தமிழ் விழா 2009 - அட்லாண்டா, அமெரிக்கா
வாசிங்டன். சூலை 2009
கடந்த வாரம் வட அமெரிக்க தமிழ்ச் சங்க பேரவையின் தமிழ் விழா ஜார்ஜியா மாநிலத்தில் அடலாண்டா நகரில் சீரும் சிறப்போடும் நடந்தது.
ஒவ்வொரு ஆண்டும் சூலை மாதத்தில் வரும் அமெரிக்க சுதந்திர தின விழா விடுமுறையில் நடக்கும் இந்தத் தமிழ் விழா ஓவ்வொரு வருடமும் வெவ்வேறு மாநிலத்தில் நடைபெறும். அமெரிக்கா மற்றும் கனடாவில் இருந்து கிட்டதட்ட 1000 முதல் 2000 தமிழ் அன்பர்கள் கலந்து கொண்டு அமெரிக்க மண்ணில் தமிழால் பேசி மகிழ்ந்து, சுவாசித்து, தமிழ் உணர்வோடு செல்லுவார்கள். இந்த உணர்வும், மகிழ்ச்சியும் ஒரு ஆண்டுக்கு நிச்சயம் தாங்கும்.
இந்த தமிழ் விழாவிற்கு கிட்டதட்ட 6 மாதங்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். அதுமட்டும் அல்ல குறைந்தது 50 குடும்பங்கள் இரவு பகல் பாராமல் இந்த விழாவை சிறப்பாக நடத்த தங்களை அர்பணித்து கொள்வார்கள். ஒவ்வொரு விழாவிற்கும் நல்லதொரு தலைப்பை விழா குழு தீர்மானிக்கும். இந்த ஆண்டு தமிழர் விழாவின் தலைப்பு "உணர்வு கொள்வோம், உரிமை காப்போம்"
இந்த தலைப்பிற்கு ஏற்ப தமிழ் மக்கள் உணர்வை மிகைப் படுத்தி கொள்வதற்கும், உரிமையை நிலை நாட்டுவதற்கும் ஏதுவாக விழா நிகழ்ச்சிகள் அமையும், பேச்சாளர்கள் பேசுவார்கள். இந்த இரண்டு நாட்கள் விழாவில் நடந்த / ரசித்த / வருத்தப்பட்ட வைத்த சில நிகழ்வுகளை உங்களுக்கு மீட்டுக் கொடுக்க ஆசைப் படுகிறேன்....
- விழாவின் சிறப்பு அம்சமாக அமெரிக்கப் பெண் மருத்துவர் Dr Ellen Sanders ஈழ விடுதலைக்கு நாம் போராட வேண்டிய அவசியத்தை பேச பேச அரங்கம் ஆர்பரித்ததையும், அவரின் பேச்சைக் கேட்ட சிலர் 'நான் இன்று மீண்டும் பிறந்தேன்' என்று சிலாகித்ததை எப்படி எழுத போகிறேன்?!
- தமிழ் அருவியாக தமிழ் உணர்வையும், ஈழ மக்களின் இன்றைய நிலமையையும், சிறந்த காந்தியவாதியாக பேசிய தமிழ் அருவி மணியனின் பேச்சை எப்படி நான் முழுமையாக மீட்டு எடுப்பேன்?! புறநானுற்றை அவர் ரசித்த விதம் அதனை மக்களுக்கு தேன் தடவிய பேச்சாக அளித்த விதம், அதனை அப்படியே எப்படி எழுத்தில் வடிக்கப் போகிறேன்?
- 80 வயதில் தமிழின் சிறப்பு அம்சமான சிலம்பின் சிறப்பைப் பேசிய சிலம்பொழி சு செல்லப்பனின் தமிழை எப்படி பாராட்டுவது?!
- எளிய நவீன கவிதைகளை மக்களுக்கு அறிமுகப் படுத்திய கவிஞர் ஜெய பாஸ்கரனின் கவிதைகளை எப்படி சிதறாமல் உங்கள் பார்வைக்கு வைக்கப் போகிறேன்?!
- கடமைக்காக போலியாகவும், கர்வமாகவும், சாதி உணர்வோடும் பேசிய வைரமுத்துவின் முகத்திரையை உங்கள் முன் கிழித்தெறிய வேண்டும்.
- நாடுகடந்த தமிழீத்தை நாம் ஏன் அங்கீரக்க வேண்டும் என்று நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய நண்பர்களை நான் உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்...
- "சந்திராயன்" ராக்கெட்டில் தமிழன் ஜெயித்ததை, எளிமையாக தமிழில் உரையாடிய திரு மயில்சாமி அண்ணாதுரையை பற்றி உங்களுக்கு சொல்லியாக வேண்டும்...
- இதை தவிர நடிகர் ஜீவா, நடிகர் பசுபதி, நடிகை ஜெயஸ்ரீ, கன்னிகா - இவர்கள் என்ன செய்தார்கள் என்பதை எவ்வளவு தேடினாலும் எனக்கு எதுவும் தெரியவில்லை!!!
இது ஒரு அறிமுகம் தான். இன்று முதல் தினம் ஒரு பதிவு விழாவைப் பற்றி.....
மொத்ததில் தமிழர் விழா மிக அருமை, மிக சிறப்பு, தமிழ் ஆர்வத்தையும், தமிழ் உணர்வையும் ஏற்படுத்திய இந்த அமைப்பு மேலும் மேலும் வளர வேண்டும்...
நன்றிகள் பல...
தோழமையுடன்
மயிலாடுதுறை சிவா....
4 Comments:
அன்புள்ள சிவா.
பேரவை நிகழ்வுகள் குறித்த சிறந்த தொடக்கப் பதிவு.
கவிப் பேரரசு வைரமுத்து, கலைவாணர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நூற்றாண்டைப் பற்றிக் குறிப்பிட்டதனால் சாதி உணர்வோடு என்று குறிப்பிடுகிறோர்களோ?
கவிப் பேரரசை மக்கள் கூட்டத்திலும், இலக்கிய விழாவிலும், கவியரங்கிலும் காணாத சற்று வியப்பையே அளித்தது.
ஐயா தமிழருவியின் பேச்சு சில சமயம், தங்கரின் சென்ற வருடப் பேச்சை நினைவு படுத்தியது.
பேரவையில் கூடும் மக்களைக் பேச்சாளர்கள் குறை கூறுவது, ஆரோக்கியமான நிகழ்வாகாது.
அன்புடன்
.கவி.
அன்புள்ள சிவா
பெட்னா விழா பற்றி நாங்கள் வழி செய்தமைக்கு நன்றி.
வாழ்த்துகளுடன்
மு.இளங்கோவன்
புதுச்சேரி
கவி
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. நாளை வைரமுத்து பற்றி எழுதுகிறேன் பார்க்கவும்.
அய்யா மு இளங்கோவனுக்கு
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றிகள் பல
மயிலாடுதுறை சிவா
தமிழகத்தமிழர்களை பார்க்கும் போது தமிழகத்துக்கு வெளியே தான் சொரணையுள்ள தமிழர்கள் அதிகம் பேர் உள்ளதை பார்க்க முடிகிறது.
வேறு நாடு சென்றாலும் தமிழை காக்க நினைக்கும் வெளிநாட்டுவாழ் தமிழர்களைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.
Post a Comment
<< Home