Friday, February 08, 2008

ஜெயகாந்தனுக்கு உதவிய கலைஞர்!


நன்றி : தினமலர் புகைப்படத்திற்கு
வாழும் எங்களின் தமிழின் முகவரியை பலமுறை தவறாக பேசிய, மற்றும் திராவிட அரசியலை பலமுறை தவறாக பேசிய ஜெயகாந்தனுக்கு உதவிய தலைவர் கலைஞர் வாழ்க பல்லாண்டு! சென்ற ஆண்டு அவரின் மகனுக்கு அரசு வேலை கொடுத்ததிற்கும் உன்னை பாராட்ட வார்த்தைகள் இல்லை!
குணநலஞ் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத் துள்ளதூஉ மன்று. (99, சான்றாண்மை)
நற்பண்பு ஒன்றே சான்றோருக்கு அழகாம்.
வேறு எந்த அழகும் அழகல்ல.
நன்றி
மயிலாடுதுறை சிவா...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Friday, February 01, 2008

மயிலாடுதுறை பற்றி...முதல் பதிவு....


வாசிங்டன். பிப் 01. கடந்த வாரம் நல்லபடியாக தமிழகம் சென்று வந்தாகிவிட்டது. இரண்டுமாதம் முன்பு வலது கையில் அடிப்பட்ட காரணத்தால் ஏதுவும் எழுத முடியாமல் போய்விட்டது. இப்பொழுது


சற்று பரவாயில்லை, கொஞ்சம் கொஞ்சமாக எழுத ஆரம்பித்து விட்டேன்.





இந்த முதல் பதிவு என் ஆசானுக்கு...இவரிடம் படித்து கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும் இன்னமும் என் மனதில் இவரின் பசுமையான நினைவுகள். பழக ஓர் இனிமையான மனிதர். இவர் திட்டுவதும் ஓர் தனி சுகம். எப்படி இவரை பாராட்டுவது? இவர் ஆங்கிலம் மற்றும் கணக்கும் நடத்தும் விதமும் ஆஹா! எப்படி சொல்வது?!இவருக்கு வயது கிட்டதட்ட 72, இயற்கையின் தயவால் மிக ஆரோக்கியமாக இருக்கிறார்.



என் வி அய்யா வாழ்க பல்லாண்டு...



உங்கள் மாணவன்


மயிலாடுதுறை சிவா...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது