மத்திய அமைச்சர் அன்புமணியின் மறுப்பக்கம்....
வாசிங்டன்.
மத்திய அமைச்சர் அன்பு மணியைப் பற்றி நமக்கு என்ன தெரியும்? அவருடைய கட்சியில் அவரை "சின்ன அய்யா" என்று கூறுவார்கள். ராஜ்ய சபா உறுப்பினராகி அமைச்சர் ஆனவர், பசுமை தாயகம் என்ற அமைப்பை வைத்து இருப்பவர் என்று தானே நமக்குபரிச்சயம், ஆனால் எல்லா வற்றிக்கும் மேலாக அவர் சுகாதரத் துறைக்கு முழு தகுதியான மந்திரி என்பதும், இதற்கு முன்னாள் இருந்த எந்த சுகாதரத் துறை மந்திரியை விட அவருக்கு பல மடங்கு விசயம் தெரியும் என்பதை அவரின் அமெரிக்க சுற்றுப் பயணத்தின் பொழுது தெரிந்து கொண்டது உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.
கடந்த 3 வாரங்களில் நடந்த சுவையான பல சம்பவங்களை உங்களுக்கு தெரியப் படுத்துவது என் கடமை. காரணம் நம் தமிழ் பத்திரிக்கைகள் நம் தமிழரின் பெருமைகளை சாதிக்கு அப்பாற்பட்டு, மதத்திற்கு அப்பாற்பட்டு, அரசியலுக்கு அப்பாற்பட்டு கடைக் கொடியில் உள்ள தமிழனுக்கு செய்திகளை தருவது இல்லை. தமிழ்நாட்டில் உள்ள மயிலாடுதுறை அருகே உள்ள பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் உள்ள ஓர் சாராசரி மீன் பிடிக்கும் ஓர் தொழிலாளி மத்திய அமைச்சர் அன்பு மணியின் செயல் பாடுகளை தெரிந்து கொள்ள ஆசைப் பட்டால் அவனுக்கு தெரிய படுத்துவது நம் தமிழ்ப் பத்திரிக்கைகளின் கடமை.
அமெரிக்கா முதல் நிகழ்ச்சி - மேரிலாந்து - John Hopkins University
====================================================
மூன்று வாரங்களுக்கு முன்பு
அமைச்சர் அன்புமணி John Hopkins University School of Medicineல்ஓர் கருத்து அரங்கிற்கு வந்து இருந்து, இந்தியாவில் எயிட்ஸ் விழிப்புணர்வுப் பற்றி பேசினார். கிட்டதட்ட 45 நிமிடங்கள் அழகு ஆங்கிலத்தில், தெளிவாக, அமைதியாக எந்த ஓர் ஆர்பாட்டம் இல்லாமலும் உரையாற்றினார். அதாவது தமிழகத்தில் இருந்து வந்த ஓர் மத்திய அமைச்சர் அழகு ஆங்கிலத்தில் எல்லோருக்கும் புரியும் வண்ணம், மத்திய அமைச்சர் சிதம்பரத்திற்குப் பிறகு இவரைத்தான் நான் பார்க்கிறேன். அவருடைய பேச்சின் பொழுது ஒரு முறை கூட எந்த குறிப்புகளையும் அவர் சரி பார்த்துக் கொள்ளவில்லை. அதுமட்டும் அல்ல, அனைத்து புள்ளி விவரங்களையும் விரல் நுனியில் வைத்து இருந்தார். சில சில இடங்களில் நகைச் சுவையாகவும் பேசினார். அங்கு வந்து இருந்த அனைத்து மக்களும் நிரம்ப படித்தவர்கள், மருத்துவர்கள், மருத்துவ விஞ்ஞானிகள், மாணவர்கள் அனைவரும் அவருடைய பேச்சை மிக ரசித்தார்கள். மொத்ததில் அந்த 3 மணி நேரங்கள் போனதே தெரியவில்லை. ஓர் தமிழனாக அன்பு மணியின் செயல் பாடுகளில் பெருமைப் பட்டு கொள்ள நிறைய இருக்கிறது.
எனது சக நண்பர்கள் பலர் மெத்த படித்தவர்கள், அதாவது இந்தியாவில் முனைவர் பட்டம் பெற்று விட்டு பின்னர் அமெரிக்காவிலும் படித்தவர்கள் பலர், வாரிசு அரசியலையும், சாதியை முன் வைத்து (தலித் தவிர)அரசியல் பண்ணுவதை கடுமையாக விமர்சனம் பண்ணும் பலர் மத்திய அமைச்சர் அன்பு மணியின் பேச்சை ரசித்துவிட்டு, அய்யா இராமதாசு தன்னுடைய மகனைப் பற்றி பெருமைப் பட்டு கொள்ள முழுத் தகுதி உண்டு என சொன்னார்கள். நம்முடைய பிரதமர் மன்மோகன் அவர்கள் அமைச்சரைப் பற்றி சொல்லும்பொழுது, "Our country should be proud of Dr Anbu Mani" என்றார்.
அமெரிக்கா இரண்டாவது நிகழ்ச்சி - நியூயார்க் - வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை
===============================================================
இரண்டு வாரங்களுக்கு முன்பு...

இந்த ஆண்டு நடந்த தமிழ்ச் சங்க பேரவைக்கு மத்திய அமைச்சர் அன்பு மணி கலந்துக் கொண்டு விழாவை சிறப்பித்தார். விழாவில் அன்பு மணிக்கு நல்ல வரவேற்ப்பும் கொடுத்தார்கள். அன்பு மணிபேசும் பொழுது "ஈழ மக்களுக்கு நிச்சயம் நல்ல விடிவு ஏற்படும்" என்று சொன்னார். அது மட்டும் அல்ல தமிழகத்தில் ஈழ் மக்களின் பிரச்சினைகளை பேச பயந்த காலத்தில் எனது அப்பா, அய்யா இராமதாசு எங்களை பேசச் சொல்லி வளர்த்ததாக நினைவு கூர்ந்தார். இந்தியாவிற்கும் ஏன் தமிழ்நாட்டிற்கும் மத்திய சுகாதரத் துறை எண்ணற்ற வளமையான திட்டங்களை கொண்டு வர நிச்சயம்பாடு படும் என்றார். சாரச்சரி இந்தியனுக்கும் அடிப்படை மருத்துவ வசதிகள் செய்து தர நிச்சயம் ஏற்பாடு பண்ணுவேன் என்றார். விழாவிற்கு வந்து இருந்த வைரமுத்து, சரத்குமார், ராதிகா எல்லோரும் அன்பு மணியை பாராட்டி பேசினார்கள். தமிழ்நாட்டு இளைஞராக, மத்திய அமைச்சர் ஆகி தில்லியை கலக்குவதாக அனைவரும் பாராட்டி பேசினார்கள்.
அமெரிக்கா முன்றாவது நிகழ்ச்சி - வாசிங்டன் - லூதர் எல் டெரி விருது
======================================================
ஒரு வாரத்திற்கு முன்பு....

இந்தியாவில் புகையிலைக்கு எதிராக கடுமையான சட்டங்கள் மூலம் மக்களின் நல் வாழ்விற்கு பங்கு அளித்த மத்திய சுகாதரத் துறை அமைச்சர் அன்பு மணிக்கு அமெரிக்க புற்று நோய் நிறுவனம்"லூதர் எல் டெரி" என்று விருதை வழங்கி கெளரவித்தது. உலக அளவில் கிட்டதட்ட 7 அல்லது 8பேர்கள் மட்டுமே இந்த விருதைப் பெற்றார்கள். அதுவும் நம் தமிழ் நாட்டு மத்திய அமைச்சர் விருதுப் பெற்றது மிக மகிழ்ச்சியான விசயம். அந்த விழாவிலும் அமைச்சர் அன்புமணி எந்த குறிப்பும் இல்லாமல் உரையாற்றினார். விழா வாசிங்டன்னில் வரலாற்று புகழ் மிக்க Convention Centerல் நடைப் பெற்றது. அந்த விழாவிற்கு அன்புமணியின் தந்தை மருத்துவர் அய்யா இராமதாசு வந்து இருந்தார்கள். வாசிங்டன் தமிழ்ர்கள் சார்பாக இருவருக்கும் மிகச் சிறப்பான வரவேற்ப்பை செய்ய தமிழ்ச் சங்கம் தயாராக இருந்தது. ஆனால் நேரம் குறைவான காரணத்தால் அந்த வரவேற்ப்பை நியுசெர்சியில் செய்தார்கள். இந்த விருதுப் பற்றி தினந்தந்தியில் செய்தி வந்தது. பாராட்டுகள் பல.
நன்றி
மயிலாடுதுறை சிவா...