Thursday, October 16, 2008

ஈழ மக்களுக்கு ஆதரவு தெரிவித்து இராமேஸ்வரம் செல்லும் கலைஞர்களுக்கு வாழ்த்துகள்!

வாசிங்டன் 16 2008

வரும் அக்டோபர் 19ந் தேதி ஞாயிறு அன்று நடக்கவிருக்கும் பேரணி மற்றும் பொது கூட்டத்திற்கு செல்லும் அனைத்து தமிழ் உணர்வுள்ள நடிகை நடிகையர்களுக்கு மனப் பூர்வமான வாழ்த்துகளைதெரிவிப்போம்!

அதற்கான ஏற்பட்டுகளை செய்துவரும் தயாரிப்பாள சங்கத் தலைவர் இராம நாராயணன் மற்றும் இயக்குனர் பாரதிராஜாவிற்கும் உலகத் தமிழர்கள் சார்பாக வாழ்த்துகளை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.

பேரணியில் கலந்து கொள்ளவிருக்கும் கலைஞர்களுக்கு தங்கும் வசதி, உணவு, பிரயாண ஏற்பாடுகள்முறையாக நடந்துவருவதும் பாராட்டுக்குரியது!
தொப்புள்கொடி உறவுள்ள நம் சகோதர சகோதிரிகள் படும் அவலுங்களுக்கும், அவர்களுக்கு நிரந்தர தீர்வை நோக்கியும் நம் என்றும் நம் ஆதரவை தெரிவிக்க கடமை பட்டுள்ளோம்!


இந்த கண்டன பேரணி கூட்டத்தில் கலந்து கொள்வது சாத்தியமா என்று நடிகர்கள் கூட்டத்தில் விவாதிக்கப் பட்டது மிக மிக வருத்தமான விசயம்! நடிகை நடிகர்கள் இதனை உணர்வு பூர்வமாகஅணுகாமல், இவர்கள் ஏதோ வேற்று கிரகவாசிகள் போல் நடந்து கொள்வது கண்டிக்க தக்கது!

நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் - ஈழ மக்களுக்கு என்றுமே ஆதரவானவர். அவர் தலைமை பதவியில் இருப்பவர். சக கலைஞர்களை அவர் இராமேஸ்வரம் சென்று வர அவர் கட்டளை இட்டு இருக்க வேண்டும்! இவர்கள் தனியாக நவம்பர் 1ந் தேதி மற்றொரு உண்ணாவிரதம் அறிவித்து இருப்பது தேவையில்லாத ஒன்று! இராமேஸ்வரம் செல்லும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் அனைவரும் தமிழ் உணர்வாளர்கள் போலும், போகாதவர்கள் உணர்வாளர்கள் இல்லை என்ற ஓர் தோற்றம் ஏற்பட்டுவிடும்!வேண்டாம் இந்த குழப்பம்!

தமிழர்களின் ஒற்றுமையே ஈழ மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி! பொதுவான பிரச்சினைகளில் நாம் ஒற்றுமையாக இருப்பது எதிரிகளுக்கு அதிர்ச்சியாக இருக்க வேண்டும்!

ஈழ மக்கள் பிரச்சினைகளில் தொடந்து குரல் கொடுத்துவரும் இயக்குனர் பாரதிராஜா மற்றும் சககலைஞர்கள் அனைவருக்கும் உலகத் தமிழர்கள் சார்பில் பாராட்டுகள் பல....

நன்றி
மயிலாடுதுறை சிவா...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Wednesday, October 08, 2008

அமெரிக்காவின் நிறப்பற்று!!!

வாசிங்டன் அக் 08 2008

போனவாரம் நான் வருகின்ற அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு ஓபாமா வெற்றி பெற எனது அருகில் உள்ளஇல்லங்களுக்கு சென்று வாக்கு சேகரித்த விதத்தை எழுதியிருந்தேன். அதில் சில நண்பர்கள் மற்றும் வலைப்பூ மக்கள் நான் அவசரப் பட்டுவிட்டதாகவும், நான் நிற வெறி என்று எழுதியது தவறு என்று சுட்டி காட்டினார்கள். மகிழ்ச்சி!

நான் என்னுடைய அனுபவத்தைதான் அதில் பதிய வைத்தேன். வெள்ளைக் காரர்கள் மனோபாவம் எப்படி இருந்தது என்று நான் கண்ணால் நேரில் கண்டதை அதில் சொன்னேன், மற்றப்படி இதுதான் சரி என்று சொல்லவில்லை!

அமெரிக்காவில் நிறவெறி என்று சொன்னது 50% தவறு என்று வைத்துக் கொண்டாலும், இங்குள்ள மக்களிடம்எப்படி நிறப்பற்று உள்ளது என்று சிலவற்றை கோடிட்டு காட்ட விரும்புகிறேன்.

* நான் வாக்குகள் சேகரிக்க சென்ற பொழுது என் சட்டையில் ஓபாமா பேட்ஜை பார்த்த பொழுது ஓரு சில வெள்ளைகாரர்கள் கதவை சாத்திக் கொண்டார்கள். இதில் துளிக்கூட பொய் இல்லை!

* என்னைக் கண்டு கதவை சாத்திக் கொண்டார்கள் என்று சொல்லவில்லை! அதாவது நான் ஓபாமா ஆதரவாளன் என்று தெரிந்த காரணத்தாலும், நான் வைத்து இருந்த ஓபாமா சுவர் விளம்பரங்களை பார்த்தவுடன் அதனை நாகரீகமாக மறுக்காமல் அவர்களுடைய அணுகுமுறையில் அவர்கள் ஓபாமாவை ஏற்க மறுக்கிறார்கள் என்பதை உணர முடிந்தது!

* கடந்த ஒரு ஆண்டுகளில் எனக்கு தெரிந்து அல்லது அலுவலகத்தில் அல்லது வேறு இடங்களில் வெள்ளைக் காரர் வெளிப் படையாக ஓபாமாவை ஆதரித்துப் பார்க்கவில்லை!

* இப்படி அமெரிக்க பொருளாதரம் ஏராளமான சரிவை சந்தித்த பொழுதும் வெள்ளைகாரர்கள் கண்மூடிதனமாக ஜான் மெக்கயனை ஆதரிக்க என்ன காரணம்? குறிப்பாக வயதான வெள்ளைக் காரர்கள் ஏன் ஓபாமாவை ஆதரிக்க மறுக்கிறார்கள்?

* ஓபாமாவை வரவிடாமல் தடுக்க அவர் கறுப்பர் என்றாலும் பரவாயில்லை, அவரை இஸ்லாம் என்றும் தீவிரவாத தொடர்புகள் கொண்டர் என்றும் சித்தரிக்க முயற்சிப்பதன் பின்புலம் என்ன?

* அமெரிக்க தேவாலயங்களில் வெள்ளைக்கார பாதிரியார்கள், ஜான் மெக்கயனுக்கும் ஓட்டளியுங்கள் என்று சொல்லாமல் சொல்வதன் காரணம் என்ன?

* கடந்த 10 ஆண்டுகளில் நிறைய கறுப்பு இளைஞர்கள் வெள்ளைக்கார பெண்களுடன் சுற்றுவதை அல்லது காதலிப்பதை நான் பார்த்து இருக்கிறேன், ஆனால் ஒரு வெள்ளைக் கார இளைஞன் கறுப்பு பெண்ணுடன் சுற்றுவதை அல்லது காதலிப்பதை நான் பார்த்தது மிக மிக குறைவு!

* நான் வேலைப் பார்க்கின்ற நிறுவனத்தில் முடிவுகள் எடுகின்ற அதிகாரத்தில் கறுப்பர்கள் இல்லை!

* கடந்த 10 ஆண்டுகளில் நான் பார்த்த தினக் கூலி வேலைகளில் நிறைய கறுப்பர்கள் இருக்கிறார்கள். எடுத்து காட்டாக பேருந்து ஓட்டுனர், புகை வண்டி ஓட்டுனர், தபால் அலுவலகத்தில், நிறைய ஷாப்பிங் மால்களில் துப்பரவு தொழிலாளியாக இப்படி பல. சிறிய வேலைகளில் கறுப்பர்கள்! மிகப் பெரிய அதிகார பதவிகளில் வெள்ளைக்கார மக்கள்!

* எல்லாவற்றிக்கும் மேலாக நடந்து முடிந்த இரண்டு கலந்துரையாடலில் (Debate) ஜான் மெக்கயன் ஓபாமாவை நேரிடையாக பார்த்து பேசவேயில்லை! கண்களை பார்க்கவே இல்லை! வெள்ளைக் காரன் என்ற திமிரா? ஓபாமா என்ன தீண்ட தகாதவாரா?

முடிவாக அமெரிக்காவில் நிறவெறி இல்லாமல் இருக்கலாம், ஆனால் நிறையவே நிறப்பற்று உள்ளது என்பது என் பார்வை அதில் உண்மை இருப்பதாகவே நம்புகிறேன்....

ஓபாமா வெல்லட்டும்!
உலகச் சரித்தரத்தில் ஓர் புதிய அத்தியாயம் எழதப் பட வேண்டும்!
மார்டின் லூதர் கிங்கின் கனவு நிறைவேறட்டும்....!!!

நன்றி
மயிலாடுதுறை சிவா...


Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, October 06, 2008

ஓபாமாவிற்காக ஓர் நாள்!


ஓபாமாவிற்காக ஓர் நாள்!

வாசிங்டன், அக் 05 2008


அமெரிக்க குடியுரிமை வாங்கி கிட்டதட்ட ஓரு ஆண்டு ஆகிவிட்டது. சென்ற வாரம் சென்று எனதுபெயரை விர்ஜினியா மாநிலத்தில் பதிவு செய்துவிட்டு வந்தேன். நமது பெயரை பதியும் பொழுதே நீங்கள் ஜனநாயக கட்சி ஆதரவாளரா? அல்லது குடியரசு கட்சி அல்லது தனிக்கட்சியா என்று பதியவைத்து கொள்ளலாம். அதன் தொடர்ச்சியாக வார இறுதியில் ஜனநாயக கட்சி ஓபாமா தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துக் கொண்டேன்.

சனி மற்றும் ஞாயிறு நாட்களில் கிட்டதட்ட 4 மணி நேரம் முதல் 8 மணி நேரம்வரை தன்னார்வமாகஎந்த தேர்தல் பிரச்சாரத்திலும் கலந்துக் கொள்ளலாம். நான் ஞாயிறு மாலை எனது வீட்டருகே உள்ள இடத்திற்கு சென்றேன். கொஞ்ச கொஞ்சமாக கிட்டதட்ட 20 பேர் வந்து இருந்தார்கள். வீடு வீடாக சென்று எப்படி அணுகி ஓட்டை சேகரிக்க வேண்டும் என்று ஓர் 10 நிமிடம் சொல்லி கொடுத்தார்கள். எங்கள் பகுதியில் வாழும் வாக்காளர்கள் விவரத்தை கொடுத்துவிட்டார்கள். அந்த குழுவில் ஏற்கனவே அனுபவம் உள்ள ஓர் நபருடன் நான் சேர்ந்து கொண்டேன்.

இங்குதான் இந்த அமெரிக்கா வாழ்க்கையில் புதிய அனுபவத்தை சேகரித்தேன். அதனை தமிழ்மண வாசகர்களிடம் பகிர்ந்துக் கொள்ள ரொம்ப ஆர்வமாக இதனை இங்கு பதிய வைக்கிறேன்.

என்னுடன் பிரச்சாரத்திற்கு வந்த பெண்மணி வெள்ளைக் காரர். அவருக்கு வயது கிட்டதட்ட 55. ஆனால் 45 வயதுஎன்றுதான் சொல்ல முடியும். அவர் கடந்த ஓரு மாதமாக ஒபாமாவிற்காக வாக்குகள் சேகரித்து வருகிறார். அவரோடு சேர்ந்து கொண்டேன் நானும்.

கிட்டதட்ட 60 வீடுகள் வரை ஒவ்வோரு வீடாக சென்றோம். நான் வசிக்கும் இடத்தில் பெரும்பாலான வீடுகள் வெள்ளைக் காரர்கள் வாழும் பகுதி! எனது பகுதியில் நிறைய இந்தியர்கள் இருக்கிறார்கள் என்று எனக்கு தெரிந்தாலும், நான் சந்தித்த அனைவரும் அமெரிக்கர்களே!

முதல் வீட்டு அனுபவமே புதிதாக இருந்தது. வாசலில் உள்ள தோட்டத்தில் அந்த வெள்ளைகாரர் வேலைச் செய்துக் கொண்டு இருந்தார், அவருடன் அவரது அப்பாவும். எனது அணி நண்பர் அவர்களிடம் மிக மிகஅன்பாக அறிமுக படுத்திக் கொண்டு தாங்கள் வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஓபாமாவிற்கு ஓட்டு அளிக்க இயலூமா? என்று வினவினார். அதற்கு அவர்கள் நாங்கள் ஜான் மெக்கெய்னுக்கு என்றார்கள், நாங்கள் நன்றி சொல்லி விட்டு அடுத்த வீடு சென்றடைந்தோம்!

அடுத்த வீட்டில் யாரும் இல்லை, சில சமயம் உள்ளே இருந்துக் கொண்டு கதவை திறக்க மாட்டார்கள்! இந்த அனுபங்களை தொகுத்து கொடுத்துவிடுகிறேன்!

* கிட்டதட்ட 60 வீடுகள் வரை சென்றோம். அதாவது 5 அல்லது 6 தெருக்கள்.

* 90% சதவீத இல்லங்களில் நாய்கள் வைத்து உள்ளார்கள். சில வீடுகளில் பூனைகள் இருந்தன.

* ஓபாமாவிற்கு ஆதரவு திரட்ட வந்த இடத்தில் நாய்கள் கடித்துவிடுமோ என்ற பயம் சிறிது இருந்தது!

* மனம் வருத்தமான விசயம் கிட்டதட்ட 95% மக்கள் ஜான் மெக்கெய்னுக்குதான் வாக்கு அளிப்போம் என்றார்கள்.

* நான் சந்தித்த வெள்ளைக் காரர்கள் பலர் (கிட்டதட்ட 50% சதவீதம்) ரொம்ப திமிராக நடந்துக் கொண்டார்கள்

* இத்தனைக்கும் என் உடன் வந்த நபர் ஓர் வெள்ளைக் கார பெண்மணிதான்!

* சில வீடுகளில் நாங்கள் ஓபாமா ஆதராளவர்கள், அதன் ஓட்டை சேகரிக்க வருவதாக சொன்னதும் கதவை மிக வேகமாக சாத்திக் கொண்டார்கள்! துளிக் கூட நாகரீகம் இல்லாமல்!

* நாங்கள் வியாபாரம் (சேல்ஸ்) விசயமாக வரவில்லை என்று சில சமயம் சொல்ல வேண்டி இருந்தது!

* திரைப் படத்தில் காண்பிப்பதைப் போல ஓர் பெரிய சுருட்டு ஒருவர் பிடித்துக் கொண்டு இருந்தார்! அவரும் தீவரமான ஜான் மெக்கெய்ன் ஆதரவாளர் என்றார்!

* ஒரு இந்திய குடும்பம், எங்களிடம் பேச விருப்பம் இல்லை என்றார் அவர்கள் மகள் எங்களிடம் "ஓபாமா ஆதரவாளர்கள்" என்றார்.

ஓரே ஒரு வீட்டில் ஓர் வெள்ளைக் கார பெண்மணியும் பக்கத்து வீட்டில் ஓர் வெள்ளைக் கார நபரும் எங்களிடம்மிக ஆர்வமாக எங்கள் ஓட்டு ஓபாமாவிற்குதான் என்றார்கள். அவர்களுக்கு ஈராக் போர் பிடிக்கவில்லை என்றும்இந்த அமெரிக்க பொருளதாரம் மாற வேண்டும் என்று ஆசைப் படுவதாக சொன்னார்கள். அவர்கள் வீட்டு வாசலில்ஓபாமா ஆதரவு சின்னம் வைக்க எங்களிடம் 'விளம்பர பலகை' கேட்டார்கள்! மனம் சற்று ஆறுதல் அடைந்தது!


* என் உடன் வந்த பெண்மணி மிகத் தீவரமான ஓபாமா ஆதரவாளர்!

* அவர் கடந்த ஒருமாதமாக வாக்குகள் சேகரித்து வந்தாலும் அவர் சந்தித்த 30% மக்கள் ஓபாமாவிற்கு என்று சொன்னார்களாம்!* நிறைய கறுப்பு இன மக்கள் ஓபாமாவை ஆதரிக்கிறார்கள், ஆனால் வெளிப் படையாக சொல்ல மறுக்கிறார்கள்.

* சில வீடுகளில் நாங்கள் கேள்வி கேட்ட பொழுது This is Personal Question! I refuse to answer! என்றார்கள்! அவர்கள் அனைவரும் கிட்டதட்ட ஜான் மெக்கெய்ன் ஆதர்வாளர்கள் என்று தெரிந்தது!

நான் என்னவோ நம்ம ஊர் போல, என்னை தாயார் படுத்திக் கொண்டு,

உங்கள் பொன்னான மணியான வாக்குகளை அண்ணன் ஓபாமாவிற்கு போடுங்கள் என்றும்,

கறுப்பின மக்களின் அடையாளம் அண்ணன் ஒபாமாவை மறுந்து விடாதீர்கள் என்றும்,

உலக சரித்தரத்தின் ஓர் புதிய அத்தியாயம் காத்து கிடக்கிறது என்றும்,

அமெரிக்கா பொருளாதரத்தின் விடி வெள்ளி அண்ணன் ஓபாமா என்றும்,

ஜனநாயக கட்சியின் போர் வாள், கறுப்பு வைரம்,

என்று பலவாறு என்னை தயார் படுத்திக் கொண்டு போனால் நொந்து நூலாகிப் போனேன் என்பதுதான் உண்மை! இந்த ஒருநாள் அனுபவத்தில் அமெரிக்காவில் இன்னமும் நிறவெறி இருக்கிறது என்ற ஓரளவு உணர முடிகிறது! இதனை சில நண்பர்களும், சில உறவினர்களும் ஏற்க மறுக்கிறார்கள். நான் அனுபவ பூர்வமாக உணர்ந்தேன்! நான் வேறு சற்று கருப்பாக இருப்பேன் (என்னை எனது அப்பா மாநிறம் என்பார்கள்!) என்னை சில வெள்ளைக்கார்கள் ஏதோ என்னை ஒர் வித்தியாசமாக பார்த்தார்கள்! அதுதான் உண்மை! நல்லவேளை, நான் ஓர்வெள்ளைக் கார பெண்மணியோடு ஓட்டு சேகரிக்க போனேன்! இல்லாவிட்டால் இன்னமும் நிலமை மோசமாகஇருந்து இருக்கும்!

ஓர் ஆங்கில்ப் படத்தில் Denzil Washington தந்தையாக நடிப்பவர் சொல்வார்
"This country is legally united, but emotionally segregated!" என்பார் அது உண்மையோ என்று தோணுகிறது!

அமெரிக்க பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்த பிறகும்,
பெட்ரோல் விலை $4 விற்ற பிறகும்,
வீடுகள் மளமளவென்று விலைகள் இறங்கிய பிறகும்,
ஈராக் போரில் கோடி கோடியாக டாலர்கள் செலவு செய்த பொழுதும்,
ஜார்ஜ் புஷ் கடந்த 8 ஆண்டுகள் சொதப்பிய பொழுதும்,

இந்த அமெரிக்க மக்கள் குடியரசு கட்சி ஜான் மெக்கயனை ஆதரிகிறார்கள் என்றால் எப்படி இந்த மக்களை கணிப்பது?!

God Bless America!

நன்றி
மயிலாடுதுறை சிவா...Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது