Friday, April 30, 2010

ஆங்கில படம் - Taking Chance

ஆங்கில படம் - Taking Chance

வாசிங்டன் ஏப்ரல் 2010

"அங்காடித் தெரு" விற்கு பிறகு மீண்டும் ஒரு மனம் பாதித்த படத்தை உங்களோடு பகிர்ந்துக் கொள்ள வேண்டும். படத்தின் பெயர் "Taking Chance" - Chance என்பது இராணுவ வீரரின் பெயர்.

எப்படி இப்படி வெள்ளைக்கார இயக்குனர்களுக்கு புதுவிதமான கதை களம் கிடைத்து இருக்கிறது என்றுநான் அடிக்கடி நினைப்பது உண்டு. அதுவும் குறிப்பாக இந்த படத்தின் கரு, உண்மை கதையை அடிப்படையாக கொண்டது.
கதையின் நாயகன் எனக்கு மிக மிக பிடித்த Kevin Bacon. இந்த படத்தில் நீண்ட அனுபவம் உள்ள இராணுவ உயர் அதிகாரியாக நடித்து இருப்பார். இவருக்கு வசனங்கள் மிக மிக குறைவு. ஈராக் போரில் உயிரை இழந்த ஒரு இளைஞனின் உடலை திரும்ப அவனது சொந்த ஊருக்கே மீண்டும் அழைத்து வரும் பணியை ஏற்று கொள்ளும் பாத்திரம் Kevin னுக்கு.

Kevin இராணுவ அலுவலகத்தில் வேலைப் பார்க்கும் அதிகாரி. அவரால் போர் களத்திற்கு சென்று போராடும் வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் அடிக்கடி குற்றஉணர்வுடன் இருப்பார். இரவு வேளைகளில் கணனி முன் அமர்ந்து போர் நிலவரங்களை பார்க்கும் பொழுது, அவருடைய சொந்த ஊரை சார்ந்த Phelps Chance என்ற 19 வயது இராணுவ வீரன் இறந்த உடலை ஊருக்கு கொண்டு வர தனது மேல் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று அந்த உடலை பெற்று வர Dovar பிண கிடங்கிற்கு செல்வார் Kevin.

இராணுவ பிணகிடங்கிற்கு சென்ற பிறகுதான் தெரியும் Chance ன் சொந்த ஊர் Clifton, Colorada அல்ல என்றும், Chance ன் உடலை Dubois, Wyoming எடுத்து செல்ல வேண்டும் என்பதும். Kevin க்கு இறந்த இராணுவ வீரனைப் பற்றி எதுவும் தெரியாது. மரியாதையின் காரணமாக எடுத்து கொண்ட கடமையை செவ்வேனே செய்யும் இந்த பாத்திர படைப்பே Kevin Becon.

இராணுவத்தில் ஒரு வீரன் இறந்துவிட்டால் அவனுடைய உடம்பை எப்படி பேணி காக்கிறார்கள் என்பதை நினைக்கும் பொழுது, அமெரிக்கா இராணுவத்தின் மீது மிகுந்த மரியாதை ஏற்படுகிறது. இராணுவ பிண கிடங்கில் Kevin சென்று Chance ன் உடலை பெற்று கொள்ள வந்து இருக்கிறேன், இன்று கிடைக்குமா என்று கேட்க, அங்குள்ள ஒரு பெண் அதிகாரி, Chance ன் உடல் நாளைதான் தயார் ஆகும் என்று சொல்லுகிறாள். அதற்கு காரணம் பல கடுமையான, அருமையான, நேர்த்தியான பணி உள்ளது அந்த உடலை அலங்கரிக்க. இறந்த இராணுவ வீரரின் உடலை குளிக்க வைத்து, இராணுவ வீரர் போல அலங்கரித்து, அவரது சீருடை, அவரது பட்டயங்கள், அவரது காலணிகள் மிக அருமையாக அலங்கரிக்கப் பட்டு, அந்த இராணுவ வீரர் உபயோக படுத்திய போர் சம்மந்தமான செயின்கள், பட்டயங்கள், அவருடைய கை கடிகாரம் எல்லாம் சுத்தப் படுத்தப் பட்டு, Kevin னிடம் ஒப்படைக்கும் பொழுது, அந்த பெண் அதிகாரி, இந்த உடலை பொது மக்கள் பார்வைக்கு அனுமதி இல்லை என்றும், பொது மக்கள் இந்த உடல் உள்ளே வைக்கப் பட்ட அலங்கரிக்கப் பட்ட இராணுவ பெட்டியை மட்டுமே பார்க்க இயலும் என்று சொல்லி கொடுக்கிறாள். Kevin அந்த உடலை பொதுமக்களின் பார்வைக்கு முன்பு அவர் தனியாக அந்த உடலை பெட்டியில் பார்க்கும் பொழுது. அந்த நேர்த்தியான அலங்கரிப்பை பார்த்து கண்கலங்கும் காட்சி மனதை வருடுகிறது.

மிகுந்த மரியாதையுடன் அந்த உடலைப் பெற்றுக் கொண்டு Kevin, இராணுவ வீரரின் சொந்த ஊர் Dubois, Wyoming விமானத்தில் எடுத்து செல்லுகிறான். விமானம் ஏறும் பொழுது பயணசீட்டு கொடுக்கும் அதிகாரி, Kevin னிடம், First Class upgrade செய்து கொடுத்து விட்டு, we are proud of your service என்று வாழ்த்தி அனுப்பகிறாள்.

அந்த விமானம் நேரிடையாக செல்ல முடியாது, மற்றோரு விமானத்தை பிடித்து செல்லும் பொழுது, இரவு முழுவதும் இராணுவ வீரர் உடல் வைக்கப் பட்ட பெட்டியுடன் Kevin இருக்கும் காட்சி, விமானத்தில் இவருக்கு பணி பெண், சிலுவையில் ஏசு உள்ள ஒரு சிறிய அன்பளிப்பை கொடுப்பது, விமானத்தை ஓட்டி செல்லும் கேப்டன், Kevin, நமது நாட்டிற்காக போரில் உயிரைஇழந்த இராணுவ வீரருக்கு மரியாதை செலுத்தும் விதம் அதன் உடனே வருவதால், அவருக்கு முதலில் வழி விடுங்கள் என்று சொல்வது, முதல் விமானத்தில் இருந்து மற்றோரு விமானத்தில் உடலை ஏற்றும் பொழுது அங்குள்ள அனைத்து ஊழியர்களும் இராணுவ வீரரின் உடலுக்கு மரியாதை செலுத்துவது எல்லாம் உங்கள் கண்களில் நீரை வரவழைக்கும் காட்சிகள்!

எனக்கு மிக மிக பிடித்த காட்சி, விமானத்தில் இருந்து உடலைப் பெற்றுக் கொண்டு Dubois, Wyoming காரில் கிட்டதட்ட 5 மணி நேரம் பயணம். அந்த ஊரை நெருக்கும் பொழுது மிகப் பெரிய நீண்ட சாலையில் இந்த உடலுடன் பின்னால் Kevin காரில் செல்லுவதை பார்த்து பெரிய லாரிகள், சக கார் பயணிகள் வரிசையாக Kevin ன் காரை பின் தொடர்ந்து காரில் உள்ள விளக்குகளுடன் அந்த இராணுவ வீரரின் உடலுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அந்த காரின் பின்னால் அணி வகுக்கும் காட்சி மிக அருமையாக படம் ஆக்க பட்டு இருக்கும்.

Dubois, Wyoming ஊரில் உள்ள பலரும் Kevin ஐ மனதார பாராட்டுவார்கள். அமெரிக்க அரசாங்கம் கொடுக்கும் கொடிகளை பெற்றோருடன் ஒப்படைப்பார் Kevin. Chanceன் பெற்றோர் மணவிலக்கு அடைந்தவர்கள் ஆதலால், இரண்டு பெற்றோர்களுக்கும் அமெரிக்க கொடி கொடுக்கப் படும். மிகச் சிறிய வயதில் நாட்டிற்காக உயிரை இழந்த முன் பின் தெரியாத சக இராணுவ வீரனுக்கு, Kevin போன்ற அதிகாரிகள் உடன் சென்று உடலைப் பெற்றுக் கொண்டு அதனை பெற்றோரிடம் ஒப்படைக்கும் பொறுப்பை, மிக அழகாக, அருமையாக, எல்லோர் மனதிலும் பதியம் வண்ணம் படம் ஆக்கி இருக்கிறார் இயக்குனர் Ross Katz.

இது உண்மை கதையின் அடிப்படையில் எடுக்கப் பட்டது. Chance Phelps என்பது உண்மையாக போரில் இறந்த வீரரின் பெயர். சேவைகளில் பலவிதம் இருந்தாலும், Kevin போன்ற ஒரு இராணுவ வீரன், மிக நீண்ட அனுபவம் கொண்ட வீரன், போரில் இறந்த வீரரை அழைத்து வருவதில் உள்ள மனப் போரட்டதை, மன அழுத்ததை நன்கு உள்வாங்கி, அந்த உடலுக்கு மரியாதை செலுத்தும் விதத்தை மிக அருமையாக நடித்து இருக்கிறார். இது எப்படி ஆஸ்காருக்கு வராமல் போனது என்று எனக்கு பெருத்த சந்தேகம்.
போரில் இறந்த இராணுவ வீரனுக்கு, அவன் இழந்த வாழ்க்கைக்கு பிறகும், அவனுக்கான மரியாதை, கெளரவம், அங்கீகாரம், எப்படி பொது மக்களாலும், ஊர் மக்களாலும் வழங்கப் படுகிறது என்பதையும், அவனுடைய உடலுக்கு அவர்கள் செய்யும் மரியாதை, அவர்களுடைய நேர்த்தியில் தெரிய வருகிறது இந்த திரைப் படம் மூலம். அவனுடைய உடல் ஓவ்வோரு முறை ஏற்றும் பொழுது அவர்கள் சல்யூட் அடித்து மரியாதை செய்யும் விதம், அவனுடைய உடலில் அணிய பட்ட நேர்த்தியான சீருடை மற்றும் கால்சட்டை மடிப்பு கலையாமல் அயர்ண் செய்த விதம் எல்லாம் அவர்கள் அந்த வீரனுக்கு மரியாதை கொடுக்கும்விதம் தெரிகிறது.

அவசியம் இந்த படத்தை பார்க்க வேண்டுகிறேன். புதிய கதை களம். உண்மை கதையும் கூட. இறப்பிற்கும் பின்னால் இப்படி ஒரு மென்மையான மனதை தொடும் நிகழ்ச்சிகள் இருக்கின்றன என்பதை காட்சிகளால் படைத்த விதம் மிக மிக அருமை!

இந்த படத்தை எனக்கு பரிந்துரை செய்த எனது அன்பு சகோதர் கலாநிதிக்கு நன்றிகள் பல.....

மயிலாடுதுறை சிவா...







Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது