Thursday, July 20, 2006

மத்திய அமைச்சர் அன்புமணியின் மறுப்பக்கம்....

வாசிங்டன்.
மத்திய அமைச்சர் அன்பு மணியைப் பற்றி நமக்கு என்ன தெரியும்? அவருடைய கட்சியில் அவரை "சின்ன அய்யா" என்று கூறுவார்கள். ராஜ்ய சபா உறுப்பினராகி அமைச்சர் ஆனவர், பசுமை தாயகம் என்ற அமைப்பை வைத்து இருப்பவர் என்று தானே நமக்குபரிச்சயம், ஆனால் எல்லா வற்றிக்கும் மேலாக அவர் சுகாதரத் துறைக்கு முழு தகுதியான மந்திரி என்பதும், இதற்கு முன்னாள் இருந்த எந்த சுகாதரத் துறை மந்திரியை விட அவருக்கு பல மடங்கு விசயம் தெரியும் என்பதை அவரின் அமெரிக்க சுற்றுப் பயணத்தின் பொழுது தெரிந்து கொண்டது உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.

கடந்த 3 வாரங்களில் நடந்த சுவையான பல சம்பவங்களை உங்களுக்கு தெரியப் படுத்துவது என் கடமை. காரணம் நம் தமிழ் பத்திரிக்கைகள் நம் தமிழரின் பெருமைகளை சாதிக்கு அப்பாற்பட்டு, மதத்திற்கு அப்பாற்பட்டு, அரசியலுக்கு அப்பாற்பட்டு கடைக் கொடியில் உள்ள தமிழனுக்கு செய்திகளை தருவது இல்லை. தமிழ்நாட்டில் உள்ள மயிலாடுதுறை அருகே உள்ள பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் உள்ள ஓர் சாராசரி மீன் பிடிக்கும் ஓர் தொழிலாளி மத்திய அமைச்சர் அன்பு மணியின் செயல் பாடுகளை தெரிந்து கொள்ள ஆசைப் பட்டால் அவனுக்கு தெரிய படுத்துவது நம் தமிழ்ப் பத்திரிக்கைகளின் கடமை.

அமெரிக்கா முதல் நிகழ்ச்சி - மேரிலாந்து - John Hopkins University
====================================================

மூன்று வாரங்களுக்கு முன்பு

அமைச்சர் அன்புமணி John Hopkins University School of Medicineல்ஓர் கருத்து அரங்கிற்கு வந்து இருந்து, இந்தியாவில் எயிட்ஸ் விழிப்புணர்வுப் பற்றி பேசினார். கிட்டதட்ட 45 நிமிடங்கள் அழகு ஆங்கிலத்தில், தெளிவாக, அமைதியாக எந்த ஓர் ஆர்பாட்டம் இல்லாமலும் உரையாற்றினார். அதாவது தமிழகத்தில் இருந்து வந்த ஓர் மத்திய அமைச்சர் அழகு ஆங்கிலத்தில் எல்லோருக்கும் புரியும் வண்ணம், மத்திய அமைச்சர் சிதம்பரத்திற்குப் பிறகு இவரைத்தான் நான் பார்க்கிறேன். அவருடைய பேச்சின் பொழுது ஒரு முறை கூட எந்த குறிப்புகளையும் அவர் சரி பார்த்துக் கொள்ளவில்லை. அதுமட்டும் அல்ல, அனைத்து புள்ளி விவரங்களையும் விரல் நுனியில் வைத்து இருந்தார். சில சில இடங்களில் நகைச் சுவையாகவும் பேசினார். அங்கு வந்து இருந்த அனைத்து மக்களும் நிரம்ப படித்தவர்கள், மருத்துவர்கள், மருத்துவ விஞ்ஞானிகள், மாணவர்கள் அனைவரும் அவருடைய பேச்சை மிக ரசித்தார்கள். மொத்ததில் அந்த 3 மணி நேரங்கள் போனதே தெரியவில்லை. ஓர் தமிழனாக அன்பு மணியின் செயல் பாடுகளில் பெருமைப் பட்டு கொள்ள நிறைய இருக்கிறது.

எனது சக நண்பர்கள் பலர் மெத்த படித்தவர்கள், அதாவது இந்தியாவில் முனைவர் பட்டம் பெற்று விட்டு பின்னர் அமெரிக்காவிலும் படித்தவர்கள் பலர், வாரிசு அரசியலையும், சாதியை முன் வைத்து (தலித் தவிர)அரசியல் பண்ணுவதை கடுமையாக விமர்சனம் பண்ணும் பலர் மத்திய அமைச்சர் அன்பு மணியின் பேச்சை ரசித்துவிட்டு, அய்யா இராமதாசு தன்னுடைய மகனைப் பற்றி பெருமைப் பட்டு கொள்ள முழுத் தகுதி உண்டு என சொன்னார்கள். நம்முடைய பிரதமர் மன்மோகன் அவர்கள் அமைச்சரைப் பற்றி சொல்லும்பொழுது, "Our country should be proud of Dr Anbu Mani" என்றார்.

அமெரிக்கா இரண்டாவது நிகழ்ச்சி - நியூயார்க் - வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை
===============================================================
இரண்டு வாரங்களுக்கு முன்பு...

Free Image Hosting at www.ImageShack.us

இந்த ஆண்டு நடந்த தமிழ்ச் சங்க பேரவைக்கு மத்திய அமைச்சர் அன்பு மணி கலந்துக் கொண்டு விழாவை சிறப்பித்தார். விழாவில் அன்பு மணிக்கு நல்ல வரவேற்ப்பும் கொடுத்தார்கள். அன்பு மணிபேசும் பொழுது "ஈழ மக்களுக்கு நிச்சயம் நல்ல விடிவு ஏற்படும்" என்று சொன்னார். அது மட்டும் அல்ல தமிழகத்தில் ஈழ் மக்களின் பிரச்சினைகளை பேச பயந்த காலத்தில் எனது அப்பா, அய்யா இராமதாசு எங்களை பேசச் சொல்லி வளர்த்ததாக நினைவு கூர்ந்தார். இந்தியாவிற்கும் ஏன் தமிழ்நாட்டிற்கும் மத்திய சுகாதரத் துறை எண்ணற்ற வளமையான திட்டங்களை கொண்டு வர நிச்சயம்பாடு படும் என்றார். சாரச்சரி இந்தியனுக்கும் அடிப்படை மருத்துவ வசதிகள் செய்து தர நிச்சயம் ஏற்பாடு பண்ணுவேன் என்றார். விழாவிற்கு வந்து இருந்த வைரமுத்து, சரத்குமார், ராதிகா எல்லோரும் அன்பு மணியை பாராட்டி பேசினார்கள். தமிழ்நாட்டு இளைஞராக, மத்திய அமைச்சர் ஆகி தில்லியை கலக்குவதாக அனைவரும் பாராட்டி பேசினார்கள்.

அமெரிக்கா முன்றாவது நிகழ்ச்சி - வாசிங்டன் - லூதர் எல் டெரி விருது
======================================================
ஒரு வாரத்திற்கு முன்பு....

Image Hosted by ImageShack.us

இந்தியாவில் புகையிலைக்கு எதிராக கடுமையான சட்டங்கள் மூலம் மக்களின் நல் வாழ்விற்கு பங்கு அளித்த மத்திய சுகாதரத் துறை அமைச்சர் அன்பு மணிக்கு அமெரிக்க புற்று நோய் நிறுவனம்"லூதர் எல் டெரி" என்று விருதை வழங்கி கெளரவித்தது. உலக அளவில் கிட்டதட்ட 7 அல்லது 8பேர்கள் மட்டுமே இந்த விருதைப் பெற்றார்கள். அதுவும் நம் தமிழ் நாட்டு மத்திய அமைச்சர் விருதுப் பெற்றது மிக மகிழ்ச்சியான விசயம். அந்த விழாவிலும் அமைச்சர் அன்புமணி எந்த குறிப்பும் இல்லாமல் உரையாற்றினார். விழா வாசிங்டன்னில் வரலாற்று புகழ் மிக்க Convention Centerல் நடைப் பெற்றது. அந்த விழாவிற்கு அன்புமணியின் தந்தை மருத்துவர் அய்யா இராமதாசு வந்து இருந்தார்கள். வாசிங்டன் தமிழ்ர்கள் சார்பாக இருவருக்கும் மிகச் சிறப்பான வரவேற்ப்பை செய்ய தமிழ்ச் சங்கம் தயாராக இருந்தது. ஆனால் நேரம் குறைவான காரணத்தால் அந்த வரவேற்ப்பை நியுசெர்சியில் செய்தார்கள். இந்த விருதுப் பற்றி தினந்தந்தியில் செய்தி வந்தது. பாராட்டுகள் பல.

நன்றி
மயிலாடுதுறை சிவா...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, July 17, 2006

அமெரிக்கா பயணத்தில் அய்யா ராமதாசு...(தமிழ் குடிதாங்கி)

நியுசெர்சி...

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அய்யா இராமதாசு அமெரிக்கா வந்து இருக்கிறார். உலக தமிழ் அமைப்பு அவரை நியுசெர்சியில் சந்திக்க ஏற்பாடு செய்து இருந்தது. அய்யா நியூயார்க்கில் இருந்து மாலை 7.30 மணிக்கு வந்து இருந்தார்கள். அய்யாவோடு செங்கல்பட்டு நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் ரயில்வே மந்திரியும் மூர்த்தி அவர்களும் வந்து இருந்தார்கள்.

Free Image Hosting at <a href=www.ImageShack.us" />


அய்யாவின் பேச்சு மிக எளிமையாக இருந்தது. மிக அன்பாகவும் ஆதரவாகவும் எல்லோருடனும்பேசிக் கொண்டு இருந்தார். அவர் ஓரு மிகப் பெரிய பேச்சாளர் அல்ல என்று ஒத்துக் கொண்டார். என் மனதில் பட்டதை ஒளிவு மறைவு இல்லாமல் பேசுவதாக சொன்னார். அமெரிக்காவில் தமிழர்களைபார்ப்பதும் அவர்களோடு உரையாடுவதும் மனதிற்கு மிகுந்த ஆறுதலாக உள்ளதாக சொன்னார்.

தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லை என்று வருத்தப் பட்டார். இந்த கால இளைஞர்கள் வெள்ளி திரையின் மாயையை மிக நம்புவதாகவும், இளைஞர்கள் ரசிகர் மன்றத்தின் பின்னால் செல்லுகிறார்கள் என்று மிக மிக வருத்தப் பட்டார். தமிழ்நாட்டில் 39 சதவீதம் வறுமைக் கோடுக்கு கீழே இருப்பதை கோடிட்டு காட்டினார் இந்த கால இளைஞர்களுக்கு தமிழ், தமிழ் தேசியம், ஈழ மக்கள் பிரச்சினை, மொழி, பண்பாடு இவற்றில் ஓர் பற்று இல்லை என்றும் ஆதங்கப் பட்டார்.

தன்னுடைய கட்சி நிச்சயம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடும் என்று உறுதி அளித்தார். அதுமட்டும் அல்ல ஈழ மக்கள் படும் துயரத்திற்கு தனி ஈழமே தீர்வு என்பதை மிக உறுதியாக எடுத்து உரைத்தார். தமிழ் நாட்டில் ஈழ மக்களின் படும் பாட்டை பேச பயந்த காலத்தில் இவருடைய கட்சி மிக தைரியமாக பேசியதை நினைவு கூர்ந்தார். ஈழ மக்களுக்கு அவர், அவருடைய மகன், அவருக்கு பிறகு அவர் பேரன் குரல் என்றும் கொடுப்பார்கள் என்றார் அதற்கு ஈழ மக்கள் கைகொட்டி ஆராவரித்தார்கள்.

கடந்த ஆட்சியில் ஈழ மக்களுக்கு ஆதரவான ஆட்சி இல்லை என்பதாலும் இந்த ஆட்சி நிச்சயம் ஈழ மக்களின் அமைதியில் முக்கிய அக்கறை உள்ளதாகவும் கலைஞர் மிக ஆதரவாக இருப்பார் என்றும் நம்பிக்கை அளித்தார்.இந்த 5 ஆண்டு கால ஆட்சியில் கலைஞர் நிச்சயம் மக்களுக்கு வேண்டியப் பலத் திட்டங்களை செய்வார் என்று உறுதி அளித்தார். எல்லாவற்றிக்கும் மேலாக கலைஞர் அரசு ஈழ மக்களின் துயரத்தில் இருந்து மீட்க நிச்சயம் ஆதரவாக இருக்கும் என்று பலமுறை சொன்னார். கலைஞரிடம் தனியாக பேச வாய்ப்பு கிடைக்கும் பொழுதுஎல்லாம் இதனை மறக்காமல் சொல்லுவதாக சொன்னார்.

எதிர்வரும் காலங்களில் தமிழ் பாதுகாப்பு இயக்கம் மூலமாகவும் அரசியல் அரங்கிலும் ஒடுக்கப் பட்ட மக்களுக்கு குரல் கொடுக்கும் அன்பு தம்பி திருமாவோடு நிச்சயம் கை கோர்த்து நடப்பேன் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். தரமான பத்திரிக்கைக்கு "தமிழ் ஓசையும்" தரமான திரைப் படத்திற்கு "இலக்கணம்" என்ற படமும்தரமான தொலைக் காட்சிக்கு "மக்கள் தொலைக் காட்சி" பார்த்து உங்கள் விமர்சனங்களை சொல்லுங்கள்என்றார். அவரைப் பற்றியும் அவரது மகன் மத்திய அமைச்சர் அன்பு மணியின் செயல் பாடுகளில் குறைகள் இருந்தால் சுட்டி காட்டுங்கள், நிறைவான விசயங்களை மனதில் நிலை நிறைத்துக் கொள்ளுங்கள் என்றார்.

புலம் பெயர்ந்த தமிழர்கள் அரசியலுக்கு, சாதிகளுக்கு அப்பாற்பட்டு தமிழ் மொழிக்கும், கலைக்கும், பண்பாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும், நம் சகோதர ஈழ மக்களின் விடுதலைக்கு யார் எல்லாம் குரல் கொடுக்கிறார்களோ அவர்களை என்றும் மனதார பாராட்டி, நன்றி தெரிவிப்பார்கள், அது இங்கும் நடந்தது என்றால் அது மிகை அல்ல...

இயற்கைத் தாய் அய்யா இராமதாசுக்கு நல்ல நீண்ட வாழ்நாளை தரட்டும் அவரது அயராத தமிழ் பணியும் ஈழ மக்களின் விடுதலைக்கு தமிழ் மக்களிடம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் பணியும் தொடரட்டும்...

நன்றி
மயிலாடுதுறை சிவா...





Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, July 10, 2006

நடிகர் கமலின் தமிழ் ஆர்வம்...

வாசிங்டன்.

வெள்ளி காலை, 10.30 மணி இருக்கும். எனது செல்பேசியில் ஓர் கம்பீரமான குரல், வணக்கம், பேராசிரியர் ஞான சம்மந்தன் இருக்கிறா? என்று?


நான் உடனே, அய்யா இருக்கிறார் தாங்கள் யார் என்று தெரிந்து கொள்ளலாமா? என்றேன்

அந்த குரல், உடனே நான் பேராசிரியர் நண்பர் கமல்ஹாசன் என்றது,

ஒரு நிமிடம் ஒன்றுமே புரியவில்லை, எனது செல்பேசி எண் கமலுக்கு எப்படி கிடைத்து என்று..

நான் சுதாரித்துக் கொண்டு அண்ணன் வணக்கம். எனது பெயர் சிவா. வாசிங்டன் தமிழ்ச் சங்கதலைவராக உள்ளேன். உங்களுடனும் உரையாடுவது மிக்க மகிழ்ச்சி என்றேன். அவரிடன் மேற்கொண்டு என்ன பேசுவது யோசிப்பதற்கு முன் அண்ணன் நீங்கள் கலைத் துறையில் பல வெற்றிகளை குவிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு, பேராசிரியிடம் தொலைப் பேசியை கொடுத்துவிட்டேன். அன்று முழுவதும் கிட்டதட்ட 3 முறை பேசிவிட்டார் அவர் ஏன் பேராசிரியரை கூப்பிட வேண்டும்?

வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவைக்கு தமிழ் நாட்டில் இருந்து கலைஞர்கள், அரசியல்வாதிகள், பேச்சாளர்கள் வருவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தமிழ் பேராசிரியர் கலைமாமணி முனைவர் ஞானசம்மந்தன் வந்து இருந்தார்கள். நீயுயார்க் விழா முடிந்து அவரை வாசிங்டன் அழைத்து வந்தேன் நிற்க.

தமிழ் அறிஞர் தொ பரமசிவம் பற்றி நீங்கள் பலர் அறிந்து இருப்பீர்கள். அவர் தமிழ் பேராசிரியராக மனோன்மணியம் பல்கலைகழகத்தில் வேலைப் பார்த்து வருகிறார். சிறந்த தமிழ் அறிஞர், திராவிட கருத்துகள், மொழி மற்றும் வைணவமும் பற்றி ஆழ்ந்த அறிவு உடையவர். அவர் ஞானசம்மந்தனின் நண்பர் மற்றும் ஆலோசகர்.

போராசிரியர் ஞானசம்மந்தனும், போராசிரியர் தொ பரமசிவனும் கமலுக்கு நண்பர்கள். இலக்கிய சம்மந்தமாக ஏற்படும் சந்தேகமும், தமிழ் சம்மந்தமாக பல விசயங்களை விவாதிப்பதும் கமலுக்கு பழக்கமாம்.

போன வாரம் பேராசிரியர் தொ பரமசிவனுக்கு நெஞ்சு வலி வந்துள்ளது. இதனை ஞானசம்மந்தன் வீட்டார்கள் இங்கே தெரிவித்தார்கள். மேலும் அவர்கள் கமலிடமும் தெரிவித்து உள்ளார்கள். தொ ப மருத்துவ மனைக்கு செல்லவும் மருத்துவ ஆலோசனைகளை பெறவும் மறுக்குகிறாராம். கமல் அக்கறையோடு ஞான சம்மந்தனை அழைத்து இதனை எப்படி சமாளிப்பது என்றும், நான் வேண்டுமானால் திருநெல்வேலியோ, அல்லது மதுரை சென்று அவரை பார்த்து உதவ வேண்டுமா? என்று கமல் கேட்டதை நான் தெரிந்து கொண்டேன்.

தமிழ் திரை உலகின், கலைத் தாயின் இளைய மகன் கமல் ஓர் தமிழ் பேராசிரியர் படும் துன்பம் கண்டு அதனை எப்படி சமாளிப்பது என்று கேட்டதை நான் ஓர் பெரிய விசயமாக நினைக்கிறேன்.

தமிழ் மொழிப்பற்றி, தமிழ் ஆராய்ச்சிப் பற்றி, வைணவம் பற்றி, இன்னும் பல கருத்துகளை பேராசிரியர் தொ ப விடம் கலந்து உரையாடியாது கமலின் மற்றோரு முகம் தெரிகிறது. அதாவது யார் துன்ப பட்டாலும் உதவுவது மனித நேயம் என்றாலும் கமல் அந்த தமிழ் பேராசிரியாருக்கு ஏதுவும் ஆகி விட கூடாது என்ற அக்கறையோடு உதவ நினைத்தது நிச்சயம் பாராட்டுக்கு உரிய செயல். பேராசாரியர் ஞான சம்மந்தனிடம் விருமாண்டி ஆரம்பித்து மருத நாயகம் வரை பல செய்திகளை பகிர்ந்து கொண்டாராம். மொத்ததில் கமல் பழக மிக இனிமையான மனிதர் என்றார் பேராசிரியார்.எது எப்படியோ கமலின் தமிழ் ஆர்வம் எனக்கு மிகுந்த மன மகிழ்ச்சியை தருகிறது.

நன்றி
மயிலாடுதுறை சிவா...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது