Monday, December 20, 2004

அமெரிக்க அனுபவங்கள்

வாழ்க்கையில் ஏற்படும் எல்லா நிகழ்ச்சிகளும் ஒவ்வோரு அனுபவங்களே. எனக்கு இந்த அமெரிக்க மண் எண்ணற்ற, ஏராளமான அனுபவங்களை கற்றுக் கொடுக்கிறது. அதுவும் குறிப்பாக எனக்கு தமிழ்ச் சங்கம், அமெரிக்க தமிழ்ச் சங்க பேரவை, உலக தமிழ் அமைப்பு இவற்றோடு நல்ல பல அனுபவங்கள். நல்ல பல அரசியல்வாதிகள், திரைப்படத் துறையைச் சார்ந்தவர்களோடு ஏற்பட்ட அனுபவத்தை உங்களோடுப் பகிர்ந்துக் கொள்ள ஆசைப் படுகிறேன். காலம் எனக்கு இப்படிப் பட்ட நல்ல உள்ளங்களோடு பழக கூடிய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்ததை எண்ணி எண்ணி பிரமித்துப் போய் இருக்கிறேன். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு இந்த வலைப் பூவில் இடம் பெறும்.
நன்றி...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

அறிமுகம்

எனதுப் பெயர் சிவா. பிறந்தது, வளர்ந்துக் கொண்டே, படித்தது, வேலைப் பார்த்தது எல்லாமேகாவேரி அன்னை ஒடும் மயிலாடுதுறையில். கால ஓட்டத்தின் பிடியில் தற்போழுது வசிப்பதுஅமெரிக்க தலைநகர் வாசிங்டன்னில். என் வாழ்க்கையில் நடந்தப் பல சுவையான பல நல்லசில சமயம் கெட்ட அனுபவங்களின் தொகுப்பு இந்த வலைப் பூவில் இடம் பெறும்.
நன்றி...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

மணிக் கூண்டு

மயிலாடுதுறை - எனது வாழ்வில் இரண்டற கலந்துவிட்ட ஊர். உலக நாடுகள் எங்கு சென்றாலும்வசித்தாலும் அது எப்படிப் பிறந்த ஊரின் மேல் எண்ணற்ற ஏராளமான உணர்வுகள், ஏக்கங்கள், சிந்தனைகள்? அதுவும் தாய் மண்ணைவிட்டு பல மைல்கள் தூரம் பிரிந்து இருக்கும் பொழுது அதன் மேல் ஏற்படும் உணர்வுகளை வார்த்தையில் எப்படி சொல்வது அல்லது வடிப்பது?

மயிலாடுதுறை என்றாலே எனக்கு முதலில் நினைவில் வருவது "மணிக்கூண்டு". இந்த மணிக் கூண்டைசுற்றிதான் முக்கியமான கடைவீதிகள், வியாபார கடைகள் எல்லாமே. எனது நண்பர்கள் பலரின்வியாபாரம் முழுக்க இந்த மணிக் கூண்டைச் சுற்றிதான் உள்ளன.

இந்த மணிக் கூண்டில் மிகப் பெரிய கடிகாரம் ஒன்று அதன் மேலை இணைக்கப் பட்டிருக்கும். இந்த மணிக் கூண்டுதான் மயிலாடுதுறையின் நினைவுச் சின்னம். ஆகையால் இதன் பெயரிலே இந்த வலைப் பூவை எழத திட்டம்.
நன்றி...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது