Friday, March 26, 2010

2011ல் பாமக நிலை? மருத்துவர் இராமதாசுக்கு கடிதம்!

வாசிங்டன் மார்ச் 26 2010

மதிப்பிற்குரிய மருத்துவர் அய்யா அவர்களுக்கு

வணக்கம். நேற்று பென்னாநகரத்தில் "திமுக" வை அழிப்பதுதான் என் வேலை! என்று சொன்ன காரணத்தால் இந்த கடிதம்....

நேரிடையாக விசயத்திற்கு வந்து விடுகிறேன்.

நாளை நடைப் பெறும் தேர்தலில் நீங்கள் இரண்டாவது இடம் வந்தால் சக அரசியல் பார்வையாளாராக நான் மகிழ்ச்சி அடைவேன்.

ஒரு வேளை திமுக தோற்றுவிட்டால், சக திமுக அனுதாபியாக வருத்தப் படுவேன்.

நான் நீங்கள் சார்ந்து இருக்கும் சாதி இல்லை என்றாலும், (எனக்கு சாதிகளில் நம்பிக்கை இல்லை. நான் எனது வாழ்க்கையில் நான் சாதியை கடைப்பிடிப்பதும் இல்லை!) உங்கள் மீது மிகுந்த நம்பிக்கையும், மரியாதையும் வைத்துள்ளவன். அதற்கு சில காரணங்களை பட்டியலிட ஆசைப் படுகிறேன்.

நம் தொப்புள் கொடி உறவுள்ள ஈழ மக்களுக்கு நீங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருவது....

நம் தாய் மொழி தமிழுக்கும், தமிழிசைக்கும் நீங்கள் குரல் கொடுப்பது....

சளைக்காமல் தொடர்ந்து மது ஒழிப்பிற்காக போராடுவது...

தமிழ்நாட்டில் இளைஞர்களிடம் உள்ள சினிமா மோகத்தை குறைக்க போராடுவது....

வருடா வருடம் "மாதிரி பட்ஜெட்டில்" விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுப்பது....

ஓரளவு தந்தை பெரியாரின் பகுத்தறிவு கொள்கைகளை பிடித்து இருப்பது...

நான் பெரிதும் மதிக்கும் எங்கள் அண்ணன் தொல் திருமாவை (ஆரம்ப காலத்தில்) ஆதரித்தது....

இந்த தேர்தலில் பென்னாநகரத்தை நீங்கள் மிகவும் நம்ப காரணம் என்ன? உங்கள் சாதி ஓட்டுகள் தானே?! இந்த தேர்தலில் நீங்களும் பணம் நிறைய செலவு செய்தாக பல பத்திரிக்கைகள் கூறுகின்றனவே?

நடந்து முடிந்த நாடாளுமனற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் நீங்கள் வரலாறு காணத தோல்வியை அடைந்த பொழுதும்மீண்டும் இந்த தேர்தலில் போராடுவது பாராட்டுக்குரியது! ஆனால் இந்த தேர்தலில் தோல்வி பயம் இருக்கும் காரணத்தால்மக்கள் மனதில் என்றும் "பாமக" தான் என்று முன்னரே சொல்லி விட்டீர்கள்!

சென்ற நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் தனிப்பட்ட முறையில் எடுத்த முடிவை, உங்கள் கட்சியை கூட்டி, நிர்வாகிகள் எடுத்த முடிவு என்று சொல்லி "அதிமுக" சென்றீர்கள்? என்ன பலன்?! அம்மா உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தின் மீதும் "வழக்கு"போட்டதுதான் மிச்சம்!!!

நேற்று திமுகவை அழிப்பதுதான் உங்கள் லட்சியம் என்கீறீர்கள்! உங்களிடன் ஒரே ஒரு கேள்வி? இந்த இடைத்தேர்தலில்நீங்கள் இரண்டாவது இடமோ அல்லது வெற்றியோ பெற்று விட்டால், வரும் சட்டமன்ற தேர்தலில் 2011ல் திமுகவுடன்கூட்டணி வைக்க மாட்டேன் என்று என்ன நிச்சயம்?! ஆகையால் அவசரப் பட்டு "திமுக"வை அழிப்பதுதான் என் வேலை என்று சொல்லி என்ன பலன்?! மக்கள் இதனையும் மறந்து விடுவார்கள்! நானோ எனது குடும்பமோ அரசியல் பதவியில் ஈடுப்பட்டால்என்னை சவுக்கால் அடியுங்கள் என்று சொன்னதை மக்கள் மறந்ததை போல, பாவம் எங்கள் மக்கள் எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள்!

வருகிற சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய்காந்தை விருத்தாசலத்தில் முதலில் தோற்க அடித்துவிட்டு பிறகு "திமுக"வை அழிப்பது பற்றி யோசியுங்கள்!!!

2011 சட்டமன்ற தேர்தலில் உங்களின் நிலை என்ன?

வழக்கம் போல எங்கள் கலைஞர் மருத்துவர் அய்யாவும் நானும் கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு நண்பர்கள் என்று சொல்லி உங்களுக்கு 10 அல்லது 15 சீட்டுகள் கொடுத்து விடுவார்! உங்களுக்கு மீண்டும் 10 அல்லது 15 சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைத்துவிடுவார்கள்!!!

மயிலாடுதுறை சிவா...


Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Wednesday, March 03, 2010

நடிகை ரஞ்சிதாவின் நிலமை?


நடிகை ரஞ்சிதாவின் நிலமை?

வாசிங்டன். மார்ச் 03,2010
நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த வலைப் பூவை புதுப்பிக்கிறேன்.

கடந்த இரண்டு தினங்களாக தமிழகமும் (இந்தியாவிலும்) நித்யானந்தர் (ராஜசேகரன்) பற்றி எங்கும் பேச்சு.

சன் தொலைக்காட்சி "ர" என்ற நடிகை என்றும், நக்கீரன் "ரஞ்சிதா" என்றும் வெட்ட வெளிச்சமாக எல்லாம் வந்தாயிற்று. நிறைய இணைய தளங்களில் விடியோவும், புகைப் படங்களும் வந்துவிட்டன! கொஞ்ச நாட்களுக்கு இது ஓடும்!

கடந்த காலங்களில், தமிழ்நாட்டில் இதுப் போல பல பரபரப்பு சம்பவங்களை பார்த்தும் இன்னும் கொஞ்ச நாளில் மக்கள் அதனை மறந்து, அடுத்த பரபரப்புக்கு தயார் ஆகிவிடுவார்கள்!

நித்யாவை (ராஜசேகரனை) எந்த வழக்கில் கைது செய்ய முடியும் என்றும் அல்லது கைது செய்தாலும் கொஞ்ச நாட்களில் அவர் பிணையில் வந்து விடுவார். ஆனால் அவருக்கு இருக்கும் அசையும் அல்லது அசையா சொத்துக்கள் ஏராளம், பல கோடிகள் தேறும்! நிறைய பணங்களை பெற்றுக் கொண்டு ஏதாவது வக்கீல் வாதாடி அவரை வெளியே கொண்டு வந்து விடுவார், ஆனால் ரஞ்சிதாவின் நிலை?

ரஞ்சிதா திரைப் பட நடிகை, அதுவும் பாரதிராஜா அறிமுகம் வேறு! முன்னாள் சில பிரபல நடிகர்களுடன் நடித்தும், பேசியும், பழகியும் இருப்பார். தற்பொழுது சின்னத் திரையிலும் நடித்துக் கொண்டு இருக்கிறார். இவர் மயங்கும் அளவிற்கு நித்யாவின் பேச்சு (போதனைகள்) இருந்து இருக்குமா? நித்யா ஒன்றும் பார்ப்பதற்கு லட்சணமாக இல்லை! எப்படி இவரிடம் ரஞ்சிதா மயங்கினார் அல்லது அடிமையானார்? ரஞ்சிதாவிற்கு எப்படி நித்யாவின் தொடர்பு ஏற்பட்டு இருக்கும்? அவரிடம் இருக்கும் ஏராளமான சொத்துகள் ரஞ்சிதாவை மயக்கி இருக்குமா?

இவர்களுடைய விடியோ தொகுப்பை பார்க்கும் பொழுது, கணவன் மனைவி அன்பை விட, இதில் மிக மிக பாசமாக நடந்து கொள்வதும், அவரை அப்படி பார்த்து கொள்கிறார்! எல்லாவற்றிக்கும் பணம் ஒன்றுதான் காரணமாக இருந்து இருக்குமா? ரஞ்சிதாவிற்கு ஏராளமான நகைகள், பணங்கள், கார், வீடு நித்யா கொடுத்து இருப்பாரா?

இதனை நான் எழுத காரணம், என் நண்பர் ஒருவர் அநேகமாக ரஞ்சிதா தற்கொலை செய்து கொள்வார்! என்றார். இதுவரை இதனை ஏதோ ஜாலியான மனப் போக்கில் பார்த்த நான், ரஞ்சிதா தற்கொலை செய்து கொள்வார் என்றதும், மனம் ஏனோ சற்று வருத்தம் அடைய செய்தது.

இனிமேல் அவர் தொடர்ந்து நடிக்க முடியுமா? அல்லது தமிழகத்தில் வாழதான் முடியுமா? ரஞ்சிதா இவற்றின் நினைவுகளில் இருந்து எப்படி மீண்டு வருவார்? நடிகை ரஞ்சிதாவிற்கு ஒரு பையன் இருக்கிறான் (சரியாக தெரியவில்லை) என்று நினைக்கிறேன். இந்த பையனின் நிலமை என்ன? அந்த பையனின் எதிர் காலம் என்னவாகும்?

எத்தனையோ நடிகைகள் அல்லது குடும்ப பெண்கள் அல்லது விலை மாதுக்கள் இதுப் போன்ற லீலைகளை தினம் செய்து வந்தாலும், இவர் திரைப் பட நடிகை என்பதாலும், பிரபல சாமியாருடன் தொடர்பு ஏற்படுத்தி இருப்பதாலும் இந்த பரபரப்பு செய்திகள்! இவற்றிக்கு அப்பாற்பட்டு ரஞ்சிதா என்ற பெண்ணின் நிலை என்னவாகும்? எல்லா தவறுக்கும் இவரின் ஆசையே காரணமாக இருந்து இருந்தாலும், இவர் இப்படி நித்யா என்ற போலி சாமியார் வாயிலாக தன் வாழ்க்கை இப்படி அடியோடு மாறும் என்று எதிர் பார்த்து இருப்பாரா?


மயிலாடுதுறை சிவா...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது