Wednesday, May 20, 2009

மலரும் ஈழம் ஒருநாள்!!!

வாசிங்டன் மே 21 2009

மலரும் ஈழம் ஒருநாள்!!!

கடந்த இருதினங்களாக தமிழ் இனத்தின் போராளி தமிழ் தேசிய தலைவர் திரு பிரபாகரன்இறந்துவிட்டார் எனவும் இல்லை இல்லை அவர் நலமாக இருக்கிறார் என்றும் மாறுப்பட்டகருத்துகள் வந்து கொண்டு இருக்கின்றன. எது எப்படி இருப்பினும் தம்பி என்று எல்லோராலும்பாசமாக அழைக்கப்படும் பிரபாகரன் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் இருக்கிறார் என்று மட்டும் ஓரளவு உணர முடிகிறது!

கிட்டதட்ட 30 ஆண்டுகால தமிழர்களின் ஒரு மிகப் பெரிய போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டதுஎன்று தமிழ் இன விடுதலைக்கு எதிராக உள்ளவர்கள் சொன்னாலும், இது உண்மையில் இத்தோடுமுடிந்து விடுகிறதா?

கடந்த ஒருவார காலமாக அமெரிக்காவின் தலைநகர் வாசிங்டன்னில் வெள்ளை மாளிகை முன்புஈழ தமிழர்களும் மற்றும் உலக தமிழர்களும் "ஓபாமாவிடம்" போர்களத்திலும் மற்றும் சிங்களபகுதியில் வாழும் தமிழர்களை காப்பாற்றுங்கள்! என்று கெஞ்சிக் கொண்டு இருக்கிறார்கள்.

ஈழ தமிழர்களுக்கு நீங்களே ஓரே நம்பிக்கை என்று தினமும் அவர் இல்லத்தின் முன்பு போராடிகொண்டு இருக்கிறார்கள்! அங்கு நான் சிறுவர் சிறுமியர் மற்றும் பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும்மாணவ மாணவியர்களை பார்த்தேன்! அவர்கள் தொடர்ந்து என் தாய் நாட்டில் வாழும் தமிழர்களை காப்பாற்றுங்கள் என்று கெஞ்சியதை பார்க்கும் எல்லோர் மனமும் பதறிதான் போகும்!

அந்த சிறுவர் சிறுமியர்களிடம் போய் பிரபாகரன் இறந்துவிட்டார், இனிமேல் ஈழம் கிடைக்காதுஎன்று நான் சொல்ல முடியுமா அல்லது அதை தான் அவர்கள் புரிந்து கொள்ள போகிறார்களா? இப்படிப்பட்ட பல்லாயிரகணக்கான பிஞ்சு உள்ளங்களில் "ஈழம்" என்ற கனவை ஏற்றி வைத்தாகிவிட்டது!அந்த தீயை எப்படி ஒரே நாளில் அணைக்க முடியும்?!

கடந்த 30 ஆண்டுகளில் நடந்த யுத்த களத்தில் போராட்ட களத்தில் இழந்தவை ஏராளம் ஏராளம்ஆனால் கடைசி சொட்டு இரத்தம் உள்ளம் வரை, கடைசி தமிழன் வாழும் வரை ஈழ மண்ணுக்கு அவர்கள் போரடினார்களே?! இது வல்லவோ போராட்டம்! இது அல்லவோ தியாகம்!

ஏராளமான கருத்து வேறு பாடுகளுக்கு அப்பாற்பட்டு "தமிழ் ஈழம்" என்ற மந்திர சொல் உலகில் வாழும் தமிழர்களை ஒருங்கிணைத்ததே! உலகு எங்கும் தமிழர்கள் வியாபித்து இருந்தாலும் தமக்கென்று ஒருநாடு ஒருவாகும் என்று கனவு கண்ட எப்படி வீணாகும்?! உலக வரலாற்றில் தமிழ் இன விடுதலைக்கு எண்ணற்ற உயிர் பலிகளும், எண்ணற்ற தியாகங்களும் கொடுத்தாயிற்று! அதற்கான பலன் களத்தில் இன்று இல்லாமல் இருக்கலாம், ஆனால் நாளை?!

இன்னோரு 25 ஆண்டுகள் கழித்து ஏன் 50 ஆண்டுகள் கழித்து கூட தமிழர்களின் வாழ்வுரிமைக்காக, தனி நாட்டிற்காக வேறு வேறு வழிகளில் ஒரு புதுமையான அறப் போராட்டத்தில் ஈடுபட்டு இந்த இலட்சிய கனவை நிறைவேற்றி விட களத்தில் புத்தம் புது கருத்துகளுடன், இந்த உலகை திரும்பி பார்க்க வைக்கும் திட்டங்களுடன் நம் இளைஞர்கள் இந்த வாழ்நாள் போராட்டத்தை முன் எடுத்து செல்ல ஒரு புதிய படை வரும் புதிய சிந்தனைகளோடு மற்றும் புதிய உத்திகளோடு!

தமிழ் நாட்டிலும், உலக தமிழர்களின் மத்தியில் தம் தம் இல்லங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு யாழினி, ஈழ முரசு, வன்னி அரசு, முல்லை, தம்பி, பிரபாகரன், தீலீபன், யாழ் அரசன், தமிழ் வேந்தன், ஈழ முரசு, யாழ் தீலிபா இப்படி பல பல தூய தமிழ் மற்றும் ஈழ பெயர்கள் வைக்கப் படும் பொழுது ஒவ்வோரு வீட்டிலும் ஒரு ஈழ தீபம் ஏற்றப் படுகிறது! ஏற்றப் படும்!

எரியட்டும் தீபம்!

அழியிட்டும் இனவெறி!

அடங்கட்டும் திமிர்!

மலரும் ஈழம் ஒருநாள்!


மயிலாடுதுறை சிவா...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, May 05, 2009

ஈழப் பிரச்சினை - தமிழக தேர்தலை பாதிக்குமா?

ஈழப் பிரச்சினை - தமிழக தேர்தலை பாதிக்குமா?

வாசிங்டன் - மே 05 2009

கடந்த ஒரு மாத காலமாக அமெரிக்க வாழ் மற்றும் தமிழ் நாட்டு நண்பர்களுடன் தேர்தல் பற்றி எத்தனை முறை பேசினாலும் அலுக்கவே இல்லை! சில சமயம் சண்டையில் போய் முடிந்து விடுகிறது!!!

ஆனால் தமிழ் உணர்வாளர் மற்றும் பற்றாளர் ஜெ, நான் ஈழம் வாங்கி தந்து விடுவேன் என்று சொன்னவுடன் அடிப்படையில் தமிழ் உணர்வாளர்களில் சிலர் திடீரென்று ஜெ வின் பழைய குற்றங்களை அப்படியேமறந்துவிட்டு ஒரே ஜெ புராணம்!

அடிப்படையில் இவர்களிடம் நான் ஒன்று புரிந்துக் கொண்டேன். இவர்கள் அனைவருக்கும் ஜெ ஜெயிக்க வேண்டும் என்பதை விட, கலைஞர் தோற்க வேண்டும் என்று அடி மனதில் ஒரு வன்மம் இருக்கிறது! அதிலும் ஒரு நண்பர் என்னிடம் அஞ்சா நெஞ்சன் அழகிரி தோற்பது உறுதி என்றும், அவர் நிச்சயம் தோற்பார் என்றார்! இவரிடம் மேற் கொண்டு அரசியல் பேச வேண்டுமா? என்று எனக்கு தோணியது!

நேரிடையாக விசயத்திற்கு வந்து விடுகிறேன்! இந்த நாடளுமன்ற தேர்தலில் ஈழ பிரச்சினை நிச்சயம் ஒரு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது, இதில் மாற்று கருத்து எனக்கிலை! ஆனால் இவை முழுக்க முழுக்க ஓட்டுகளை மாற்றி போடுமா என்று தெரியவில்லை!

ஒரு தமிழ் உணர்வாளராக காங்கிரஸ் எல்லா தொகுதிகளிலும் தோற்க வேண்டும் என்று ஆசைப் பட்டாலும் யாதர்த்த உண்மை எப்படி இருக்கும் என்று புரியவில்லை! இப்படி பேசலாம்....

தமிழ் இனத்தை கொன்று குவிக்கும் ராஜபக்சேவை தன் திருமண விழாவிற்கு அழைத்த மயிலாடுதுறை வேட்பாளர்மணி சங்கர் தோற்றால்.....(ஓ எஸ் மணியன் ஜெயிக்க வேண்டும்!!!)

தமிழ் இன விடுதலைக்கு தொடர்ந்து எதிராக பேசி வரும் ஈரோடு வேட்பாளர் ஈவிகேஸ் இளங்கோவன் தோற்றால்.....(பொடா சிறை வாசம் சென்ற கணேசமூர்த்தி ஜெயிக்க வேண்டும்!!!)

நிதித்துறை மற்றும் உள்துறை பதவியில் இருந்து தமிழ் இன அழிப்பை தடுக்க எந்த முயற்சியும் எடுக்காமல் இருந்த சிவகங்கை வேட்பாளர் சிதம்பரம் தோற்றால்....(ராஜ கண்ணப்பன் ஜெயிக்க வேண்டும்!!!)

தமிழ் விடுதலைக்கு போராடி வரும் பேராளிகளை பற்றி தவறாக பேசும் சேலம் வேட்பாளர் தங்கபாலு தோற்றால்.....(செம்மலை ஜெயிக்க வேண்டும்!!!)

எல்லாவற்றிக்கும் மேலாக ஈழ மக்கள் விடுதலைக்கு தொடர்ந்து போராடி வரும் என் அண்ணன் தொல் திருமா மிகப் பெரிய வெற்றி அடைந்தால்.......(பொன்னு சாமி டெப்பாசிட் காலியாக வேண்டும்!!!)

ஈழ மக்களின் விடுதலைக்கு என் உடம்பில் ரத்தம் இருக்கும் வரை போராடுவேன் என்று கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வரும் வைகோ ஜெயித்தால்.......(மாணிக் தாகூர் தோற்க வேண்டும்!!!)

ஈழ பிரச்சினை நம் தங்க தமிழ் நாட்டில் ஒரு முக்கிய பிரச்சினை என்று எடுத்து கொள்ளலாம்....இவைகளில்ஒன்று இரண்டு மாறி நடந்தால் கூட,

ஊடகங்கள் சொல்வதை நிராகரித்து, ஈழ பிரச்சினை ஒரு பெரிய பிரச்சினை இல்லை என்று எடுத்து கொள்ள வேண்டும்!


சாகும்வரை ஈழ மக்களின் விடுதலைக்கு மனதார ஆறுதல் அளித்துவிட்டு, தமிழக அரசியலுடன் அதனைப் போட்டு குழப்பி கொள்ளமால்...வாக்குவாதம் செய்யாமல்....இருப்பது நலம் என்று தோன்றுகிறது.....

இவை எல்லாம் விட்டு விட்டு, அழகரி தோற்க வேண்டும், தயாநிதி தோற்க வேண்டும், காடு வெட்டி குரு ஜெயிக்கவேண்டும் இதெல்லாம் டூ மச்!!!

நன்றி!

மயிலாடுதுறை சிவா....

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது