Thursday, March 30, 2006

வி.சி வேட்பாளர் திரு ரவிக்குமார்...

மார்சு 30 2006

விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் திரு ரவிக்குமார்

தமிழக தேர்தலில் எல்லா கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை அறிவித்து வருகின்றன. இன்று காலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் திருமாவளவன் தனதுகட்சி வேட்பாளரை அறிவித்தார். அதில் குறிப்பிடும்படியான அம்சம் தான் எந்த தொகுதியிலும் போட்டியிடமாலும், காட்டு மன்னார் கோவில்(தனி) - எழத்தாளர் ரவிகுமார் பெயரை அறிவித்ததும் மிக மிக பாராட்டுதலுக்கு உரியது.

புதுவை ரவிக்குமார் மிக சிறந்த எழத்தாளர். நிறைய சிந்தனைகளை மாற்றகூடிய, மனதில் பதியும் படி, மிக எளிமையான பல கட்டுரைகளை எழுதியவர். ஓடுக்கப் பட்ட, உரிமைகள் மறுக்கப் படுகின்ற, தாழ்த்தப்பட்ட, அடிதட்டு மக்களின் உணர்வுகளை எல்லோருக்கும் புரியும் வண்ணம் மிக அருமையாக எழத கூடிய சிந்தனையாளர். அவர் எழுதிய "மால்கம் எக்ஸ்"என்ற புத்தகம் மிக மிக பிரசித்த பெற்ற நூல். காலச்சுவடில், தலித் முரசில், தாய்மண்ணில் நிறைய அரசியல் கட்டுரைகளை எழுதி வருபவர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வெற்றி வாய்ப்புப் பற்றி பரவலாக பேச படுவதில், மங்களூர் (செல்வமும்), காட்டு மன்னார் கோவிலில் (ரவிக்குமார்) வெற்றி வாய்ப்புகள் அதிகம் என்றே தோன்றுகிறது.

திரு ரவிக்குமார் போன்ற நபர் சட்டமன்ற சென்றால் நிச்சயம் அந்த தொகுதியின் மேம்பாட்டிற்குபாடுபடுவார் என்று நம்பலாம். அவருடைய எழுத்துகளில் தலித் மக்களின் அடிப்படைப்பிரச்சினைகளை, வெண்மணியின் வரலாற்றை, திண்ணியத்தின் கொடுமையை, அம்பேத்காரின் சட்ட நுணுக்கங்களை,பெரியாரின் இந்துமத எதிர்ப்பை, மிக ஆழமாக அலசி இருப்பதை பிரமிப்போடு பார்த்து இருக்கிறேன்.

இதுப் போல சமுதாய பிரச்சினைகளை நன்கு உணர்ந்த நபரை சட்டமன்ற செல்ல வாய்ப்பு கொடுத்து இருக்கும் திருமா என்றுமே பாராட்டுக்கு உரியவர்.

மிக்க நன்றி

மயிலாடுதுறை சிவா...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, March 28, 2006

ஸ்டாலின் ஏன் வரகூடாது?

ஸ்டாலின் ஏன் வரகூடாது?

ஸ்டாலினா அல்லது வைகோவா? தமிழ்சசியின் அரசியல் கட்டுரைகளை தொடர்ந்து படித்து வருகிறேன். நன்றாக எழுதுகிறார் மன பூர்வமான பாராட்டுகள்!!!

என்னுடைய கருத்தை பதியவைப்பது என் கடமை.

அதாவது நிச்சயம் ஸ்டாலினுக்கு ஓர் வாய்ப்பு உண்டு என்றே நான் கருதுகிறேன். அதுமட்டும் அல்லஅதில் தவறு இல்லை என்பதும் என் தாழ்மையான கருத்து.

வைகோ மிக சிறந்த பேச்சாற்றல் உள்ள ஓர் நபர், ஆனால் அவர் பெருன்மான்மையான மக்கள்விரும்பும் ஓர் மக்கள் தலைவன் இல்லை என்பதும் என் கருத்துதான். சொந்த தொகுதியில் அவரால்தனித்து நின்று சட்டமன்ற நபராக அல்லது நாடாளுமன்ற நபராக அவரால் வெற்றி பெற முடியாதுஎன்பது ஓர் நிதர்சனமான ஓர் உண்மை. ஒருக்கால் அவர் இந்த சட்டமன்ற தேர்தலில் ஜெயா பக்கம்போகமால் இருந்து இருந்தால் கலைஞருக்கு பிறகு அவரால் ஓர் சிறு சலசலப்பை மட்டுமே ஏற்படுத்தி இருக்க முடியும். அவரால் கட்டுகோப்பான திமுகவை உடைத்து இருக்க முடியுமாஎன்பது பெருத்த சந்தேகமே!!!

ஸ்டாலின் ஏன் வரகூடாது என்பதற்கு ஓர் வழுவான காரணம் யாரும் சொல்லவில்லை. சில பேர் கலைஞர் மீது உள்ள கோபத்தால் ஸ்டாலினையும் திட்டுவது, கலைஞரிடம் உள்ள அதேபேச்சாற்றல், எழுத்து ஆற்றல், கடுமையான உழைப்பு இவற்றை அவரிடம் அப்படியே ஏன் எதிர்பார்க்க வேண்டும் என்று புரியவில்லை? ஸ்டாலின் மேயராக இருந்த பொழுது நல்ல திறம்படநடத்தினார் என்று அனைத்து பத்திரிக்கைகளும் பாராட்டிதான் எழுதின. ஸ்டாலின் ஒரளவு பேச்சாற்றல்ஓரளவு நிர்வாக திறமை, கட்சியின் அனுபவம், திமுகவின் அனுபவம் வாய்ந்த தலைவவர்களின்துணையோடு அவரால் நன்றாக இயங்க முடியும் என்றே நான் கருதுகிறேன்.

நான் பெரிதும் மதிக்கின்ற அண்ணன் திருமாவோடு ஸ்டாலினை நான் ஒப்புமை செய்ய முடியவில்லை. திருமா ஓர் எழுச்சி தலைவன். ஒடுக்கப்பட்ட, உரிமைகள் மறுக்க படுகின்ற, தாழ்த்தப் பட்ட மக்களுக்குபோராடுகின்ற ஓர் தளம் அவருக்கு வாய்த்து இருக்கிறது, அவருக்கு தமிழ் உணர்வோடு, எழுச்சியாகபேச ஓர் வாய்ப்பு இருக்கின்ற காரணத்தால் அவரால் சிறுபான்மை மக்களின் ஓர் எழுச்சி தலைவனாகவர முடிந்தது.

அதே போல் இராமதாஸ் அவர்களிடம் பேச்சாற்றல் இல்லாமல் இருக்கலாம், ஆனால்வன்னிய இன மக்களுக்கும், பிற்படுத்தப் பட்ட மக்களுக்கும் அவர் நேரிடையாகவோ அல்லது மறைமுகமாக அவர் உதவிய காரணத்தால் அவரால் 25 சட்ட மன்ற உறுப்பினர்களை, 7 நாடாளுமன்றஉறுப்பினர்களை உருவாக்க முடிந்தது. வெற்றி பெற்ற பிறகு தமிழ், ஈழத்து ஆதரவு, தமிழ் பாதுகாப்புஇயக்கம் என்று இயங்குவது தமிழ் உணர்வாளர்களுக்கு மிக்க மகிழ்ச்சியை தருகிறது.

கேரளாவில் கருணாகரன் மகன் முரளீதரனை விட, கர்நாடக தேவுகவுடா மகன் குமாரசாமியைவிட, இராமதாஸ் மகன் அன்பு மணியை விட, மூப்பனார் மகன் வாசனைவிட, ஆயிரம் மடங்கு ஸ்டாலின் தகுதி உடையவர் என்று எனக்கு தோன்றுகிறது. நிச்சயம் ஸ்டாலினுக்கு ஓர் வாய்ப்பு கிடைத்து அதனை அவர் நன்றாக பயன்படுத்தி கொண்டால் அவருக்கும் அவர் சார்ந்து இருக்கிற திமுகவிற்கும்நல்லது, அல்லது காலம் ஓபி பன்னீர் செல்வம் போல் இல்லாமால் ஓர் நல்ல தலைவனை இனம்காட்டினால் மகிழ்ச்சியே!!!

நன்றி

மயிலாடுதுறை சிவா...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, March 23, 2006

மயிலாடுதுறை - காங்கிரஸ்

மார்ச் 23 2006

எப்பாடியாவது இந்த முறை கோசி மணி கலைஞரிடம் சொல்லி இந்த தொகுதியைவாங்கி விடுவார் என்று நம்பி இருந்தேன். கூட்டணி கட்சிக்கு விட்டு கொடுத்து விட்டார்.

மணி சங்கர் நபர் - திரு ராஜ்குமாரா?
அல்லது மூப்பனார் குடும்பம் சொல்லும் - கவுன்சிலர் அசோக் / ராமாலிங்கமா?

அதிமுகவில் யார் என்று தெரியவில்லையே? நிச்சயம் ஜெகவீர பாண்டியன் தோற்பது உறுதி.

மயிலாடுதுறையில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று மயிலாடுதுறை எல்லாநலனையும் / பலனையும் அடைந்து மயிலாடுதுறை வளமான தொகுதியாகமாறவேண்டும்.

நன்றி
மயிலாடுதுறை சிவா....

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது