Thursday, August 28, 2008

போராளி அய்யா நெடுமாறனுக்கு ஓர் கடிதம்

வாசிங்டன்
ஆக் 28 2008

மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய அய்யாவிற்கு

இன்னும் உங்கள் மீது ஓரளவு மரியாதை வைத்து இருக்கும் உலகத் தமிழன் சார்பாக உங்களுடன் ஓரிரு வார்த்தைகள்...

கடந்த ஒரு வார காலமாக உங்களது தினமணி அறிக்கையும், அதனை தொடர்ந்து கலைஞரின் கவிதையும் அதற்கு பதிலுக்கு ஓர் மறுப்பு கடிதமும் நீங்கள் வெளியிட்டதை பார்க்கும் பொழுது சராசரி தமிழனாக மனம் ரொம்ப வருத்தம் அடைகிறது!

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீங்கள் தொடர்ந்து கலைஞரை சீண்டுவதன் உள்நோக்கந்தான் என்ன? இதனால் யாருக்கு என்ன பலன்?! உங்களும் கலைஞருக்கும் அப்படி என்னதான் தனிப்பட்ட பிரச்சினை?! உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள், உங்களுக்கு கலைஞரின் மீது அப்படி என்ன தீராத கோபம் மற்றும் வெறுப்பு?! அரசியலுக்கு அப்பாற்பட்டு நீங்கள் கலைஞர் மீது ஓர் வெறுப்பை வைத்துள்ளதன் மர்மம்தான் என்ன?!

ஈழ மக்களுக்கு தொடர்ந்து குரல் கொடுத்துவரும் உங்களை கிட்டதட்ட 18 மாதங்கள் சிறையில் தள்ளிய ஜெயலலிதாவை நீங்கள் கலைஞரைப் போல இப்படி விமர்சித்து உண்டா? அந்த அடக்குமுறை ஆட்சிதமிழர்களுக்கு எதிரான ஆட்சி மீண்டும் வந்துவிட கூடாது என்று நீங்கள் போரடியது உண்டா?! இந்தஅரசியல் களத்தில் நமக்கு யார் வேண்டும், யார் வேண்டாம் என்று உங்களுக்கு நான் சொல்லி தெரியவேண்டியதில்லை!

கலைஞரிடம் உங்களுக்கு பிடிக்காத எவ்வளவோ விசயங்கள் இருக்கலாம்? ஆனால் அவருக்கு ஈழ மக்களின் மீது அன்பும், மரியாதையும், அவர்கள் படுகின்ற துன்பங்களின் மீது எந்த அக்கறையும் இல்லாத நபர் என்றுநினைக்கிறீர்களா? அல்லது கலைஞரை அப்படி ஒதுக்கி விட முடியுமா? அப்படி என்றால் தமிழ்ச் செல்வன் மறைவிற்கு அவர் இரங்கல் தெரிவித்ததை இன்றுவரை நீங்கள் மனதார பாராட்டவில்லையே?! ஏன்?!

நீங்கள் மிகப் பெரிய அரசியல் தலைவரும் அல்ல! உங்களுக்கு என்று பெரிதான எந்த வாக்கு வங்கியும் இல்லை! பிறகு எதற்கு கலைஞருடன் ஓர் எதிர் கட்சி தலைவர் போல் நீங்கள் நடந்து கொள்கீறீர்கள்?

நீங்கள் ஓர் மக்கள் போராளி! குறிப்பாக இனம், மொழி என்று உங்களுக்கு என்று ஓர் பாதையை வகுத்துக் கொண்டுள்ளீர்கள். உங்களுக்கு ஈழப் பிரச்சினை மிக முக்கியம்! இந்த பாதையில் நீங்கள் தொடர்ந்து போராடி கொண்டு வருவதை தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் அறிவார்கள்! உங்களுக்கு என்று இனி இழப்பதற்கு என்று எதுவும் இல்லை என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்!

ஆனால் கலைஞருக்கு?! கலைஞர் ஈழ தமிழர்களின் வெற்றிக்கு மிகப் பெரிய போராட்டமோ அல்லது நீங்கள் எதிர்பார்க்கின்ற மிகப் பெரிய உதவிகளோ செய்யமால் இருந்து இருக்கலாம்! ஆனால் அவர் இழந்த இழப்புகள் எவ்வளவோ?! விடுதலைப் புலிகள் நடமாட்டம், தொடர்பு என்று கலைஞரின் ஆட்சியை கலைத்ததைநாடு அறியுமே?! அதுமட்டுமா? திமுக மற்றும் திக பல பிரபலங்கள் இதனால் தொடர்ந்து விசாரணைக்கு உட்பட்டார்களே?! இன்னமும் தொடர்ந்து மிரட்டல்கள்! இவற்றிக்கு அப்பாற்பட்டு கலைஞர் ஈழ மக்களின் விடுதலையை ஆதரிக்கவில்லையா? அவருக்கு என்று ஓர் எல்லை உண்டு! காரணம் அவர் மிகப் பெரிய அரசு பதவியில் இருப்பவர். மிகப் பெரிய இயக்கத்தின் தலைவன்! எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எல்லாம் ஓர் இரவில் செய்துவிட முடியாது என்பதை நீங்கள் உணர வாய்ப்பில்லை!

உங்களது இயக்கத்தில் நல்லப் பேச்சாளர் ஆன மற்றோரு போராளி சுப வீரபாண்டியன் கூட உங்களின் கருத்துகளோடு மாறுப்பட்டு கலைஞர் ஆட்சி வேண்டும் என்று ஊர் ஊராக சென்று கலைஞரை ஆதரித்தார். கலைஞர் ஆட்சிக்குவந்தப் பிறகு உங்கள் தனிப்பட்ட விருப்பு வெருப்புகளுக்கு அப்பாற்பட்டு அவரை இன்றுவரை நீங்கள் வாழ்த்தவில்லை மற்றும் பாராட்டவில்லை! வயது காரணமாகவும், மரியாதை நிமித்தம் காரணமாகவும் கலைஞரை நீங்கள் ஓரு முறை நேரில் பாராட்டி இருந்தால், இப்படி ஓர் மனகசப்பு பெருகி இருக்காதே?! உங்களின் இத்தனை வயது அனுபவம் அதற்கு உதவவில்லையே?!

நீங்கள் உண்மையிலேயே ஈழ மக்களின் விடுதலைதான் முக்கியம், நமது தனிப்பட்ட விருப்பு வெறுப்பு முக்கியம் அல்ல என்று நினைத்து இருந்தால், கலைஞரிடம் ஓரளவு நட்பு பாராட்டி பல காரியங்களை சாதித்து இருக்கலாமே?!அவருக்கும் வயது கிட்டதட்ட 85, உங்களுக்கும் வயது கிட்டதட்ட 70, உங்கள் நட்பால் பல நல்ல காரியங்களை தமிழ்நாட்டிலும், ஈழ மக்களிடத்தும் செய்து இருக்கலாம்! என்ன செய்வது உங்களது ஈகோ அதற்கு இடம் கொடுக்கவில்லை!

உங்களது இந்த ஈகோவால் நீங்கள் தொடர்ந்து தினமணியில் கலைஞரை திட்டி அறிக்கை விடுங்கள்! அவரும் பதிலுக்கு தொடர்ந்து கவிதை எழுதட்டும்! இதனால் பாதிப்பு யாருக்கு?! மகிழ்ச்சி யாருக்கு?! என்பதை நீங்களும் ஒரளவு அறிந்து இருப்பீர்கள்! கலைஞரை தினமும் தாக்குவது முக்கியமா? அல்லது உங்களது ஈழ மக்கள் விடுதலை போராட்டம் முக்கியமா?! என்பதை நீங்கள் முடிவு செய்தால் நல்லது?!


வருத்ததுடன்
மயிலாடுதுறை சிவா...




Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, August 25, 2008

நீயா நானா கோபி - ரஜினி ஜால்ரா ஏன்?!

வாசிங்டன். ஆக் 25 2008

விஜய் தொலைக் காட்சியில் நான் மிகவும் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சி நீயா நானா!இது தமிழகத்தில் மிகவும் பிரபலமான எல்லோராலும் பாராட்ட படுகின்ற நிகழ்ச்சி என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது! பல தரமான தலைப்புகளின் கீழ் தொடர்ந்து விவாதம் நடைப் பெற்று வருகிறது! தரமான வாதங்கள் தொடரட்டும்!

கடந்த வாரம் தமிழகத்தில் தோல்வியை சந்தித்த திரைப் படமான "குசேலனை" ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தள்ளி கோபி நானா நீயாவில் பேசினார் என்பதை அனைவரும் பார்த்து இருப்பீர்கள்! இயக்குனர் பி வாசுவை இந்தியாவின் மிகப் பெரிய இயக்குனர் போலவும், ஆங்கிலத்தில் "The Boss is Back" என்று பேசி தொடர்ந்து பல பிரபலங்களைபேட்டி எடுத்தும் அந்த நிகழ்ச்சி இருந்தது! ஒளிப்பதிவாளர் அரவிந்த கிருஷ்ணாவிடம் ஏதோ ஓர் சாதிக்க முடியாத விசயத்தை சாதித்தைப் போல, ரஜினியை நீங்கள் ViewFinder பார்த்ததில் எப்படி இருந்தது?! அவர் உடனே ரஜினியிடம் ஓர் சொல்ல முடியாத ஒளி இருந்தது என்றும் மிகப் பெரிய கதை விட்டார்! கோபி உங்களுக்கு என்னாயிற்று?

இப்படிதான் ஒருமுறை நீங்கள் முன்பு ஒருமுறை "யுகிசேதுவை" ஏதோ மிகப் பெரிய அறிவாளி போல மிக மிகப் பாராட்டி பேசினீர்கள்! கோபி நீங்கள் சற்று மாற்றிக் கொள்ளவேண்டும் உங்களை! இது உங்களின் நிகழ்ச்சி மட்டுமல்ல! மக்களின் நிகழ்ச்சி என்பதை மறந்து விடாதீர்கள்! மேலும் நீங்கள் லயோலா வணிகத்துறை பேராசரியரிடம் "சமூக சேவகர் மேதா பட்கர் வேண்டுமா, திரு நாராயண மூர்த்தி" வேண்டுமா? என்று கேட்டீர்கள்! அடிப்படையில் கேள்வியே தவறு என்று உங்களுக்கு தோணவில்லையா?

சமுதாயத்தில் எண்ணற்ற புதிய நபர்களை, பிரபலங்களை நீங்கள் அருகில் இருந்து பேட்டி எடுத்தவர், உங்களை வாழ்க்கையில் அந்த புதிய நபர்களின் அனுபவங்கள், சமுதாய சேவை செய்த நபர்களின் பேட்டிகள் உங்களுக்கு நிறைந்த அனுபவத்தை தந்து இருக்கும் அல்லவா?அடிப்படையில் நீங்கள் ரஜினி ரசிகராக இருந்தாலும் அது தவறு இல்லை! அது உங்கள் தனிப்பட்ட விருப்பம், ஆனால் நீங்கள் அதனை தொலைக்காட்சியில் காண்பித்தவிதம் நன்றாக இல்லை என்பதுதான் கசப்பான உண்மை!

ஓர் யாதர்த்தமான வெற்றி படத்தைப் பற்றி இப்படி அலசி இருப்பீர்களா? தமிழகத்தில் அனைத்து பத்திரிக்கைகளும் பாராட்டும் "சுப்ரமணியபுரத்தின்" யாதார்த்ததை பாராட்டி பேசுவீர்களா? சேரனின் "தவமாய் தவமிருந்தை" வசந்தபாலனின் "வெயிலை" தங்கர் பச்சானின் பள்ளி கூடத்தை" இப்படி
தனியாக ஓர் நிகழ்ச்சியாக செய்யாத விஜய் தொலைகாட்சி ஏன் "குசேலனை" மட்டும் இப்படி பாராட்டுகிறது?!

மற்ற தொலைக்காட்சியில் இருந்து பலவிதத்தில் வேறுப் பட்டு இருக்கும் இந்த தொலைக்காட்சி குசேலனைப் பாராட்டி பேசுவதன் பின்புலன் என்னவாக இருக்க முடியும்?! மேலும் மேலும் நிறைய பார்வையாளர்களை கவரவா? அல்லது அந்த தெண்ட படத்தை மேலும் நன்கு ஓடவைக்கும் "மார்கெட்டிங்" யுத்தியா?! சாய்மீரா நிறுவனர் உங்களது பேட்டியில் "குசேலன்"வெளியிட்டது "ஓர் திருவிழா" என்கிறார்! இன்று விகடனில் கிட்டதட்ட 50 கோடிகள் நட்டம் என்கிறார்! பாலசந்தர்க்கே வெளிச்சம்!

நன்றி
மயிலாடுதுறை சிவா...


Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, August 21, 2008

ஜெயலலிதா - இராமதாஸ் சந்திப்பு!!!


அரசியல் வானில் எல்லோரும் பரபரப்பாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த சந்திப்பு நடந்துவிட்டது! தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தையும் வெற்றிகரமாக நடைப் பெற்றது! கொடநாட்டில் கிட்டதட்ட125 நாட்கள் இருந்துவிட்டு மீண்டும் சென்னை வந்தவுடன் அரசியல் சதுரங்கத்தில் மிக வேகமாககாய்களை நகர்த்துவதில் வல்லவர் என்பதை ஜெயலலிதா மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கிறார்.

ஓவர் டூ நமது நிருபர்...

மாலை 4.30 மணி

நேற்று மாலை பாமக கட்சித் தலைவர் கோக மணிக்கு ஓபி பன்னீர்செல்வம் தொலைப் பேசியில்கூப்பிட்டு அம்மா உங்கள் தலைவரை பார்க்க விரும்புவதாக சொன்னார். கோக மணி உடனேஅய்யா இராமதாஸை கூப்பிட்டு தொலைப் பேசியில் கூப்பிட்டு சொன்னவுடன், அய்யா என்று, எப்போழுது என்று கேட்டுள்ளார். உடன் கோக மணி உடன் ஒபி பன்னீர்செல்வத்தை கூப்பிட்டவுடன்அவர் இன்னும் 15 நிமிடங்களில் கூப்பிடுகிறேன். சரியாக 15 நிமிடத்திற்குள் கோக மணியைஓபி பன்னீர்செல்வம் கூப்பிட்டு இன்று மாலையே வைத்து கொள்ளலாம், இரவு 8 மணிக்கு வரமுடியுமா என்று கேட்டு கொண்டார்.

மாலை 5.00 மணி

கோக மணி உடன் அய்யா இராமதாசை தொலைப் பேசியில் கூப்பிட்ட பொழுது அய்யா செங்கல்பட்டு அருகே முன்னாள் மத்திய அமைச்சர் ஏகே மூர்த்தியுடன் "மது ஒழிப்பு பிரசாரத்தில்" ஈடுபட்டுகொண்டு இருந்தார். தகவலை தெரிவித்தவுடன் மாலை 7 மணிக்குள் சென்னை வந்து விடுகிறேன், அதற்குள் நீங்கள் மக்கள் தொலைக் காட்சி நிருபரையும், மக்கள் ஓசை நிருபரையும் தயாராகவைத்துவிடுமாறு கட்டளையிட்டார்.

இரவு 8.00 மணி

செங்கல் பட்டில் இருந்து இராமதாஸ் அய்யா சென்னை வந்தவுடன், அவருடைய அலுவலகத்தில்வேறு வெள்ளை சட்டை அணிந்துக் கொண்டு, ஒரு டம்பளிரில் இளநீர் மட்டும் குடித்துவிட்டுபோயஸ் தோட்டம் செல்ல தயரானார். அய்யா இராமதாஸ், கோக மணி, வேல் முருகன் மற்றும் மக்கள் தொலைகாட்சி நிருபர்கள் அனைவரும் போயஸ் தோட்டம் சென்றனர். போயஸ் தோடத்தில் வாசல் கதவு உடன் திறந்தவுடன் வாசலில் ஒபி பன்னீர் செல்வம், செங்கோட்டையன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் மூவரும் அய்யா இராமதாஸிக்குஇருகரம் கூப்பி வணக்கம் தெரிவித்து உள்ளே அழைத்து சென்றார்கள். செங்கோட்டையன் ஓடிவந்து அய்யா நிருபர்களை கடைசியாக அழைத்துக் கொள்ளலாம் என்றார். அய்யா இராமதாஸ்சிரித்துக் கொண்டே சரி என்றார். ஜெயா தொலைக் காட்சி நிருபர்களும் தயாராக இருந்தார்கள் வாசலில்!

உள்ளே சென்ற 5 நிமிடத்திற்குள் ஜெயலலிதா பச்சை நிறப் புடவையில் இருகரம் கூப்பி வணங்கிஎன்ன டாக்டர் செளக்கியமா? என்றார். அய்யா இராமதாசும் நான் நன்றாக இருக்கிறேன், நீங்கள்நலமா என்றும், கோடநாட்டில் நன்கு ஓய்வு எடுத்தீர்களா என்றும் கேட்டார்! ஓபி பன்னீர்செல்வமும், செங்கோட்டையனும் பயந்து பவ்யமாக நிற்க, எல்லோரும் அமருமாறு சகையிலே ஜெயலலிதாகையை காண்பித்தார். இராமதாஸ் பக்கம் கோக மணியும், வேல் முருகனும் அமர, அம்மா பக்கம் சற்று தள்ளி ஒபி எஸ், செங்கோட்டையன் மற்றும் மைத்ரேயன் அமர்ந்து இருந்தார்கள். அனைவருக்கும்மிதமான சூட்டில் தேநீர் வழங்கப் பட்டது!


அரசியல் சூழ்நிலைகளை கிட்டதட்ட 15 நிமிடங்கள் பேசிவிட்டு, ஜெயலலிதா என்ன ஓபி எஸ்தொகுதி பங்கீடு பற்றி டாக்டரிடம் முன்னரே சொல்லி விட்டீர்களா என்று கேட்டவுடன், ஒபி எஸ்சொல்லி விட்டேன் அம்மா என்றார். தொகுதி பங்கீட்டு கடிதத்தை அய்யா இராமதாஸ் ஒருமுறை படித்துவிட்டு பின்னர் அதில் ஜெயலலிதாவும் அவரும் கையெழுத்து இட்டு கொண்டார்கள். பின்னர்நிருபர்கள் உள்ளே வரவழைக்கப் பட்டு நிறைய புகைப் படங்களும், விடியோ காட்சிகளும் எடுக்கப் பட்டது!


இரவு 9.30 மணி


அய்யா இராமதாஸ் நிருபர்களிடன் நீங்கள் எதுவும் கேள்வி கேட்க வேண்டாம். நானே சொல்லிவிடுகிறேன். சகோதரி மிக அன்பாக நடந்து கொண்டார்கள். அவர்களிடம் நல்ல மாற்றம் தெரிகிறது.ஓர் பக்குவமும், நிதானமும், தமிழ்நாட்டிற்கு நல்லது செய்ய வேண்டும் என்ற ஆர்வமும் நன்குதெரிகிறது என்றார். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ளது. பணிகள் நிறையஉள்ள காரணத்தால் இந்த போர்கால சந்திப்பு!

எங்களுக்கு சகோதிரி ஒதுக்கிய பாராளுமன்ற தொகுதிகள்

நாகர்கோவில், இராமநாத புரம், திருநெல் வேலி, விருதுநகர், திண்டுக்கல் மற்றும் தமிழர்கள் பெரிதும் வாழ்கின்ற பெங்களுர் மற்றும் மலேசியாவில் தலா ஒன்று கையெழுத்து ஆனாது என்றார்!

நிருபர்கள் அய்யா உங்களுடைய வாக்கு வங்கி தமிழ்நாட்டில் இந்த தொகுதிகளில் உள்ளதா என்று கேட்டவுடன், அய்யா சற்று கோபமாக பாமக கிளைகள் பரவாத ஊர்களே தமிழ்நாட்டில்இல்லை! நிச்சயம் அனைத்து தொகுதிகளிலும் ஜெயிப்போம்! முக்கியமாக தமிழர்கள் பிரச்சினையை முன்னிட்டு அம்மா பெங்களூரிலும், மலேசியாவிலும் கொடுத்து இருப்பது பாராட்டதக்கது என்றார்.


பெங்களூரில் உங்களது மகள் கவிதா போட்டி இடுவாரா என்று நிருபர் கேட்டதற்கு அவர் பதில் அளிக்க மறுத்து விட்டார்!


ஜெயா தொலைக் காட்சியிலும், மக்கள் தொலைக் காட்சியிலும் தலைப்பு செய்தியாக இந்தசெய்திகள் வர ஆரம்பித்துவிட்டன!


அரசியல் வானில் யாரும் எதிர்பார்க்கா வண்ணம் அய்யா இராமதாஸ் மற்றும் ஜெயலலிதா சந்திப்பு கலைஞரை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது! கலைஞரின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும்....


நன்றி

மயிலாடுதுறை சிவா....

குறிப்பு : எனது நண்பர் லண்டன் ராஜா நான் என்னவோ பெரிய எழுத்தாளன் போல சிவா ப்ளீஸ் இராமதாஸ், ஜெயலலிதா சந்திப்பு பற்றி எழுதுங்கள் என்று கேட்டு கொண்டார், அவரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த பதிவு!


Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Wednesday, August 20, 2008

தமிழன் என்று சொல்லாடா - விஜய் தொலைக் காட்சி

சுதந்திர தின நிகழ்ச்சியில் விஜய் தொலைக் காட்சியில் "தமிழன் என்று சொல்லாடா"என்ற அருமையான ஓர் ஆவணப் படம் போல ஓர் நிகழ்ச்சி காண்பிக்கப் பட்டது!

தமிழ்நாட்டு சிலப் பிரபலங்களை அவர்கள் செய்த சாதனையோடு, அவர்களைப் பற்றிஒரு சில நிமிடத்திற்கும் குறைவாக ஆனால் நிறைவாக காண்பிக்கப் பட்டது.

இது ஓர் தரமான நிகழ்ச்சி! மற்ற தொலைக் காட்சிகளுக்கு எடுத்துக் காட்டாக வரக்கூடிய நிகழ்ச்சி என்றால் அது மிகைஅல்ல!

அவர்களுள் பலர் மிகப் பெரிய சாதனைகளை படைத்தவர்கள், தொடர்ந்தும் செய்து வருபவர்கள். இதோ சமுத்திரத்தின் சில துளிகள்!

இந்தியாவின் முதல் குடிமகன் அப்துல் கலாம் பற்றி

புகையிலை ஒழிப்பு புகழ் மத்திய அமைச்சர் அன்புமணி பற்றி

புற்று நோய் ஒழிப்பு அடையார் புற்று நோய் கழக சந்தாம்மா பற்றி

தமிழ் எழுத்துலகில் தனி முத்திரை படைத்த ஜெயகாந்தன் பற்றி

இயற்கை விஞ்ஞானி அய்யா நம்மாழ்வார் பற்றி

ஏழை எளிய மக்களுக்கு போராடி வரும், நில மீட்பு போராளி கிருஷ்ணம்மாள் பற்றி

முதுகலை காடுகளில் தொடர்ந்து ஒளிப்பதிவு செய்து வரும் அல்போன்ஸ்ராய் பற்றி

மக்களுக்கு தொடர்ந்து உதவி செய்து வரும் ஆட்சியர் உதயசந்திரன் IAS பற்றி

கார் பந்தயத்தில் பல வெற்றி பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த நரேன் கார்த்திகேயன் பற்றி

ஏழை எளிய மற்றும் தலித் பெண்களின் மேம்பாட்டிற்கு போராடும் ரூத் மனோரோமா பற்றி

தன்னிறிவு பெற்ற ஓடந்துறை பஞ்சாய்த்து தலைவர் சண்முகம் பற்றி

இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்த கேரம் புகழ் இளவழகி பற்றி

ஹிந்தி திரை உலகில் கொடி கட்டி பறக்கும் ஒளிபதிவாளர்கள் ரவி கே சந்திரன், மணிகண்டன் பற்றி

எல்லாவற்றிக்கும் மேலாக அனாதை மற்றும் மனநிலை பாதிக்கப் பட்ட நபர்களுக்கு தினமும் உணவு அளித்துவரும் அக்ஷாயா கிருஷ்ணனை பற்றி

இவர்களின் சாதனைகளை காண்பித்த விஜய் தொலைக்காட்சி இயக்குனர் அமீரையும், நடிகை ப்ரியா மணியையும் வாழ்த்தியது!

தமிழ் திரை உலகில் தரமான திரைப் படம் வருவதும், சமுதாய சிந்தனைகளை பிரதிபலிப்பதும்வரவேற்க கூடிய ஓர் ஆரோக்கியமான விடயம். ஆனால் இவர்களை விஜய் தொலைக் காட்சி பாராட்டியது மனதிற்கு நிறைவாக இல்லை!

இந்த சாதனைப் பட்டியலில் அமீரும், ப்ரியாமணியும் காண்பித்தது சற்று நெருடலாகவே இருந்தது!இவர்கள் சாதிக்க வேண்டியதும், போக வேண்டிய பாதையும் வெகு தூரம் உள்ளது என்றுதான் நான் நினைக்கிறேன்!

தமிழனின் தன்னமலமற்ற சேவையை, தியாக உள்ளங்களை அடையாள படுத்திய விஜய் தொலைக்காட்சிக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் பல!

மயிலாடுதுறை சிவா...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Sunday, August 17, 2008

அண்ணன் தொல் திருமா பிறந்தத் தின (47வது) வாழ்த்துகள் - ஆக் 17


வாசிங்டன் ஆக். 17.2008

தொல் திருமா அண்ணனுக்கு

வணக்கம். அன்பு தம்பி வாசிங்டன் சிவா எழுதும் அன்பு மடல்.

முதலில் மனதார பிறந்தத் தின வாழ்த்துகளை சொல்லி விடுகிறேன்!

நீங்கள் தாழ்த்தப் பட்ட, ஒடுக்கப் பட்ட, உரிமைகள் மறுக்கப் படுகின்ற, கடை நிலை மக்களின் உரிமைகளுக்கு போராடுகின்ற தலைவனாக உங்களைப் பார்க்கும் பொழுது மனம் மிகுந்த
பிரமிப்பை தருகிறது!

தொடர்ந்து தமிழ் நாட்டில் பட்டி தொட்டி எங்கும் ஈழமக்களின் விடுதலைக்கு குரல் கொடுக்கும் உனது தன்னமலமற்ற செயல் மிகுந்த பாராட்டுக்குரியது!

உனது பேச்சில் ஒருமுறை சாதி ஒழிப்பும், தமிழ் தேசியமும் எனது இரு கண்கள்! என்று சொன்னது இன்னும் என் மனதில் பசுமையாக இருக்கிறது!

நீங்கள் பொதுவாழ்க்கைக்கு வந்து கிட்டதட்ட 25 ஆண்டுகள் ஆகிவிட்ட இந்தப் பிறந்த நாளில் நீங்கள் மேலும் மேலும் வெற்றி அடைய வாழ்த்துகள் பல!

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழினத்தின் ஒப்பற்ற தலைவன் கலைஞரின் ஆசியோடு, ஒத்துழைப்போடும், இந்த கூட்டணியில் பங்கு பெற்று நாடாளுமன்றம் செல்ல வேண்டும் நீங்கள்!

சிதம்பர நாடாளுமன்ற தொகுதியிலே காங்கிரஸ், திமுக, அதிமுக, பாசக, கூட்டணி இல்லாமல் கிட்டதட்ட 3 லட்சம் வாக்குகள் வாங்கியது தமிழக வரலாற்றில் ஓர் அதிசயம்!

அடுத்த ஆண்டு வரும் நாடாளுமன்ற தேர்தலில் உனது வெற்று உறுதி! மீண்டும் காங்கிரஸ் ஆட்சி பொறுப்பை ஏற்குமானால் கலைஞரிடம் சொல்லி உங்களுக்கு மத்திய அமைச்சர் பதவி வாங்குவோம்!

தொடர்ந்து ஒலிக்கட்டும் உனது குரல்...

தொடரட்டும் உனது போராட்டம்...
மீட்டு எடுப்போம் தலித் மக்கள் சமவாழ்வுரிமையை...

பிறந்த தின வாழ்த்துகள்! வெற்றி நிச்சயம் அண்ணன்!

மயிலாடுதுறை சிவா...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது