Monday, February 28, 2005

ஆஸ்கார் விருதுகள் மற்றும் விழா துளிகள்

மனித வாழ்க்கையில் கலை என்பது மாபெரும் பங்கு. அதிலும் குறிப்பாக திரைப்படங்கள் மக்கள் வாழ்க்கையோடு மிகவும் கலந்துவிட்ட ஒன்றாகிவிட்டது. அதுவும் அமெரிக்காவில் வெளிவரும் ஹாலிவுட் திரைப்படங்கள் பல படங்கள் உலகத் தரம் வாய்ந்ததாக இருப்பது பலரும் அறிந்த உண்மை.

ஓவ்வொரு ஆண்டும் ஆஸ்கார் விழா எடுத்து அந்த விழாவை சீரும் சிறப்பாக கொண்டாடுவது நல்ல சிறப்பான ஒன்று. நல்ல தரமான ஆங்கிலப் படங்களை மிகவும் ரசித்து பார்பவர்கள் அந்த ஆஸ்கார் விழாவை அவசியம் நேரம் ஒதுக்கி தொலைக் காட்சியில் பார்ப்பது மிக மகிழ்ச்சியான மற்றும் நல்ல பொழுதுப் போக்கு விசயம்.

Sunday, Feb 27, 2005 ஆஸ்கார் விழாவை பார்த்து ரசித்த காட்சிகளை தமிழ் உள்ளங்களோடு பகிர்ந்து கொள்ளப் பிரியப் படுகிறேன்.

இரவு 8.30 மணிக்கு LosAngles உள்ள Kodak திரைஅரங்கில் 77 ஆவது ஆஸ்கார் விழாத் தொடங்கியது. ஆனால் விழா தொடங்குவதற்கு முன்னால் ஹாலிவுட்டின் முக்கிய பல நட்சத்திரங்கள் மிக அருமையாக உடை அணிந்துவருவார்கள். பார்பதற்கு கண் கொள்ள காட்சியாக இருக்கும். பல தொலைகாட்சி நிறுவனங்கள் அவர்களிடம் ஓர் சிறிய பேட்டி எடுப்பார்கள்.

விழாவை பிரபல நகைச்சுவை பேச்சாளர் Chris Rock தொகுத்து வழங்கினார். நல்ல நகைச் சுவையோடு பேசினார். George Bush, John Kerry அவர்களைப் பற்றி கிண்டல் அடித்துப் பேசினார். விழாவை தொகுத்து வழங்க வேறு யாரைவது போட்டு இருக்கலாம் என்று என் நண்பர் ஒருவர் சொன்னது எனக்கு சரி என்றே பட்டது.

விழா ஆரம்பத்தில் அந்தக் காலத் திரைப்படத்தில் ஆரம்பத்து இன்று வரை உள்ள Shrek வரை காண்பித்து, முடிவில் Charlie Chaplin வுடன் Sherk பொம்மையோடு நடந்தச் சென்றக் காட்சி மிக அருமையாக இருந்தது.

எல்லோரும் ஆவலாக எதிர்ப் பார்த்த RAY என்ற படத்தில் நடித்த JamieFoxx க்கு இந்த ஆண்டின் மிகச் சிறந்த நடிகர்கான விருது கிடைத்தது. RAY படத்தில் Jamie Foxx நடிப்பு மிக அற்புதம். பரிசை வாங்கி விட்டு நன்றி சொல்லும் பொழுது தன்னுடைய பாட்டி, பள்ளி பருவ ஆசிரியை பற்றி நினைவு கூர்ந்தார். இந்த விருது African American Dream என்று சொன்னது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தப் படத்தில் நடிப்பதற்கு Sidney Poiter இடம் வாழ்த்துக்கள் பெற்றார். எல்லாவற்றிக்கும் மேலாக இந்த படத்தில் அவரின் தனி நடிப்பு மிக மிக அருமை. அமெரிக்க பெரும் பணக்காரர்களில் ஒருவரான Operah வும் விழாவிற்கு வந்து இருந்தார். அவரையும் Jamie பார்த்து நன்றி சொன்னார். Jamieயின் மகள் விழாவிற்கு வந்து இருந்தார். அப்பா, நீங்கள் விருது பெறவிட்டாலும் நீங்கள் நன்கு நடித்து இருந்தீர்கள் என்று மகள் சொன்னதை Jamie நினைவு கூர்ந்தார்.

Million Dollar Baby யில் நடித்த Morgan FreeMan சிறந்த Supporting நடிகர்காக விருது பெற்றது
குறிப்பிட்டு சொல்லவேண்டும். Morgan FreeManனின் நடிப்பும், கணீரென்ற குரலும், அவரின் கம்பீரமும் என்றுமே அழகு.

Clint Eastwood ஹாலிவுட்டின் மிகப் பெரிய இயக்குனர் மற்றும் சிறந்த நடிகர். இந்த ஆண்டு அவர் நடித்து இயக்கிய Million Dollar Baby க்கு சிறந்தப் படம், சிறந்த நடிகை Hilary Swank, சிறந்த இயக்குனர் பரிசை அள்ளிச் சென்றது. Clint Eastwood ஏற்கனவே Unforgiven என்ற படத்திற்கு ஆஸ்கார் விருதைப் பெற்று இருக்கிறார். அவருடைய Bridges of Madison County என்ற படம் மிக அருமை. Meryil Strip ன் நடிப்பு அற்புதம். Clint Eastwood தன்னுடைய 84 வயது தாயாரை அழைத்து வந்தார். அந்த அம்மாவின் முகத்தில் ஆனந்தத்தை வார்த்தையால் அளவிடமுடியாது. மொத்ததில் ஆஸ்கார் விழா சிறப்பாகவும், நாம் ஏதிர்பார்த்த சில படங்கள் விருதுகளை அள்ளிச் சென்றது மனதிற்கு மகிழ்ச்சியை கொடுத்தது.

நம் பழாய் போன என் மனது தமிழ் திரை உலகம் இதுப் போல் என்று முன்னேறும் எனவும், உலக தரம் வாய்ந்த இயக்குனர், நடிகர், தொழில் நுட்ப கலைஞர்கள் இருந்தும் நாம் இன்றும் "ரெட், கில்லி, மதுர, ஜீ, ஆய்தம், ஏய்...."என எடுத்து பல கோடிகளை கொட்டி எடுத்தும் நம் தமிழ் சமுதாயத்தை அழித்தே தீருவது என்று உள்ளவர்களை நினைத்து நெஞ்சு பொறுக்கவில்லையே? நான் என் செய்வேன்?

காலம் மாறும், இளைஞர்கள் வருவார்கள், உலக தரமான திரைப் படங்களை தமிழன் படைப்பான், தமிழ் திரைப்படம் என்றாவது ஒரு நாள் ஆஸ்கார் பரிசை அள்ளி செல்லும், என்ற நம்பிக்கையோடு....

உங்கள் மயிலாடுதுறை சிவா....

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, February 03, 2005

கவிஞர் அறிவுமதி...எளிமையின் இலக்கணம்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் அறிவுமதியோடு பேசி பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. அவரிடம் என்னை டெட்ராய்டில்(மிச்சிகனில்) வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை விழாவில் அறிமுகப் படுத்திக் கொள்ளும் பொழுது அவருடைய கவிதையை சொல்லி என்னை அறிமுகப் படுத்திக் கொண்டேன்.

(கவிதை...
"என்னை எல்லோருக்கும் பிடித்து இருக்கிறது,
அவரையும் எல்லோருக்கும் பிடித்து இருக்கிறது,
ஆனால் எங்களைதான் யாருக்கும் பிடிக்கவில்லை")

காதல் வயப்பட்டு இருக்கும் ஒர் பெண் எழுதவதாக இந்த கவிதை எனக்கு அவர் கவிதைகளில் மிகப் பிடித்த ஒன்று.

ஒவ்வொரு கலைஞர்களும் விழா முடிந்து அடுத்தவாரமே வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்க சார்பாக நடக்கும் முத்தமிழ் விழாவில் கலந்துக் கொள்வது வழக்கம். அதன் படியே அறிவுமதி அண்ணனும் வந்து இருந்தார்கள். விழா நன்கு சிறப்பாக நடைபெற்றதைப் பார்த்து அவர் மிக ஆவலோடு "சேது" திரைப்படத்தில் வரும் "எங்கே செல்லும் இந்தப் பாதை..." என்றப் பாடலை நன்றாகப் பாடினார்.
தமிழில் எல்லா முண்ணனி இசை அமைப்பாளர்களுடன் பழகியதை நினைவு கூர்ந்தார். இளையராஜா மற்றும் ரகுமானின் எளிமைகளைப் பற்றியும், அவர்கள் இசை வளத்தை பற்றியும் பெருமையாக சொன்னார். பாரதிராஜா, பாலுமகேந்திரா அவர்களிடன் துணை இயக்குனாராக பணி ஆற்றியதையும் சொன்னார். எதிர்காலத்தில் தரமான தமிழ் படமும் முக்கியமாக ஆங்கில வார்த்தைகளே வராமல் திரைப்படத்தை தயாரிக்கவேண்டும் என்றார்.

மிக எளிமையாக அன்போடும், பண்போடும் அனைவருடனும் பழகினார். கனடா சென்றால் அங்கு உள்ள நம் ஈழத் தமிழ்ர்களோடு அமர்ந்து அவர்களின் விடுதலைக்கு தரமான தமிழ் பாடல்களை இயற்றி தருவார் என்று எனது ஈழ நண்பர் ஒருவர் சொன்னார். ஈழ மக்களின் விடுதலையைப் பெரிதும், மனதார விரும்புபவர்.

தமிழ் திரைப்பட உலகில் "அண்ணன் அறிவுமதி" என்று எல்லோராலும் அன்பாக செல்லமாக அழைக்கபடுபவர். இயக்குனர் பாலா அவர்கள் அண்ணன் அறிவுமதிப் பற்றி கூறுகையில் வேடதாங்கலில் பறவைகள் சரணலாயம் இருப்பதைப் போல, அண்ணன் அலுவலத்திற்கு அனைத்து இளம் கவிஞர்களும் இங்கு வந்து அடைகலம் ஆவதாக குறிப்பிட்டு உள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்னால் கூட புதிய இளம் கவிஞர் முத்துகுமார் அண்ணன் அறிவுமதிப் பற்றி பாராட்டி விகடனில் பேட்டி கொடுத்துள்ளார்.

நான் சென்ற முறை தமிழகம் சென்ற பொழுது அண்ணனைப் பார்க்க தி.நகர் அவருடைய அலுவலகத்திற்கு சென்றேன். வாசலில் ஒர் பெண்மணி அண்ணன் வந்து விட்டார்கள் நேரா, உள்ளப் போய் வலதுப் பக்கம் திரும்புங்கள், அண்ணன் அலுவலகம் தெரியும் என்றார். ஓர் சிறிய வரவேற்பு அறை. உள்ளே அண்ணன் மற்றொரு அறையில் அமர்ந்து இருந்தார். என்னைக் கண்டதும் மிக உற்சாகம் ஆகி அன்போடு பழ்கினார். அமெரிக்காவில் உங்கள் வீட்டில் உணவு நன்றாக இருந்ததைப் நினைவு கூர்ந்தார். அவ்வளவு தூரத்தில் இருந்து என்னைப் பார்க்க வந்தது மிக்க மகிழ்ச்சி என்றார். என் சித்திப் பையன் சரவணனை அழைத்து சென்றேன். அவனுக்கு மிக மகிழ்ச்சி. அது மட்டும் அல்ல, என் சித்தி பையன் என்னிடம் தமிழ் திரைப்பட உலகில் மற்றும் இலக்கிய வட்டாரத்தில் அண்ணன் மிகப் பெரிய ஆள் என்றும், எல்லோருக்கும் நன்கு உதவுபவர் என்றும் சொன்னான்.

அதாவது பல இளம் கவிஞர்கள் பலர் அண்ணனின் அலுவலத்தில் வந்து போவார்களாம். மிகப் பெரிய திரைப்பட இயக்குனர்கள் அண்ணன் அறிவுமதியிடம் எடுக்கப் போகும் புதியத் திரைப் படத்திற்க்கு 5 அல்லது 6 பாடல்கள் கேட்பார்களாம். ஆனால் அண்ணன் அந்த இயக்குனரிடம் நான் 2 பாடல்கள் அல்லது 1 பாடல் எழதித் தருகிறேன், மற்றப் பாடல்களை இங்கு இருக்கும் இளம் கவிஞர்கள் எழுதித் தருவார்கள் என்பாராம். தமிழ்த் திரை உலகில் ஓரே ஒரு பாடல் எழத எத்தனோயோப் பேர் தவம் கடக்க, ஆனால் அண்ணனோ தனக்கு வந்த வாய்பை பிறருக்கு மனதார விட்டுக் கொடுக்கும் தன்மை என்னைப் பிரமிக்க வைத்தது. எப்படிபட்ட மனம். எவ்வளவு எளிமை. வரும் காலத்தில் அவர் மேன் மேலும் வளர வேண்டும், அதனால் பலரும் வளர வாய்ப்பு ஏற்படும்.

கவிஞர் அப்துல் ரகுமான் ஒருமுறை தன்னுடைய கவிதையில் ,

"எரியும் அழகான தீபத்தைவிட
ஏற்றிவிட்ட தீக்குச்சி பெரிதல்லவா?"
(தீக்குச்சி என்றத் தலைப்பில்) என்றாரே,

அந்த கவிதை கூட அண்ணன் அறிவுமதி போன்றோர்காக எழுதப்பட்டதா என்று நான் நினைத்துப் பார்ப்பது உண்டு.

இப்படிபட்ட எளிமையான, நல்ல உள்ளங்களோடு பழகும் வாய்பை ஏற்படுத்தி கொடுத்த வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவைக்கு என் மனம்மார்ந்த நன்றிகள் பல...

நன்றி
சிவா...
வாசிங்டன்.


Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது