Friday, April 29, 2005

பாட்டிக்கு ஓர் கடிதம்...

Image Hosted by Your Image Link

அன்புள்ள பாட்டிக்கு
நலம், நலமா? அமெரிக்க மண்ணில் இருந்து உன் பேரன் எழுதும் அன்பு மடல்.

நடுங்கும் வயதில் தடுமாற்றோத்தோடு நீ எழுதிய கடிதம் கிடைத்தது. இந்த 76 வயதிலும் நீ எனக்கு கடிதம் எழுதியதை நான் பெருமையாக நினைக்கிறேன். எத்தனைப் பேருக்கு கிடைக்கும் எந்த வாய்ப்பு?

உனக்கு ஒரு பக்க கண் பார்வை சுத்தமாக தெரியவில்லை என்று நீ எழுதியதைப் பார்த்து என் மனம் பட்ட வேதனைக்கு அளவேயில்லை.

உன்னுடைய ஓய்வு ஊதியத்தில் மாதம் மாதம் நீ கொடுத்த அந்த 10 ரூபாய் அந்த 15 வயதில் எவ்வளவுப் பெரியப் பணம் தெரியுமா?

என்னுடைய சிறிய வயதில் என்னை கடைத் தெருக்கு அழைத்துச் சென்று எனக்கு ஐஸ்கீரிமும், என் காலுக்கு செருப்பும் வாங்கி கொடுத்ததை எப்படி நான் மறவேன்?

சில நாட்கள் என் அம்மா எனக்கு பிடிக்காத உணவு செய்தப் பொழுது, எனக்கு மிகவும் பிடித்த உணவுகளையும், வார விடுமுறையில் நீ செய்த ரவா கேசரியும், பஜ்ஜியும் என் நாவில் இன்னுமும் இனிக்கிறதே...

சென்ற முறை தமிழகம் வந்தப் பொழுது, உன்னிடம் நான் உனக்கு என்ன வேண்டும் பாட்டி என்று ஆவலாக நான் கேட்க, நீ வந்து என்னைப் பார்த்ததே போதும் என்று சொன்னது இன்னமும் என் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறதே...

5 வாரங்கள் ஓட்டமாய் ஒடிவிட என் விமானத்திற்கு முதல் நாள் நான் உன்னிடம் ஆசிப் பெற ஒடிவந்தப் பொழுது நீ தேம்பி அழததை நான் எப்படி வார்த்தையால் சொல்லுவேன்? அதுமட்டும் அல்ல, அடுத்தமுறை நான் வரும் வரை நான் உயிருடன் இருக்கமாட்டேன் என நீ சொல்ல, என் தாய் மாமன் (உன் பிள்ளை) உன்னை அதட்ட, என் நெஞ்சு வெடித்துவிடும் போல் ஆயிற்றே எப்படி சொல்லுவேன் அந்த ரணத்தை?

76 வயதில் நீ ஆரோக்கியமாக இருப்பது எனக்கு மகிழ்ச்சியே. என் மனதை கல்லாக்கி கொண்டு இதனை எழுதுகிறேன். உன்னுடைய இறுதி காலத்தில் குறைந்தது 15 தினங்கள் நான் உனக்கு பணிவிடைச்செய்ய வேண்டும். அப்பொழுது "நீ இறந்தால் உனக்கு நான் நால்வரில் ஒருவராக தோள் போட" எனக்கு ஒர் வாய்ப்பு கிடைக்காதா? என்று ஏங்குகிறேன் நான்...

உன் அன்பு பேரன்....
சிவா...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, April 28, 2005

நல்ல மனம் வாழ்க!!!

நான் தற்பொழுது வேலைப் பார்த்துக் கொண்டு இருக்கும் நிறுவனம் அமெரிக்கன் ரெட் கிராஸ். இங்கு உள்ள ஐடி பிரிவில்கிட்டதட்ட 500 பேர்கள் வேலை செய்கிறார்கள். அதில் 70% நிரந்தர வேலையிலும் 30% கன்சல்டன்கள் இருப்பார்கள்.தினமும் பலதரப்பட்ட இமெயில்கள் பல்வேறுத் துறையில் இருந்து வரும். அதில் சில மின் அஞ்சல்கள் இந்த வேலையில்இருந்து வேறு வேலைக்கு செல்லுவதாகவும், ஒய்வு பெறுவதாகவும் கடந்த நாட்களில் தங்களோடு பணிப் புரிந்ததற்கு நன்றி சொல்லி மின் அஞ்சல் அவ்பொழுது வரும். நிறுவன இயக்குனர் மற்றும் மேலாளர்கள் வாழ்த்தியும் மின் அஞ்சல் அனுப்புவார்கள்.

அதைப் போல் இன்று காலை ரோ ஓர் நண்பரிடம் இருந்து மின் அஞ்சல் வந்தது. கடந்த 3 ஆண்டுகளாக தங்களோடு பணிப் புரிந்த அனுபவத்திற்கு நன்றி கூறி அதோடு சிறப்பு செய்தியாக வருகிற சனி அன்று இந்தியா சென்று மீண்டும் குடியேறப் போவதாக வந்தது. நான்உடனே அந்த நபருக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு, தாங்கள் அமர்ந்து இருக்கும் இடம் சொன்னால் உங்களை வந்து பார்த்துவாழ்த்துகள் நேரில் சொல்லப் பிரியப் படுகிறேன் என்றேன். அவரிடம் இருந்து உடன் பதிலும் வந்தது.

கீழ்தளத்தில் அவர் இருந்தார். அவரை பார்க்க மிக ஆவலோடு சென்றேன். நமது தாய் நாட்டிற்கு செல்ல போகும் ஒருவரை நேரில்வாழ்த்துவது ஓர் பெருமையான விசயமாக நான் நினைத்து கொண்டு, அவர் இருக்கும் இடம் தேடிச் சென்றேன். என்னை இன்முகதோடுவரவேற்றார். வயது கிட்டதட்ட 35 இருக்கலாம். அலுவலகம் போகும் போழுது அல்லது வரும் போழுது அவரை நான் பார்த்து இருக்கிறேன்.முதல் 2 நிமிடங்கள் ஆங்கிலத்தில் உரையாடிக் கொண்டு இருந்தோம். இந்தியாவில் எங்கு குடியேற திட்டம் என்றேன், அவர் திருச்சியில் கொஞ்சநாள் பிறகு பெங்களூர் அல்லது சென்னை என்றார். நான் உடனே நீங்கள் "தமிழா" என்றேன். அவர் அமெரிக்கா வந்து கிட்டதட்ட 6.5 ஆண்டுகள் ஆகிவிட்டது என்றும், திரும்ப ஊருக்கு செல்லலாம் எனமுடிவு எடுத்து விட்டேன் என்றார்.

அவரிடம் விடைப் பெறும் பொழுது அவர் சொன்ன வார்த்தை காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அவருடைய அப்பா இன்னும் இரண்டு மாதத்தில் திருச்சி BHEL நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற போகிறாராம். கிட்டதட்ட 30 ஆண்டு பணிக்கு பிறகு ஓய்வுப் பெறுவதால் அப்பாகொஞ்சம் மன அழத்ததிலும், சற்று வருத்தமாகவும் காணப்படுகிறார், ஆகையால் அவரோடு இரண்டு மாதங்கள் இருந்துவிட்டு பின்னர் வேலைக்கு செல்லலாம் என உள்ளேன் என்றார்.

தந்தைக்கு மகன் ஆற்றும் உதவி...என்று நினைத்துக் கொண்டு நடைய கட்டினேன்...வாழ்க நல்ல உள்ளம்!!!

நன்றி
மயிலாடுதுறை சிவா...



Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, April 26, 2005

மும்தாஜ் பேட்டி சூர்ய தொலைகாட்சியில்...

வலைப் பூக்களில் மிக முக்கியமான விசயம் மற்றப் பத்திரிக்கைகளில் வராத பலவிதமான செய்திகளை பல புதிய கோணங்களில்நாம் படிக்க முடியும் அலச முடியும். நாம் திறந்த மனதுடன் சில அல்லது பல நல்ல விசயங்களை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில்நிச்சயம் நமக்கு புதிய விசயங்கள் கிடைக்கும். அதற்கு பலவிதமான வலைப்பூக்களில் ஆதாரம் சொல்ல முடியும். தற்பொழுது உள்ள தலைப்புகாக ஏற்ற மாதிரி உருப்பாடாத நாரயணன் நீண்ட நாட்களுக்கு முன்பு சில்க சுமிதா பற்றியும், விலை மாதர்கள், பாலியில் தொழில் பற்றி அலசியதைப் பற்றி பலர் படித்த இருக்க கூடும்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு சன்(சூர்ய தொலை காட்சியில்) சித்திரை திருவிழாவிற்கு தமிழகத்தின் முண்ணனி கவர்ச்சி நடிகைமும்தாஜின் பேட்டி வந்தது. அதனைப் பற்றி கூட யாரோ ஒர் வலைபூ நண்பர் கிண்டல் அடித்து இருந்தார். இதற்கு முன் ஏதோ விழாவிற்கு "த்ரிஷா" பேட்டி இருந்தது.

Image Hosted by Your Image Link

தற்பொழுது மும்தாஜ் பேட்டி நிச்சயம் நல்ல பேட்டி என்றே நான் சொல்லுவேன். ஏனெனில் துளிக் கூட பந்தா இல்லாமல் நன்றாக பேசினார் என்பது குறுப்பிடத் தக்கது. 60% தமிழும், 40% ஆங்கிலமும் கலந்து கலந்து பேசினார். மும்பாய் பெண்மணி இந்த அளவிற்கு தமிழ் பேசியது நன்றாக இருந்தது. பேச்சின் ஊடே அடிக்கடி ஆங்கில பழமொழிகளை சொன்னார். எதிர்காலத்தில் அவருக்கு வரப் போகும் கணவன் தன்னை அன்பாக பார்த்துக் கொள்வதை காட்டிலும் அவருடைய பெற்றோரை நன்கு பார்த்துக் கொண்டால் நிச்சயம் தன்னையும் நன்கு பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார். காதலைப் பற்றி குறிப்பிடும் பொழுது "Sweet Poison" என்றார்.

Image Hosted by Your Image Link

மனதில் பட்டதை தெளிவாக எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் நன்றாக பேசினார். நல்ல வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் மீண்டும் கதாநாயகியாக நடித்து தன் தனிதன்மையை நிருபிக்க முடியும் என்றார். ஓர் கதாநாயகிக்கு வேண்டிய அத்தனை அம்சங்கள் இருந்தும் ஏன் அவரால் காதநாயகியாக வெற்றி பெற முடியவில்லை என்று தெரியவில்லை. நன்கு பெரிய மீன் போன்ற கண்கள், தமிழ் நாட்டு மக்கள் விரும்பும் நல்ல அருமையான சிவப்புநிறம், நல்ல எடுப்பான தோற்றம், நன்கு நடனம் ஆடும் லாகவம், ஓரளவு தமிழ் நன்கு பேச தெரிந்து இருக்கிறது, ஆனால் அவரால் கவர்ச்சி நடிகையால் மட்டுமே ஜொலிக்க முடிகிறது.

மொத்ததில் சூரிய தொலைகாட்சி குஷ்பு, மீனா, ரம்பா, சினேகா, த்ரிஷா என்று முண்ணனி நடிகை பலரை பேட்டி எடுத்து இருந்தாலும் இரண்டு வாரம் முன்பு மும்தாஜ் பேட்டி எடுத்தது பாராட்ட தக்கது.

நன்றி...
மயிலாடுதுறை சிவா...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, April 21, 2005

திருமாவின் நிலைப்பாடு...???


"தமிழ்பாதுகாப்பு இயக்கத்தின்" சார்பாக குறைந்தது கிட்டதட்ட 10 கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு கோரிக்கை "ஊடகங்களில்" தமிழ். அவர்களது முழு போரட்டம் தமிழ் திரைப்படத்தை எதிர்த்து அல்ல.

ஆனால் கடந்த வாரம் இராமதாசு திடீரென்று நாங்கள் திரைப்படத்தை எதிர்த்து போரடமாட்டோம் என்றும், எங்கள் சக்திகளை தேவையில்லமால் இங்கு வீண் செய்யமாட்டோம் என்றார். இதில் அவர் திருமாவை கலந்து ஆலோசிக்கவில்லை என சில பத்திரிக்கைகள் கூறுகின்றன.

தலித் இயக்கத்தின் எழச்சிநாயகனாக கருதப்படும் திருமா, இராமதாசு உடன் சேர்ந்ததை நான் மனபூர்மாக ஆதரிக்கிறேன். ஆனால் நண்பர்கள் சிலர் மற்றும் சில பத்திரிக்கைகள் இதனால் திருமாவிற்கு எந்த பலனும் இல்லை எனவும் இதனால் தலித் மக்களுக்கு பலன் இல்லை எனவும் சொல்லப்படுகிறது.

போதக்குறைக்கு கலைஞர் வேறு அவருடைய திமுக மாநாடுகளில் எல்லா கூட்டணி தலைவர்களை பேச சொல்லுகிறார், அதில் தலித் சார்பாக புரட்சி பாரதம் என்ற தலித் பிரிதிநிதிகளை பேச வைத்து உள்ளார். இது இப்படியே போனால் இராமதாசு வருகிற சட்டமன்ற தேர்தலில் 2006ல் திருமாவை தன்னுடம் வைத்து இருப்பாரா? அல்லது கலைஞர் திருமாவிற்கு சில தொகுதிகள் கொடுப்பாரா?

கடைசியாக திருமா வேறு வழி இல்லாமல் அதிமுக செயலலிதாவோடு கூட்டணி வைத்து விடுவாரா?அப்படியே வைத்தாலும் அது தவறா அல்லது அரசியலில் இது சகஜமா? அல்லது நமக்கு தலித் பிரதிநிதிகள்தான் முக்கியமாக படுவதால் எந்த கூட்டணியாக இருந்தாலும் பரவாயில்லையா?

ஓய்வாக இருக்கும் பொழுது தங்கள் கருத்துகளை சொல்லுங்கள்...

நன்றி
மயிலாடுதுறை சிவா...




Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, April 19, 2005

மத்திய அமைச்சர் ஈவிகேஸ் இளங்கோவன் - ஓர் சந்திப்பு.

வாசிங்டன். சென்ற வாரம் அரசு விருந்தினராக மத்திய அமைச்சர் இளங்கோவன் வந்து இருந்தார். தமிழகத்தில் இருந்து பிரபலங்கள் அமெரிக்காவிற்கு குறிப்பாக வாசிங்டன் வந்தால் அவர்களை தமிழ்ச் சங்கம் சார்பாக வரவேற்று அவர்களோடு பேசி, கலந்து உரையாடுவது வழக்கம். கூடுமானவரை ஒத்த கருத்து உடைய நபர்கள் வந்தால் இன்னும் மகிழ்வோடு சென்று உரிமையாக பேசுவது வழக்கம். காங்கிரஸ் தலைவர்களில் இவர் தனிப்பட்ட சிறப்பான தலைவர் என்பதால் ஆர்வம் மேலும் இருந்தது.

இந்த சந்திப்பிற்கு வாசிங்டன் பிரபல தமிழ் சிபிஏ திரு பாலகன் ஆறுமுகசாமி ஏற்பாடு செய்து இருந்தார். தமிழ்ச் சங்கம் சார்பாக வரவேற்பும் மற்றும் சாப்பாடு ஏற்பாடு செய்து இருந்தோம். கிட்டதட்ட 50 பேர் வந்து இருந்தார்கள். வழக்கம் போல் அவரை நான் வரவேற்று ஆங்கிலம் கலக்காமல் தமிழில் வரவேற்றேன். இங்கு கவனிக்கபட வேண்டிய விசயம் உள்ளது. கடைசியாக வருகிறேன் அதற்கு.

மத்திய அமைச்சர் தனது மனைவியோடு வந்து இருந்தார். துளிகூட பந்தா இல்லை.மிக அன்பாகவும், பண்பாகவும் பழகினார். பொருளாதார ரீதியாக இந்திய நன்கு முன்னேறிக் கொண்டு வருவதாக சொன்னார்.தமிழக மத்திய அமைச்சர்கள் பலரும் நன்கு உழைப்பதாக சொன்னார். வரும் ஆண்டில் தமிழகத்தில் நல்ல மாற்றம் ஏற்படும் என்றுசொன்னார். நாங்கு நெரி திட்டத்திற்கு தமிழக அரசு நன்கு உதவவில்லை என்று ஆதங்கப் பட்டு கொண்டார். மொத்ததில் அவருடன் மாலை பொழுது நன்கு சென்றது.

ஆனால் அவரிடம் சுத்தமாக தமிழ் ஆர்வம் இல்லை என்பது என் தனிபட்ட கருத்து, தமிழ் ஆர்வலர்களும் அப்படியே நினைத்தனர். அதற்கு காரணம், நான் வரவேற்று பேசிய பொழுது ஆங்கிலம் கலக்காமல் தமிழில் பேசியதை அவர் அன்பாக சுட்டி காட்டினார். அதாவதுதமிழ் ஆர்வம் தேவை, தமிழ் வெறி கூடாது என்றார். மறைமுகமாக அய்யா இரமதாஸ் மற்றும் அண்ணன் திருமாவின் தமிழ் பாதுகாப்பு இயக்கத்தை கிண்டல் அடித்தார். அமைச்சர் யார் பெயரையும் சொல்லவில்லை. அதுமட்டும் அல்ல அவருடைய பேச்சில் திரும்ப திரும்ப இந்தியா முன்னேறவேண்டும் அதற்கு ஆங்கிலம் முக்கியம் என்றார். எனக்கு தனிப்பட்ட முறையில் ஆச்சிரியமாக இருந்தது. காரணம் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் பேரன், திராவிட ஐம்பெரும் தலைவர்களில் ஒருவரான ஈவிகேஸ் அவர்களின் புதல்வன் மருந்துக்கு கூடதமிழ் தமிழ் என்று பேசவில்லை. இந்தியா முன்னேறவேண்டும் அதில் தமிழன் பங்கு உயரவேண்டும் என்று எங்களை உணர்சிவச படுத்தவில்லை, ஏன் என்று சுத்தமாக விளங்கவில்லை. காங்கிரஸ் தலைவர்கள் எல்லோரும் இப்படிதான் இருப்பார்களா? காங்கிரஸ் தலைவர்களில் இவருடைய தைரியத்தை பார்த்து பிரமித்துப் போய் இருக்கிறேன். திராவிட தலைவர்கள் போல அரசியல் பண்ணுவதை பார்த்து அவரிடம் தனிப்பட்ட சிறப்பு உள்ளதாக எண்ணி எண்ணி ஆச்சரிய பட்டு இருக்கிறேன். ஆனால் இப்படி தமிழ் ஆர்வம் இல்லமால் இருப்பதை பார்த்தவுடன் மனம் மிக வருத்தப் பட்டது. அதே சமயம் எங்கள் தமிழ்ச் சங்க தலைவர் முனைவர் பிரபாகரன் அவரிடம் எங்களுக்கு தமிழ் மிக முக்கியம் என்றார், அதனை புன்சிரிப்போடு அமைச்சர் ஏற்றுக் கொண்டார்.

தமிழ் ஆர்வம் இல்லாத மிக அன்பாக, பண்பாக, பழகும் ஓர் இனிய மனிதர் மத்திய அமைச்சர் ஈவிகேஸ் இளங்கோவன் அவர்கள் என்பது என் தாழ்மையான கருத்து.

நன்றி...
மயிலாடுதுறை சிவா...



Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Sunday, April 17, 2005

மதுரை மீனாட்சி ஆலயம்...உலக அதிசியமா?...

மதுரை மீனாட்சி ஆலயம் உலக அதியங்களில் ஓன்றாகிவிட்டது என என் சகோதரர் தமிழகத்தில் இருந்து கூப்பிட்டு செல்பேசியில் செய்தி வந்ததாக சொன்னார்.

இணைய நண்பர்களே சற்று இதனை உறுதி படுத்துங்கள். அப்படி உண்மை என்றால் மனம் அடையும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.மதுரை கோபுரமும், அதன் உள்ளே உள்ள ஓவியங்களும்,பொற் தாமரை குளமும், சுற்றி படிக்கட்டுகளும், நான்கு புற மாசி வீதிகளும் என்ன அருமை!!!

அப்படி அது உண்மையான செய்தி என்றால் அது தமிழனுக்கு கிடைத்த பெருமை அல்லாவா?

நன்றி வணக்கம்.
மயிலாடுதுறை சிவா...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது