திகளோடு!
தமிழ் நாட்டிலும், உலக தமிழர்களின் மத்தியில் தம் தம் இல்லங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு யாழினி, ஈழ முரசு, வன்னி அரசு, முல்லை, தம்பி, பிரபாகரன், தீலீபன், யாழ் அரசன், தமிழ் வேந்தன், ஈழ முரசு, யாழ் தீலிபா இப்படி பல பல தூய தமிழ் மற்றும் ஈழ பெயர்கள் வைக்கப் படும் பொழுது ஒவ்வோரு வீட்டிலும் ஒரு ஈழ தீபம் ஏற்றப் படுகிறது! ஏற்றப் படும்!
எரியட்டும் தீபம்!
அழியிட்டும் இனவெறி!
அடங்கட்டும் திமிர்!
மலரும் ஈழம் ஒருநாள்!
மயிலாடுதுறை சிவா...
2 Comments:
நண்பர் சிவா ,
நல்ல பதிவு. உறுதியாக நம்புகிறேன் நாளை ஈழம் மலரும்.
நட்புடன்,
பாண்டியன்
Nice to see a friend from Mayiladuthurai (i too belong to mayuram :-) ) writing effective blog.. carry on your good work..
Post a Comment
<< Home