தொல் திருமா - திமுக கூட்டணிக்கு ஆதரவு...
செப்டம்பர் 27 2006வாசிங்டன் காலை 10.30 மணி, தமிழகம் நேரம் இரவு 8.00 மணிசன் தொலைகாட்சியில் அண்ணன் தொல் திருமா திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தாக நண்பர்கள் தொலைப் பேசியில் சொன்னார்கள்.திருமா ஆதரவு திமுக கூட்டணிக்கு மேலும் பலத்தை தேடித் தரட்டும்.தேர்தலுக்கு முன்பே வந்து இருந்தால் அண்ணன் மேலும் 3 அல்லது 4 சட்டமன்ற உறுப்பினர்கள் வந்து இருக்கலாம். பரவாயில்லை...திருமாவின் கனல் வீச்சு, உரை வீச்சு தலித் மக்கள் விடுதலைக்கும், தமிழ் மொழிக்கும், ஈழ மக்களின் ஆதரவிற்கும், தமிழ் பாதுகாப்பு இயக்கத்திற்கும் மேலும் மேலும் வலு சேர்க்கட்டும். தொல் திருமா திமுக கூட்டணிக்கு வருகை ஓர் புத்துணர்ச்சியை தரட்டும். நன்றிமயிலாடுதுறை சிவா....
‘‘ரஜினியும் பெரியார் பக்தர்தான்!’’ - நன்றி விகடன்
நன்றி : ஆனந்த விகடன்.
வேலு இயக்குனர் ரஜினியை மிக காட்டமாக விமர்சனம் செய்தவர். கடவுள் என்ற நல்ல திரைப்படத்தை கொடுத்தவர். இந்த பேட்டி எனக்கு மிக ஆச்சரியத்தை கொடுத்தது. ரஜினிக்கு மனப் பூர்வமான பாராட்டுகள்!!!
நன்றி
மயிலாடுதுறை சிவா...
***********************************************************************
வெளிவராத இன்னொரு முகம்!
‘‘நிஜமாகவே ரஜினி எங்கே வருவார், எப்போ வருவார்னு தெரியாது. ஆனா, வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவார். தரணும்னு நினைக்-கிறதைக் கண்டிப்பா தருவார். அவரை இப்போதான் முழுசா புரிஞ்சுக்கிட்டேன். நம்ம ஊர்ல நல்லவங்களை எப்பவும் லேட்டாத்தானே புரிஞ்சுக்க முடி-யுது..!’’&நெகிழ்கிறார் இயக்குநர் வேலு பிரபாகரன். சில வருடங்களுக்கு முன்பு, தமிழக அரசு விருது வழங்கும் மேடையில் பெரியார் பற்றி ரஜினி சில கருத்துக்களைச் சொல்லப்போக, பதிலுக்கு அவரைத் தன் அறிக்கைகள், பேட்டிகள், பேச்சுக்களால் கிழி கிழியெனக் கிழித்-தவர் வேலு பிர-பாகரன். வேறு பல சர்ச்சைகளின்போதும், ரஜினியைப் பற்றிய காட்டமான விமர்சனங்களை முன்வைத்து சலசலப்பு ஏற்படுத்தியவர். அந்த வேலு பிரபாகரனா இப்படி?!
‘‘ஆமா! என் அளவுக்குக் காட்டமாக ரஜினியை யாரும் விமர்சிச்சிருப்-பாங்-களான்னு தெரியலை. அந்த நேரத்தில் அவரைப் பற்றி எனக்கு தெரிந்த பிம்பத்தைவைத்து அப்படிப் பேசினேன். காலம்தான் கற்றுத் தருகிற குரு என்பார்கள். அது என் விஷயத்தில் உண்மை. நான் பின்பற்றும் அடிப்படை பெரியாரிஸ கொள்கைகள் மாறவில்லை. இனியும் மாறாது. ஆனால், மனிதர்கள் பற்றிய மதிப்பீடுகள் மாறியிருக்கு. யார் உண்மை, யார் போலி என்பதை என் வாழ்க்கை இப்போது எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது!’’ & படபடவெனப் பொரிகிறார் வேலு பிரபாகரன்.
‘‘இப்போது, பெரியாராக முழு நீளப் படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார் சத்யராஜ். ஞான.ராஜசேகரன் எடுத்துக்கொண்டு இருக்கும் ‘பெரியார்’ படத்-தில் கடவுள் மறுப்புக் கொள்கை மட்டும் இல்-லாமல், அவரது மற்ற பக்கங்களையும் சொல்லப் போகி-றார்கள் என்று கேள்விப்பட்டேன். படம் வந்த பிறகு அதைப் பற்றிப் பேசுவதுதான் சரி. ஆனால் அதற்கு முன்பே நான், பெரியாரின் உயிர்நாடியான கடவுள் மறுப்புக் கொள்கையை மட்டுமே வைத்து ‘காதல் அர--ங்கம்’ என்ற படத்தை எடுத்திருக்கிறேன். அதில் நான் பெரியார் வேடத்திலேயே வந்து அவர் கருத்துக்களைப் பேசுகிறேன்.
ஆனால், படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை. அவ்வளவு பொருளாதாரப் பிரச்னைகள்! எவ்வளவோ பேரிடம் உதவி கேட்டேன். கதையைக் கேட்டு நெகிழ்ந்தவர்கள், பணம் என்றதும் விலகி ஓடிவிட்டார்கள்.
இந்த நெருக்கடியான சமயத்தில்தான் ரஜினியைச் சந்திக்க நேர்ந்தது. அந்த மனுஷனை எவ்வளவோ எதிர்த்--துப் பேசியிருக்கிறேன். அறிக்கைப் போர் நடத்தி மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கிறேன். ஆனால், அதையெல்லாம் மறந்து, என்னைப் பார்த்த கணத்தி-லேயே, ‘உங்க படம் என்-னாச்சு வேலு?’ என்று உண்-மையான கலைஞனின் அக்கறையோடு கேட்டார். அத்தனை பிரச்னைகளையும் கொட்டித் தீர்த்-தேன். என் கண்களை நேருக்கு நேராக உற்றுப் பார்த்---தவர், ‘சொல்லுங்க வேலு... நான் என்ன பண்ணணும்?’னு கேட்டார். ‘நீங்க லேபுக்கு போன் பண்ணி, படம் ரிலீஸானதும் வேலு பிர-பாகரன் பணத்தைச் சரியா கொடுத்திடுவார்’னு ஒரு உறுதி மொழி மட்டும் கொடுங்க, போதும்’ என்றேன். ‘அதெல்லாம் எதுக்கு? எவ்வளவு பணம் வேணும், சொல்லுங்க... நான் தர்றேன். எனக்குப் பெரியாரைப் பிடிக்கும். எவ்ளோ பெரிய மனுஷன். அவரைப் பத்தின படம், ஜனங்க பார்வைக்கு வந்தே ஆகணும்’ என்றார். நான் தொகையைச் சொன்னதும் அங்கேயே, அப்போதே அவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்து உதவினார் ரஜினி.
ஆடிப்போய்விட்டேன். வள்ளலாரின் சமாதிக்குப் போனபோது, தனிமனிதனுக்குச் செய்யும் மரியாதையாக எண்ணி, மறுக்காமல் நெற்றியில் விபூதி பூசிப்போன பெரியாரின் கடல் போன்ற குணத்தை ரஜினியிடம் அன்று நான் பார்த்தேன்.
மனசுவிட்டுச் சொல்கிறேன்... பெரியாரின் பேரையே நித்தமும் சொல்லிக்கொண்டு இருப்ப வர்களிடம் என் சினிமா கனவுக்காக மூன்று லட்சம் ரூபாயைக் கடனாக வாங்கினேன். என் வீட்டின் பேரில்தான் அதை வாங்கினேன். அதற்குக் கட்டிய வட்டியிலேயே வீடு மூழ்கிப் போனது. என் வீட்டை அபகரித்துக்கொண்டது அந்த அமைப்பு. முழு ஆன்மிகவாதியான ரஜினியோ பகுத்தறிவைப் பரப்பும் எனக்கு எந்த நிபந்தனையும் இல்லாமல் மிகப் பெரிய தொகையைக் கொடுத்திருக்கிறார்.
Ôகடவுளை மற... மனிதனை நினைÕ என்றார் பெரியார். ரஜினி, என்னைப் போன்ற மனிதனை நினைத்திருக்கிறார். ஆன்மிகவாதி என்று மட்டுமே பார்க்கப்படுகிற அந்த நல்ல மனிதருடைய இன்னொரு அற்புதமான முகத்தை தமிழ்நாட்டுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பதால்தான் இப்போது உங்களிடம் இதையெல்லாம் சொல்கிறேன்!’’ என்கிறார் வேலு பிரபாகரன் நெகிழ்ச்சி கொப்பளிக்கும் குரலில்!
நன்றி : விகடன் : நா.கதிர்வேலன்
அறிஞர் அண்ணா பிறந்த தினம் (செப் 15)
* திராவிட இயக்கத்தின் தூணாக விளங்கியது.* "தமிழ்நாடு" என்று நம் மாநிலத்திற்கு பெயர் சூட்டியது.* சுயமரியாதைத் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வாங்கி தந்தது.* முதன் முதலில் ஏழைகளுக்கு "படியரசி" வழங்கியது. * நம் அன்னை தமிழில் சிறப்பாக உவமைகளோடு உரையாற்றியது.* உன் கட்சி வேட்பாளர் "காமராசரை" தோற்க அடித்த பொழுது வருந்தியது.* கடவுள் மறுப்பு கோட்பாட்டில் வளர்ந்தது.* பெரியாரின் உண்மையான சீடனாக இருந்து, நீ முதல் அமைச்சர் ஆனவுடன் பெரியாருக்கு காணிக்கை ஆக்கியது.* பிறர் கருத்துக்கு பெரும் மதிப்பு கொடுத்த பண்பாக இருந்தது. இப்படி எத்தனை எத்தனை பண்புகள் உன்னிடம் பாராட்ட...
அண்ணாவின் புகழ் ஓங்குக!!!
நன்றி
மயிலாடுதுறை சிவா...
மகாகவி பாரதிக்கு அஞ்சலி (செப் 12)
செப் 12 2006

தீண்டாமை என்ற பழமை வாதத்தைக் கட்டறுத்துவிட கங்கணங்கட்டி நின்றவர் பாரதி. அதற்கு தன்னையே முன் நிறுத்திச் செயல்பட்ட பாரதியின் பேராண்மை போற்றிதலுக்குரியது.
தீண்டாமையால் ஒதுக்கப்பட்ட மக்கள்பால் நல்லுறவு காட்டி, அவர்கள் வழிப்பட்ட தெய்வத்தை வழிப்பட்டு வாயாரப் பாடி களிப்பெய்தியவர் பாரதி.
அம்மக்களுக்கு இல்லாத கோலம் தனக்கு வேண்டியதில்லை எனக் கொண்டு, தான் அணிந்து இருந்த பூணூலை அறுத்தெறிந்த ஆங்காரப் புலவர் பாரதி.
பாரதியின் கட்டுரைகள், கவிதைகள், பாடல்கள் என்றும் ஒளிகாட்டும், வழி காட்டும்.
"வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்
வாழிய பாரத மணித் திருநாடு"
நன்றி
மயிலாடுதுறை சிவா...