Monday, November 28, 2005

நடிகர் கமலின் தைரியம்...

நேற்று சன் தொலைகாட்சியில் எஸ்ட்ஸ் விழிப்புணர்விற்காக Hyderabadல் நடந்த விழாவில் கமல் வழக்கம் போல் அருமையாக பேசினார். நான் எப்பொழுதும் கமல் நடிப்பைவிட அவருடைய பேச்சு மற்றும் பேட்டிகளை விரும்பி படிப்பது வழக்கம்.

Hollywood நடிகர் Richard Gere எஸ்ட்ஸ் விழிப்புணர்விற்காக உலகம் முழுவதும் சென்று பொதுமக்களிடையே சமுதாய மற்றும் இந்த நோயின் தன்மை பற்றியும் இதனை எப்படி தடுப்பது என்பது பற்றியும் சொல்லிவருகிறார்.

அதுப்போல் இந்தியாவந்த பொழுது நடிகர் கமல், சன் தொலைகாட்சி நிறுவனர் கலாநிதிமாறன், நடிகர் சீரஞ்சிவி எல்லோரையும் பார்த்து பேசினார். கமலை தொடர்பு கொண்ட பொழுது அதற்கு
ஒத்துழைப்பு நிச்சயம் கொடுப்பேன் என்றார்.

ஆனால் கமல் அதனை பற்றி சொல்லும் பொழுது, Richard Gere என்னை தொடர்பு கொண்ட பொழுது அதனை நினைத்து வருத்தப் பட்டேன், எப்படி ஓர் வெளிநாட்டு நபருக்கு உள்ள அக்கறை எனக்கு
இல்லாமல் போயிற்று? என்று ஆதங்கப் பட்டதாக சொன்னார்.

நான் எந்த மேடைக்கு சென்றாலும் கொஞ்சம் தயார்படுத்தி கொண்டு செல்லுவேன், ஆனால் இங்கு அப்படி வரவில்லை என்றார். காரணம் "கலையின் மீது உள்ள மரியாதை" மற்றும் "ரசிகர்களின் எதிர்
பார்ப்பு" என்றார்.

கமல் மேலும் இந்தியாவின் மக்கள்தொகை 100 கோடி ஆனதற்கு சாமி/கடவுள் மட்டும் காரணம் அல்ல, நிச்சயம் செக்ஸ்தான் காரணம் என்றார். அதுப் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்
என்றார்.

அடுத்து அவர் பேசியவிதத்தில்தான் கமல் கலக்குகிறார். "ராமரே" என்றாலும் எஸ்ட்ஸ் வர வாய்ப்பு நிச்சயம் என்றார். இப்படி பேசுவதற்கு பெரியவர்கள் கோவித்து கொள்ள கூடாது. நான் அவை அடக்கம் பார்க்கவில்லை என்றார்.


"ராமரை" தெய்வமாக போற்றுகின்ற மக்கள் இடத்து இந்த கருத்தை பயப்படாமல் சொல்லும் கமலின் தைரியத்தை பாராட்டதான் வேண்டும். நல்ல வேளை இதனை பிஜேபியும், இந்து கட்சிகளும் சரியாக கவனித்து கொள்ளவில்லை. இல்லாவிடில் குஷ்பு, சுகாசினி கதி கமலுக்கு ஏற்பட்டு இருக்குமோ?

நன்றி
மயிலாடுதுறை சிவா...





Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது