Monday, September 29, 2008

ஹாலிவுட்டைக் கலக்கும் தமிழரின் "Catch Your Mind"




சுவாமி கந்தன் எழுதி, இயக்கி, தயாரித்த “Catch your Mind” என்ற ஹாலிவுட் திரைப்படம் அக்டோபர் 3ல் அமெரிக்கத் திரையரங்குகளில் வெளியாகிறது. அமெரிக்கர்கள் மற்றும் அமெரிக்காவுக்கு அண்மையில் குடியேறிய மக்கள் அனைவர் மத்தியிலும் உள்ள முக்கியமான சமூகப்பிரச்னையை யதார்த்தமாக முன்வைத்து ஒரு அருமையான தீர்வைக் கோடிட்டுக் காட்டும் திரைப்படம். ரோபாட்டிக்ஸ் தொழில்நுட்பத்தை இக்கதையூடே இழைத்து நன்கு பயன்படுத்தும் திரைப்படம்.தமிழகத்தைச் சேர்ந்த சுவாமி கந்தன் தமிழ்த்திரைப்படங்கள் சிலவற்றில் பணியாற்றிய பின் அமெரிக்காவில் குடியேறி நியூயார்க்கில் திரைப்படக் கல்வி பயின்றார். அமெரிக்கத் திரைப்பட நுட்பங்களையும், நுணுக்கங்களையும் முறையாகப் பயின்றபின் ஒரிரு அமெரிக்க ஆவணப்படங்களை இயக்கினார். தற்பொழுது “Catch your Mind” என்ற முழுநீள அமெரிக்கத் திரைப்படத்தை இயக்கி வெளியிடுகிறார். தமிழகத்தில் பிறந்து வளர்ந்து பின்னால் அமெரிக்கா குடியேறிய தமிழர் ஒருவர் அமெரிக்கத் திரைப்படம் ஒன்றை இயக்கியது இதுவே முதல்முறை. அச்சாதனையில் தமிழர்களாகிய நாம் அனைவரும் பங்கு கொள்ள வேண்டும். அக்டோபர் மாதம் 3ஆம் நாள் வெளிவர இருக்கும் இப்படத்தை நமக்கு அருகிலுள்ள திரையரங்கில் சென்று கண்டு களித்துப் பெருமையடைவோம். சுவாமி கந்தனின் இப்ப்டம் வெற்றியடைந்து அவர் மென்மேலும் பல சாதனைகளைக் குவிக்க வேண்டுமென்று வாழ்த்துவோம்!





Show Times
SHOW TIMES

Laurel 6 Cinema 371 Armstrong Ave.Laurel, MD 20707Phone: 301-604-2885
Show times:Fri- 5:15 PM, 7:30 PM, 9:45 PMSat/Sun- 12:45 PM,3:00 PM, 5:15 PM, 7:30 PM, 9:45 PMMon-Thurs- 5:15 PM, 7:30 PM

Worldgate 9 Theatres 13025 Worldgate DriveHerndon, VA 20170Phone: 703-318-9290
Show Times:Fri-Thurs- 12:45 PM,3:00 PM, 5:15 PM, 7:30 PM, 9:45 PM
Movie City 81655 Oak Tree RdEdison, NJ 08820Phone: 732-548-2300
Show times:Fri- 3:00 PM, 5:15 PM, 7:30 PM, 9:45 PMSat/Sun- 12:45 PM,3:00 PM, 5:15 PM, 7:30 PM, 9:45 PMMon-Thurs- 5:15 PM, 7:30 PM, 9:45 PM
Galaxy Peachtree Funplex 8 6135 Peachtree PkwyNorcross, GA 30092Phone: 770-448-7002
Show times:Friday-Saturday - 12:00 2:20 4:40 7:00 9:20 11:40Sunday - 12:00 2:20 4:40 7:00 9:20Monday-Thursday - 2:20 4:40 7:00 9:20
Lake Worth 8 Cinemas 5881 Lake Worth RoadGreenacres, FL 33463Phone: 561-964-5555 show times:Friday-Thursday - 12:00 2:20 4:40 7:00 9:20
Novi Town Center 826085 Town Center DriveNovi, MI 48375Phone: 248-465-7469
Show times:Fri- 5:15 PM, 7:30 PM, 9:45 PMSat/Sun- 12:45 PM,3:00 PM, 5:15 PM, 7:30 PM, 9:45 PMMon-Thurs- 5:15 PM, 7:30 PM
The Legends 14 Theatres1841 Village West ParkwayKansas City , KS 66111Phone: 913-428-2992
Show times:Fri-Thurs-12:45 PM,3:00 PM, 5:15 PM, 7:30 PM, 9:45 PM
FOR IMMEDIATE RELEASE
CONTACT: Swamy KandanWriter, director and producer E-mail: info@sddigitalcreation.comWebsite: www.catchyourmind.com

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Wednesday, September 24, 2008

எஸ் வி சேகரின் நாட்டு பற்று!

நன்றி : குமுதம் எஸ் வி சேகரின் பேட்டியில் இருந்து :-

கட்சி எதிர்பார்த்ததைச் செய்தீர்களா? செய்யத் தவறினீர்களா?'

``கட்சி என்னிடம் எதிர்பார்த்ததை நான் செய்யத் தவறியதாகக் கூறினால் பதிலுக்கு கட்சியும் நான் எதிர்பார்த்ததைச் செய்யத் தவறிவிட்டது என்றுதான் சொல்வேன். நான் அ.தி.மு.க.வில் சேரும்போது அம்மாவிடம், `என் மகள் திருமணத்தை நீங்கள் தலைமையேற்று நடத்திவைக்க வேண்டும், மகனின் படபூஜை தொடக்க விழாவில் கலந்து கொள்ள வேண்டும், எப்போதும் என்னை அரவணைத்துச் செல்ல வேண்டும்' என்று மூன்று கோரிக்கைகளை வைத்தேன். அந்த மூன்று கோரிக்கைகளும் நிறைவேறாமல் போய்விட்டதே.''

மைலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் வி சேகரின் இந்த பேட்டி சென்ற வார குமுதத்தில் வந்தது!

இதில் ஒருவரி கூட மைலாப்பூர் தொகுதிக்கு ஏதுவும் செய்வேன் என்றோ அல்லது அதிமுக கட்சிக்கு விசுவாசமாக இருப்பேன் என்றோ எங்குமே சொல்லவில்லை! மாறாக என் பெண், என் மகன் என்று சொல்லி சீட் வாங்கி இருக்கிறார், இதற்கு ஜெவும் காஞ்சி மடம் சொல்ல சீட் கொடுத்து சாதிப் பற்று இல்லாத மைலாப்பூர் மக்களும் இவரை ஜெயிக்க வைத்து விட்டார்கள்!

இன்ன கொடுமைப்பா இது! இனிமே எஸ் வி சேகர் வெறும் நாடகம் மட்டும் போட வேண்டியதுதான்! அதுவும் இப்பபெல்லாம் கூட்டம் வருகிறதா?!



மயிலாடுதுறை சிவா...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, September 23, 2008

உங்களில் யார் அந்த பிரபு தேவா?!

வாசிங்டன்
செப் 23 2008

விஜய் டிவி எப்பொழுதும் புதுமையாக செய்ய பொதுமக்களிடம் இருந்து தேர்வு செய்து நல்ல கலைஞர்களை நாட்டு மக்களுக்கு தெரியப் படுத்துவது பாராட்ட தக்கது!

தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு, சூப்பர் சிங்கர் அடுத்தாக உங்களில் யார் அந்த பிரபு தேவா என்ற நிகழ்ச்சியை நடத்துகிறது!

பல இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் கலக்கலாக நடனம் ஆடுகிறார்கள். Classical, Western and Folk என்று 3 வகையில் தேர்வு நடைபெறுகிறது.

நடுவர்கள் ஸ்ரீதர், கெளதம் (மேஜர் சுந்தராஜன் மகன்), மற்றும் நடிகை சாயாசிங்.

ஸ்ரீதர் மாஸ்டர், கொஞ்சம் கூட நாகரீகம் இல்லாமல் எல்லோரையும் சகட்டு மேனிக்கு வா போ என்கிறார். You are Rejected என்று முகத்தில் அடித்தார் போல் சொல்லுவது நாகரீகமாக இல்லை! இவரிடம் ஓர் பண்பும், மரியாதையும் அடக்கமும் இல்லை! இதில் ஓர் நபர் நன்றாக நடனம் ஆடவில்லை, அவரிடம் இவர், rejected rejected rejected என்று சொல்லி அவரை வெளியே அனுப்பிவிட்டார்!

கெளதம் - இவர் ஒரு குடிகாரர் போல்தான் எப்பொழுதும் பேசுவார். இவர் மனதிற்குள் இவர் பெரிய நடன கலைஞன் என்ற நினைப்பு! இவரும் எல்லோரையும் ரொம்ப கேவலமாக பேசுவார்! யாராவது நல்லா Classical ஆடினால் உடனே Western தெரியுமா? என்பார் அல்லது Folk தெரியுமா? என்பார்! இந்த நிகழ்ச்சியில் சந்தோஷ் என்று ஒர் நபர் நன்கு ஆடவில்லை! அவரை Rejected என்று சொல்லிவிட்டு, சந்தோஷமாக வெளியே போய்விடுங்கள் என்கிறார்!

மொத்ததில் இந்த இருவரிடமும் ஒர் அடக்கம், மரியாதை, பண்பு இல்லை!

விஜய் டிவி இதனை இன்னும் கொஞ்சம் தரமானதாக தயாரித்து இருக்கலாம்.

Classical நடனத்தை இந்த நிகழ்ச்சியில் சேர்க்காமல் இருந்து இருக்கலாம்.


இந்த நிகழ்சிக்கு சில வழிமுறைகளை சொல்லி இருக்கலாம்!

நடுவர்களை வேறு யாரையாவது தேர்ந்து எடுத்து இருக்காலம், அல்லது இந்த தெண்ட நடுவர்களுக்கு முறையான ஆலோசனைகள் கூறி இருக்கலாம்!

எல்லாவற்றிக்கும் மேலாக அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ரம்யா தொல்லைதாங்க முடியவில்லை! நிகழ்ச்சியை கொல்லுது அந்த பொண்ணு!

எத்தனையோ நடுவர்களை நான் பார்த்தாலும் என் மனம் கவர்ந்த நடுவர் மால்குடி சுபா! இவர் சூப்பர் சிங்கரில் சூப்பரான நடுவர்! ரொம்ப அன்பாக, பண்பாக பழகுகிறார். மறந்தும் கூட யாரையும் மனம் நோகும் படி பேச மாட்டார். நன்றாக பாடவில்லை என்றால் நல்ல தரமான ஆலோசனைகள் கூறி விட்டு, I think you will not be in the journey now, I am sure we will count on you for next year! என்று கலக்கலாக சொல்லுகிறார்!

இந்த தெண்ட ஸ்ரீதரும், குடிகாரர் போல் பேசும் கெளதமும் மால்குடி சுபாவின் அணுகுமுறையை பார்த்து தங்களை திருத்தி கொண்டால் நலம்!

விஜய் டிவியின் Creative Head இவற்றையெல்லாம் சீர்

அமைத்தால் நிகழ்ச்சிகள் இன்னும் சிறப்பாக இருக்கும்!

நன்றி
மயிலாடுதுறை சிவா...





Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Wednesday, September 17, 2008

தந்தைப் பெரியாருக்கு முதல் வணக்கம்



சமுதாயத் தொண்டு, பெண் விடுதலை, பகுத்தறிவு,
கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு இப்படி எத்தனை எத்தனை
போராட்டம் உன் வாழ்நாள் முழுக்க!

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்ற உன்
கனவை நிறை வேற்றிய முத்தமிழ் அறிஞர் கலைஞருக்கும்
இந்த நேரத்தில் நன்றி தெரிவிப்போம்!

மரபு என்னும் கரைக்குள் கட்டுபட்டு ஓடக்கூடிய நதி அல்ல நீ!
மரபுகளை உடைத்து காட்டாற்று வெள்ளமாய் ஓடிய நதி நீ!

தமிழ் இனம் வாழ, உன் வாழ்நாள் முழுவதும் போராடிய அய்யா
உன்னை வாழ்த்த வயதில்லை! என்றும் போற்றுவோம் உன் பெயரை!

மயிலாடுதுறை சிவா...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது