Tuesday, June 19, 2007

சிவமணி Drums வாசிங்டன்னில்...

வாசிங்டன். சூன். 17, 2007.

வெர்ஜினியாவில் உள்ள சிறந்த பல்கலைகழகங்களுள் ஒன்றான GeorgeMason Patriotic Center ல் A R ரஹ்மானின் கச்சேரி நடைப் பெற்றது. 4 ஆண்டுகளுக்கு முன்பே கனடாவில் பார்த்தும் கேட்டும் இருந்ததால் பெரிய எதிர்பார்ப்பு ஒன்றும் அவ்வளவாக இல்லை. மேலும் நிறைய ஹிந்தி பாட்டு பாடியதால் கொஞ்சம் ஆர்வ குறையோடுதான் சென்றேன். அரங்கம் பிரமாண்டமாய் காட்சி அளித்தது. கிட்டதட்ட 10,000 பேர்கள் உள்ளே அமரலாம். இந்த இசைக் கச்சேரிக்கு கிட்டதட்ட 6000 பேர்கள் வந்து இருந்தார்கள். நம் தமிழன் ஒருவனுக்கு இவ்வளவு மக்கள் கூடுகிறார்கள் என்று நினைத்து பார்க்கவே மனம் எல்லை இல்லா ஆனந்தம் அடைந்தது,அதுவும் வெளிநாட்டில். 35 மற்றும் 50 வெள்ளிகள் சீட்டுகள் முன்பே விற்று தீர்ந்து இருந்தாலும், 75 மற்றும் 100 வெள்ளிகளுக்கு மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கி உள்ளே வந்தார்கள். தமிழர்கள், ஹிந்தி மக்கள் மிக அதிகம். கொஞ்சம் தெலுங்கு மற்றும் மலையாளம்.

முதல் பாடலே எதிர்பார்த்தப் படி ஹிந்திதான். மருந்துக்கு கூட AR ரஹ்மான் தமிழில் பேச வில்லை. மனம் வருத்தப் பட்டது. அழுகு தமிழில் "எல்லோருக்கும் வணக்கம்" அல்லது "நன்றி" என்று சொல்லி இருந்தால் பழாய் போன மனம் மகிழ்ச்சி அடைந்து இருக்கும். தமிழால்
முன்னேறி இருந்தும் தமிழை பாராட்ட அவருக்கு மனம் இல்லை!!!

Free Image Hosting at www.ImageShack.us

மிகப் பெரிய இசைவிழாவில் அனைவரையும் கவர்ந்த ஓர் ஒட்டுமொத்த கலைஞன் "Drums சிவமணி" கலக்கல், சூப்பர், பின்னிவிட்டார், கலக்கிபுட்டார், ரைடு விட்டார், பிரமாண்டம், இப்படி சொல்லி கொண்டே போகலாம். சிவமணி நம் தமிழ்நாட்டு தமிழர். உலக அரங்கில் ஏகப்பட்ட ரசிகர்களுக்கு சொந்தகாரர். 3 மணிநேர கச்சேரியில் அவருக்கு தனி ஆவர்த்தணமாக கிட்டதட்ட 20 நிமிடம் கொடுத்ததை மிக அருமையாக பயன் படுத்திக் கொண்டார். எப்படி சொல்வது? எதனை சொல்வது? அவரிடம் இருந்த அனைத்துவிதமான கருவிகளை பயன்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தார் என்றால் அதுமிகை அல்ல. அரங்கத்தில் உள்ள பலரை இருக்கையில் இருந்து எழுந்து ஆட வைத்தார் தன்னுடைய அசாத்திய திறமையால். கல்யாண வீட்டில் வாசிக்கும் நாதஸ்வரத்தைப் போல, குத்துப் பாட்டு உடுக்கைப் போல, திரைக் காட்சியில் வரும் பிரமாண்ட பிண்ணனி இசைப் போல அரங்கத்தை அதிர செய்தார் சிவமணி அவர்கள். கொடுத்த காசுக்கு சிவமணியின் அந்த ஆனந்த இரைச்சல் மனதிற்கு மிகுந்த மன நிறைவை தந்தது. Drumsல் அவரின் கைகள் நடனம் ஆடின. உக்கரத்தின் வெளிபாட்டில் அரங்கில் உள்ளவர்கள் மெய் மறந்து "We want SivMani, We want SivaMani" என்று கத்தி கூப்பாடு போட்டார்கள். வாழ்க நம் தமிழர் சிவமணி, வளர்க அவரின் கலை!

விழாத் துளிகள்!

ரஹ்மான் கடைசியாக "அந்த அரபி கடலோரம்" பாடலை கலக்கலாக பாடினார். முடிவில் தாய் மண்ணே வணக்கம் என்ற பாடலையும் நன்கு பாடினார்.

ஹரிஹரன் "வெண்ணிலவே வெண்ணிலவே" என்ற பாடலையும் (தமிழிலும் தெலுங்கிலும்), குறுக்கு சிறுத்தவளேயும், சிவாஜில் வாஜி சிவாஜி பாடி அசத்தினார். வழக்கம் போல் கொஞ்சம் அலட்டிக் கொண்டார்.

அரங்கத்தில் அனைவரும் ரசித்த மற்றொருப் பாடல் "தைய தைய" என்ற பாடல் ரஹ்மான் குழுவினார்கள் பாடி அசத்தினார்கள்.

விஜய் யேசுதாஸ் "சஹானா" என்ற பாடலைப் பாடினார்.

ஹிந்தியில் "Taal" "Guru" "Renthe PasanDe" படப் பாடல்கள் பாடினார்கள்.

மொத்ததில் இசை விழா பிரமாண்டமாய் சிறப்பாக இருந்தது. விழா முடியும் பொழுது ஞாயிறு இரவு 11.30 மணி, வீட்டிற்கு வந்த பொழுது நடு இரவு 12.30 மணி. இன்னமும் சிவமணியின் தனித்துவத்தை நினைக்கும் பொழுது மனம் மகிழ்ச்சி அடைகிறது.....

நன்றி

மயிலாடுதுறை சிவா....

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது