Monday, August 17, 2009

ஏமாற்றிய ஜெய மோகன்?

வாசிங்டன். ஆகஸ்டு 2009

நான் வாழும் பகுதியில் தமிழ் இலக்கிய வட்டம் உள்ளது. சிலச் சமயம் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கத்தின் மூலமாக எங்களால் சில தமிழ் அறிஞர்களை உடன் பேச வைக்க ஏற்பாடு செய்ய முடியாமல் போகும் பட்சத்தில், எங்கள் இலக்கிய வட்டம் மூலம் தமிழ்நாட்டில் இருந்து வந்து இருக்கும் தமிழ் அறிஞர்களை வரவழைத்து கூட்டம் நடத்துவது வழக்கம். இந்த வழக்கத்தின் அடிப்படையில் இரண்டு வாரம் முன்பு எழுத்தாளர் ஜெயமோகனுடன் ஒரு கலந்துரையாடலுக்கு சென்று இருந்தேன். அவருடைய எழுத்துகளை நிறைய படிக்காவிடிலும், ஒரளவு படித்து இருக்கிறேன். அவருடைய சில நாவல்களை வாங்கி வைத்து இருக்கிறேன். அவரை சந்திப்பதற்குள் இதனை படித்துவிட வேண்டும் என நினைத்தேன், முடியவில்லை.

எங்கள் பகுதியில் இருந்து கிட்டதட்ட 50 பேர்களும் வெளியூரில் இருந்து கிட்டதட்ட 10 பேர்களுக்கும் மேல் வந்து இருந்தார்கள். முதலில் அவரது பேச்சும் பிறகும் கலந்துரையாடலும் இருந்தது. அவர் கிட்டதட்ட 20 நிமிடங்கள் பேசினார். உண்மையிலேயே எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அல்லது நான் ரொம்ப அவரிடம் எதிர் பார்த்துவிட்டேன் போலும். உலக இலக்கியங்களை படித்து இருப்பதாக சொன்னார். ஆனால் அவரது பேச்சில் நல்ல தரமான இலக்கியத்தை அல்லது எந்த நாடு இலக்கியத்தில் முண்ணனி வகிக்கிறது என்று எதுவும் சொல்லவில்லை!

முதல் பார்வையில் ஜெயமோகன் மிக மிக அமைதியாகவும், பண்பாளராகவும் தெரிந்தார். மாற்று கருத்துகளையும் மிக கவனமாக கேட்டுக் கொண்டும் அவர் கருத்துகளை பலச் சமயம் பகிர்ந்து கொள்ள மறுத்தார். கிட்டதட்ட 20 வருடங்கள் இலக்கியத்தின் மீது பரிச்சியம் என்றார். மானுட ஞானத்தின் பெரும் கட்டுமானம் இலக்கியம் என்றார். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகம் என்றார். அவரது நெருங்கிய நண்பரின் தற்கொலையும், அப்பா மற்றும் அம்மாவின் தற்கொலையும் அவரை நிறைய சிந்திக்க வைத்தாக சொன்னார்.

நவீன கல்வி முறை, பொது கல்வி முறை பற்றி அவருடைய பார்வைகளை சொன்னார். இந்திய கல்வி முறையில் பல குறைப் பாடுகள் இருப்பதை சுட்டி காண்பித்தார். தமிழக பல்கலைகழங்களில் தத்துவத்திற்கு என்று துறைகள் சுத்தமாக இல்லை என்று வருத்தப் பட்டார். பொதுவாக இந்தியாவில் இலக்கியம் எதிர்பார்த்த அளவு வளரவில்லை என்றார்.

கலந்துரையாடலின் பொழுது, நண்பர் ஒருவர் ஈழத்தில் இவ்வளவு தமிழ் உயிர்கள் கொல்ல படுவது குறித்தும், மனித அவலங்களைப் பற்றி நீங்கள் எதுவும் எழுதவில்லை என்றார். அதற்கு ஜெய மோகன் இந்த கூட்டம் அதற்கான கூட்டம் அல்ல என்றும், நான் பதில் சொல்ல மாட்டேன் என்று சொன்னார். ஈழம் பற்றி எனது பார்வைகள் முற்றிலும் வேறு என்றார். நான் அடைந்த இழப்பு மிக மிக அதிகம் என்றார். என்னால் சுத்தமாக அவரின் போக்கு எண்ணங்களை புரிந்துக் கொள்ள முடியவில்லை.

இன்னோரு நண்பர், தனித் தன்மை / பொது தன்மை பற்றி பேசி கொண்டிருந்த விசயத்தை ஒட்டி "தமிழகம் இந்தியாவில் இருந்து பிரிந்து தனியாக இருந்து இருந்தால் இன்னும் நிறைய வளர்ச்சி அடைந்து இருக்குமே?" நாம் இந்தியாவில் சேர்ந்து இருப்பதால் நமக்கு என்ன பெரிய பலன்கள் கிடைத்துவிட்டது? என்று வருத்தப் பட்டு ஜெய மோகனிடம் கேட்ட பொழுது அதற்கும் அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டு, அது உங்கள் கருத்து என்றார்!!!

எனது சார்பாக அய்யா உங்களோடு ஒரு கலந்து உரையாடுவதில் மகிழ்ச்சி என்றும், ஆனால் ஒரு எழுத்தாளன் சமூகத்தின் பிரதிபலிப்பு என்றும், ஆனால் நீங்கள் உங்கள் கருத்துகளை மனம்விட்டு பேச மறுக்கிறீர்கள் என்று சொல்லிவிட்டு, என் கேள்வியை முன் வைத்தேன். முன்பு ஒரு முறை " தந்தை பெரியாரை ஒரு பாமரன் என்று சொன்னீர்கள்?" ஏன் அப்படி சொன்னீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா? என்றேன்.

நல்லவேளை இந்த கேள்விக்கு அவர் பதிலை சொன்னார். தந்தை பெரியார் மிகப் பெரிய சமூக சீர்சிருத்தவாதி என்பதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனால் அவர் ஒரு சிந்தனையாளர் அல்ல என்றார்! பெரியார் வாழும் காலத்தில் எம் என் ராய் / இஎம்ஸ் நம்பூதிரிபாட் / அண்ணல் அம்பேத்கார் - இவர்கள்தான் சிந்தனையாளர்கள். பெரியார் அல்ல என்றார்.

எழுத்தாளர் ஜெய மோகனுக்கு பிடித்த எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், தி ஜானகிராமன் என்றும், எழுத்தில் கறாரான சுந்தர ராமசாமி, ஓங்கி ஒலிக்காத வலுவான அசோகமித்ரன், காட்சி சித்திரங்களை அப்படியே கொடுக்கும் சுஜாதா இவர்களை எல்லாம் பிடிக்கும் என்று சொன்னார்.

தமிழ்நாட்டில் விரல்விட்டு எண்ண கூடிய எழுத்தாளர்களில் ஜெய மோகன் ஒருவராக இருக்கிறார் என்பதில் நமக்கு மகிழ்ச்சியே. ஆனால் இவர் தன்னுடைய மனதில் பட்ட கருத்துகளை பொது வெளியில் வைக்க தயங்குகிறார். அது மட்டுமல்ல அவர் படித்த ரசித்த உலக இலக்கியத்தை அல்லது உலக சினிமாவை அல்லது மிகப் பெரிய எழுத்தாளர்களை பற்றி அவர் பகிர்ந்து கொள்ளவே இல்லை. பார்வையாளர்களுக்கு ஒரு நல்ல தரமான பேச்சை கொடுத்து இருக்கலாம். அவர் ஒன்றும் சிறந்த மேடை பேச்சாளன் அல்ல, இருப்பினும் ஏதாவது சுவையாக பேசி இருக்கலாம்.

உதராணமாக தமிழ்ச் சங்க பேரவையில் நாங்கள் அழைத்து வந்து எழுத்தாளர் பிரபஞ்சன் மிக அருமையாக கலந்துரையாடினார். மனதில் பட்டதை அப்படியே சொன்னார். அவற்றுள் ஏதாவது தவறு இருந்தால் நீங்கள் இதனை எடுத்து கொள்ள வேண்டாம் என்றார். அவருக்கு மிக மிக பிடிந்த உலக இலக்கியத்தில் சிறந்த 100 கதைகளை பற்றி விவரங்களை பார்வையாளர்களிடம் பகிர்ந்துக் கொண்டார். நம் இந்திய / தமிழக சமுதாயத்தில் சாதிகள் எப்படி புரையோடி விட்டது மிக மிக வருந்தினார். பெண் முன்னேற்றம் எவ்வளவு முக்கியம் என்றார். தாழ்த்தப்பட்ட / ஒடுக்கப் பட்ட / உரிமைகள் மறுக்கப் பட்ட மக்களின் "தலித் இலக்கியம்" பரவாலாக்க படவேண்டும் என்றார். தமிழ் சமுதாயத்தில் சிற்றிதழ்களே தரமான கட்டுரைகளையும், இலக்கியத்தையும் தொடர்ந்து எழுதி வருகிறது என்றார். நீங்கள் அனைவரும் சிற்றிதழ்களை ஆதரிக்க வேண்டும் என்றார். பெண் எழுத்தாளர்கள் மிக மிக குறைவு, பெண்கள் நிறைய எழுத வேண்டும் என்று ஊக்கப் படுத்தினார். ஆனால் ஜெய மோகன் இதற்கு நேர் எதிர்?! ஒப்புமை செய்வது தவறு என்றாலும், மனம் எதிர்பார்த்து தொலைத்துவிட்டது!

ஒருவேளை நான்தான் ஜெய மோகனிடம் நிறைய எதிர்பார்த்துவிட்டு சென்றுவிட்டனோ என்று தோணுகிறது. இருந்தாலும் ஜெய மோகன் இன்னும் கொஞ்சம் வெளிப் படையாக இருந்து இருக்கலாம்!!! அவரிடம் இருந்து ஏதாவது புதிதாக கருத்துகள் அல்லது செய்திகள் கிடைக்கும் என்றும் எதிர் பார்த்து ஏமாந்து போனேன்?! என்பது என் எண்ணம்.

நன்றி

மயிலாடுதுறை சிவா...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

3 Comments:

Blogger தமிழ் ஓவியா said...

//ன்பு ஒரு முறை " தந்தை பெரியாரை ஒரு பாமரன் என்று சொன்னீர்கள்?" ஏன் அப்படி சொன்னீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா? என்றேன்.

நல்லவேளை இந்த கேள்விக்கு அவர் பதிலை சொன்னார். தந்தை பெரியார் மிகப் பெரிய சமூக சீர்சிருத்தவாதி என்பதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனால் அவர் ஒரு சிந்தனையாளர் அல்ல என்றார்! பெரியார் வாழும் காலத்தில் எம் என் ராய் / இஎம்ஸ் நம்பூதிரிபாட் / அண்ணல் அம்பேத்கார் - இவர்கள்தான் சிந்தனையாளர்கள். பெரியார் அல்ல என்றார். //


பெரியாரின் உயர்ந்த சிந்தனைக்கு ஒரு சான்றை உங்களின் பார்வைக்கு வைக்கிறேன்..இதோ அந்தச் சுட்டி


http://thamizhoviya.blogspot.com/2009/05/blog-post_7408.html

Monday, August 17, 2009 10:45:00 AM  
Blogger When it is high time said...

Whether Jemo has opened his mind or closed it, you have done well in opening up yours.

Comparisons between writers is unhealthy for growth of literature. Every writer should be unique in his tastes and distates, like and dislikes. That will help make a literature vibrant. Let our Literature get enriched by such differences.

Jemo getting reticent has reasons too. He has become convinced by now that he has as many critics as fans. In his blog, he is surrounded by his sycophantile readership. Outside, he is aware the world is different. So, he is very careful in opening up his mind to a crowd which may have his sharp critics, who can hide as his fans there to 'welcome' him. He has put on his armor by fending off such questions as on eelam, periyaar, etc. because, he is sure such questions are being raised with a view to trap him into arguments which can be abused against him later on. He feels at ease with conservative Tamil brahmin youth because they lionise him for his strident support of brahmanism and brahmins and his animadversions against dravidian leaders and Periyaar. He hates pure Tamil lobby - because he is proud his mother tongue is malayalam; which is a dizzy mixtures of Sanskrit and Tamil. His series of sarcastic essays lampooning Tamil scholars and ancient tamil literature in Deeranadhi is a sad example to show how deep his hatred of Tamil runs. His hatred of pure Tamil lobby in favour of mixed Tamil is heartily welcome by conservative Tamil brahmin youth who live in large number in your adopted country also, and who tom-tom him in blogosphere as a knight-at-arms against Dravidian leaders. Anyone who hates periyaar, dravidian leaders, and pure Tamil lobby is a hero to conservative Tamil brahmin youth.

No wonder, he was reticent in the crowd at Washington, which, he suspected, might contain his enemies or critics.

But, in his blog, he is prolix. In fact, too prolix to read. I dont generally read his long essays he is putting up in his blog. He has not cultivated the habit of speaking more than necessary.

He has opinions to which he has every right, no doubt. The opinions, alas, always tend towards the conservative group. He is by nature averse to different thoughts which question status quo. His opinon on periyaar lacking intellect, for e.g, is rooted in his prejudice against iconoclasts.

Thanks for your views on him.

Monday, August 17, 2009 11:25:00 AM  
Blogger லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

லாஸ் ஏஞ்சல்சில்- வாஷிங்டனை விடக் கூட்டம் கம்மியாக, ஒரு வீட்டுச் சூழலில் இருந்ததாலோ என்னவோ- அப்படி இல்லையே!(இது பற்றி என் ப்ளாகில் எழுதி இருக்கிறேன்)

எனக்குக் கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறது.

சாக்ரமெண்டோ கூட்டம் பற்றி நண்பரிடன் கேட்டுச் சொல்கிறேன்.

Tuesday, August 18, 2009 8:45:00 AM  

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது