Tuesday, July 10, 2007

அப்துல் கலாம் தகுதியானவர் அல்ல! - ஞானி (நன்றி விகடன்)

வாசிங்டன். இதேப் போல நண்பர் தமிழ்சசி ஏற்கனவே மிக அருமையான பதிவு எழுதி இருந்தார். அதேப் போல கருத்து கொண்ட மிகச் சிறந்த எழுத்தாளர் ஞானியிடம் இருந்து விகடனில் ஓர் கட்டுரை.

நன்றி விகடன்
நன்றி ஞானி


புதிர் 1: அப்துல் கலாம்

இணைய தளத்திலும் ஆங்கிலப் பத்திரிகைகளிலும் ‘அடுத்த ஜனாதிபதியாக வரும் தகுதி உடைய ஒரே மனிதர் அப்துல்கலாம்தான்; ஆனால், அவரை நம் கேடுகெட்ட, இழிவான அரசியல்வாதிகள் வரவிட மாட்டார்கள். இளைய தலைமுறையின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் கலாம்’ என்று நடக்கும் பிரசாரம் பெரும் புதிராக இருக்கிறது. இதே Ôகேடுகெட்ட, இழிவான அரசியல்வாதிÕகள்தான் கலாமை முதலில் ஜனாதிபதியாக்கினார்கள் என்பதையே இந்தப் பிரசாரகர்கள் வசதியாக மறந்துவிடுகிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை, கலாம் ஜனாதிபதி பதவிக்குத் தகுதியான-வரே அல்ல! காரணம், அவர் இந்தியாவை மேலும் மேலும் ராணுவமய-மாக்கிய விஞ்ஞானத் துறை நிர்வாகி என்பதுதான். அடிப்படை மருத்துவ வசதியும் கல்வியும் இல்லாத கோடிக்கணக்கான ஏழைகள் வாழும் நாட்டில், கோடிக்கணக்-கான ரூபாய்களை ராணுவத்-துக்குச் செலவிடுவது சமூக விரோதச் செயல் என்பது என் தீர்மானமான கருத்து. வல்லரசு, வல்லரசு என்பதுதான் அவருடைய ஓயாத பல்லவி.

எங்கு சென்றாலும் மாணவ&மாணவிகளைக் கூட்டிவைத்துக்-கொண்டு பேசும் அபாரமான பொதுஜனத் தொடர்பு உத்தியை அவர் வெற்றிகரமாகக் கையாண்டு, இளைய தலைமுறையின் ஹீரோ என்ற பட்டத்தைப் பெற்றார். இது அவருக்கு ஒரு வசதியான முகமூடியாக அமைந்தது; அவ்வளவுதான்!
அவருடன் நேரில் உரையாடிய பிறகு, தங்கள் ஹீரோ வொர்ஷிப் பாவனையி-லிருந்து வெளியே வந்துவிட்ட கல்லூரி மாணவர்களை நான் பார்த்தேன். பாரதிதாசன் பல்-கலைக்கழக இளைஞர்-களுடன் அவரைச் சந்திக்கச் சென்றபோது, சந்திப்புக்கு முன் பரவசமாக இருந்தவர்கள் எல்லாரும், பின்னர் ஏமாற்றம் தெரிவித்தார்கள். சந்திப்புக்குப் பின் அந்த இளைஞர்களை வசீகரித்த வி.ஐ.பி. கிரண் பேடி.

உண்மையில், குழந்தைகளின் பள்ளிக் கல்வி முதல் கல்லூரிக் கல்வி வரை எதுவும் அப்துல் கலாமால் அரை அங்குலம்கூட மாற்றியமைக்கப் படவில்லை. தாய்மொழியில் கல்வி கற்பிக்கப்பட-லாமா, கூடாதா? தொழிற் படிப்புக்கு நுழைவுத் தேர்வு சரியா, தவறா? நன்கொடை என்ற பெயரில் கொள்ளை- அடிக்கும் கல்வி நிறுவனங்கள் மீது எப்படி நடவடிக்கை எடுப்பது? சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு, மேற்படிப்பில் தேவையா, இல்லையா? இப்படிக் கல்வி சார்ந்த மிக முக்கியமான எரியும் பிரச்னைகள் எதைப் பற்றியும் அவர் தீர்மானமாகக் கருத்துச் சொன்னதே இல்லை.

தாங்கள் விரும்பும் முஸ்லிம்கள் எப்படி இருக்க வேண்டும் என்று காட்டுவதற்காக பி.ஜே.பி. முன்னிறுத்திய இஸ்லாமியர் அவர். இந்து& முஸ்லிம் பிரச்னை பற்றியும் அவர் கருத்து தெரிவித்ததில்லை. தமிழகத்தில் சுனாமி பாதிப்பை நேரில் காண அவர் வரவில்லை. ஜெயேந்திரர் கைதின்போது அவரை வீட்டுச் சிறையில் மட்டும் வைக்க முடியுமா என்று அவர் அலுவலகத்தி-லிருந்து அன்றைய தமிழக அரசுக்குப் பல மன்றாடல் கோரிக்கைகள் வந்த-தாக, அப்போது பத்திரிகைகளில் வெளியாகியிருக்கிறது.

தற்போ-தைய ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பல முறை Ôதிரும்பப் போட்டியிட விருப்ப-மில்லைÕ என்று சொல்லி வந்தவர், ஜெயலலிதாவின் மூன்றாம் அணி முயற்சியின்போது, Ôஜெயிப்பது நிச்சயம் என்று இருந்தால், தயார்Õ என்று சொன்னது அவருடைய சலனத்தை வெளிப்படுத்தியது.
அப்துல் கலாம் எப்படி ஒரு Ôஐகான்Õ ஆக இளைய சமுதாயத்-துக்கு இருக்கிறார் என்பது எனக்கு இன்னமும் புதிர்தான்.


நன்றி விகடன்

நன்றி ஞானி


தொகுப்பு

மயிலாடுதுறை சிவா....

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, July 03, 2007

சென்னையில் சிறார் சங்கமம்

வாசிங்டன், சூலை 03, 2007

சங்கமம் வெற்றிக்குப் பிறகு சென்னையில் குழந்தைகளுக்கான மாபெரும் விளையாட்டு திருவிழா.

உங்கள் குழந்தைகளை, நண்பர்களை, உறவினர்களை குடும்பத்தோடு சூலை 3 முதல் 8 வரை நடக்கும் இந்த விழாவிற்கு சென்று ஆதரவு கொடுங்கள்...

குழந்தைகளுக்கு பல்லாங்குழி, ஆடுபுலி ஆட்டம், கோலி, பரமபதம், சிந்தனையை தூண்டும் மற்ற விளையாட்டுகள்,மனநலம் ஆலோசனைகள், இசை, நடனம், நாட்டியம் இப்படி இன்னும் பல...

நீங்கள் செலவிடும் அத்தனை நிதிகளும் ஏழை குழந்தைகளின் படிப்பிற்காகா செலவிட படுகிறது என்பது மற்றும் ஓரு இனிப்பான செய்தி....
(Give Life - Education of poor children)

மேலும் விவரங்கள் இங்கே.....

Chennai Trade Center, Nandambakkam.

3rd July
05.00 P.MStory Telling- Shri.Vela Ramamurthy
06.20 P.MMusic presentation-Thisai.Jerry&Group
07.00P.MMegathootam (play)

4th July
05.00 P.MStory Telling
06.30 P.MDevalogayanai& Alli Malai (Play)
07.30 P.MFolk Performance

5th July
05.00 P.MStory Telling
06.30 P.M Vaali Vatham (Play)
07.30 P.MFolk Performance

6th July
05.00 P.MStory Telling
06.30 P.M Don?t cook Cindrella, a comedy
07.15 P.MBook release on children folklore-Mr.Simon
07.45 P.MFolk Performance

7th July
05.00 P.MStory Telling
06.30 P.MFashion show
07.30 P.MBhararthnatyam-Avigna

8th July
05.00 P.MStory Telling
06.00 P.MValedictry function
06.45 P.MFashion show
07.45 P.MNetrum indrum(Play)

நன்றி

மயிலாடுதுறை சிவா....

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது