Friday, August 17, 2007

அண்ணன் தொல்.திருமா - பிறந்த தின வாழ்த்துகள்...


வாசிங்டன். ஆகஸ்டு 17

அம்பேத்கார் வழி தோன்றல், கறுப்பு வைரம், உரை வீச்சு, தாழ்த்தப் பட்ட, ஒடுக்கப் பட்ட, உரிமைகள் மறுக்கப் படுகின்ற மக்களின் எழுச்சி தலைவன் அண்ணன் தொல். திருமாவிற்கு பிறந்த தின வாழ்த்துகள் பல...தொடரட்டும் உனது தலித் விடுதலை முயற்சி...

தொடரட்டும் உனது தமிழ் தேசிய விடுதலை...

தொடரட்டும் உனது ஈழ் மக்களின் ஆதரவு போராட்டம்...

தொடரட்டும் உனது தமிழ் பாதுகாப்பு இயக்க போராட்டம்...

தொடரட்டும் உனது சாதி மறுப்பு போராட்டம்...

நன்றி

மயிலாடுதுறை சிவா...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

வாழ்க சீமான் - வளர்க கீற்று தளம்


வாசிங்டன். ஆகஸ்டு 2007

தமிழகத்தின் முக்கியமான சிற்றிதழ்களை ஓரே இடத்தில் தொகுத்து வழங்கும் ஓர் அருமையான தளம் கீற்று. எந்தவித எழுத்துரு பிரச்சினைகளும் இல்லாமல் யுனிகோடில் வழங்குவதால் தளம் மிக அருமையாக உள்ளது. வாரம் முழுவதும் படிக்க அனைத்துவிதமான பத்திரிக்கைகளும் உள்ள ஓர் தளம். இந்த வாரம் விகடனில் கூட கீற்று இணையதளம் பற்றி வந்து இருக்கிறது.

இந்த வாரம் சமூகப் பார்வையுள்ள இயக்குனர் சீமானின் ஓர் அருமையான பேட்டி உள்ளது. நீங்கள் ஓய்வு கிடைக்கும் பொழுது அவசியம் அந்த பேட்டியைப் படிக்க வேண்டும்.

- இன்றைய சினிமா - தமிழ் மொழி - கார்ல் மார்க்ஸ் - தந்தை பெரியார் - பெண்ணியம் - தலித் சமூகம் - சாதி ஒழிப்பு - இன்றைய இளைஞர்களின் கனவு - ஜெ அரசுப் பற்றி -

இப்படி பலவிதமான கருத்துகளை ஆழமாகவும், அருமையாகவும், சற்று கோபமாகவும், தனது உணர்வுகளை வெளிபடுத்தி இருக்கிறார் இயக்குமர் சீமான். அவசியம் படியுங்கள் உங்கள் மனம் இப்படி ஓர் நல்ல தமிழ் இயக்குனருக்குள் ஓர் சமூக போராளியா என்று தெரிய வரும்.

http://www.keetru.com/literature/interview/seemaan.php

அவரது இந்த நீண்ட பேட்டியை இட்ட கீற்று இணையதளம் மேலும் மேலும் வளரவேண்டும்.

நன்றி
மயிலாடுதுறை சிவா....

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, August 16, 2007

பாரதிராசா - வாழ்க பல்லாண்டு!

வாசிங்டன்.

தமிழ்த் திரை உலகின் மறக்கமுடியாத ஓர் உன்னத கலைஞன் இயக்குனர் பாரதிராசா. அவருக்கு கடந்த மாதம் சூலை 17 பிறந்ததினம். அவரை மனதார வாழ்த்தவே இந்த பதிவு. அவரை ஏற்கனவே வார இதழ் குமுதம் தனது "வெப் டிவி" மூலம் வாழ்த்தி மற்றும் மிக அருமையான பேட்டியை ஒலி/ஓளி பரப்பி உள்ளது. தமிழ் மக்கள் அவசியம் அந்த பேட்டியை பார்க்க வேண்டும். என்ன ஒரு அருமையான பேட்டி. அவற்றில் சிலவற்றை எனக்கு இங்கே சொல்ல ஆசைப் படுவதன் விளைவே இந்த பதிவு.

தமிழ் திரை உலகில் என் மனதை மிகவும் பாதித்த ஓர் இயக்குனர் என்றால் அது பாரதிராசா என்றால் மிகை அல்ல. அவரின் அருமையான அந்த கரகரப்பு குரல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அவருடைய பல பேட்டிகளை நான் விரும்பி படித்தும் கேட்டும் இருக்கிறேன். பாரதிராசா எனக்கு தெரிந்த வரையில் மனதில் பட்டதை தெளிவாக சொல்ல கூடியவர். பேசும் பொழுது அவரின் உணர்ச்சி கொப்பளிக்கும். அவருடைய பேச்சில் அவர் ஓர் தமிழ் ஆர்வலன், உணர்வாளன் என்பது நன்கு தெரியும். கிராமத்து கதைகளை,
கிராம மனிதர்களை, களங்களை, சாதி விருப்பு வெறுப்புகளை மிக அழகாக கையாண்டாவர் என்றவர் அது மிகை அல்ல.

Free Image Hosting at <a href=www.ImageShack.us" />தன்னுடைய தாயை மிகவும் நேசிப்பவர் பாரதிராசா. அம்மாவின் பேரில் ஓர் உன்னத காவியம் "கருத்தம்மா" எடுத்து அந்த படத்திற்கு தேசிய விருதும் வாங்கி கொடுத்தவர். பெண் சிசு கொலை தவறு என்பது வெண் திரையின் மூலம் மக்களுக்கு அவர் கொண்டு சென்ற விதம் மிக அருமை.

என்னை பொறுத்தவரை பாரதிராசாவின் படங்களுள் வைரம் என்றால் "முதல் மரியாதை" மட்டுமே. "16 வயதினிலே", "சிவப்பு ரோஜாக்கள்", "வேதம் புதிது", "கடலோர கவிதைகள்" "கிழக்கு சிமையிலே" "அந்தி மந்தாரை" என பல படங்கள் எடுத்து இருந்தாலும் "முதல் மரியாதை" கென்று ஓர் தனி இடம்
தமிழ் திரை உலகில் உண்டு. நடிப்பு திலகம் "சிவாஜியை" நடிக்க வைத்த பெருமை உண்டு பாரதிராசாவிற்கு. அவருடையப் பேட்டியில் எனக்கு தனி கர்வம் உண்டு, நடிக்க தெரியும் என்று என்றார், மேலும் நான் சிவாஜிக்கே
நடிப்பு கற்றுக் கொடுத்தவன் என்று அழகான செருக்கோடு சொன்னார். இப்படி சிவாஜியைப் பற்றியும் அவருக்கு நடிப்பு சொல்லி கொடுத்தைப் பற்றியும் பேசிக் கொண்டு இருக்கும் பொழுது, "நானேபட்கேரை" பற்றி புகழ்ந்தார். பட்கர் மிகப் பெரிய நடிகன் என்றார். அவருடைய அடுத்தப் படமான "பொம்மலாட்டத்தில்" பட்கரின் நடிப்பைப் பற்றி வியந்தார்.

ஒளிவு மறைவு இல்லாமல் "பாலுமகேந்திரா" படங்களை பார்க்கும் பொழுது இதுப் போல நம்மால் எடுக்க முடியவில்லையே என்று பயந்தேன் என்றார். 1967ல் அரசியலில் சேர வேண்டும் என ரொம்ப ஆசைப் பட்டதாக சொன்னார். ஆனால் பெருந்தலைவர் காமராசர், ஓர் மாணவன் சீனிவாசனால் தோற்க அடிக்கப் பட்டதை கேள்விப் பட்டப் பிறகு நமக்கு அரசியல் ஒத்து வராது என்று முடிவு எடுத்தாராம்.

மனதை கவர்ந்த கவிஞன் என்றுமே கண்ணாதாசன் என்றார். மருந்துக்கு கூட வைரமுத்து பெயரைச் சொல்ல வில்லை. இன்றைய இளைஞர்கள் பலர் நன்கு எழுதுகிறார்கள் என்றார். கண்ணதாசனின் எளிமையான சொற்கள் என்றும் அவர் மனதை கவர்ந்தாக சொன்னார். வாழ்நாள் லட்சியம் குற்ற பரம்பரை சீக்கிரம் எடுக்கப் படும் என்றார். ஈழம் என்ற சொல் மனதை பிழிவதாக சொன்னார். இலக்கியம் பற்றி எல்லாம் எனக்கெல்லாம் மிக ஆழ்ந்த அறிவு இல்லை என்று ஒளிவு மறைவு இல்லாமல் சொன்னார்.

15 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் என் தம்பி படித்த கல்லூரிக்கு (தியாகராஜர் பொரியியல்) பேசிய பொழுது மாணவர்களின் உணர்வுகள் மேம்படும்படி பேசினார். எதிர்காலத்தில் இளைஞர்களின் கனவு நிறைவேற
கடுமையாக போராட வேண்டும் என்றாராம். அதைப் போலவே இந்த குமுதம் பேட்டியிலும் இளைஞர்கள் பலர் சினிமாத் திரையில் வந்து விட்டார்கள், புதிய சிந்தனைகளோடு என்றார்.

மொத்ததில் பாரதிராசாவின் இந்த குமுதம் பேட்டி மிக அருமை. குமுதம் வெப் டிவியின் தரமோ மிக அருமை. ஓய்வு கிடைத்தால் பாருங்களேன்....

நன்றி
மயிலாடுதுறை சிவா....


Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, August 09, 2007

இனமுரசு சதய்ராஜ்க்கு - தந்தை பெரியாரின் மோதிரம்

சென்னையில் இன்று "பெரியாரின் 100வது நாள்" வெற்றி விழா சீரும் சிறப்புமாக கலைவாணர் அரங்கில் நடைப் பெற்றது. விழாவிற்கு தமிழக முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கலந்துக் கொண்டு பெரியார் படத்தில் நடித்த மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கு விருது வழங்கி
மிக அருமையாக பேசினார். விழாவிற்கு திராவிட கழக தலைவர் ஆசிரியர் வீரமணி தலமை தாங்கி அவரும் பெரியாரின் கருத்து இந்நாட்டிற்கு எப்பொழுதும் தேவை என்று உரையாற்றினார்.

இந்த விழாவில் என் மனதை மிகவும் கவர்ந்த விசயம் தந்தை பெரியார் அணிந்து இருந்த பச்சைகல் மோதிரம் இனமுரசு சத்யராசுக்கு வழங்கப் பட்டது. இது சம்பந்தமாக இன்றைய விடுதலைப் பத்திரிக்கையில் முழு விவரம் வெளியாகி உள்ளது.


Free Image Hosting at <a href=www.ImageShack.us" />

திரைத் துறையில் சத்யராஜ் மிக மிக யாதார்த்த மனிதர். எதையும் வெளிபடையாக பேசுபவர். எந்த வித அச்சமோ கூச்சமோ இல்லாமல் கருப்புச் சட்டை அணிந்து தந்தை பெரியார் கருத்துகளை பேசுபவர். 3 ஆண்டுகளுக்கு முன்பு வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையில் கலந்துக் கொண்ட பொழுது, ஈழத் தமிழர்களின் படும் அவலத்திற்கு வருத்தம் தெரிவித்துவிட்டு, எனக்கு அடுத்தப் பிறவியில் நம்பிக்கை இல்லை, ஆனால் அடுத்தப் பிறவி என்று ஓன்று இருந்தால் "ஈழத்தில்" பிறக்க விரும்புகிறேன் என்றார்.

பெரியாரின் சீடர், கடவுள் மறுப்பாளர், பகுத்தறிவாளர், ஈழ் மக்களின் விடுதலையை மிகவும் விரும்புவர், நம் தமிழ்நாட்டு நடிகர் சதய்ராஜுக்கு மனதார வாழ்த்துகள் பல. இதுப் போல் கொள்கை பிடிப்புள்ள
நடிகர்கள் பலர் நம் தமிழ்திரை உலகிற்க்கு தேவை!!!

நன்றி

மயிலாடுதுறை சிவா...Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Wednesday, August 01, 2007

திமுகவின் அடுத்த தலைவர் ஸ்டாலினுக்கு முழு தகுதி!

வாசிங்டன்...

திமுகவின் தலைவராக தயாநிதிக்கு தகுதி உண்டு என்றும், கலைஞர் குடும்பத்தை விமர்சித்தும்,முரசொலி மாறனின் குடும்பத்தை பாராட்டியும் வலைப் பூ நண்பர் "சூரியன் - தி பாஸ்" ஓர் பதிவு போட்டு இருந்தார், அதில் பின்னூட்டம் இட ஆசை, அதற்கு பதிலாக ஓர் தனி பதிவேபோட்டு விடலாம் என்ற காரணத்தால் இந்த பதிவு.

நம் இணையத்தில் ஓர் பழக்கம் இருக்கிறது, அதாவது கலைஞரையும் அவர் குடும்பத்தையும் எப்போழுதும் ஏதாவது சொல்லி கொண்டும், விமர்சித்தும் கொண்டும் இருப்பது, ஆனால் ஜெ ஆட்சிவந்தாலோ அல்லது தற்பொழுது ஜெயின் நடவடிக்கையை விமர்சிப்பது இல்லை. அதற்கு காரணம் ஒன்று பயம் காரணமாக இருக்கலாம், அல்லது அவர்கள் அந்த சாதியாக இருக்கலாம் அல்லது தேவர் இன ஆதரவாளராக இருக்கலாம் அல்லது கலைஞர் மீது வெறுப்பின் காரணமாக ஜெ எது செய்தாலும் அதனை ஆதரிப்பது. இவர்களிடம் நாம் பேசி என்ன பலன்?

கலைஞரிடம் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், குறைகள் காணப் படலாம், அவரும் விமர்சனத்திற்கு உட்பட்டவர்தான், ஆனால் எல்லாவற்றிக்கும் மேல் அவரின் வெற்றிக்கு காரணம் என்ன? அவருடைய போராடும் குணம், அயராத உழைப்பு, தமிழ் மொழி மீது தீராத பற்று. இந்த மூன்று காரணங்களேஎன்னை பொறுத்தவரை அவரை இந்த நிலைக்கு உயர்த்தி இருக்கிறது. எத்தனை எத்தனை போராட்டங்கள், துயரங்கள், பிரச்சினைகள், அத்தனையும் ஓயாத உழைப்பின் மூலம் தன்னை ஓர் நிலையான இடத்தில் தக்க வைத்து கொண்டவர் என்றால் அது மிகை அல்ல. இந்திய மற்றும் தமிழக வரலாற்றில் கலைஞர் ஓர் வாழும் சகாப்தம்!

Free Image Hosting at <a href=www.ImageShack.us" />

முரசொலி மாறனை கட்சிக்கு கொண்டு வந்தது கலைஞர். அவரை நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்கியது கலைஞர். அவரை மத்திய அமைச்சர் ஆக்கியது கலைஞர். அதன் நன்றி கடனாக முரசொலி மாறன்எப்பொழுதும் கலைஞரிடம் மிகுந்த அன்பும், பாசமும், அளவு கடந்த மரியாதையும் வைத்து இருந்தார் என்பதை அனைவரும் அறிவர். முரசொலி மாறன் ஒருநாளும், ஒருபொழுதும் தமிழ்நாடு முதல் அமைச்சர்ஆக வேண்டும் எனவும், கலைஞரை விட நான் சிறந்த அறிவாளி என்றும் நடந்த கொள்ளவில்லை என்பதுதான் உண்மை. அவரை பொறுத்தவரை முழு கவனமும் டெல்லி மட்டுமே.

ஆனால் தயாநிதி மாறனும் (மறைமுகமாக கலாநிதி மாறனும்) செய்தது என்ன? கழக இயக்கத்தின் அடுத்த வாரிசு, தளபதி ஸ்டாலினை சற்று மட்டம் தட்டுவதுப் போல் நடந்து கொள்வதும், சூரியதொலைகாட்சியில் ஸ்டாலினை புறக்கணிப்பதும், எல்லாவற்றிக்கும் மேலாக மதுரையில் இருக்கும் அழகிரியை ரெளடி என்று சித்தரித்தும் நடந்த கொண்டதன் விளைவு இன்று தமிழகம் அறியும். அழகிரியின் சில செயல்கள் தவறாகவும், கண்டிக்க வேண்டியும் இருக்கலாம், ஆனால் கலைஞரின் இளமை கால வேகம், ஆற்றல், எந்த காரியத்தையும் முடிக்கும் செயல் அழகிரிக்கு இல்லை என்பதை மறுக்க முடியுமா? (எடுத்துகாட்டு தற்பொழுது மதுரை இடை தேர்தல்). அரசியலில் இப்படிப் பட்ட களத் தொண்டன், போராளி அழகிரிப் போல் தேவை என்ற காரணத்தாலே கலைஞரும் அமைதியாக இருக்கிறார். திமுக தொண்டனும் அழகிரியை ஏற்றுக் கொள்கிறான். அதிமுக கட்சிக்கு எந்த சம்மந்தமும் இல்லாமல் இருக்கும் சசிகலா அவரது கணவன் என்று சொல்லப் படுகிற நடராசனை அதிமுக தொண்டன் ஏற்று கொள்ளும் பொழுது, திமுக தொண்டன் அழகிரியை ஏற்று கொள்வதில் என்ன தவறு இருக்க முடியும்?!

சன் டிவி இல்லாமல் திமுகவால் வளர முடியாது என்றும், என் நண்பர்கள் கூட பலப்பேர் சொன்னார்கள்.திமுக என்ற மாபெரும் இயக்கம், ஓர் பொழுது போக்கு தொலைகாட்சி நிறுவனத்தை நம்பியா கட்சி நடத்தும்? திமுக மொழிப் போரில் வளர்ந்த இயக்கம். திமுக தந்தை பெரியாரின் கருத்துகளை கொண்ட இயக்கம். திமுக அறிஞர் அண்ணாவின் கொள்கைகளை கொண்ட இயக்கம். தமிழ் மொழிக்கு சிறப்பு சேர்க்கும் இந்த திமுக எப்படி சன் டிவி தயவு இல்லாமல் தோயந்து போகும்?

Free Image Hosting at <a href=www.ImageShack.us" />

அடிப்படை திமுகவின் பலம் தெரியாமல் கலைஞர் குடும்பத்துடன் விளையாடிதன் விளைவு இன்று மாறன் குடும்பம் கலைஞர் பேச மாட்டாரா? என்று தினமும் கலைஞர் வீட்டு முன் காத்து கிடக்கிறார்கள். வளர்த்த கடா மார்பில் பாய்ந்தாலும், இதனால் திமுக என்ற பேரியக்கம் மேலும் வலுவடைந்ததை சாரசரி திமுக தொண்டன் அறிவான். அதற்கு மாறன் சகோதரர்களுக்கு நன்றி.

அடுத்தது ஸ்டாலின். வரலாற்றை புரட்டி பார்த்தாலோ அல்லது மிக சிறந்த அரசியல் வாதிகளின் பிள்ளைகள் அவர்களை போலவே இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கலைஞரிடம் உள்ள எல்லாகுணங்களும் ஏன் அப்படியே ஸ்டாலினிடம் எதிர் பார்க்க வேண்டும். ஸ்டாலினுக்கு என்ன குறைச்சல்?நீண்ட காலங்களாக சட்டமன்ற உறுப்பினராக இருந்து இருக்கிறார். மாநகர தந்தையை மிகச் சிறப்பாக சேவை ஆற்றி இருக்கிறார். தற்பொழுது உள்ளாட்சித் துறை அமைச்சராக சிறப்பாக பணிச் செய்து வருகிறார். அரசியலில் நீண்ட அனுபவமும், நிதானமும் இருக்கிறது. எடுத்து காட்டுகாக நடந்த முடிந்த மாறன் சகோதரர் பிரச்சினையில் அவசரப் பட்டு எந்த பேட்டியோ, எந்த அறிக்கையோ விடவில்லை.அமைதி காத்தார். நிதானம் தவறாமல் இருந்தார். திமுக என்ற பேரியக்கம் தயாநிதி மாறனை தூக்கி எறிந்தது. தளபதி ஸ்டாலினுக்கு ஓர் வாய்ப்பு எப்படி தராமல் இருக்க முடியும்? அவர் ஒரு முறை முதல் அமைச்சர் ஆகட்டும், பிறகு விமர்சிக்கலாம். அவர் முதல் அமைச்சர் ஆவதற்கு முன்னாலே ஏன் இந்த எதிர்மறை சிந்தனை?! மக்கள் தலைவன் எம்ஜிஆருக்கு பிறகு ஜெவிற்கு என்ன தகுதி இருந்தது தமிழக முதல் அமைச்சர் ஆக, அதுவும் இரண்டு முறை!!! ஆக திமுக இயக்கத்தின் அடுத்த தலைவராக, அதை தொடர்ந்து ஸ்டாலின் முதல் அமைச்சர் ஆக முழு தகுதியும் அனுபவமும் உள்ளவர் என்றால் அது மிகைஅல்ல!

Free Image Hosting at www.ImageShack.us

ஓர் சாதாரண தினகரன் விசயத்தில் சாதூர்யமாக நடந்த கொள்ளத் தெரியாமல், மத்திய அமைச்சர் பதவி இழந்து காணப்படும் தயாநிதியால் எப்படி தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் ஆக முடியும்? திமுக தயவு இல்லாமல் அவரால் தமிழ் நாட்டில் தன்னுடைய சன் டிவி பலத்தாலும், பண பலத்தாலும்சட்ட மன்ற அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் ஆக முடியுமா?

தமிழினத்தின் ஒப்பற்ற தலைவர் கலைஞர் பெருமைகளையும், ஸ்டாலின் கரத்தை வலுபடுத்துவதும்ஓர் சாரசரி தமிழனாக திமுக ஆதரவளானாக எழுதுவது என் கடமை!!!

நன்றி
மயிலாடுதுறை சிவா...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது