தமிழ் விழா 2009 - வைரமுத்தும் சாதிப் பற்றும்
சூலை 4, 2009.
இந்த விழாவில் என்னை மிகவும் கவர்ந்தவர்களில் ஒருவர் மருத்துவர் Ellyn Shander என்றால் இவருக்கு நேர் எதிராக ஒருவர் சொதப்பினார் என்றால் அவர்தாம் நம் வைரமுத்து. இவருடைய பல பாடல்கள் நம் மனதிற்கு மிக மிக நெருக்கமாக இருந்தாலும், இவரிடம் உள்ள கர்வம் இந்த முறை என்னை மிக மிக வெறுப்பு அடைய செய்தது. இவர் மிகப் பெரிய படைப்பாளி என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை.
ஒவ்வோரு ஆண்டும் பேரவை மிகப் பெரிய தமிழ் அறிஞர்களை, ஏழ்மைநிலையில் இருந்தாலும் அவர்களையும் கூப்பிட்டு பேரவை அவர்களை கெளரவ படுத்தும். இந்த முறை பேரவை விழாவிற்கு நமது விழா குழு இவரை அழைக்கவில்லை. அதாவது நாம் செலவு செய்து அவரை கூப்பிடவில்லை. இந்த விழாவிற்கு பெரும் பணம் உதவி செய்த நபர் வைரமுத்துவை கூப்பிட ஆசைப் பட்டார். அவரின் வேண்டுகோளுக்கு இணங்க விழா ஒருங்கிணைப்பாளர்கள் ஒத்துக் கொண்டார்கள்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நியூயார்க் பேரவை விழாவில் என்ன பேசினாரோ அதில் பாதி சதவீதம் அதனை அப்படியே பேசினார் என்றால் மிகையல்ல. அதுமட்டும் அல்ல இவர் அலட்டிய விதம் கொஞ்சம் நஞ்சம் அல்ல. விழா முதல் நாள் மாலை பேச அழைத்தோம். அவர் மறுத்துவிட்டார். ஒருமுறைதான் பேசுவேன் என்றும் அதுவும் விழாவின் இரண்டாம் நாள்தான் பேசுவேன் என்று அடம் பிடித்தார். அதுமட்டும் அல்ல அவர் வந்து பேச போவதை பலமுறை ஒலி பெருக்கியில் அறிவிக்க வேண்டுமாம்...என்ன கொடுமை சார் இது....!!!இவர் பார்க்காத பணமா? நம் தங்க தமிழ்நாட்டில் ஒரு கவிஞர் கோடிஸ்வரன் இருக்கிறார் என்றால் அது இவர்தான்....ஆனால் இன்னும் அந்த கர்வமும் அலட்டலும் குறையவில்லை! இவர் அடைந்த புகழுக்கு பின் இவர் இன்னும் மனபக்குவம் அடையவில்லை என்று தோன்றியது.
என் மனதை வருத்த படவைத்த விதம் என்றால், நம் இளைய தலைமுறைக்கு ஒன்று இரண்டு மூன்று நான்கு என்று சொல்லி கொடுக்கும் பொழுது அப்படியே தமிழையும் சேர்த்துக் கற்று கொடுங்கள் என்றார். அதாவது ஒரே குலம் மனித குலம், சாதி இரண்டு ஆண் மற்றும் பெண், தமிழ் மூன்று இயல், இசை, நாடகம், திசைகள் நான்கு, இப்படி சொல்லிக் கொண்டே போனார்.
வழக்கம்போல் நானும் தமிழும், என் தமிழ், அப்படி இப்படி என்று கர்வமாக பேசிவிட்டு, இந்த விழாவின் சிறப்பு அம்சம் "அண்ணா நூற்றாண்டு" அதற்காக விழா மலரில் அவரின் புகைப் படமும் அவரைப் பற்றிய கட்டுரையும் வந்துள்ளது என்று பாராட்டிவிட்டு, ஆனால் ஒன்றை மறந்துவிட்டீர்கள் என்றார். தேவர் திருமகனாரின் புகைப் படமோ அல்லது அவரைப் பற்றிய கட்டுரையோ இதில் இல்லை என்று வருத்தப் பட்டார். இந்த ஆண்டு தேவருக்கு 100 ஆண்டுகள் ஆகிவிட்டன என்றார். தேவரின் பெருமைகளை பட்டியல் இட்டார். தேவரின் முழு பெயரை கூட அவர் உச்சரிக்கவில்லை. பசும்பொன் முத்துராமலிங்கம் என்று சொல்லவே இல்லை. தேவர் திருமகனார் என்று பெருமை பட்டு கொண்டார். தேவரின் முடி, அவர் நடந்து சென்றால் பட்டு கம்பளம் அது இது என்று அடுக்கி கொண்டே போனார். இவரின் சாதிப்பற்று அப்பட்டமாக தெரிந்தது.
வைரமுத்து தன்னுடைய முன்னுரையில் சாதி இரண்டு, அதாவது ஆண் சாதி மற்றும் பெண் சாதி என்று சொல்லி விட்டு, இப்பொழுது என்ன தீடீர் தேவர் பாசம்? வைரமுத்து மிகுந்த சாதிப் பற்று உடையவர் என்று நன்கு தெரிந்தாலும் விழாவில் தேவரின் பெருமைகளை அதுவும் கடல் கடந்து பேசியது மிக மிக நெருடலாக இருந்தது.
இதைவிட கொடுமை என்னவென்றால் பேச்சின் கடைசியில் ஈழ தமிழர்கள் பற்றி நான் பேசாமல் இருந்துவிட்டால் நான் தமிழனே அல்ல என்று பேசிவிட்டு கைதட்டல் வாங்கி கொண்டார். வருகிற வாரம் அவரின் பிறந்த தினமாம், அதை கவிஞர்கள் தினமாக கொண்டாடுவது வழக்கமாம்! இந்த முறை அதனை கொண்டாடவில்லையாம்! காரணம் ஈழ தமிழர்கள் அங்கே கண்ணீர் விட்டு கொண்டிருக்கும் சமயத்தில் நான் பிறந்த தினம் கொண்டாடுவது இல்லை என்று முடிவு எடுத்து இருக்கிறேன் என்றார். என்னே ஒரு தியாகம்! என்னே ஒரு இனப் பற்று!
இங்குதான் நாம் மனதை மாற்றி போடகூடிய தமிழ் அருவி மணியனின் பேச்சில், "வறுமை என்னும் நெருப்பு நாலா பக்கமும் சூழந்த இருந்த போழுதும் பராசக்தியிடம் "எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா! என்று மகாகவி பாரதி பாடியது நினைவிற்கு வந்தது!" மகாகவி எங்கே, இந்த கவிபேரரசு எங்கே?!
அடுத்த நாள் விழாவில் தமிழ் உணர்வோடும், காந்திய சிந்தனைகளோடு பேசிய தமிழ் அருவி மணியனை பற்றியும் எளிமையாக எல்லோரும் ரசிக்கும் வண்ணம் புதுக்கவிதைகளை பற்றி பேசிய கவிஞர் ஜெயபாஸ்கரன் பற்றியும் நாளை எழுதுகிறேன்.....
நன்றிகள் பல எனது தமிழ்ச் சங்க பேரவைக்கு....
தோழமையுடன்
மயிலாடுதுறை சிவா....
22 Comments:
பாரதிராஜாவும் சாதிப்பற்று உள்ளவர்தான் ஆனால் வெள்ளந்தி மனிதன். இவர் காரியக்காரர்
பசும்பொன் முத்துராமலிங்கம் என்று சொல்லவே இல்லை. தேவர் திருமகனார் என்று பெருமை பட்டு கொண்டார்.//
சபாஷ் சந்திர போஸ் அவர்களை
போஸ் என்று அழைத்தால் எப்படி இருக்கும், இதன் பின்னர் பெரிய அரசியல் உள்ளதாக எனக்குதோண்றுகிறது.
நீங்களும் ஃபெட்னா வந்திருந்தீங்களா? சந்திக்க முடியவில்லையே.நானும் இப்படியேதான் வைரமுத்வைப் பற்றி அவதானித்திருந்தேன்.
எனக்குத் தோன்றியது: அவர் பேசியதில் மிகவும் செயற்கைத் தனமும், ஏதோ வந்திருக்கிறேன் பேசுகிறேன் என்ற தொனியாகவே பட்டது.
நானும் ஒரு பதிவு போடணும் என்னோட பார்வையிலருந்து வைரமுத்துவின் பயக்க வயக்கம் எப்படி இருந்துச்சுன்னு, பார்க்கிறேன் :-).
வணக்கம் நண்பரே!,
மிகத் துல்லியமாக எழுதியுள்ளீர்கள். தாம் இரண்டு செய்திகள் தமிழகத்திலிருந்து கொண்டு வநதிருப்பதாகவும், பேச்சினுடே பல முறை கூறிக் கொண்ட அவர், அதைக் கடைசி வரையில் சொல்லாமற் சென்றது, மிகச் சிறந்த நகைச் சுவைக் காட்சி. அதையும் தாங்கள் குறிப்பிட்டிருக்கலாம்.
"வெத்து வேட்டு " வைரமுத்துக்கு ஒரு நல்ல சவுக்கடி.
நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி வைரமுத்து நடந்து கொண்டிருந்தால் அது கடுமையாக கண்டிக்கத்தக்கது, உங்கள் வருத்தங்களும் நியாயமனவை. அதே சமயத்தில், ஒரு பேச்சாளனுக்கு தான் என்ன பேச வேண்டும் என்பதை முடிவு செய்யும் உரிமை உண்டு. பலரும் தவறாக புரிந்து கொண்டுள்ளது போல், நீங்கள் project செய்ய முயன்றுள்ளது போல், பசும்பொன் முத்துராமலிங்கம் சாதி சங்க தலைவர் அல்ல. நேதாஜியின் Forward block தலைவராக இருந்தார். இவரால் அதிகம் பயனடைந்தது, தாழ்த்தப்பட்ட வகுப்பினரே. பசும்பொன் முத்துராமலிங்கத்தின் அத்தை வழிப் பேரன் என்னுடன் படித்தான், அவர்கள் இன்று வசிப்பது பசும்பொன் முத்துராமலிங்கத்தின் வீட்டில் தான். ஆனால், உணவுக்கும் உடுத்த உடைக்குமே திண்டடினான் என்பதை நான் அறிவேன். பசும்பொன் முத்துராமலிங்கத்தின் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம், அந்த பகுதியில் உள்ள தாழ்த்தப்பட்ட வகுப்பினரிடம் உள்ளது. பசும்பொன் முத்துராமலிங்கத்தை தேவர்களின் தலைவராக கருதுவது, வ. உ. சியை பிள்ளைமார்களின் தலைவராக கருதுவதற்கு சமம்.
நன்றி வருங்கால முதல்வர், குடுகுடுப்பை, தெகா, செந்தில், மற்றும் G
சிவா....
G
உங்களுக்கு தெரியுமா? முத்துராமலிங்க தேவரை தந்தை பெரியார் சிறையில் அடைக்க வேண்டும் என்றார்!
தேவர் - தாழ்த்தப் பட்ட மக்களுக்கு உதவி இருக்கலாம், ஆனால் அவர் கடுமையான சாதி பற்று உள்ளவர் என்று நான் படித்து இருக்கிறேன்.
வருடா வருடம் தேவர் ஜெயந்தி என்பதெல்லாம் டூ மச்!!!
மயிலாடுதுறை சிவா...
தற்காலிகமாக அட்லாண்டாவில் தான் இருக்கிறேன் என்றாலும் பெட்னா பற்றி அதிக அக்கறையில்லை.
'அடிக்கடி அறிவிக்க வேணுடுமாம் ' இதெல்லாம் ரொம்ப அதிகப்படி.
உம் கருத்துபடி அவர் சாதிபற்றாளர் ஆக இருந்தால்....ஏன் பொன்மனியை(ஆதிதிராவிடர்) மணம் முடித்தாரோ?,,, நீ எந்த சாதியில் பெண்ணெடுத்தாய்.. ஏன் நீயோ அல்லது உன் பிள்ளைக்கோ ஆதிதிராவிடர் வகுப்பில் மணம் செய்யும் துணிவு துளியும் உண்டா? உள்ளத்தில் தெளிவும் உண்மை தெளிவும் இருந்தால் யோசித்து பார்... பச்சை தமிழன் யார்? பரதேசிகளாய் தமிழகத்தில் புகுந்து சாதிச் சண்டைகளை உருவாக்கிய துரோகிகள் யார் என்பது புரியும்...உண்மையை உணராமல் அரைகுறை பிரச்சாரங்களை நம்பி ... சினமா கதை வசனம் மூலம் வஞ்ஞிசப்பட்ட உம் போன்ற பாதித்தமிழர்களுக்கு எதுவும் புரியாது... ஏனென்றால்... அந்த இனதின் மேல் உங்களுக்கு இருக்கும் உள்ளூரும் எரிச்சல் அல்லது பகைமை..தூங்குபவர்களை எழுப்பலாம், நடிப்பவர்களை???????
ஆளவந்தான்
உங்களது பின்னூட்டத்தை தவறுதலாக நீக்கிவிட்டேன், முடிந்தால் மீண்டும் இடுங்கள்...
அண்ணன் தொல் திருமாவிற்கு வாழ்த்து தெரிவித்ததை நான் பெருமையாக கருதுகிறேன். ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் அல்ல, தலித்தும் அல்ல...
நானும் சாதி மறுப்பு திருமணம் செய்தவன் என்பதை தாழ்மையோடு தெரிவித்து கொள்கிறேன்...
உங்கள் கருத்திற்கு நன்றி
சிவா...
//
உங்களது பின்னூட்டத்தை தவறுதலாக நீக்கிவிட்டேன், முடிந்தால் மீண்டும் இடுங்கள்...
//
பணக்காரன்னா கெட்டவன்.. தலித்னா நல்லவன்..
முதலாளினா கொடுமைக்காரன்.
பெண்கள் அனைவரும் கொடுமைபடுத்தபடுகின்றனர்.
என்ற முன்முடிவுடனே எதையும் யோசிக்க பழகிவிட்டோம்.. இதை தான் என்னோட பின்னூட்டத்தில் சொல்ல முன்வந்தேன்.
மற்ற்படி.. நீங்க எந்த ஜாதியா இருந்தாலும் எனக்கு பிரச்னையில்லை.. ஃபெட்னா வர முடியல.. முடிந்தால் நேர்ல சந்திக்கலாம்
"எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா! என்று மகாகவி பாரதி பாடியது நினைவிற்கு வந்தது!" மகாகவி எங்கே, இந்த கவிபேரரசு எங்கே?!
"...அவர் கடுமையான சாதி பற்று உள்ளவர் என்று நான் படித்து இருக்கிறேன்."
- நீங்கள் தோழர் வே.மதிமாறன் எழுதிய 'பாரதி'ய ஜனதா பார்ட்டி என்ற புத்தகத்தையும் படித்து பாருங்கள்.
http://mathimaran.wordpress.com/mybooks/
//
உதயதேவன்
உம் கருத்துபடி அவர் சாதிபற்றாளர் ஆக இருந்தால்....ஏன் பொன்மனியை(ஆதிதிராவிடர்) மணம் முடித்தாரோ?,
//
ஒருவனுக்கு ஜாதி/இனபற்று இருப்பதில் என்ன தவறு? மற்ற ஜாதியினரை பற்றி துவேசம் செய்வதே மிகப்பெரிய தவறு.....
நாம் நம்ம இனத்தை பெருமையா பேசிக்கிறது இல்லியா “தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா” என்று.
//
உங்களுக்கு தெரியுமா? முத்துராமலிங்க தேவரை தந்தை பெரியார் சிறையில் அடைக்க வேண்டும் என்றார்!
//
உங்களுக்கு தெரியுமா? அதே பெரியாரை அழிக்க ஒரு இனமே பூஜை புன்ஸ்காரம் எல்லாம் செய்தது என்று.
தேசப்பிதாவுக்க்கு என்ன கதி என்று உங்களுக்கு தெரியாதா என்ன..
//
தேவர் - தாழ்த்தப் பட்ட மக்களுக்கு உதவி இருக்கலாம், ஆனால் அவர் கடுமையான சாதி பற்று உள்ளவர் என்று நான் படித்து இருக்கிறேன்.
//
அமெச்சூர்தனம்
//
நானும் சாதி மறுப்பு திருமணம் செய்தவன் என்பதை தாழ்மையோடு தெரிவித்து கொள்கிறேன்...
//
தெரியும் :) நீங்கள் காதலித்து திருமணம் செயதவர் என்று. வாழ்த்துக்கள்.
பொன் மணி சைவப் பிள்ளைமார் வகுப்பை சேர்ந்தவர் என வைரமுத்துவின் எழுத்துக்களிலேயே படித்ததாக ஞாபகம்.
கவிஞராக வைரமுத்து பரிணமித்தபோது மிகவும் பெருமைப்பட்டு அவரைப் பாராட்டியவர்களில் நானும் ஒருவன். ஆனால் தற்போது அவரின் செயற்கைத்தனமும், மிதமிஞ்சிய ஆணவப்போக்கும், மக்களிடமிருந்து அன்னியப்பட்டு நிற்கும் குணமும் அவர்மீது இருந்த மதிப்பை வெகுவாகக் குறைத்துவிட்டது. முகத்தை எப்போதும் இறுகலாக வைத்துக்கொள்வதும், தான் ஏதோ தேவதூதன் போல நடந்து கொள்வதும் அமெரிக்காவில் பலராலும் கடுமையாக விமர்சனம் செய்யப்படுவதை என் காதுபட கேட்கிறேன். முன்பெல்லாம் அவர்மீது எனக்கு கோபம் வரும். ஆனால் இப்போதெல்லாம் "கிராமத்துச் சூழலில் முகிழ்த்த ஒரு கவிஞன், இப்படி நகரத்துச் செயற்கையை விட செயற்கையாகிவிட்டாரே" என்ற அங்கலாய்ப்புத்தான் வருகிறது.
அரசு பின்னூட்டத்திற்கு நன்றிகள் பல...
உதயதேவன் உங்கள் பின்னூட்டத்திற்கும் நன்றி
ஆளவந்தான், நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஓர் சாதி பற்று அல்லது வெறு உடையவன் என்று. இது என் கருத்து, இவற்றில் உங்களுக்கு உடன் பாடு இல்லை என்றால் நான் என்ன செய்யமுடியும்?
வைரமுத்து - நல்ல பல தமிழ் இலக்கியங்களை படித்தவர், நிறைய சம்பாரித்து இருப்பவர், அவருக்கு தன் சாதியின் மீது இன்னமும் நம்பிக்கை உள்ளது என்பதும் என் பார்வை.
மயிலாடுதுறை சிவா...
//
ஆளவந்தான், நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஓர் சாதி பற்று அல்லது வெறு உடையவன் என்று. இது என் கருத்து, இவற்றில் உங்களுக்கு உடன் பாடு இல்லை என்றால் நான் என்ன செய்யமுடியும்?
//
இறந்தவரை பற்றி அவதூறாக பேசுவதில் எனக்கு உட்ன்பாடு இல்லை.. அதே சமயம் நான் சொல்ல வந்தது வைரமுத்துவை பற்றி தானே தவிர ப.மு. தேவரை பற்றி அல்ல..
”தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்ல்ல எதிராளிக்கு ரெண்டு கண்ணும் போகனும்” என நினைக்கும் “பொறாமை” கூட்டத்துக்கு , இன்னொரு கூட்டத்துக்கு ஒருவர் காவலாக இருப்பது பொறாமையாக இருப்பதில் என்ன பெரிய அதிசயம் இருக்க முடியும்.
நண்பர் G சொன்னது போல பிள்ளைமார் இன மக்கள் வ.உ.சி.யையும். நாடார் இன மக்கள் காமராஜரையும் தங்கள் இன தலைவராக நினைக்க தொடங்கியதன் விளைவு.. மற்ற இன மக்கள் அவர்களது பெருமைகளை நினைத்து கூட பார்ப்பது இல்லை (சில சமயங்களில் அவர்களை மற்ற் இனத்தவர்கள் கேவலமாக பேசுவதை கேட்டிருக்கிறேன்) என்பது வெட்கபடவேண்டிய விச்யம்.. இது நிதர்சன்மான் உண்மை.
//
வைரமுத்து - நல்ல பல தமிழ் இலக்கியங்களை படித்தவர், நிறைய சம்பாரித்து இருப்பவர், அவருக்கு தன் சாதியின் மீது இன்னமும் நம்பிக்கை உள்ளது என்பதும் என் பார்வை.
//
அதே வைரமுத்து தென் தமிழகத்தை இன்னும் உயர்த்தி தான் பேசுவார் அதற்காக வட தமிழக மக்கள் கோபித்துக் கொள்ளலாமா?
நீங்கள் கூட உங்கள் இளம்பிராயத்தில் கழித்த மணிக்கூண்டை மறக்க முடியவில்லையே..
அதுபோலவே நான் இதை பற்றாக பார்க்கிறேனே தவிர. இதை ஒரு வெறியாக பார்க்க தோன்றவில்லை..
simple agree to disagree :)
உங்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிகிறது சிவா சார். கவிதைக்குப் பொய் அழகு என்பது போல் கவிஞர்களுக்கு "முதிர்ச்சியின்மை" ஓர் இலக்கணம். இவர் காரியக்காரர் மற்றும் கெட்டிக்காரர்.
அவரை அவராக ஏற்க முடியாவிட்டால் அவ்வளவு தூரம் அழைப்பானேன். ஒருவரைக் குறித்து நாமாக ஓர் பிம்பம் ஏற்படுத்திக் கொண்டுவிட்டு அது போல் அவர் இல்லை என்றால் தவறு நம் மீதா; அவர் மீதா?
அனைத்தும் ஆச்சரியமாக இருக்கிறது. பின்னுங்களின் ஆமோதிப்பும் அவர் அவர்களுக்குண்டான பாதிப்புகளைப் பார்க்கும் போது ஏன் இவ்வாறு என்று யோசிக்கத் தோன்றுகிறது? அதான் தவறே முதலில் தொடங்கியாகி விட்டதே? பணம் அதிகமாகக் கொடுத்தவர் மனம் விரும்பும்படி அழைக்க வேண்டியிருந்ததை. லட்சம் பேர்கள் கவனித்துக்கொண்டுருக்கும் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டுருப்பவர்கள் செய்யக்கூடிய தவறுகள் பெரும்பாலும் அவர்களை மேன்மேலும் தக்க வைத்துக்கொள்ளவதற்காக என்று அவர்களுக்குள்ளே செய்து கொள்ளப்பட்டுருக்கும் கற்பிதத்தினால் தானே. நாம் தான் தொடக்கத்தை சரியாக தொடங்க வேண்டும். நன்றாக எளிமையாக இருந்தது, நன்றி. http://texlords.wordpress.com
ஆளவந்தான்
"....நீங்கள் கூட உங்கள் இளம்பிராயத்தில் கழித்த மணிக்கூண்டை மறக்க முடியவில்லையே.."
மணிகூண்டிற்கும், சாதி பற்றிற்கும் என்ன சம்மந்தம்? புரியவில்லை?
ரத்தினேஸ், ஜோதி தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றிகள் பல...
மயிலாடுதுறை சிவா...
சிவா, வேலை இருந்ததால் உங்கள் பதிவை பார்க்கவில்லை. எனக்கிருந்த வருத்தத்தை நான் வேறு விதமாக பதிவு செய்திருந்தேன். எனக்கு அவர் சாதிப்பற்று ஒரு பெரிய விசயமாக தெரியவில்லை, என் ஆதங்கம்
http://arasooraan.blogspot.com/2009/07/blog-post_07.html
இந்த பதிவின் மூலம் குறைந்தது என எண்ணுகிறேன்.
அங்கு என் நண்பருக்கு தெரியப்படுத்தியதை உங்களுக்காக இங்கு...
ரஜினி, கமல் போன்றவர்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வருகின்றார்கள், காரணம் அவர்களது ரசிகர்களிடையே வரும் தள்ளு முள்ளுகளை தவிர்பதர்க்காக.
ஆனால் விழாவிற்க்கு வந்தவர்கள், வந்த நோக்கத்தை மறந்து சொந்த விருப்பு வெருப்புக்களை கண்பித்தது வெட்க்கபட வேண்டிய செயல்.
அவர் பேசிய ஒன்று, இரண்டு, மூன்று கடந்த சில சில வருடங்களாக அவர் பேசி வருவதுதான்... இந்த விழாவிற்க்காக அவர் ஒன்றும் புதிதாக பேசிவிடவில்லை என்பதே உண்மை, மாறாக அவர் முதல் நாள் அல்லது மூன்றாம் நாள் நடந்த இலக்கிய கூட்டத்தில் கலந்து கொண்டு ஒரு கவிதை படித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்... காலம் பதில் சொல்லும்.
இந்த செறுக்கு மிகுந்த செல்லுலாய்ட் கவி இன்னும் என் மனதில் சிறந்த கவி-யாகவே உள்ளார். நாம் நம் எதிர்பார்ப்பை குறைத்து கொள்வது நமக்கு நல்லது என் நினைக்கிறேன்.
வைரமுத்து என்ற தனிமனிதன் தாண்டி ஜாதி சண்டையாக பின்னூட்டங்கள் போகிறது.
வைரமுத்து மனைவி உடையார் ஜாதி.ஆதிதிராவிடர் இல்லை
Post a Comment
<< Home